மிளகு! (Jeera)
##~## |
ஸ்பாட் சந்தைகளில் தேவை அதிகரித்ததன் காரணமாக மிளகின் விலை சென்ற வாரத்தில் அதிகரித்தது. 2013 ஏப்ரல்-ஜூன் காலத்தில் மிளகு ஏற்றுமதி 12% அதிகரித்துள்ளது. மேலும், வியட்நாமில் ஏற்கெனவே 75-80% மிளகு விற்பனையாகிவிட்டது. மீதமிருக்கும் இருப்பை பத்திரப்படுத்தி வைத்துள்ளனர். தற்போது பிரேசிலில் மிளகு பயிரை அறுவடை செய்யும் நேரமிது. உற்பத்தி சென்ற வருடம் போலவே இருக்குமென எதிர்பார்க்கப்படுகிறது. இந்தோனேஷியாவில் இந்த வருடம் உற்பத்தி குறைவால் ஏற்றுமதியும் குறையும் என தெரிகிறது. வரும் வாரத்தில் தேவை காரணமாக மிளகு விலை அதிகரித்தே வர்த்தகமாகும்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஜீரகம் (Pepper)
அதிக வரத்து காரணமாக சென்ற வாரத்தில் ஜீரகத்தின் விலை குறைந்து வர்த்தகமானது.

ஊஞ்ஹா சந்தையில் சுமார் 10,000 பைகள் வரத்து வந்தன. (ஒரு பை என்பது 60 கிலோ). சிரியாவில் போர் உருவாகும் சூழல் நிலவுவதால் இந்திய ஜீரகத்திற்கான டிமாண்ட் அதிகரித்துள்ளது. 2013 ஏப்ரல் முதல் ஜூன் மாதத்தில் இந்தியாவின் ஜீரக ஏற்றுமதி 25 சதவிகிதம் அதிகரித்துள்ளதாக ஸ்பைஸ் போர்டு ஆஃப் இந்தியா தெரிவித்துள்ளது. வரும் அக்டோபர் மாதம் 1-ம் தேதி முதல் குஜராத் மாநிலத்தில் ஜீரகத்திற்கான வாட் வரியை அம்மாநில அரசு நீக்கவுள்ளது. ஏற்றுமதி தேவை அதிகரித்து வருவதன் காரணமாக ஜீரகத்தின் விலை வரும் வாரத்தில் அதிகரித்து வர்த்தகமாகலாம்.
மஞ்சள்! (Turmeric)
வட மாநிலத்தில் தேவை அதிகரித்ததன் காரணமாக மஞ்சளின் விலை அதிக ஏற்றம், இறக்கம் இல்லாமல் வர்த்தகமானது. 2013 ஏப்ரல் முதல் ஜூன் மாதத்தில் மஞ்சளின் ஏற்றுமதி சுமார் 30 சதவிகிதம் குறைந்துள்ளது. செப்டம்பர் 4-ம் தேதியுடன் முடிந்த வாரத்தில் ஆந்திராவில் 51,153 ஹெக்டேர் பரப்பளவில் மஞ்சள் பயிரிடப்பட்டுள்ளது.

இது சென்றாண்டு இதே மாதத்தில் இருந்ததைவிட 5 சதவிகிதம் குறைவு என ஆந்திர விவசாயத் துறை தெரிவித்துள்ளது. வட மாநிலத்திலிருந்து தேவை வருவதால் வரும் வாரத்தில் விலை சற்று அதிகரித்தாலும் அதிக கையிருப்பு விலையேற்றத்தைத் தடுக்கலாம்.
ஏலக்காய்! (Cardamom)
ஏலக்காய் ஏலம் விடும் சந்தைகளில் தினவரத்து அதிகமாக இருந்ததால் ஏலக்காய் விலை குறைந்து வர்த்தகமானது. சென்ற வியாழக்கிழமையன்று ஏலத்திற்கு 80 டன் வரத்து வந்தது. ஸ்பாட் விலையாக சராசரியாக கிலோ 631 ரூபாய்க்கு வர்த்தகமானது. அதிகபட்ச விலையாக 941 ரூபாய்க்கு வர்த்தகமானது.

2013 ஏப்ரல் முதல் ஜூன் மாதத்தில் 505 டன் ஏலக்காய் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. இதுவே சென்றாண்டில் 198 டன் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. மேலும், பெரிய ஏலக்காய் 130 டன் ஏலக்காய் வரை ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. இதுவே சென்றாண்டில் 241 டன் ஏற்றுமதியாகியுள்ளது என்பது ஸ்பைஸ் போர்டு ஆஃப் இந்தியா தெரிவித்துள்ளது. கேரளா மற்றும் தமிழ்நாட்டில் வரும் நாட்களில் மழை இருக்கும் என இந்திய வானிலைத் துறை தெரிவித்துள்ளது.
மிளகாய்! (Chilli)
சென்ற வாரத்தில் வர்த்தகர்கள் மத்தியில் வாங்கும் ஆர்வம் இல்லாததால் மிளகாய் விலை குறைந்தது. அதிகப்படியான கேரி ஓவர் ஸ்டாக், தரம் குறைவான வரத்து ஆகியவையே மிளகாய் விலை குறையக் காரணம். ஆந்திராவில் பயிரிடப்படும் மிளகாய் பரப்பளவு கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது பாதிக்குமேல் குறைந்துள்ளது என்ற தகவலால் விலை மேலும் குறையாமல் தடுக்கப்படலாம்.

மேலும், மிளகாய் ஏற்றுமதி 2013-ம் ஆண்டு ஏப்ரல் - ஜூன் காலத்தில் 19% குறைந்துள்ளது என ஸ்பைஸ் போர்டு ஆஃப் இந்தியா தெரிவித்துள்ளது. தேவை குறைந்துள்ளதால் வரும் வாரத்தில் மிளகாய் விலையில் ஏற்றம் இருக்காது.
- பானுமதி அருணாசலம்.
