Published:Updated:

`ரூ.5 லட்சம் கோடி சொத்து மதிப்பை எட்டிய முதல் இந்தியர்!- முகேஷ் அம்பானி புதிய சாதனை

உலக அளவில், அமேசான் நிறுவனத்தின் தலைவர் ஜெஃப் பெசோஸ், 112 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் முதலிடத்திலும், மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் தலைவர் பில் கேட்ஸ் 111 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் அடுத்த இடத்திலும் உள்ளனர்.

முகேஷ் அம்பானி
முகேஷ் அம்பானி ( vikatan )

ஐந்து லட்சம் கோடி ரூபாய் (70 பில்லியன் டாலர்) சொத்து மதிப்பை எட்டிய முதல் இந்தியர் என்ற பெருமையை, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் அதிபர் முகேஷ் அம்பானி பெற்றுள்ளார். ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் சந்தை மூலதன மதிப்பு ரூ.10 லட்சம் கோடியை எட்டியுள்ளது.

முகேஷ் அம்பானி
முகேஷ் அம்பானி
vikatan

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தில், முகேஷ் அம்பானி குடும்பத்தினருக்குச் சொந்தமான பங்கு விகிதத்தை, கடந்த 15 வாரங்களில் 45 சதவிகிதமாக உயர்த்தியிருந்தனர். இந்நிலையில் தற்போது பங்கு மதிப்பை மேலும் உயர்த்தி 50.05 சதவிகிதத்தை எட்டியுள்ளனர். இதையடுத்து, முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு ரூ.5 லட்சம் கோடியை எட்டியுள்ளது. ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் பங்கு மதிப்பு, கடந்த 5 ஆண்டுகளில் 217 சதவிகிதம் உயர்ந்து, ஒரு பங்கின் விலை ரூ.1,576 என உள்ளது.

உலக அளவில், அமேசான் நிறுவனத்தின் தலைவர் ஜெஃப் பெசோஸ் 112 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் முதலிடத்திலும், மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் தலைவர் பில் கேட்ஸ் 111 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் அடுத்த இடத்திலும் உள்ளனர். ரிலையன்ஸ் நிறுவனத்தின் சந்தை மூலதனம் ரூ.9.98 லட்சம் கோடியை எட்டியுள்ளது. அதையடுத்து, டி.சி.எஸ் நிறுவனத்தின் சந்தை மதிப்பு 7.7 லட்சம் கோடியாக உள்ளது. இரண்டு நிறுவனங்களுக்கும் இடைப்பட்ட வித்தியாசம் 2.28 லட்சம் கோடியாக உள்ளது.

முகேஷ் அம்பானி
முகேஷ் அம்பானி
vikatan

முகேஷ் அம்பானி, ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தைத் தொடங்கிய பிறகு, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் வளர்ச்சி ஜெட் வேகத்தில் இருந்தது எனலாம். தொலைத்தொடர்புத்துறையில் இவரது தொழில் உத்தி, சக போட்டியாளர்களில் சிலரை தொழிலிலிருந்தே விலகும்படி செய்தது. தொலைத்தொடர்புத்துறையை கிட்டத்தட்ட முழுமையாகத் தனது ஆதிக்கத்தின்கீழ் கொண்டுவந்துவிட்டார். சில்லறை விற்பனைத்துறையிலும் முழுவீச்சில் இறங்கியுள்ளார். வருங்காலத்தில், மேலும் பல துறைகளில் தடம்பதிக்கும் முனைப்புடன் உள்ள இவருக்கு மத்திய அரசின் ஆதரவும் இருப்பதால், தொட்டதெல்லாம் பொன்னாகும் நிலைதான்!