Published:Updated:

ஒரு சுகமான சுற்றுலா - கொடைக்கானல்

ஒரு சுகமான சுற்றுலா - கொடைக்கானல்

ஒரு சுகமான சுற்றுலா - கொடைக்கானல்
ஒரு சுகமான சுற்றுலா - கொடைக்கானல்


தமிழகத்தின் குளுகுளு பிரதேசங்களில் ஊட்டிக்கு அடுத்ததாக சுற்றுலாப் பிரியர்களைக் கவர்ந்து இழுக்கும் கொள்ளை அழகு பிரதேசம் கொடைக்கானல். திண்டுக்கல்லிலிருந்து மூன்று மணிநேரத்தில் சென்றுவிடலாம்.

##~##
பி
யர் ஷோலா ஃபால்ஸ் (Bear Shola falls), சில்வர் கேஸ்கேட் வாட்டர் ஃபால்ஸ் (silver cascade water falls), குணா கேவ் (guna cave), போட் கிளப் (Boat club), சூசைட் பாயின்ட் என சுற்ற இடங்கள் இருந்தாலும், ஹனிமூன் ஜோடிகளைத் திக்குமுக்காட வைப்பது பெரிஜம் ஏரி படகுச் சவாரிதான்.

கொடைக்கானலிலிருந்து 20 கி.மீ. தொலைவில் இருக்கும் இந்த ஏரியின் அமைப்பே ஒரு ஸ்டார் வடிவத்தில் இருக்கிறது. பசுமையான மலைகளுக்கு நடுவில் போட்டிங் செய்வது பரவசமாக இருக்கும். இங்கு வரும் வழியின் இருபுறமும் அடர்ந்த மரங்கள் அமேசான் காடுகளைப் போல மிரட்டலாக இருக்கும்.  வழியிலேயே சுதந்திரமாகத் சுற்றும் வன விலங்குகளையும் காண முடியும். இங்கு செல்ல வேண்டுமானால் கொடைக்கானலில் 'தமிழ்நாடு ஹோட்டல்’ அருகே இருக்கும் மாவட்ட வன அலுவலகத்தில் (04542-240287) அனுமதி பெறுதல் அவசியம்.  ஏரிக்கு செல்லுமுன் என்ன செய்ய வேண்டும், என்ன செய்யக்கூடாது என்பது குறித்த  அறிவுரைகள் இங்கு வழங்கப்படுகிறது.

ஒரு சுகமான சுற்றுலா - கொடைக்கானல்
ஒரு சுகமான சுற்றுலா - கொடைக்கானல்
ஒரு சுகமான சுற்றுலா - கொடைக்கானல்

தினமும் குறிப்பிட்ட அளவு பயணிகளை மட்டுமே ஏரிப் பகுதிக்கு அனுமதிப்பதால் காலையிலேயே சென்றுவிடுவது நல்லது. இரவு தங்க விரும்புபவர்களையும் அனுமதிக்கிறார்கள். இரவு நேரத்திற்கான உணவுகளை பயணிகளே எடுத்துச் செல்ல வேண்டும். அனுமதி பெறும் போது எத்தனை நபர், எந்த வாகனத்தில் செல்கிறீர்கள், பாதுகாப்பு சாதனங்கள் போன்ற அனைத்து விவரங்களையும் கொடுக்க வேண்டும். இரவில் தங்குபவர்களின் உதவிக்காக ஒருவரை உங்களோடு அனுப்பு வார்கள். அதிகாலையில் சூரிய உதயத்தின் போது ஏரியின் அழகை ரசிப்பது பரவச மான அனுபவம்.  இரவு தங்கினால் மட்டுமே இந்த  ஹைலைட்டான அம்சத்தை ரசிக்க முடியும். இங்கு செல்பவர்கள் பிளாஸ்டிக் பொருட்களைத் தவிர்ப்பது நல்லது.

சீஸன்: ஏப்ரல், மே, ஜூன், செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்கள்.

மிஸ் பண்ணிடாதீங்கப்பா.!

ஒரு சுகமான சுற்றுலா - கொடைக்கானல்

- அ.ராமநாதன்

அடுத்த கட்டுரைக்கு