Published:Updated:

மாறுவது சந்தை, மீறுவது பழமை !

மாறுவது சந்தை, மீறுவது பழமை !

மாறுவது சந்தை, மீறுவது பழமை !

மாறுவது சந்தை, மீறுவது பழமை !

Published:Updated:
##~##

உலகமயமாக்கலினால், தொழில் புரிவோருக்கான இன்றைய சந்தை மிக வேகமாக விரிவடைந்து வருகிறது. ஒவ்வொரு நாளும் சந்தையின் தேவை மற்றும் விருப்பம் மாற்றம் அடைந்துகொண்டே வருகிறது. இந்த மாற்றத்தை முன்கூட்டியே கணிப்பதும், அதற்கு தகுந்தவாறு தொழிலில் மாற்றங்களைச் செய்துகொண்டே செல்வதும் இன்றைக்கு சந்தையில் நம் தொழில் நீடித்து இருக்க முக்கியத் தேவை.

ஐம்பது வருடங் களுக்கும் மேலாக இந்தியாவின் மாறாத வாகன அடையாளமாக இருந்த அம்பாசிடர் காரின் காலத்தில் இருந்து மாறி, இன்று மாதத்திற்கு இரண்டு புது கார் மாடல்கள் அறிமுகமாகும் காலத்திற்கு வந்திருக்கிறோம். லட்சக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள காரின் தேவை யிலேயே இன்றைய மக்கள் அவ்வளவு மாற்றங்களை எதிர்பார்க்கிறார்கள் என்றால், மற்ற நுகர்பொருட் களில் அவர்களின் தேவை, விருப்பம் எவ்வளவு மாறி இருக்கும்?

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

சந்தையில் ஏற்படும் இந்த மாற்றங்களைப் புரிந்துகொள்ள முடியாமல் திணறுகிற தொழில் முனைவோர் பலர். இந்த மாற்றங்களுக்கு  தகுந்தபடி அடிக்கடி முதலீடு செய்து கொண்டே இருக்க முடியுமா? இனி எப்படிப்பட்ட மாற்றங்கள் வரும் என்று கணிக்க முடியவில்லையே! ஆனால், சிலர் மட்டும் இந்த மாற்றங்களைச் சரியாகச் செய்து ஜெயிக்கிறார்களே, எப்படி? என்று கேட்கிறீர் களா?  

மாறுவது சந்தை, மீறுவது பழமை !

பிசினஸில் மிகப் பெரிய வெற்றி பெற்றவர்களை உற்றுக் கவனியுங்கள். அவர்கள் மாற்றத்தை ஏற்றுக் கொண்டவர்களாக இருக்க மாட்டார்கள். மாறாக, அந்த மாற்றத்தை எற்படுத்தி யவர்களாக இருப்பார்கள். ஆம், மாறிவரும் சந்தை யில் ஜெயிப்பதற்கு, அந்த மாற்றத்தைப் பின்தொடர்பவராக இல்லா மல், புது மாற்றத்தை உருவாக்குபவராக இருக்க வேண்டும்.

ஸ்டீவ் ஜாப்ஸ் உலகமறிந்த பெயர்; ஆப்பிள் நிறுவனத்தை உருவாக்கியவர். இசைப் பிரியர்களின் தனிப்பட்ட தேவையை சோனி, பிலிப்ஸ் போன்ற நிறுவனங்களின் வாக்மேன்கள் நிறைவாகப் பூர்த்தி செய்துகொண்டிருந்த காலத்தில், சோனியின் வாக்மேனைவிட பிரமாதமான ஒரு வாக்மேனை தயாரித்து சோனிக்கு சரியான போட்டியை அந்தச் சந்தையில் தரவேண்டும் என்று அவர் நினைக்கவில்லை. அப்படி அவர் நினைத்திருந்தால் அவர் தன் வாழ்க்கை முழுவதும் சோனி போன்ற பெரிய நிறுவனங்களின் பின்னால் தொழில் போட்டியில் ஓடி ஓடி களைத்திருப்பார்.

ஏனெனில் அவர் ஒரு முதல் தலைமுறை தொழிலதிபர். ஐபேட் என்ற அவரது புதிய கண்டுபிடிப்பின் மூலம் தனக்கென புது சந்தையையே உருவாக்கினார். ஐபேட் பின்பு அவரது கண்டுபிடிப்பின் பரிணாம  வளர்ச்சியால் ஐபோன் ஆகவும் மாறி அவர் உருவாக்கிய சந்தையைப் பெரும் விரிவாக்கம் செய்தது. அந்தப் புதிய சந்தையில் சோனி, சாம்சங் போன்ற நிறுவனங்கள் ஆப்பிள் நிறுவனத்தின் பின்னால் ஓடிவந்து தொழில் போட்டியை எதிர்கொள்ளும் நிலையை உருவாக்கினார்.

