Published:Updated:

தொழில் செய்ய விரும்பு, சேருவது பணம்!

தொழில் செய்ய விரும்பு, சேருவது பணம்!

தொழில் செய்ய விரும்பு, சேருவது பணம்!

தொழில் செய்ய விரும்பு, சேருவது பணம்!

Published:Updated:
##~##

'சுகமான சம்பவங்களுடன் நிம்மதியாக வாழ்ந்து முடிப்பதைவிட, சவாலான சரித்திரமாக வெற்றியுடன் வாழ்ந்து காட்டுவதே சிறந்தது!'  

 - ஜப்பானிய முதுமொழி

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

25 வயதுக்குள் நல்ல வேலை கிடைத்து 'செட்டில்’ ஆக விரும்புகிறோம். 30 வயதுக்குள் கல்யாணம் பண்ணி 'செட்டில்’ ஆகிவிட நினைக்கிறோம். 35 வயதுக்குள் வீடு வாங்கி 'செட்டில்’ ஆகிவிடுவதையே லட்சியமாகக் கொண்டிருக்கிறோம். ஆனால், வாழ்க்கையில் வெற்றி பெறுவதற்கு நாம் எந்த வயதையும் நிர்ணயம் செய்வதே இல்லை!

20 அல்லது 21 வயதில், நாம் நமக்கான வாழ்க்கையைத் தொடங்கும்போது மேற்கண்ட மூன்றையும் செய்துவிட்டால் வாழ்க்கையில் வெற்றி என்றுதான் நினைக்கிறோம். இந்த மூன்றும் நம் வாழ்க்கையில் நடந்துவிட்டால், அதற்குப்பின் நமக்கு கிடைப்பது விரக்தியும் வெறுமையும்தான்!

தொழில் செய்ய விரும்பு, சேருவது பணம்!

வாழ்க்கையில் நாம் 'செட்டில்' ஆவதென்பது வேறு; வெற்றி பெறுவதென்பது வேறு. வாழ்க்கையில் 'செட்டில்’ ஆனவர்களை உங்களைச் சுற்றி நிறையவே பார்க்கலாம். ஆனால், வாழ்க்கையில் வெற்றி பெற்றவர்கள் மிகக் குறைவானவர்களே. அப்படி ஒருவர்தான் கடந்த இதழில் நாம் பார்த்த கர்சன்பாய் படேல். இந்த வாரம் தமிழகத்தைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் பற்றிச் சொல்கிறேன். அவர், விருதுநகரில் இருந்தபடி ஒரு பெரும் பிராண்டை உருவாக்கிய 'இதயம்’ ராஜேந்திரன்.

பிறக்கும்போதே பெரும் தொழில் குடும்பத்தின் வாரிசாகப் பிறந்த வி.வி.வி.ராஜேந்திரன், தனது ஐம்பதாவது வயதுக்கு பிறகுதான் இதயம் நிறுவனத்தை ஆரம்பித்தார். ஏன் தெரியுமா?

கிட்டத்தட்ட தனது 50-ஆவது வயதில் தான் முதல் மாரடைப்பைச் சந்தித்தார் ராஜேந்திரன். அதன்பின், மருத்துவர்களின் ஆலோசனைப்படி தொழில் பொறுப்புகளை அடுத்த தலைமுறையிடம் ஒப்படைத்துவிட்டு, ஓய்வுக்காலத்தைத் தொடங்கவேண்டிய நிலையில் அவர் குடும்பத்தில் பாகப்பிரிவினை வந்தது.  

பாகப்பிரிவினையில் ராஜேந்திரனுக்கு பல சொத்துக்கள் கிடைத்தன. ஆனால், அவர் தனது குடும்பத் தொழிலை அதே பெயரில், பிராண்ட் உடன் செய்ய முடியாது என்கிற சூழ்நிலை உருவானது.

ஏற்கெனவே மாரடைப்பினால் உடல்நலம் பாதிப்படைந்திருப்பது ஒருபக்கம்; ஊரறிந்த பிராண்டை பயன்படுத்த முடியாத சூழல் இன்னொரு பக்கம். இந்நிலையில் தனக்கு தரப்பட்ட சொத்துக்களுடன் தன் வாரிசுகளுடன் மீதி வாழ்நாட்களை அவர் நிம்மதியாக கழித்து 'செட்டில்’ ஆகியிருக்கலாம். ஆனால், அவர் அப்படி 'செட்டில்’ ஆக விரும்பவில்லை. மாறாக, தொழில் உலகத்தில் மீண்டும் வலம்வர விரும்பினார்.

1986-ல் இதயம் நல்லெண்ணெய் நிறுவனத்தை உத்வேகத்துடன் ஆரம்பித்தார். அதுவரை, சமையல் எண்ணெய்யை யாரும் பிராண்ட் செய்யாத விதத்தில் பெரிய அளவில் அவர் விளம்பரம் செய்து தென்னிந்தியாவின் மூலைமுடுக்கெல்லாம் கொண்டு சென்றார். சாதாரண மக்களும் ரசிக்கும்படியாக இருந்த அந்த விளம்பரம், தமிழக மக்களின் மனதை கொள்ளை கொண்டது.

