Published:Updated:

பணவளக்கலை!

உங்களைப் பணக்காரர் ஆக்கும் தொடர்!

பணவளக்கலை!

உங்களைப் பணக்காரர் ஆக்கும் தொடர்!

Published:Updated:
##~##

பணத்தை நோக்கிய முன்னேற்றப் பயணத்தில் நம்முடைய வாழ்க்கை முறையும்/நிர்வாக முறையும் (சிஸ்டம்) வேலைக்குச் செல்பவர்களுக்கு எப்படியெல்லாம் முட்டுக்கட்டை போடுகிறது என்று பார்த்தோம். உலகமே ஒரு சிஸ்டத்தின் கீழ்தானே வேலை செய்கிறது. நீங்கள் சொல்வதைப் பார்த்தால் அந்த சிஸ்டத்தை மீறினால்தான் பணம் சம்பாதிக்க முடியும் போலிருக்கிறதே! இது சரியா என்ற கேள்வி உங்கள் மனதில் தோன்றும்.

அதுதவிர, கொஞ்சம் ஆபீஸ் பாலிடிக்ஸ் குறித்தும் நான் பேசுவதாக நீங்கள் நினைத்திருக்கலாம். ஆபீஸ் பாலிடிக்ஸ் என்பது அனைவருக்குமே தவிர்க்க முடியாத ஒன்று. அதுவும் சிஸ்டத்தின் ஒரு பகுதி என்பதைப் புரிந்துகொள்ளவேண்டும்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

சிஸ்டத்தை அனுசரித்தால்தான் அனைவருக்குமே வாழ்க்கை ஓடும் என்பதில் சந்தேகம் ஏதுமில்லை. அதேசமயம் சிஸ்டத்தின் சௌகரியத்தில் நீங்கள் திளைத்துவிட்டீர்கள் என்றால் அந்த சிஸ்டம் உங்களுக்கு என்னென்ன முன்னேற்றத்தைத் தருமோ, அதனை மட்டுமே நீங்கள் அடைய முடியும்.

ஆபீஸ் பாலிட்டிக்ஸும் சிஸ்டத்தின் ஒரு பகுதிதான் என்பதால் அதுவும் மேற்சொன்ன பலன்களையே தரும். ஒரு சிஸ்டத்தின் கீழ் வாழ்வது என்பது தவறு என்று நான் சொல்லவில்லை. அடிப்படையிலான பணரீதியான தேவைகளை மட்டுமே அது தீர்க்க உதவும். நாம் முயல்வது பணரீதியான வெற்றிக்கும் செயல்பாடு ரீதியான சுதந்திரத்திற்கும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். சிஸ்டத்திற்கு கட்டுப்பட்டும் அதேசமயம், அது தரும் சௌகரியங்களில் திளைக்காமலும் இருப்பவர்களே பணரீதியான வெற்றிகளைப் பெற முடியும் என்பதுதான் பணவளக்கலையின் சூட்சுமம்.

பணவளக்கலை!

சிஸ்டத்துக்கு கட்டுப்பட்டுப் போவதே சுகம் என்று நினைத்துவிட்டீர்கள் என்றால் அதுவே ஆவரேஜ் வாழ்க்கையை நீங்கள் வாழத் தயாரான தருணம் என்பதைப் புரிந்துகொள்ளுங்கள். பணரீதியான வெற்றி பெறவேண்டும் என்ற எண்ணம் நீருபூத்த நெருப்பாக உங்கள் மனதில் இருந்துகொண்டே இருக்கவேண்டும். சிஸ்டத்தின் சுகம் அந்த நெருப்பை முழுவதுமாக அணைத்துவிடும் வாய்ப்பு மிக மிக அதிகம். ஏனென்றால் சிஸ்டங்கள் தன்னை அறியாமலேயே அந்த நெருப்பை அணைப்பதற்கான அனைத்து விஷயங்களையும் தன்னகத்தே கொண்டிருக்கிறது.

பொதுவாகப் பார்த்தால், இருபதுகளில் பெரும்பாலானோர் மனதில் கொளுந்துவிட்டு எரியும் இந்த நெருப்பு, முப்பதுகளில் அதுவாகவே சற்று வீரியம் குறைந்து சிலரிடமும், நாற்பதுகளில் நீருபூத்த நெருப்பாக மிகச் சிலருக்கும், ஐம்பதுகளில் மொத்தமாகக் கரிக்கட்டையாக மாறிக் காணாமலேயே போய்விடுகிறது.

ஏற்கெனவே நான் சொல்லியிருந்தபடி, வயது ஆகஆக நம்முடைய சமூகம் மற்றும் குடும்பச் சூழல் நமக்கு அதிகமான பொறுப்பைத் தந்துகொண்டே போகிறது. பொறுப்புகளும் இந்த நெருப்பை அணைப்பதற்கு தலைசிறந்த தீயணைப்பானாகும். பொறுப்புகள் எல்லா நெருப்பையும் அணைக்க வல்லது. தீயணைப்பான்கள் பாஷையில் சொன்னால் (கிளாஸ் ஏ,பி,சி போன்ற), எல்லாவகை நெருப்பையும்  பொறுப்புகள் அழித்துவிடும். சிஸ்டம் பாதி-பொறுப்பு பாதி என இந்த இரண்டும் போட்டி போட்டுக்கொண்டு பணரீதியான தேடுதலுக்கு பூட்டுக்களை சுலபமாகப் போட்டுவிடாதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.  

தனிமனிதனாக தங்களுடைய நேரத்தைக் கொடுத்து பணத்தைச் சம்பாதிக்கும் நீங்கள் அடையும் பணரீதியான வெற்றியைவிட பலருடைய நேரத்தை வாங்கி அதை லாபகரமாக உபயோகிப்பவர் அடையும் பணரீதியான வெற்றியே நிச்சயம் பெரியதாக இருக்கும். ஒருவருக்கு பணம் ஈட்டித்தரும் பலரில் ஒருவராக இருக்க விரும்புகிறீர்களா அல்லது பலர் ஈட்டித் தரும்

பணவளக்கலை!

பணத்தைப் பெறும் ஒருநபராக இருக்க விரும்புகிறீர்களா என்பதுதான் ஒருவருடைய பணவளத்தை முடிவு செய்கிறது.

என்ன இது, மல்டிலெவல் மார்க்கெட்டிங் போல் இருக்கிறதே என்கின்றீர்களா? அது இல்லை. எந்த ஒரு தொழிலிலும் அல்லது தொழில் ரீதியான நடவடிக்கைகளிலும் பலரின் உழைப்புதானே பலனாக பணமாக மாறி முதலாளியை நோக்கிச் செல்கிறது. அதனாலேயேதான் உங்கள் ஒருவரின் உழைப்பின் பயனா? அல்லது பலரின் உழைப்பின் பயனா? என்று முடிவு செய்துகொள்ளுங்கள் என்று சொல்கிறேன்.

மற்ற மனிதர்களின் கூட்டுமுயற்சியால் வரும் பலனே வேகமான வளர்ச்சியை உங்களுக்குத் தரும். சரியானதொரு கைமாற்றுடன் பெறப்பட்டு உபயோகிக்கப்படும் மற்றவர்களின் அறிவு, மற்றவர்களின் சக்தி, மற்றவர்களின் பணம், மற்றவர்களின் வெற்றி, மற்றவர்களின் தோல்வி, மற்றவர்களின் ஐடியா, மற்றவர்களின் தொடர்புகள் என அனைத்தையும் உங்களின் துணைவலுவாக்கி (லீவரேஜ்) செயல்பட ஆரம்பிக்கும்போதுதான் பணம் உங்களை நோக்கி வேகமாக வர ஆரம்பிக்கும்.

அதெல்லாம் சரி சார், தொழில் ஆரம்பிக்க முதலீடு தேவையாச்சே! நானோ வேலையில் இருக்கிறேன். வாழ்க்கையை ஓட்ட மட்டுமே சம்பளம் போதுமானதாக இருக்கிறது. இதில் என்றைக்கு நான் முதலீட்டைத் திரட்டி என்றைக்கு தொழில் ஆரம்பித்து மற்றவர்களுடைய பராக்கிரமங்களை உபயோகிக்கப் போகிறேன் என்பீர்கள். அதையும்விட மிக முக்கியமான விஷயம், ஒருவேளை நான் தொழில் ஆரம்பித்து அது சரியாகப் போகாவிட்டால் பிழைப்பை ஓட்டுவது எப்படி என்று கேட்பீர்கள்.

இங்கேதான் கொஞ்சம் மனதின் ரோல் வருகிறது. வெற்றிகரமாகத் தொழில் செய்து சம்பாதித்தவர்கள் பலரிடம் நீங்கள் பெரும்பான்மையான நேரத்தில் யோசிக்கும் விஷயம் என்ன என்ற கேள்வியை ஆராய்ச்சியாளர்கள் கேட்டபோது பெரும்பாலோனோர் சொன்ன பதில் என்ன தெரியுமா? நான் எதைச் சாதிக்க வேண்டும்?, அதைச் சாதிக்க என்னென்ன விஷயங்களை நான் செய்ய வேண்டும் என்பதை மட்டுமே யோசிப்பேன் என்று சொன்னார்களாம்.

அதே கேள்வியைத் தோல்வி அடைந்தவர்கள் பலரிடம் கேட்டபோது அவர்கள் சொன்ன பதிலைப் பாருங்கள். எதுவெல்லாம் அவர்களுக்கு எப்போதும் நடக்கக்கூடாது என்பதையே நினைப்பார்களாம். அதுவும் தவிர இன்றைக்கு தாங்கள் இருக்கும் கஷ்டமான(!) நிலைமைக்கு யார் யாரெல்லாம் காரணம் என்றும் நினைப்பார்களாம்.

பணவளக்கலை!

இப்படி நினைப்பதில் என்ன இருக்கிறது என்பீர்கள். நினைப்பில்தான் எல்லாமே இருக்கிறது என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள். இயற்கை மிகவும் நியாயமானது. எல்லா மனிதர்களுக்கும் ஒரே 24 மணி நேரம்தான் கொடுக்கிறது. ஒரே மாதிரியான திறமைகளைத் தான் அடிப்படையாகக் கொடுக்கிறது. சிறுவயது முதலே உங்களுடைய மூளை எந்தவிதத்தில் புரோகிராம் செய்யப்படுகிறது என்பதை வைத்தே வெற்றிபெறுதல் என்பது வாழ்க்கையில் நடக்கிறது என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள். மகிழ்ச்சி/சோகம், வெற்றி/தோல்வி மற்றும் சாதனை/சாதனைக் குறைவு என்பதற்கெல்லாமே சிறுவயதில் மூளையில் நடக்கும் புரோகிராம்கள்தான் என்கின்றனர். ஏனென்றால் இந்த புரோகிராம்கள் உங்கள் ஆழ்மனதில் ஊறிப்போய் உங்கள் செயல்பாடுகளை மாற்றுகின்றன.

அப்படியென்றால், நான் பணம் சம்பாதிப்ப தெல்லாம் அவ்வளவுதானா? நாலு காசு பார்ப்பது அடுத்த ஜென்மத்தில்தானா? என்று நினைக்காதீர்கள். மூளையோ, கம்ப்யூட்டரோ எல்லா புரோகிராம்களையும் ஒட்டுமொத்தமாக அழிக்க முடியாது என்பது இல்லை! எனவே, நீங்கள் உங்களுடைய ஆழ்மன புரோகிராம்களை மாற்ற முயற்சிக்க வேண்டும்.

இதை வெற்றி பெற்றவர்கள் எப்படி மாற்றினார்கள் என்பதைப் பற்றியும் ஆராய்ச்சியாளர்கள் ஆராய்ந்தபோது, பெரிய அளவில் வாழ்வில் இதுபோன்ற பணரீதியான வெற்றிகளைக் கொண்டுவந்தவர்கள் மிக அதிகமாக தொழில்முனைவோர்களைப் பற்றி மிகுந்த ஈடுபாட்டுடன் படித்ததன் மூலமே தங்களுடைய ஆழ்மன புரோகிராம்களை அழித்துவிட்டு, அவர்களுடைய எண்ணங்களை புரோகிராம் செய்ய முடிந்தது என்று கண்டறிந்துள்ளனர்.

(கற்றுத் தேர்வோம்)

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism