இளைஞர்களை இன்டலிஜென்ட் ஆக்கும் தொடர்!

##~##

ஒரு சிறிய நிறுவனத்தில் சாதாரணப் பணியில்தான் இருந்தார் பழனிவேல். வேலைக்குச் சேர்ந்த புதிதில் பெரிதாக குறிக்கோள் எல்லாம் எதுவும் இல்லை. ரூம் வாடகை, சாப்பாடு மற்றும் சில்லறை செலவுகள் போக மாதம் 1,000 ரூபாய்தான் ஊரில் இருந்த அப்பா, அம்மாவுக்கு அனுப்ப முடிந்தது. வேலை, அலுவலகம், உடன் பணிபுரிகிறவர்கள் என பழனிக்கு எல்லாமே பிடித்துப்போய்விட, 'இங்கேயே நிரந்தரமா இருந்துடலாம்’ என்றுதான் நினைத்தார் பழனி.    

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஆனால், அங்கே பொது மேலாளராக இருந்த பத்மநாபனுக்கு அத்தனை மனநிறைவு இல்லை. போச்சுடா! என்று நினைக்காதீர்கள். பழனியின் பேச்சு, செயல், நடத்தை என்று ஒவ்வொன்றையும் உன்னிப்பாகக் கவனித்த பத்மநாபனுக்கு, 'இவனை இதைவிடப் பெரிய இடத்துக்கு, பெரிய வேலைக்கு அனுப்பணும்’ என்று தோன்றியது.

'சார்... உங்களுக்கு என் வேலை புடிச்சிருக்கு. எனக்கு உங்க எல்லாரையும் பிடிச்சுருக்கு. அப்புறம் எதுக்கு வேற வேலைக்கு ட்ரை பண்ணச் சொல்றீங்க?’  

'இல்லை பழனி. உன் தகுதிக்கும் திறமைக்கும் ஏற்ற முன்னேற்றத்தை  அடைஞ்சே தீரணும். சாதிக்க வேண்டிய வயசு உனக்கு. இந்த வயசுல இது போதும்னு நினைச்சு முயற்சி செய்யாம விடறது மிகப் பெரிய தவறு.’

என்ன சொன்னாலும் பழனி கேட்கறதா இல்லை. 'நாமே அனுப்பி வைக்கறதுதான் சரி...’ என்ற முடிவுக்கு வந்தார் பத்மநாபன்.

ஒரு மிகப் பெரிய நிறுவனத்தில் 'சப்-கான்ட்ராக்ட்’ வேலை ஒன்று கிடைத்தது. அவர்களுடைய வளாகத்துக்கு உள்ளேயே இருந்து செய்ய வேண்டிய வேலை. பார்த்தார் பத்மநாபன். பழனியை மேலாளராக அங்கே அனுப்பி வைத்தார். அங்கே பழனிக்கு நிறைய நண்பர்கள் கிடைத்தார்கள். அவர்களுடைய 'வொர்க்ஸ்டைல்’, அவர்களுக்குள் இருந்த 'ட்ரைவ்’, சிறிது சிறிதாக அவனுக்கும் தொற்றிக் கொள்ள, நண்பர்களின் வற்புறுத்தலால் அதே நிறுவனத்தில் வேலைக்கும் சேர்ந்தான் பழனி.

எதிர்கொள் - வெகுமதி !

பத்மநாபன் சொன்னார்: 'இப்பதான் சரியான இடத்துக்குப் போயிருக்கே... இனிமே நீ எப்படி வேலை செய்றியோ, அதுதான் உன் வாழ்க்கையைத் தீர்மானிக்கப் போகுது.’

' ஐ வில் டூ மை பெஸ்ட்...’ சொன்னபடியே, ஆர்வத்துடன் பணியாற்றினான். அப்போது, சாஃப்ட்வேர் துறை மிகச் செழிப்பாகச் செயல்பட்ட காலம். குறுகிய காலத்திலேயே அவன் சம்பளம் கிடுகிடுவென உயர்ந்துவிட்டது. வாழ்க்கையின் போக்கே மாறிவிட்டது. இதற்கு அடிப்படையாக அமைந்தது தன் பணியில் அவன் காட்டிய நேர்மை.

ஒரு பள்ளி ஆண்டு விழாவில் கலந்துகொள்ளப் போயிருந்தபோது பத்மநாபனைச் சந்தித்தேன். அப்போது பழனியும் உடன் இருந்தார். 'அப்படி என்ன பழனி மீது உங்களுக்கு அத்தனை ஈர்ப்பு?’ என்று கேட்டேன். அவர் சொன்ன பதில் என்னை சிந்திக்க வைத்தது.

'தினமும் 'பெட்டிகேஷ்’ என்று நூறு ரூபாய் தருவேன். அதற்கு எந்தக் கணக்கும் வைத்துக்கொள்ள வேண்டாம்; சில்லறை செலவுகளுக்கு என்று தருவது அது என்பதையும் சொல்லிவிடுவேன். பழனிக்கு முன்பு இருந்தவர்கள், நான் ஒரு நாள் நூறு ரூபாய் தரவில்லை என்றாலும், அதைக் கேட்டு வாங்கிக்கொள்வார்கள்.  அவர்களைப் பொறுத்தவரையில் அது அவர்களுக்கு நான் தந்த 'பேட்டா’ மாதிரி நினைத்துக் கொள்வார்கள். பழனி என்ன செய்தான் தெரியுமா..? செலவு செய்தது போக, மீதமிருந்த பணத்தை எனக்கே தெரியாமல் 'பேங்க்’ல போட்டுட்டு வந்துருக்கான்.

ஒரு முக்கியமான கிளையன்ட்டுக்கு ஒரு லட்சம் ரூபாய்க்கு செக் கொடுத்திருந்தேன். வேற ஒருத்தரோட செக்கையும் அன்னைக்கு டெபாசிட் பண்ணி இருந்தேன். அது கிளியர் ஆயிடும்னு நம்பி செக் குடுத்துட்டு, நான் குடும்பத்தோட திருப்பதிக்குப் போயிட்டேன். ஆனா, எனக்கு செக்

எதிர்கொள் - வெகுமதி !

கொடுத்த ஆளு, அடுத்த நாளே போன் பண்ணி, செக்கை ஒரு வாரம் கழிச்சுப் போடுங்கன்னு சொல்லிட்டார். நான் திருப்பதியில இருந்ததால என்னை தொடர்புகொள்ள முடியலை. பழனிக்கு போன் பண்ணி சொல்லியிருக்காரு. நேரே வங்கிக்குப் போய் விசாரிச்சிருக்கான். நான் கொடுத்த செக் ஏற்கெனவே வந்துடுச்சு. பதினைஞ்சாயிரம் குறைவா இருக்கு, உடனே கட்டினா பாஸ் பண்றோம்; இல்லைன்னா செக் பௌன்ஸ்தான் ஆகும்னு சொல்லிட்டாங்க.

அப்பதான் ஏற்கெனவே சேர்த்து வச்சிருந்த 'பெட்டிகேஷ்’, அப்புறம் தன்கிட்ட இருந்த கொஞ்சம் பணம் எல்லாத்தையும் போட்டு பிரச்னையைத் தீர்த்து வச்சான். ரொம்ப முக்கியமான ஒரு பிசினஸ் டீல், பழனியால என் கையைவிட்டுப் போகாம நின்னிச்சு. அன்னைக்கு அவன் இடத்துல வேற யாரும் இருந்தா, இந்த அளவுக்கு அக்கறையா எடுத்து செஞ்சிருப்பாங்களான்னு தெரியலை. அன்னைக்கு எனக்குத் தோணுச்சு... இவனுக்கு நல்ல சிறப்பான வாழ்க்கை அமைச்சுக் கொடுக்கறது என்னோட கடமை. இங்கேயே இருக்கட்டும்னு விட்டுட்டா என் கடமையில நான் தவறிட்டேன்னு அர்த்தம். அவன் இன்னைக்கு வாழ்க்கையில சிறப்பா முன்னேறி இருக்கான்னா, அதுக்கு அவனுடைய நேர்மைதான் காரணம்.’

நேர்மையான வழிமுறைகள் எப்போதுமே தோற்கவே தோற்காது. நேர்மையோடு கூடவே இன்னொரு நல்ல விஷயமும் சேர்ந்து இருந்ததுன்னா, நூற்றுக்கு நூறு வெற்றிதான். அதைச் சொல்ல அப்தர் அலி நல்ல உதாரணம்!

(தெளிவோம்)

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism