அடிப்படை உலோகங்கள்!

அடிப்படை உலோகங்களில் காப்பரின் விலை உலக நாடுகளின் பொருளாதாரத்தைப் பொறுத்தே இருக்கும். ஏனெனில், சீனா மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகள்தான் அதிக அளவில் காப்பரை உற்பத்தி செய்கிறது. ஃபெடரல் ரிசர்வ் வங்கியின் கூட்டத்தை அடுத்து காப்பர் மற்றும் அடிப்படை உலோகங்களின் விலை ஏற்றம் கண்டன. இதனைத் தொடர்ந்து காப்பரின் விலை இந்த வாரம் எப்படி இருக்கும்? என வெல்த் டெரிவேட்டர்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ரமணனிடம் கேட்டோம்.

''அடிப்படை உலோகங்களின் விலை உலகப் பொருளாதாரத்தைப் பொறுத்தே இருக்கும். ஆனால், சமீப காலமாக உலக நாடுகளின் உலோக வர்த்தகம் அதிகரித்தாலும், இந்திய கமாடிட்டி வர்த்தகத்தில் அவற்றின் விலை உயர்வதில்லை. மாறாக, ரூபாயின் மதிப்பைப் பொறுத்தே விலை ஏறி, இறங்குகின்றது. ஆக, ரூபாயின் மதிப்பைப் பொறுத்தே வரும் வாரங்களில் காப்பர், நிக்கல், ஜிங்க், அலுமினியம் போன்றவற்றின் விலையும் எதிரொலிக்கும்'' என்றார்.

தங்கம்!

அமெரிக்க ஃபெடரல் வங்கி ஒவ்வொரு மாதமும் வாங்கும் மொத்த கடன் பத்திர அளவில் மாற்றமில்லை என அறிவித்ததை அடுத்து தங்கத்தின் விலை அதிகரித்தது. அமெரிக்கச் சந்தையில் கடந்த 18-ம் தேதியன்று மட்டும் 4.1% தங்கம் விலை அதிகரித்தது. இந்த விலையேற்றத்தினால் லாபம் எடுப்பது அதிகரித்ததால் விலையேற்றம் தடுக்கப் பட்டது. மேலும், அமெரிக்க டாலர் சிறிது பலம் அடைந்து வருவதால் தங்கத்தின் விலை குறையவே வாய்ப்புள்ளது. ஆக, வரும் வாரத்திலும் தங்கத்தின் விலை குறைந்து வர்த்தகமாகவே வாய்ப்புகள் அதிகம்.

சர்வதேச அளவில் சுமார் 1,291.70 டாலர் வரை இறங்கிய தங்கம் அதிகபட்சமாக 1,375.10 டாலர் வரை அதிகரித்தது. மேலும், இந்திய கமாடிட்டி வர்த்தகத்தில் குறைந்தபட்சமாக சுமார் 29,277 ரூபாய் வரை சென்ற தங்கம் அதிகபட்சமாக 30,694 ரூபாய் வரை சென்றது. குறிப்பாக, கடந்த 18-ம் தேதியன்று மட்டும் 29,277 ரூபாயிலிருந்து 30,100 ரூபாய் வரை சென்றது குறிப்பிடத்தக்கது. வரும் வாரத்தில் டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பைப் பொறுத்தே தங்கத்தின் விலை அமையும்.

வெள்ளி!

கடந்த வாரம் டாலரின் மதிப்பு குறைந்ததால் வெள்ளியின் விலையும் அதிகரித்தது. அமெரிக்கப் பொருளாதாரம் மீட்சியடைந்தால் சர்வதேச சந்தையில் வெள்ளியின் விலை குறையும். மேலும், இந்தியா கமாடிட்டி வர்த்தகத்திலும் வரும் வாரத்தில் வெள்ளியின் விலை குறைந்தே

வர்த்தகமாகும்.

கடந்த வாரம் சர்வதேச சந்தையில் வெள்ளியின் விலை 21.22 டாலராக குறைந்ததை அடுத்து அதிகபட்சமாக 23.44 டாலராக அதிகரித்தது. இதையடுத்து இந்திய கமாடிட்டி சந்தையில் ரூ.49,956 வரை சென்ற வெள்ளி யின் விலை அதிகபட்சமாக ரூ.52,165 வரை சென்றது.

கச்சா எண்ணெய்!

சிரியா பிரச்னை காரணமாக கடந்த மாதம் கச்சா எண்ணெய் விலை மிகவும் உயர்ந்தது. தற்போது சிரியா ரசாயன ஆயுதங்களை அழிக்க ஒப்புக்கொண்டுள்ளதால் கச்சா எண்ணெய் விலை குறையத் தொடங்கியுள்ளது. மேலும், லிபியாவில் உற்பத்தி அதிகரித்திருப்பதால் விலை குறையவே வாய்ப்பு அதிகம்.

இந்த வாரம் சர்வதேச சந்தையில் 108.14 டாலர் வரை சென்ற கச்சா எண்ணெய் வார இறுதியில் சுமார் 106.44 ஆக குறைந்தது. இந்திய கமாடிட்டி வர்த்தகத்தில் வாரத் தொடக்கத்தில் ரூ.6,885-ஆக இருந்த கச்சா எண்ணெய் ரூ.6,597-ஆக குறைந்தது.

இயற்கை எரிவாயு!

கடந்த சில வாரங்களாக இயற்கை எரிவாயுவின் விலை அதிகரித்து வர்த்தகமானது. இயற்கை எரிவாயுவின் இன்வென்டரி எதிர்பார்த்ததைவிட குறைந்ததை அடுத்து விலை அதிகரித்து காணப்பட்டது.

அமெரிக்க எனர்ஜி இன்பர்மேஷன் கடந்த 13-ம் தேதி அன்று வெளியிட்ட இயற்கை எரிவாயு சேமிப்பு அளவின்படி, 46 பில்லியன் கியூபிக் ஃபீட் அதிகரித்து 3.299 டிரில்லியன் கியூபிக் ஃபீட் ஆக இருந்தது. ஆனால், எதிர்பார்த்த அதிகரிப்பு அளவு 56 பில்லியன் கியூபிக் ஃபீட் ஆகும். மேலும் அக்டோபர் முதல் டிசம்பர் வரை அமெரிக்காவில் குளிர்காலம் என்பதால், வரும் வாரங்களில் இயற்கை எரிவாயுவின் விலை குறைந்து வர்த்தகமாகலாம். இந்திய சந்தையில் 228.70 ரூபாய் வரை இறக்கிய இயற்கை எரிவாயு சுமார் 240.50 வரை சென்றது.

- சே.புகழரசி