இளைஞர்களை இன்டலிஜென்ட் ஆக்கும் தொடர்!

நம்பிக்கைத் தரும் நஸ்ரீன்

விழுப்புரம் மாவட்டத்தின் தென்கோடியில் உள்ள ஒரு மகளிர் கல்லூரி. போட்டித் தேர்வுகள் பற்றிய முழுநாள் பயிலரங்கம். சுமார் ஐநூறுக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் குழுமியிருந்தனர். அதிகபட்சம் ஆறு மணி நேரம்தான் அவர்களிடம் பேச முடியும் என்பதால் வேகவேகமாகப் பயிலரங்கத்தை நடத்தவேண்டிய கட்டாயம் எனக்கு. ஆரம்பித்து அரை மணி நேரம் கழித்து...

'எக்ஸ்யூஸ் மீ சார், உங்கள் அவசரம் எனக்குப் புரிகிறது. எல்லாவற்றையும் நீங்கள் சொல்லிவிடுவது முக்கியமா... அல்லது, சிறிதாவது சரியாகச் சென்று சேரவேண்டும் என்பது முக்கியமா..?’

பலத்த கரகோஷம். சுற்றுமுற்றும் பார்த்தேன். கேள்வி கேட்டவர் ஒரு பெண். தான் யார் என்பது தெரியவேண்டும் என்பதற்காக எழுந்து நின்று கேட்டது மட்டுமல்லாமல், என் விடையை எதிர்பார்த்து நின்றபடியே இருந்தாள் அந்தப் பெண்.

'மன்னிக்க வேண்டும், நிதானித்துக்கொள்கிறேன்.’

'சார், உங்களை நிந்திப்பதல்ல என் நோக்கம்...’

'உங்கள் கேள்வி என்னை சிந்திக்கவே செய்கிறது!’

அதன்பிறகு தொடர்ந்து பல்வேறு தகவல்களைப் பரிமாறிக்கொண்டு வந்தேன். அவ்வப்போது அந்தப் பெண் ஏதேனும் கேட்டபடியே இருந்தாள்.

ஒவ்வொருமுறை அவள் எழுந்திருக்கும் போதும் அவளுக்கு ஆரவாரமான வரவேற்பு. கேள்வியிலும் அர்த்தம் இருந்தது.

'முழுவதும் தமிழ் வழியிலேயே கற்றவர் களுக்கு, போட்டித் தேர்வுகளில் வெற்றி பெறுவதில் என்னென்ன சிக்கல்கள் இருக்கின்றன..?’

'கிராமப்புறப் பெண்களுக்கு என்று சிறப்பு வகுப்புகள் ஏதேனும் இருக்கின்றனவா..?’

'அறிவியல் தொடங்கி, வரலாறு, புவியியல், அரசியல் சாசனம் வரை எல்லாவற்றிலும் கேள்விகள் கேட்கப்படுகின்றனவே...இவையனைத்தும் தெரிந்தவர்கள்தான் இப்போது அரசுப் பணியில் இருக்கிறார்களா..? அது எந்த அளவுக்கு ஒரு வேலைக்கு அவசியமாகிறது..?’

இப்படி பல கேள்விகளை அடுக்கிக்கொண்டே போனாள்.

'பல்லாயிரக்கணக்கானோர் சில பணியிடங்களுக்குப் போட்டியிடுகிறபோது, ஏதேனும் ஒரு 'ஸ்கேனிங் ப்ராசஸ்’ தேவை. அப்படித்தான் இதனைப் பார்க்கவேண்டும். நாம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் இதைவிட சிறந்த மாற்று வழியில்லை’ என்றேன்.

'நீங்கள் சொல்வதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை; ஆனால், புரிந்துகொள்ள முடிகிறது’ என்றாள்.

'ஏன் ஏற்றுக்கொள்ள முடியவில்லை..?’

'காரணம், அரசுப் பணிகளுக்கு, அறிவார்ந் தவர்களை விடவும், நேர்மையானவர்கள் வருவதுதான் முக்கியம். போட்டித் தேர்வுகளில் அந்த அம்சம் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுவதாகவே தெரியவில்லை...’

பலத்த கைத்தட்டல். ஒரு கணம் சிலையாக நின்றேன். 'இவள் அசாதாரணமானவள்!’

மதிய உணவு இடைவேளையின்போது அந்தக் கல்லூரியின் பிரின்சிபல் மேடம் அறைக்கு வந்தேன். பேச்சு அந்த இளைஞியைப் பற்றி வந்தது. மேடம் புன்னகைத்தபடியே, 'அவள்தான் இந்த காலேஜின் நம்பிக்கை நட்சத்திரம்' என்றார்.

'இங்கிருந்து சுமார் 20 கி.மீ தூரத்தில் உள்ள ஒரு சின்ன கிராமத்தில் இருந்து வருகிறாள்; அவளுடைய அப்பா பிரைவேட் பஸ் கண்டக்டர். கொஞ்சம் பெரிய குடும்பம். கஷ்டப்பட்டுதான் படிக்க வைக்கிறாங்க. இவளோட தங்கை நசீமாவும் இதே காலேஜுல ஃபர்ஸ்ட் இயர் படிக்கிறா. அவளும் இவளை மாதிரியே சுட்டிதான்.’

1.30-க்கு முன்னதாகவே அரங்கத்துக்கு சென்றுவிட்டேன். ஏறத்தாழ எல்லாரும் வந்துவிட்டார்கள், நஸ்ரீனைத் தவிர.

'எங்கே நஸ்ரீன்..?’ என்று கேட்டேன்.

'சார், அவங்க அப்பா கண்டக்டரா இருக்கிற பஸ், ஒண்ணே கால் மணிக்குத்தான் நம்ம காலேஜ் வழியாப் போகும். அவர்தான் சாப்பாடு டப்பா கொண்டுவந்து தருவாரு...’ என்று நஸ்ரீனின் தோழி சொல்லி முடிப்ப தற்குள் அவளே வந்தாள்.

காலேஜிலே இருந்து மெயின் ரோட்டுக்குப் போகவே பத்து நிமிஷத்துக்கு மேல பிடிக்குமே... போய்வரவே நேரம் ஆயிடுமே... அப்புறம் சாப்பிடறதுக்கு எங்கே நேரம் இருக்கும்..? என்று தோன்றியது. 'சாப்பிட்டீங்களா..?’ என்று கேட்டேன்.

'ஆங்.. சாப்டுட்டேன்...’ என்றாள்.

'எப்படி நேரம் கிடைச்சது..?’ என்றேன். அவள் சொன்ன பதிலில் உண்மையில் ஆடிப்போய்விட்டேன். 'நடந்து வரும்போதே சாப்டுட்டேன்.. உட்கார்ந்துதான் சாப்பிடணும்னு என்ன இருக்கு..?’ அதன்பிறகு சிறிது நேரத்துக்கு நஸ்ரீனைப் பற்றிய பேச்சு தொடர்ந்தது.

'ஊருல இருந்து பஸ்ஸுல காலேஜுக்கு வர்றதுக்கு ஒரு மணி நேரம், அதேமாதிரி திரும்பப் போகும் போதும் ஒரு மணி நேரம். பஸ்ஸுலேயே ஜூனியர் ஸ்டூடண்ட்ஸுக்கு டியூஷன் எடுப்பா. எம்பிராய்டரி நல்லாப் பண்ணுவா. அதைப் பண்ணிக்கிட்டேதான் கிளாஸே எடுப்பா. வாய் பேசப் போகுது; கை சும்மாதானே இருக்கப் போகுது. ஏதாவது செய்யலாமே..?’ என்பாள்.

'நல்லா படம் வரைவா... எழுதுவா... பேசுவா... எப்பவும் ஏதாவது பண்ணிக்கிட்டே இருப்பா...’

அவள் மீது பலரும் அன்பாக இருப்பதன் காரணம் புரிந்தது.

'ஒவ்வொரு நொடியும் மிக முக்கியமானது. நம்மால் சேமிக்க முடியாத எதையும் வீணாக செலவு செய்வது கூடவே கூடாதுன்னு சொல்லுவா...’

''ஆடிட்டரா வரணும், லாயர் ஆகணும்னு வெவ்வேறு ஆசை இருந்திச்சு; இப்ப அதெல்லாம் இல்லை. கவர்ன்மென்ட் வேலைக்குத்தான் போகணும்னு ஃபைனலா முடிவு பண்ணிட்டேன். முதல்ல குரூப் ஃபோராவது கிளியர் பண்ணி வேலைக்குப் போயிடணும். அப்புறமா இருக்கவே இருக்கு, நம்முடைய அல்டிமேட் எய்ம், ஐ.ஏ.எஸ். பாஸ் பண்ணி கலெக்டர் ஆவணும். லெட் மி ஸீ...''

தெளிவாக இருக்கிறாள். சுறுசுறுப்பாக இயங்குகிறாள். வாழ்க்கையின் மீது, பிற மனிதர்களின் மீது, அரசு அமைப்புகளின் மீது தீராத நம்பிக்கை வைத்திருக்கிறாள்.

''இவங்களுக்கு நான் என்ன சார் பண்ணிட் டேன்..? என் மேல எவ்வளவு அன்பு வச்சிருக்காங்க பார்த்தீங்களா..? நான் படிச்ச ஸ்கூல்ல அனந்தசயனம்னு ஒரு கணக்கு வாத்தியார் இருக்காரு. இன்னைக்கும் எனக்காக எல்லா நியூஸ் பேப்பரும் படிச்சு முக்கியமானதை நோட்ஸ் எடுத்துத் தர்றாரு... லைஃப்ல நான் நல்லா வரணும், நாலு பேருக்கு நல்லது பண்ணனும். அதுதான் இவங்க என்கிட்ட காட்டற அன்புக்கு நான் செய்யற பதில் மரியாதையா இருக்கும்.''

இன்றைய இளைஞர்கள் 'இன்டலிஜென்ட்’ ஆவதற்குரிய, அடுத்த முக்கியமான அறிவுரை அல்லது ஆலோசனையை இவளிடமே கேட்டால் என்ன என்று தோன்றியது.

''சரி... வாழ்க்கையில ஒரு லட்சியத்தை நோக்கி தன்னம்பிக்கையுடன் முன்னேறிக்கிட்டு இருக்கீங்க; அதற்கு என் வாழ்த்துக்கள். இன்றைய இளைஞர்களுக்கு சொல்லவேண்டிய முக்கியமான குறிப்பு என்ன..? சாதிக்கத் துடிக்கும் ஒரு இளைஞியா நீங்க சொன்னா, அது இங்கே இருக்கிற எல்லாருக்குமே யூஸ்ஃபுல்லா இருக்கும் இல்ல..?'' என்று கேட்டேன்.

''சொல்றேன். ஆனா, இது என் சொந்த சரக்கு இல்லை. பாரதியார் சொன்னதுதான்!''

அது..!
(தெளிவோம்)