Published:Updated:

கமாடிட்டி - மெட்டல் - ஆயில்

கமாடிட்டி - மெட்டல் - ஆயில்

கமாடிட்டி - மெட்டல் - ஆயில்

கமாடிட்டி - மெட்டல் - ஆயில்

Published:Updated:

தங்கம்!

##~##

''அமெரிக்காவின் பொருளாதார மேம்பாடு, சிரியாவிற்கு எதிராக தாக்குதல் நடத்த அமெரிக்கா ஆலோசித்து வருவது உள்ளிட்ட காரணங்கள் தங்கத்தின் விலையில் அடுத்த வாரத்தில் பிரதிபலிக் கும். கடந்த இரண்டு வருடங்களில் இல்லாதளவிற்கு தங்கத்தின் விலை அதிக உச்சத்தைத் தொட்டது. அதனால் அடுத்த இரண்டு வருடங்களுக்கு தங்கத் தின் விலை புதிய உச்சத்தைத் தொட வாய்ப்பு இல்லை என புளூம்பெர்க் சர்வே முடிவுகள் மூலம் தெரியவந்துள்ளது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ரூபாயின் மதிப்பு அதிகரித்து வருவதால் இந்தியாவில் தங்கத்தின் விலை சற்று குறைந்துள்ளது. கடந்த 34 மாதங்களில் இல்லாதளவிற்கு தங்கத்தின் விலை ஜூன் மாதத்தில் குறைந்தது. அதிலிருந்து 16% வரை விலை அதிகரித்துள்ளது. இதற்கு முக்கிய காரணம், சிரியாவில் ஏற்பட்டுள்ள போர் பதற்றமாகும். சிரியாவிற்கு எதிராக தாக்குதல் நடத்த அமெரிக்காவின் செனட் சபை செப்டம்பர் 4-ம் தேதியில் அனுமதி அளித்துள்ளது. எனினும், இந்தத் தாக்குதல் குறைவான அளவில் இருக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளது.

கடந்த மாதத்தில் 5.3%மும், ஜூலை மாதத்தில் 7.3% தங்கத்தின் விலை அதிகரித்தது. ஹெட்ச் ஃபண்டுகளும், மற்ற ஸ்பெகுலேட்டர்களும் அதிகளவில் தங்கத்தில் முதலீடு செய்துள்ளனர். சிரியா பிரச்னை காரணமாக தங்கத்தின் விலை வரும் வாரத்திலும் அதிகரித்து வர்த்தகமாகும். அதேசமயம் இந்திய ரூபாய் வலுவடைந்தால் அது விலையேற்றத்தைத் தடுக்கும்.

கமாடிட்டி - மெட்டல் - ஆயில்

அடிப்படை உலோகங்கள்!

காப்பரின் விலை சென்ற வாரத்தில் குறைந்து வர்த்தகமானது. கடந்த பத்து வருடங்களாக அடிப்படை உலோகங்களின் விலை அதிகரித்த நிலையில் இந்த வருடம் விலை குறைந்தது. காப்பரை அதிகமாக வாங்கும் அமெரிக்காவில் சென்ற மாதத்தில் 1.7%  காப்பரின் நுகர்வு குறைந்துள்ளது.

கமாடிட்டி - மெட்டல் - ஆயில்

மேலும், சிலி நாட்டிலிருந்து 16 சதவிகித காப்பர் வெளியில் சென்றுள்ளது. லெட்டைப் பொறுத்தவரை, ஆட்டோ துறையில் டிமாண்ட் குறைந்துள்ளதன் காரணமாக தொடர்ந்து விலை குறைந்தே வர்த்தகமாகி வருகிறது. மேலும், பேட்டரி தயாரிப்பு நிறுவனங்களுக்கு ஏற்பட்டிருக்கும் நஷ்டம் காரணமாக லெட்டின் பயன்பாடு குறைந்து வருகிறது. இதுவும் விலை குறைவிற்கு காரணமாக அமைந்துள்ளது. ஆக, மொத்தத்தில் அனைத்து அடிப்படை உலோகங்களின் தேவையும் பரவலாக குறைந்துள்ளதால் வரும் வாரத்திலும் விலை குறைந்து வர்த்தகமாகவே வாய்ப்புகள் அதிகம்.

கச்சா எண்ணெய்!

அமெரிக்காவின் கச்சா எண்ணெய் ஸ்டாக் குறைந்ததும், டாலரின் மதிப்பு குறைந்ததன் காரண மாகவும் கச்சா எண்ணெய்யின் விலை அதிகரித்து சென்ற வாரத்தில் வர்த்தகமானது. ரூபாயின் மதிப்பு அதிகரித்ததால் எம்.சி.எக்ஸ். கச்சா எண்ணெய் கான்ட்ராக்ட் 1.3% வரை சென்ற வியாழக்கிழமையில் குறைந்தது.

டபிள்யூ.டி.ஐ. கச்சா எண்ணெய் அக்டோபர் கான்ட்ராக்ட் 108.40 டாலருக்கு ஒரு பேரல் வர்த்தக மானது. பிரன்ட் கச்சா எண்ணெய் ஒரு பேரல் 115.30 டாலருக்கு வர்த்தகமானது. இந்தியாவைப் பொறுத்தவரை, செப்டம்பர் கான்ட்ராக்ட் 7,200 ரூபாய்க்கு எம்.சி.எக்ஸ். சந்தையில் வர்த்தகமானது.

கமாடிட்டி - மெட்டல் - ஆயில்

ஜி-20 மாநாட்டில் சிரியா பிரச்னை குறித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என்ற எதிர்பார்ப்பால் வரும் வாரத்தில் சந்தை இதனை பொறுத்தே பிரதிபலிக்கும். சிரியா கச்சா எண்ணெய் சப்ளையில் பெரிய நாடு இல்லை என்றாலும், மற்ற நாடுகள் சிரியா மீது தாக்குதல் நடந்த முன்வந்திருப்பது சப்ளையைப் பாதிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் வரும் வாரத்தில் கச்சா எண்ணெய் விலை அதிகரித்து வர்த்தகமாக வாய்ப்புள்ளது.

- பானுமதி அருணாசலம்.

கமாடிட்டி - மெட்டல் - ஆயில்
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism