ஏலக்காய்! (Cardamom)

ஏலக்காயின் விலைப் போக்கு குறித்து சொல்கிறார் ஜே.ஆர்.ஜி நிறுவனத்தின் சவுத் ஜோன் மேனேஜர் முருகேஷ்குமார்.

''ஸ்பாட் சந்தைகளில் தேவையைவிட வரத்து அதிகமாக இருந்ததால், கடந்த வாரம் ஏலக்காய் விலை குறைந்தது. வழக்கமாக ஜூலை மாதத்தில் ஏலக்காயின் வரத்து ஆரம்பிக்கும். ஆனால், இவ்வருடம் ஏலக்காய் உற்பத்தியாகும் கேரளா மற்றும் கர்நாடக மாநிலத்தில் தொடர்மழை காரணமாக ஏலக்காய் உற்பத்தி குறைந்துள்ளது. உற்பத்தி குறைந்தபோதிலும் தேவை குறைந்ததன் காரணமாக விலையும் குறைந்தது. மேலும், எம்.சி.எக்ஸ்-ல் மார்ஜின் தொகை அதிகரித்ததும் விலை குறைவிற்கு காரணமாகும். வரும் நாட்களில் பண்டிகை சீஸனை ஒட்டி தேவை இருக்கும் என்பதால் ஏலக்காய் விலை அதிகரிக்கலாம். மற்றபடி ஏலக்காய் விலையில் பெரிய மாற்றம் எதுவும் இருக்காது.''

மஞ்சள்! (Turmeric)

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு தேவை குறைந்ததையடுத்து, மஞ்சளின் விலை கடந்த வாரத்தில் குறைந்தது. உள்நாட்டு சந்தையில் கையிருப்பு அதிகம் இருந்ததால் மஞ்சளின் விலை சரிந்தே காணப்பட்டது. வரும் வாரங்களில் கேரிஓவர் ஸ்டாக்குகள் அதிகம் இருப்பதால், புதிய ஆர்டர்கள் இருந்தால் மட்டுமே மஞ்சள் விலையில் மாற்றம் இருக்கும். இல்லையெனில் விலை குறையவே செய்யும்.

2013-14-ல் குறிப்பாக, ஏப்ரல் - ஜூன் வரை இந்தியாவின் மொத்த ஏற்றுமதி 17,500 டன்னாக குறைந்துள்ளது. இது கடந்த ஆண்டு இதே மாதங்களில் 24,982 டன்னாக இருந்தது என ஸ்பைசஸ் போர்டு ஆஃப் இந்தியா கூறியுள்ளது. ஆந்திராவில் மஞ்சள் பயிரிடப்பட்ட அளவும் குறைந்திருக்கிறது. அக்டோபர் ஃப்யூச்சர்ஸ் விலையும் குறைந்தே வர்த்தகமாகிறது.

மிளகு! (Pepper)

கடந்த வாரத் தொடக்கத்தில் மிளகின் விலை குறைந்தாலும் வார இறுதியில் மிளகு ஏலமிடும் முக்கிய ஸ்பாட் சந்தைகளில் தேவை உருவானதால் மிளகு விலை சற்று ஏற்றத்துடனே காணப்பட்டது. மேலும், தினவரத்து 22 டன்னாக இருந்தது. ஸ்பாட் சந்தைகளில் 100 கிலோ மிளகின் விலை 42,100 ரூபாய்க்கு வர்த்தகமானது. மேலும், உணவுப் பாதுகாப்பு மற்றும் தரக்கட்டுப்பாடு அமைப்பு 11 குடோன்களில் உள்ள மிளகினை சந்தைக்கு அனுப்ப அனுமதி அளித்துள்ளதாகத் தெரிகிறது. அதிக வரத்து விலையில் பிரதிபலிக்கும். இந்த வருடம் பிரேசிலில் உற்பத்தி குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆக, வரும் வாரங்களில் சற்று இறக்கம் இருந்தாலும் நடுத்தர காலத்தில் விலையேற்றத்தை எதிர்பார்க்கலாம்.

ஜீரகம்! (Jeera)

கடந்த வாரத்தில் ஜீரகத்தின் தேவைக் குறைந் ததால் விலை சற்று குறைந்து வர்த்தகமானது. மேலும், அதிக கையிருப்பு மற்றும் நல்ல விளைச்சல் போன்ற காரணங்களும் விலையில்

பிரதிபலிக்கும். அதேசமயம் சிரியா, துருக்கி பிரச்னைகள், சீனாவில் உற்பத்தி குறைவு போன்றவை விலை இறக்கத்தைக் கட்டுப்படுத்தும். மேலும், சீனாவில் ஜீரகத்திற்கான தேவை அதிகம் இருப்பதால் வரும் வாரத்தில் ஜீரகத்தின் விலை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.

சிரியாவின் உள்நாட்டு குழப்பம் இந்திய ஜீரக ஏற்றுமதிக்கு மேலும் வழி வகுத்துள்ளது. சிரியாவில் ஏற்பட்டிருக்கும் போர் பிரச்னையை உன்னிப்பாக கவனிக்கவேண்டும். குஜராத் உஞ்ஹா சந்தைக்கு வரத்தும் குறைகிறது. செப்டம்பர் மாத ஆரம்பத்தில் 8,000 பைகளாக இருந்த தின வரத்து தற்போது 5,000-6,000 பைகளாக குறைந்துள்ளது. வரும் வாரத்தில் 12,800-13,200 என்ற அளவில் வர்த்தகமாகலாம்.

கொத்துமல்லி! (Coriander)

கடந்த வாரம் கொத்துமல்லி விலை குறைந்தே வர்த்தகமானது. உள்நாட்டு தேவையும் ஏற்றுமதி தேவையும் குறைந்ததே இதற்கு காரணம். அதிக வரத்தும் விலை குறைவிற்கு காரணம். நுகர்வோர் விவகார அதிகார சபை கிராண்ட்பாஸ் சேமிப்பு கிடங்கி லிருந்து 7,000 கிலோ கொத்துமல்லியைக் கைபற்றியது. இது மக்கள் நலன் கருதி கைப்பற்றபட்டதாக டெய்லி மிரர் செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது. அதேசமயம், இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட கொத்துமல்லிகள், உள்நாட்டு சந்தைகளில் விற்பனைக்கு அனுப்பப்பட்டது.

கடந்த வியாழனன்று, ராஜஸ்தான் உள்ளிட்ட முக்கிய ஸ்பாட் சந்தைகளில் மொத்த வரத்து 10,000 கிலோவாக (1 பை என்பது 40 கிலோ) இருந்தது. 100 கிலோ கொத்துமல்லியின் விலை ரூ.5,500-ஆக இருந்தது. வரும் வாரத்திலும் கொத்தமல்லியின் விலை ஏற்றுமதி ஆர்டர்களைப் பொறுத்தே இருக்கும்.

- சே.புகழரசி.