ரிசர்வ் வங்கியின் கவர்னர் ரகுராம் ராஜன், வங்கிகள் அளிக்கும் கடனுக்கான வட்டியை 0.25 சதவிகிதம் உயர்த்திவிட, பங்குச் சந்தை முதல் தொழில்துறை வரை பலரும் அதிர்ந்து போயிருக்கிறார்கள். பணவீக்கம் அதிகமாக இருக்கிறது என்கிற காரணத்தைக் காட்டி ரிசர்வ் வங்கி வட்டி விகிதத்தை உயர்த்தி இருந்தாலும், அதனால் ஏற்படுகிற பாதிப்பு சமூகத்தின் அனைத்து மட்டங்களிலும் பிரதிபலித்தது. இந்த வட்டி உயர்வினால் வீடு மற்றும் கார் கடன் வாங்கியவர்கள், தொழில் துறையினருக்கு என்னென்ன பாதிப்பு ஏற்படும் என பல்வேறு துறை சார்ந்த நிபுணர்களிடம் கேட்டோம். அவர்களது கருத்துக்களை தயங்காமல் சொன்னார்கள்.

''வீட்டுக் கடன் வாங்குவது குறையும்!''

விஸ்வநாத் கிருஷ்ணன், சொத்து ஆலோசகர்

''ஆர்.பி.ஐ.-ன் இந்த நடவடிக்கையால் மக்கள் கடன் வாங்குவது குறையும். இதனால் பணப்புழக்கம் குறையும். இதனைத் தொடர்ந்து விலைவாசி குறைந்து பணவீக்க விகிதம் குறையும். இதை எதிர்பார்த்துதான் ரிசர்வ் வங்கி வட்டியை அதிகரித்துள்ளது.

அதே நேரத்தில், வீட்டுக் கடன் வட்டி விகிதம் அதிகரிக்கும். இந்நிலையில் இ.எம்.ஐ. தொகையை அதிகரிக்கவில்லை என்றால், கடனை செலுத்தும் காலம் அதிகரிக்கும். அதாவது, ஆயுளுக்கும் கடனை கட்டிக்கொண்டுதான் இருக்க வேண்டும். இதனைத் தவிர்க்க மாதத் தவணையை அதிகரித்து கட்டுவது அவசியம்.

வட்டி விகிதம் இன்னும் அதிகரிக்கும்போது, புதிதாக வீட்டுக் கடன் வாங்குவது கணிசமாக குறையும். இதனால் கட்டுமானப் பொருட்களின் உபயோகம் குறைந்து, வேலைவாய்ப்பும் குறையும். இதனால் தனிமனித பொருளாதாரம் மேலும் பலவீனமடையும்''.

''சிறுதொழில் செய்பவர்களுக்குத்தான் கஷ்டம்!''

சிவக்குமார், சி.இ.ஓ., மெர்ச்சன்ட் பேங்கிங் அண்டு மேனேஜ்மென்ட் அட்வைஸரி.

''ஆர்.பி.ஐ.-ன் இந்த நடவடிக்கையால் சிறுதொழில் நிறுவனங்கள் (எஸ்.எம்.இ.) பெரிதும் பாதிப்படையும். எஸ்.எம்.இ. நிறுவனங்களுக்கு சுமார் 3% வருமானம் கிடைக்கிறது எனில், 1% வட்டி மற்றும் கடன்களுக்கான இ.எம்.ஐ.க்கு போய்விடும். அடுத்து, போக்குவரத்து செலவாக 1% போய்விடும். மீதம் இருப்பது 1% மட்டுமே.

மூலப்பொருட்களின் விலை ஏற்கெனவே அதிகம். இதைக் குறைக்க முடியாது. போட்டி நிறைந்த உலகில் மார்க்கெட்டிங் துறையிலும் சிறுதொழில் செய்பவர்கள் பல சோதனையைச் சந்திக்கவேண்டியிருக்கிறது. இந்நிலையில் குறைந்த வட்டியில் நிதி கிடைத்தால் மட்டுமே சிறுதொழில் செய்கிறவர்கள் நாலு காசு லாபம் பார்க்க முடியும். தொழிலுக்குத் தேவையான நிதிக்கான செலவு இனியும் அதிகரித்தால் சிறுதொழில் செய்கிறவர்கள் திண்டாடித்தான் போவார்கள்''.

வட்டி செலவு அதிகரிக்கும்!

வி.நாகப்பன், பங்குச் சந்தை நிபுணர்.

''ரிசர்வ் வங்கியின் இந்த நடவடிக்கையால் வீடு மற்றும் கார் கடன்களுக்கான வட்டி மேலும் அதிகரிக்கும். வங்கியில் முதலீடு செய்பவர்களுக்கு இது மகிழ்ச்சியான விஷயம் என்றாலும், ஏற்கெனவே கடனில் இருப்பவர்கள் மற்றும் இனி கடன் வாங்குபவர்களுக்கு வட்டிச் செலவு அதிகரிக்கும். பணவீக்கத்தைக் குறைக்க ஒருபுறம் ரிசர்வ் வங்கி இதுமாதிரியான நடவடிக்கைகளை எடுக்கும் நிலையில், மறுபுறம் மக்களின் பொருளாதாரம் மிகவும் மோசமடைந்து வருகிறது. இதைத் தடுக்க நல்ல வேலைவாய்ப்புகளை ஏற்படுத்த வேண்டும்''.

வட்டி உயர்வின் பாதிப்புகளிலிருந்து தப்பிக்க நாம் கொஞ்சம் உஷராகவே இருப்பது நல்லது.