Published:Updated:

வரி விலக்கு பத்திரங்கள்: உங்களுக்கு ஏற்றதா?

வரி விலக்கு பத்திரங்கள்: உங்களுக்கு ஏற்றதா?

##~##

பெரும்பாலான நிரந்தர வருமானம் தரக்கூடிய முதலீடுகளில் வரிக்குப் பிந்தைய வருமானம் 6 - 7 சதவிகிதமே உள்ளது. ஆனால், தற்போது மத்திய அரசு நிறுவனங்கள் வரி விலக்கு பத்திரங்கள் (Bonds) மூலம் முதலீடுகளைத் திரட்டி வருகின்றன. இதன்மூலம்

8 சதவிகிதத்துக்கு மேல் வருமானம் கிடைப்பது கவனிக்கவேண்டிய அம்சம். இந்த வரி விலக்கு பத்திரங்கள் என்றால் என்ன, அதன் சாதகமான அம்சங்கள் என்ன, அது எந்த அளவிற்கு முதலீட்டாளருக்கு பயனுடையது என்பது பற்றி விளக்கமாகப் பார்ப்போம்.

வரி விலக்கு பத்திரங்கள்!

மத்திய அரசுத் துறை நிறுவனங்களுக்கு நிதித் தேவை ஏற்படுகிறபோது, அரசின் அனுமதியுடன் வரி விலக்கு பத்திரங்களை வெளியிட்டு மக்களிடமிருந்து நிதித் திரட்டும். இந்தப் பத்திரங்களில் முதலீடு செய்பவர்கள் இதன்மூலம் வரும் வட்டி வருமானத்திற்கு வரிச் செலுத்த தேவையில்லை. இதன் வருமானம் வங்கி வைப்பு நிதி, அஞ்சலக சேமிப்புத் திட்டம், வங்கி சாரா நிதி நிறுவனங்களின் வைப்பு நிதியின் வரிக்குப் பிந்தைய வருமானத்தைவிட சற்று அதிகமாகவே இருக்கும். எனவே, இது வரி வரம்பில் உள்ளவர்களுக்கு இது உகந்ததாக இருக்கும்.

வரி விலக்கு பத்திரங்கள்: உங்களுக்கு ஏற்றதா?

சாதக அம்சங்கள்!

1. வரி விலக்கு பத்திரங்கள் மூலம் கிடைக்கும் வட்டிக்கு வரி கிடையாது.

வரி விலக்கு பத்திரங்கள்: உங்களுக்கு ஏற்றதா?

2. வரி விலக்கு பத்திரங்களின் கால அளவு 10, 15, 20 ஆண்டுகள் என இருக்கும். கால அளவைப் பொறுத்து வட்டி விகிதம் மாறுபடும்.

3. மத்திய அரசு நிறுவனங்கள் வெளியிடுவதால் முதலீட்டுத் தொகைக்கு பாதுகாப்பு அதிகம்.

4. ஆண்டுக்கொரு முறை வட்டி தவறாமல் வழங்கப்படும்.

5. நிதித் திரட்டிய பின் இந்தப் பத்திரங்கள் பங்குச் சந்தையில் பட்டியலிடப்படும். முதலீட்டாளர்கள் எப்போது வேண்டுமானாலும் பங்குச் சந்தையில் பத்திரங்களை விற்று முதலீட்டை திரும்பப் பெறலாம்.

கவனிக்க வேண்டியவை!

1. வரி விலக்கு பத்திரங்களில் வழங்கப்படும் வட்டி விகிதத்தையும் ஏற்கெனவே உள்ள வைப்புத் தொகை வட்டி விகிதங்களையும் ஒப்பிட்டு அவரவர் வருமான வரி விகிதத்துடன் கணக்கிட்டு வங்கி வைப்பு நிதியில் வரும் வரிக்குப் பிந்தைய வருமானத்தைவிட லாபகரமாக இருந்தால் மட்டுமே முதலீடு செய்ய வேண்டும்.

2. வரி விலக்கு பத்திரங்கள் மத்திய அரசு நிறுவனங்கள் வெளியிட்டாலும் அந்தந்த நிறுவனங்களின் நிதி நிலைமை, ஸ்திரத்தன்மையைக் கவனிக்கவும். அதன் தரக் குறியீடு 'கிகிகி’ தரக்குறியீடு என்றால் நம்முடைய முதலீட்டிற்கு அதிக பாதுகாப்பு. அதற்கு கீழ் இருக்கும் நிறுவனங்களைத் தவிர்ப்பது நல்லது.

வரி விலக்கு பத்திரங்கள்: உங்களுக்கு ஏற்றதா?

3. வரி விலக்கு பத்திரங்களில் முதலீடு செய்ய டீமேட் கணக்கு வைத்திருக்க வேண்டும் என்பதில்லை. ஆனால், முதிர்வடையும் காலத்திற்குமுன் பங்குச் சந்தை மூலமாக விற்க வேண்டும் எனில் டீமேட் கணக்கு அவசியம். முதிர்வுக் காலத்திற்கு முன் பங்குச் சந்தை மூலம் முதலீட்டை திரும்பப் பெறும்போது அசல் தொகைக்கு மேல் லாபம் கிடைத்தால் மூலதன ஆதாய வரி கட்டவேண்டும்.

4. வரி விலக்கு பத்திரங்களில் 'புட்’ ஆப்ஷன், 'கால்’ ஆப்ஷன் என இரு வசதி உள்ளது. 'புட்’ ஆப்ஷன் எனில் பத்திரத்தை வெளியிட்ட நிறுவனத்திடமே அதைத் திரும்ப சமர்ப்பித்து முதலீட்டை குறித்த கால இடைவெளிக்கு பின், முதிர்வுக்கு முன் பெற்றுகொள்ளும் வசதி. 'கால்’ ஆப்ஷன் என்றால் வெளியிட்ட நிறுவனமே பத்திரங்களைத் திரும்பப் பெற்றுக் கொள்ளும் வசதி. இந்த இரு வசதிகளும் நாம் முதலீடு செய்யும் பத்திரத்தில் உள்ளதா? என பார்த்து முதலீடு செய்ய வேண்டும்.

5. வரி விலக்கு பத்திரங்களில் முதலீடு செய்வதற்கு எந்த உச்சவரம்பும் கிடையாது என்றாலும், முதலீட்டை பிரித்து பல வெளியீடுகளில் முதலீடு செய்வது நல்லது.

வரி விலக்கு பத்திரங்கள்: உங்களுக்கு ஏற்றதா?

6. இதர நிரந்தர வருமானம் தரக்கூடிய வங்கி வைப்பு நிதி (5 வருடம்), பி.பி.எஃப். (15 வருடம்), அஞ்சலக சேமிப்புத் திட்டம்

(5 வருடம்) போல இந்த வரி விலக்கு பத்திரத்தில் அசலுக்கு வருமான வரி பிரிவு 80நீ-ன் கீழ் வரிச் சலுகை பெற இயலாது.

நீண்ட கால நோக்கில் அசலுக்கு பாதகமில்லாமல் முதலீடு செய்ய நினைப்பவர்கள் இந்த முதலீட்டை கொஞ்சம் கவனிக்கலாமே!

அடுத்த கட்டுரைக்கு