ஸ்டீவ் ஜாப்ஸ் சந்தையின் தேவைகளை தன் எண்ணக் கனவுகளின் மூலம் நிவர்த்தி செய்தார். சந்தையின் தேவைகளை, உலகச் சமூகத்தின் பார்வையைத் தன் சிந்தனையை நோக்கித் திருப்பினார். மாறிவரும் பொழுதுபோக்கு மற்றும் தகவல் தொழில்நுட்பத்துக்கான உலகச் சந்தையில் அந்த மாற்றத்தின் மையப்புள்ளியாக அவர் இருந்தார்.  

இதெல்லாம் கொடுப்பினை சார்! அவருக்கு அதிர்ஷ்டம் அதிகம் என்று மட்டும் நினைக்காதீர்கள். ஏனெனில், 56 வயது வரை மட்டுமே வாழ்ந்த அவரது தனிப்பட்ட வாழ்க்கை, அவருக்கு அவ்வளவு மகிழ்ச்சிகரமானதாக இல்லை.

மேலும், அவர் உருவாக்கிய ஆப்பிள் நிறுவனத்தில் இருந்தே சில காலம் வெளியேற்றப்பட்டிருந்தார். மீண்டும் அதில் இணைந்த அவர் அந்நிறுவனத்தை உலகின் முன்னோடி நிறுவனமாக மாற்றினார்.  

ஸ்டீவ் ஜாப்ஸ் ஆப்பிள் நிறுவனத் தின் இமேஜை பிரபலப்படுத்திய விதம் வித்தியாசமானது. தனித்துவமான ஆப்பிளின் பொருட்களை சந்தையில் அவர் நுணுக்கமான விளம்பர உத்தி யுடன் நிலைநிறுத்தினார். அவரது i-stores உலகம் முழுவதும் அதன் வாடிக்கையாளர்களுக்கு வித்தியாசமான வாங்கும் அனுபவத்தைக் கொடுத்தது. அவற்றின் உள் மற்றும் வெளிப்புற வடிவமைப்பு அந்தச் சந்தையில் நுழைவோரைச் சுண்டியிழுப்பதாக இருந்தது.

மாறுவது சந்தை, மீறுவது பழமை !

ஸ்டீவ் ஜாப்ஸ் உங்களுக்கு கற்றுத் தருவது இதுதான்: ''ஒரு தொழிலை நடத்தும் நீங்கள், உங்கள் துறைக்கான சந்தையில் ஒரு புலியாக இருங்கள். நீங்கள் புலியாக இருந்தால் மட்டும் போதாது. நான் புலியாக இங்கு இருக்கிறேன்' என்பதையும் உங்கள் சந்தையில் உங்களின் வித்தியாசமான சந்தை அணுகுமுறை மூலம் உணர்த்திக்கொண்டும் அடையாளப்படுத்திக்கொண்டும் இருங்கள்''.

சார், எங்களின் உற்பத்திப் பொருட்கள் தரமானவை; இதன் வடிவமைப்பும், விளம்பரமும் எங்கள் தாத்தா காலத்திலேயே மிகச் சிறப்பாக நிர்மாணிக்கப்பட்டுவிட்டது. மூன்று தலைமுறையாக இப்படித்தான் செல்கிறது. இவற்றில் மாற்றம் எல்லாம் தேவை இல்லை என்று ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு ஆரம்பித்த இடத்திலேயே நிற்கிறீர்களா? உங்கள் பிரச்னைக்கான தீர்வை இனி பார்ப்போம்.

தொழிலை முன்னேற்ற எதிர்கால கனவுகளில் மிதப்பவர்களைவிட பழைய நினைவுகளையும், பழம்பெருமைகளையுமே அசைபோட்டுக் கொண்டிருப்பவர்கள் தொழிலில் வேகமான வளர்ச்சியும், பலனும் அடைவதில்லை. இவர்கள் கடந்த கால கல்வெட்டாக தங்கள் தொழிலை மனதிற்குள் வரிந்துகொள்கிறார்கள்.

கல்வெட்டுகள் வரலாறு சொல்லும். ஆனால், அதிவேகமாக மாறிவரும் இன்றைய தொழில் சூழ்நிலையில் அவை உங்களை முன்னெடுத்துச் செல்லாது. 'மாற்றம் ஒன்றுதான் மாறாத ஒன்று’ என்பதுதான் இன்றைய உலகமயமாக்களில் சத்தியமான ஒன்று. இங்கு எதுவும் நிரந்தரம் இல்லை. நிரந்தரமான ஒன்று இருந்தால் அது சந்தேகத்திற்கு இடமில்லாமல் பழையது என்ற எண்ணம் வாடிக்கையாளர்கள் மனதில் உள்ளது.

1945-ம் ஆண்டு, மும்பையில் முஹமது ஹசம் பிரேம்ஜி என்பவரால் வெஸ்டர்ன் இந்தியா வெஜிடபிள்ஸ் புராடக்ட்ஸ் (விப்ரோ) என்ற நிறுவனம் ஆரம்பிக்கப்பட்டது. இந்நிறுவனம் மஹாராஷ்ட்ராவில் அமலநேர் எனும் ஊரில் வனஸ்பதி தயாரிக்கும் தொழிற்சாலையை நடத்தி வந்தது. 1966-ல் முஹமது பிரேம்ஜியின் மறைவிற்குப்பின் அவரது மகன் அஜிம் பிரேம்ஜி தன் 21-வது வயதில் அந்நிறுவனத்தின் தலைமைப் பொறுப்பிற்கு வந்தார்.

1970-களின் தொடக்கத்தில் அதுவரை வனஸ்பதி மட்டுமே தயாரித்துவந்த நிறுவனத்தில் பல புதிய தொழில் முயற்சிகளை மேற்கொண்டார். அதாவது, முற்றிலும் புதிதாக, (வனஸ்பதி தயாரிப்பிலும் தொடர்ந்து இருந்தது) பெங்களூருவில் பீன்யா என்ற இடத்தில் ஹைட்ராலிக் இன்ஜினீயரிங் பொருட்கள் தயாரிக்கும் புதிய தொழிற்சாலையைத் தொடங் கினார். இந்தத் தொழிலில் வனஸ்பதி தொழிலைவிட அதிவேகமான வளர்ச்சி அடைந்தார்.

தன் புதிய தொழில் முயற்சியில் அடைந்த வெற்றியால் பெரும் உற்சாகம் அடைந்தார். அந்த உற்சாகம் அவரை மேலும் பல புதிய தொழில் முயற்சிகளை எடுப்பதற்கு அவரை உந்தித் தள்ளியது. 1978-ல் கம்ப்யூட்டர் தயாரிக்கத் துவங்கினார். அதிலும் அவருக்கு வெற்றிதான்.

1980-களின் தொடக்கத்தில் கம்ப்யூட்டர் மென்பொருள் துறையில் நுழைந்தார். அது அவரை உலகின் பெரும் செல்வந்தர்களில் ஒருவராக மாற்றியது. இன்று அவரது விப்ரோ நிறுவனம் ஆண்டுக்கு 48,000 கோடி ரூபாய் டேர்னோவர் செய்கிறது.

வனஸ்பதி முதல் ஐ.டி. வரை பல தொழில்களை செய்வதால் விப்ரோவின் பிராண்ட் லோகோவில் சூரியகாந்திப் பூ இருப்பதைக் காணலாம். பழைய நினைவுகளைச் சுமந்துவரும் அதேநேரத்தில் பழம்பெருமை பேசி நிற்கவில்லை அஜிம் பிரேம்ஜி.

ஒரு வெற்றிகரமான தொழிலதிபராக அவர் நமக்கு உணர்த்தும் விஷயம் இதுதான்: ''காலம் காலமாக நாம் எந்தத் துறையில் தொழில் செய்கிறோம் என்பதைவிட, இப்போது சந்தையில் எந்தத் தொழிலுக்கான தேவை உள்ளதோ, அதையும் செய்யும் விதமாக நாம் மாறினால் மட்டுமே இன்றைய தொழில் துறையில் பெரிய வெற்றிகளைப் பெறமுடியும்!''  

தொழில் துறையில் பிரேம்ஜி நுழைந்தபோது, அவரைப்போல், இந்தியாவில் எத்தனையோ தொழிலதிபர்கள் வனஸ்பதி உற்பத்தி  செய்தனர். மற்றவர்களைவிட நாம் இன்று பிரேம்ஜியை பிரதானமாக பேசக் காரணம், சந்தையின் தேவையைச் சரியாகப் புரிந்து கொண்டு, அதை ஈடு செய்கிற மாதிரி யான புதிய தொழில்களைத் தொடங்கியதால்தான்!  

விஞ்ஞானி டார்வினின் மனித பரிணாம வளர்ச்சி கொள்கை இது: 'வலிமையானதோ, அளவில் பெரியதோ அல்லது வீரம் நிறைந்த உயிரினமோ இவ்வுலகில் பரிமாண வளர்ச்சி அடைவதில்லை. மாறாக, பூமியில் ஏற்படும் ஒவ்வொரு சூழ்நிலை மாற்றத்திற்கும் தகுந்தபடி எந்த உயிரினம் தன்னை மாற்றிக் கொள்கிறதோ, அதுவே இந்த பூமியில் நீடித்து வாழ்கிறது'.

இது உயிரினங்களுக்கு மட்டுமல்ல, இன்றைய தொழில் சூழலில் ஒவ்வொரு தொழிலதிபருக்கும் பொருந்தும்.

(கற்போம்)

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism