ஒரு தொழிலை உற்சாகமாக ஆரம்பிக்கும் பலர், ஒரு குறிப்பிட்ட நிலையை அடைந்தவுடன் மேலும் முன்னேறிச் செல்லாமல் தேக்கமடைகிறார்கள். அதற்கு பல காரணங்களை அவர்களே தேடிக் கண்டுபிடிக்கிறார்கள். 'பணம் இல்லை’, 'இப்ப நேரம் சரியில்லை’, 'முன்ன மாதிரி உடம்பு ஒத்துழைக்கலை’, 'அரசு அனுமதி கிடைக்கலை’... இப்படி பல காரணங்களைச் சொல்வார்கள்.

இதில் அரசு அனுமதி என்பது முக்கியமான விஷயம். பெரிய தொழிலதிபர்கள் வேண்டுமானால் சட்டத்தின் ஓட்டைகளில் புகுந்துகொண்டு சமாளிக்கலாம். ஆனால், ஒரு சாதாரண மனிதன் எப்படி தனது வித்தியாசமான தொழில் அணுகுமுறையால் அரசு சட்டத்தில் இருந்த தடைகளை உடைத்து வளர்ச்சி அடைந்தார் என்பதற்கு ஒரு நிஜ உதாரணத்தைச் சொல்கிறேன்.

1960-களில் 'ஆல் இந்தியா’ செல்வராஜன் என்ற முதல் தலைமுறை தொழிலதிபர், தமிழகத்தின் சரக்குப் போக்குவரத்து தொழிலில் தன் வாழ்க்கையைத் தொடங்கினார். அவருக்குச் சொந்தமாக சில லாரிகளும் இருந்தன. உணவு தானியங்களை ஒரு மாநிலத்தில் இருந்து இன்னொரு மாநிலம் கொண்டுபோய் சேர்க்கும் தொழிலைச் செய்தார்.

அந்தக் காலகட்டத்தில் இந்தியா முழுவதும் பெரும் உணவு பஞ்சம் நிலவியது. தொழில் நிமித்தமாக பல மாநிலங்களுக்குச் சென்றபோது, ஒரு சில மாநிலங்களில் மக்கள் உணவு தானிய விநியோகமின்றி தவிப்பதையும், சில மாநிலங்களில் உணவு தானியங்கள் கெட்டுப்போய் தேங்கியிருப்பதையும் கண்டு மனம் வெதும்பினார்.

இதற்கான காரணங்களை அலசினார். அதில் ஒன்று, நேஷனல் பெர்மிட் லாரிகள் இந்தியா முழுவதும் சரக்கு கொண்டு செல்ல முடியாது. பெயரளவில் நேஷனல் பெர்மிட் என்று இருந்தாலும் அவை அதிகபட்சம் நான்கு மாநிலங்களுக்கு மட்டுமே பொருட்களை ஏற்றிக்கொண்டு சென்றுவர முடியும். தமிழகத்தில் லாரியில் ஏற்றப்படும் பொருள் மஹாராஷ்ட்ராவுக்கு போகாது. ஆந்திர, கர்நாடக அரிசி நமக்குத் தெரியும்; ஆனால், குஜராத் பருப்பு நமக்கு தெரியாது. காரணம், இதுதான்.

ஆனால், பஞ்ச காலத்தில் இந்த நடைமுறையால் மக்கள் பொருள் கிடைக்காமல், விலைவாசி ஏற்றத்தால் பாதிக்கப்படுவதை செல்வராஜன் உணர்ந்தார்.

அப்போது அரசாங்கம் வெளிநாட்டில் இருந்தும் உணவு தானியங்களை இறக்குமதி செய்தது. துறைமுகங்களில் வந்திறங்கிய இந்தப் பொருட்கள் துறைமுகத்தில் இருந்து வெகுதூரம் உள்ள வட இந்தியாவின் மத்திய பகுதியைச் சென்று சேர்வதில் பெரும் சிக்கல் இருந்தது. ரயிலில் கொண்டு செல்வதற்கோ சில பகுதிகளில் ரயில் பாதையே கிடையாது. நிலைமை மோசமடைவதற்கு விளைச்சல் போதிய அளவு இல்லை என்பது மட்டுமல்ல, பொருட்களைத் தேவையான இடத்திற்கு கொண்டு செல்வதில் ஏற்படும் தாமதம் மற்றும் நடைமுறை சிக்கல்களுமே காரணம் என்பதை உணர்ந்தார். நாடு முழுவதும் ஏற்பட்ட இந்த பஞ்சத்தால் அவர் தொழிலிலும் ஒரு தேக்கநிலை.

200 வருடங்களுக்கு முன் ஆங்கிலேயர்கள் உப்புக்கு வரி விதித்தபோது, தடையை மீறி கடற்கரைகளில் உற்பத்தி செய்யப்பட்ட உப்பு, வியாபாரிகளின் முயற்சியால் நாட்டின் மத்திய பகுதியைச் சென்றடைந்த வழிகளை செல்வராஜன் படித்து தெரிந்துகொண்டார். அந்த நுணுக்கங்களைத் தன் தொழிலில் பயன்படுத்தத் துணிந்தார். முதலாவதாக, தனது லாரி சர்வீஸின் பெயரை 'ஆல் இந்தியா லாரி புக்கிங் ஆபீஸ்’ என்று வைத்துக்கொண்டார். அந்தப்

பெயரே அன்று இருந்த மற்ற லாரி சர்வீஸ் கம்பெனிகளிடமிருந்து வித்தியாசமாகவும், அவரது லாரி நிறுவனம் இந்தியாவின் எந்தப் பகுதிக்கும் பொருட்களைக் கொண்டு சேர்க்கும் என்பதை உணர்த்துவதுமாக இருந்தது.

மும்பைக்கு வடக்கிலும், கொல்கத்தாவிற்கு கிழக்கிலும் பெரும் தொழில் தொடர்புகளையும் புது ஒப்பந்தங்களையும் ஏற்படுத்திக்கொண்டார். 1970-களில் பெரும் வெற்றி அடைந்தார். 1983-ல் அவர் இறந்தபின், அவர் செய்துவந்த பல நடைமுறைகள் பின்பற்றப்படவே இல்லை. 1990-களுக்குப் பின் இந்தியாவில் கால் ஊன்றிய பன்னாட்டு லாஜிஸ்டிக் நிறுவனங்கள், இந்தியச் சூழ்நிலைப் பற்றி புரியாமல் ஆரம்பத்தில் திணறியபோது, செல்வராஜனின் தொழில் நடைமுறைகளை பெரிய அளவில் நடைமுறைப் படுத்தி வெற்றி கண்டனர்.

புது யுக்தி நம்மிடம் இருந்தால், பெரும் பணமும், அரசியல் பின்புலமும் இல்லாத மனிதர்களும் தொழிலில் வெற்றி அடைய முடியும். ஆனால், இந்தப் புது யுக்தியை எப்படி உருவாக்குவது?

தொழிலுக்கான புது யுக்தி நம்மில் பலருக்கு தூக்கத்திலும் தோன்றவே செய்கிறது. அது தோன்றிய நிமிடத்தில் அதிசயிக்கும் நாம், சில மணி நேரங்களில் மறந்துவிடுகிறோம். பின்னொரு நாள் தொழிலைப் பற்றி ஆழமாகச் சிந்திக்கும்போது, 'ஏதோ ஒரு திட்டம் அன்று தோன்றியதே!’ என்று குழம்பி நிற்போம்.

நம் மனதில் தொழிலுக்காக ஏற்படும் கனவுகள், தீர்வுகள், திட்டங்களை வளர்த்தெடுப்பது ஒரு கலை. ஆங்கிலத்தில் இதை அடைகாத்தல் (மிஸீநீuதீணீtவீஷீஸீ) என்பார்கள். தொழில் சம்பந்தமாக நமக்கு தோன்றும் ஒரு புது யுக்தியை நாம் நம் மனதிற்குள் வைத்து வளர்க்கும் இந்தப் பருவத்தில்தான் அதன் சாதக, பாதகங்களை அலசி ஆராய்கிறோம். பூமாலையில் ஒவ்வொரு பூவாகக் கோர்ப்பதுபோல் தொழில் நுணுக்கங்களை ஒவ்வொன்றாகத் தேடித் தேடி சேர்த்து நம் கனவின் வேர்களை ஆழமாக்குகிறோம். இந்த அடைகாத்தல் பருவம் நாம் அடையப்போகும் வெற்றிக்கு அஸ்திவாரம் போன்றது.

உலகின் முதல் 24 மணி நேர தொலைக்காட்சி செய்தி சேனலான சி.என்.என்.-ஐ தொடங்கிய அமெரிக்க தொழிலதிபர் டெட் டர்னர், செய்தி சேனல் என்ற திட்டத்தை 17 வருடம் தனது மனதில் அடைகாத்து வைத்தார். அவரது தந்தையார் விளம்பரப் பலகைகளை நகரில்

ஆங்காங்கே நிறுவி அதில் விளம்பரங்கள் வெளியிடும் தொழில் செய்துவந்தார். அவர் அந்தத் தொழிலால் ஏற்பட்ட கடன் பிரச்னையால் தற்கொலை செய்துகொண்டதால், டெட் டர்னர் தனது 25-வது வயதில் அந்த நிறுவனத்தை 1963-ல் இருந்து தலைமை ஏற்று நடத்தினார். தனது தந்தையாரின் திடீர் மரணமும், அவர் வைத்துச் சென்ற கடன்களும் அவருக்குள் பெரும் மனச்சுமையை ஏற்படுத்திய அதே நேரத்தில், இதில் இருந்து மீண்டு வந்து உலகமே திரும்பிப் பார்க்கும் வண்ணம் தொழிற்துறையில் சாதிக்கவேண்டும் என்ற உத்வேகம் கொண்டார்.

அவரது விளம்பரப் பலகைகளில் வரையப்படும் வித்தியாசமான விளம்பரங்களைப் பற்றி நகரில் பலர் அடிக்கடி பேசுவதைக் கண்டார். சில நேரங்களில் விளம்பரம் தரும் நிறுவனம், தங்கள் விளம்பரம் சார்ந்த சிறுசிறு செய்திகளையும் எழுதச் சொல்லும். அந்தச் செய்திகள் மக்கள் மத்தியில் விவாதப்பொருளாக இருப்பதையும் டெட் டர்னர் கவனித்தார்.

அந்தக் காலக்கட்டத்தில் செய்திகள், டி.வி. மற்றும் ரேடியோவில் ஒரு நாளைக்கு கால்மணி நேரம் அல்லது அரைமணி நேர தொகுப்பாகத்தான் சொல்லப்படும். அது செய்தி சேகரித்தவரின் அல்லது செய்தி நிறுவனத்தின் பார்வையில் இருந்து சொல்லப்படும் செய்தியாக இருக்கும். செய்திகளுக்கு மக்கள் மத்தியில் விவாதம் இருக்கும்போது, ஒவ்வொரு செய்திக்கும் மக்களின் மனநிலை மற்றும் எதிர்வினை என்ன? என்பது அந்தச் செய்திக்குப் பின் தெரிவிக்கப்பட வேண்டும் என எண்ணம் கொண்டார்.

ஒவ்வொரு வினாடியும் உலகில் ஆயிரமாயிரம் விஷயங்கள் மாறிக்கொண்டே இருக்கும்போது, செய்திகள் தோன்றிக்கொண்டே இருக்கின்றன. இதை ஒரு நாளைக்கு காலையிலும், மாலையிலும் மட்டுமே மக்களுக்குச் சொல்வதில் இருந்து மாறி, நாள் முழுவதிலுமே உலகின் எந்த மூலையில் தோன்றும் செய்தியும் மக்களுக்கு உடனுக்குடன் தெரிவிக்கப்பட வேண்டும் என கருதினார். இதனால் 24 மணி நேர செய்தி சேனல் துவங்க வேண்டும் என்ற எண்ணம் அவருக்குள் 1965-லேயே தோன்றியது. இந்த எண்ணம் அவருக்குள் 15 ஆண்டுகள் அடைகாத்தல் பருவத்தில் இருந்தது. 1980-ம் ஆண்டு சி.என்.என்.-ஐ உலகின் முதல் செய்தி சேனலைத் தொடங்கினார்.

இந்த 15 ஆண்டுகளில்தான், இன்று நாம் பார்க்கும், நேரடி ஒளிபரப்பு, செய்திக்குப் பின் விவாதம், மக்கள் கருத்தை டி.வி. திரையில் குறுஞ்செய்தியாக தருவது, செய்தி சேகரிக்கும் இடத்தில் இருந்தே செயற்கைகோளை தொடர்புகொள்ளும் வேன் என்று ஒவ்வொரு விஷயமாக தன் மனதிற்குள் மாலையாக கோத்துக்கொண்டே இருந்தார். இந்த மாலை அவர் சி.என்.என். ஆரம்பித்தவுடன் அவருக்கு வெற்றிமாலையாக கொண்டுவந்து சேர்த்தது. ஒரு கடனாளியின் மகனாக தொழில்துறையில் நுழைந்த டெட் டர்னர்; இன்று பல ஆயிரம் கோடி டாலருக்கு அதிபதி. உலகப் பணக்காரர்கள் பட்டியலில் முக்கிய இடத்தில் இருக்கிறார்.

டெட் டர்னர், உலகில் எந்த ஒரு மனிதனும் தனக்குள் தோன்றும் புதிய தொழில் சிந்தனைகளை அடைகாத்து, அதற்கு வலுச்சேர்த்து செயல்படுத்தினால் ஆண்டியும் அரசனாகலாம் என்பதை உலகிற்கு உணர்த்திய மனிதர்.

(கற்போம்)