எந்த குடும்ப தொழிலில் இருந்து வெளியேறி வந்தாரோ, அதைவிடப் பெரிய நிறுவனமாக அவர் தனது நிறுவனத்தை உருவாக்கினார். 1994-ல் அவர் இறந்தபோது விருதுநகரின் ஒட்டுமொத்த உற்பத்தியில் பெரும்பங்கு வகித்தது அவர் தொடங்கிய நிறுவனம். தன் வாழ்வின் கடைசி பத்து வருடங்களிலேயே இத்தனை பெரிய நிறுவனத்தை சாத்தியமாக்கினார் ராஜேந்திரன். அவர் வாழ்க்கை நமக்கு கற்றுத் தரும் பாடங்கள் இரண்டுதான்.

தொழில் செய்ய விரும்பு, சேருவது பணம்!

1) புதிய தொழில் தொடங்க விருப்பம் கொள்ளவும், ஆரம்பித்து நடத்துவதற்கும் வயது ஒரு தடை இல்லை.

2) சமையலறை பொருளைகூட பெரும் பிராண்டாக சந்தையில் கொண்டுவர முடியும்.

ஒரு நல்ல வேலை, ஒரு நல்ல வீடு என்று 'செட்டில்’ ஆவதன் மூலம் நமக்கு கிடைப்பது அதிகபட்சம் ஒரு கோடி ரூபாய்! ஆனால், சொந்தமாக ஒரு தொழில் தொடங்கி, வாழ்க்கையில் வெற்றி காண்பதன் மூலம் நமக்கு கிடைக்கப் போவது பல நூறு கோடி ரூபாய் மட்டுமல்ல, பல நூறு குடும்பங்களின் பொருளாதார மேம்பாடும்தான்!

இவ்வளவு பணத்தை நாம் சம்பாதிக்க வேண்டுமெனில், பணம் பற்றிய நம் அணுகுமுறை எப்படி இருக்கவேண்டும் என்பது முக்கியமான விஷயம்! இந்தியர்களின் பணத்தை பற்றிய அணுகுமுறை மேற்கத்திய மக்களின் அணுகுமுறையைவிட வித்தியாசமானது. தாங்கள் சம்பாதித்த பணத்தை மீண்டும் புழக்கத்தில் விடுவதைவிட சேமிப்பு என்கிற பெயரில் அதை முடக்கிவிடுவதில் சிறந்தவர்கள் இந்தியர்கள்.

இப்படி நினைப்பது மாதச் சம்பளத்திற்கு வேலை பார்ப்பவரின் வாழ்க்கைக்கு வேண்டு மானாலும் பொருந்தி வரலாம். தேங்கி நிற்கும் பொருளாதாரச் சூழ்நிலையில் இது சிறந்த வழிமுறையாகவும் இருக்கலாம். ஆனால், தொழில் புரிவோருக்கு இந்த சிந்தனை அவர்களின் தொழில் வளர்ச்சியைத் தடுத்துவிடும்.

ரிலையன்ஸ் நிறுவனத்தைத் தொடங்கிய திருபாய் அம்பானியின் தொழில் வெற்றிக்கு காரணம், அவர் மரபுரீதியான பண நடைமுறையை மாற்றி, நவீன சிந்தனையைக் கொண்டு வந்ததுதான்!

மிக மிக சாதாரண குடும்பத்தில் பிறந்து  முதல் தலைமுறை தொழிலதிபரான திருபாய் அம்பானி, ஆரம்ப காலத்தில் தன் வீட்டுக்கு எவ்வளவு செலவழித்தார் தெரியுமா?

இன்று 27 மாடி மாளிகையில் வசிக்கும் அவரது மூத்த மகன் முகேஷ் அம்பானி, தனது 13-வது வயது வரை ஒரு பெட்ரூம்கூட இல்லாத, நீண்ட ஒரு ஹாலும் அதன் ஒரு மூலையில் சமையலறையும் கொண்ட வீட்டில்தான் வளர்ந்தார். காரணம், திருபாய் அம்பானி, தன் குடும்பத்திற்கு அவ்வளவு மட்டுமே செலவு செய்யத் தயாராக இருந்தார்.

தொழில் செய்ய விரும்பு, சேருவது பணம்!

திருபாய் அம்பானி தனது நான்கு குழந்தைகளையும் வாரம் ஒருமுறை மும்பை பீச்சிற்கு அழைத்து செல்லும்போது, உங்களுக்கு என்ன வேண்டும் என்று கேட்பார். பெரியவன் முகேஷ், ஐஸ்கிரீம் கேட்பார்; சின்னவன் அனில், இனிப்பு கேட்பார். அவர்களுக்குள் சண்டை வரும். முடிவில் இரண்டையுமே வாங்கி கொடுக்கச் சொல்லி அவர்கள் கேட்பார்கள். அம்பானி அவர்களிடம், இந்த வாரம் ஐஸ்கிரீம் வாங்கிக்கொள்ளுங்கள். அடுத்த வாரம் ஸ்வீட் வாங்கி தருகிறேன் என்று சொல்வார். ஏனெனில், அதற்குமேல் செலவு செய்ய அவர் தயாரில்லை.

பணம் பற்றி திருபாய் அம்பானி பார்த்த பார்வை வேறு; அவர் காலத்தில் இருந்த மற்ற தொழிலதிபர்கள் பார்த்த பார்வை வேறு.  அவர்கள் பணத்தை லாபம் என்கிற உருவில்தான் பார்த்தனர். ஆனால், அம்பானியோ, பணத்தை லாபம் (ஜீக்ஷீஷீயீவீt) மற்றும் பணப்புழக்கம் (நீணீsலீ யீறீஷீஷ்) என இரண்டு உருவில் பிரித்துப் பார்த்தார்.  

இதில் லாபம் என்பது உணவைப் போன்றது. ஆனால், பணப்புழக்கம் என்பது அந்த தொழிலுக்கான மூச்சுக் காற்று போன்றது. உணவு என்பது சில மணிநேரங்களுக்கு ஒருமுறை கிடைத்தால் போதும். ஆனால், மூச்சுக்காற்று இல்லாவிட்டால் அல்லது குறைந்தால் அந்த தொழில் நீடிப்பது கடினம். எனவே, அவர் லாபத்தை மீண்டும் மீண்டும் அவர் தொழிலில் மறுமுதலீடு செய்ததோடு, பொதுமக்களிடம் திரட்டிய பணத்தின் பெரும் பகுதியைப் பணப்புழக்கத்தைச் செழித்திருக்கவே  பயன்படுத்தினார்.

அந்த காலகட்டத்தில், மற்றவர்களின் தொழிலில் இருந்ததைவிட அம்பானியின் தொழிலுக்குள் இருந்த அதீதமான நெகிழ்வு தன்மையுடனான பணப்புழக்கம், தொழிலில் மிக வேகமான வளர்ச்சியைத் தந்தது. அதனால் லாபம் சேர்ந்தது. லாபத்தினால் அவரிடம் பணம் அதிகமாக வந்து சேர்ந்தது. ஒரு நல்ல பிசினஸ்மேனிடம் பணம் வந்து சேரவேண்டுமே தவிர, அவர் பணத்தைத் தேடி அலையக்கூடாது.

நாம் திருபாய் அம்பானியிடம் இருந்து கற்றுக்கொள்ள வேண்டிய விஷயம் இதுதான்: அதிக லாபம் வேண்டுமா? அதிகமான பணப்புழக்கத்தை உங்கள் தொழிலுக்குள் ஏற்படுத்துங்கள். அந்த மூச்சுக்காற்று சுத்தமானதாக இருக்கட்டும். ஆம், பணப் புழக்கத்தை அதிகப்படுத்துகிறேன் பேர்வழி என்று வட்டிக்கு பணம் வாங்கி உள்ளே போடாதீர்கள். அது மூச்சுக்காற்றாக இல்லாமல்  விஷவாயுவாக மாறிவிடும்.  

ஒரு தொழிலதிபர் தன் தொழிலையே பெரும் சொத்தாக நினைக்க வேண்டும், மாற்ற வேண்டும். மாறாக தொழில் ஆரம்பித்த சிறிது காலத்தில் லாபம் வரத் தொடங்கியவுடன், சொந்த தேவைக்கான அசையா சொத்துக்களாக மாற்றி பணத்தை முடக்கிவிட்டால், பின்பு தொழிலுக்கு பணம் தேவைப்படும்போது வங்கி ரீதியிலான பணப் பரிவர்த்தனைகள் இல்லாதபட்சத்தில் சுவாசிக்க மூச்சுக் காற்றில்லாமல் திணற வேண்டியிருக்கும். அப்போது உங்களிடம் பணம் சேராது. மாறாக, அனுதினமும் நீங்கள் தொழிலை நடத்தத் தேவையான பணத்தைத் தேடி ஓடுவதே பெரும் வேலையாக இருக்கும்.

'சார், பணம் முதலீடு செய்வதில் எனக்கு பிரச்னை இல்லை. ஆனால், என் வியாபாரமே சரியில்லை. நான் உற்பத்தி செய்த பொருட்கள் விற்பனையாகாமல் முடங்கிவிட்டது அல்லது நான் தரும் சேவையைப் பெற  யாருமில்லை. வருமானம் சுருங்கி, பணப்புழக்கம் இல்லாமல் இருக்கிறேன் என்கிறீர்களா? அப்படியானால் சந்தையை அணுகுவதில் உங்களுக்கு பிரச்னை இருக்கிறது என்று அர்த்தம். அதற்கான தீர்வுதான் அடுத்த ஆத்திசூடி!

            (கற்போம்)

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism