எஃப்.டி. வட்டி விகிதம் கடந்த சில மாதங்களாக ஏறிக்கொண்டே வந்தது. ஆனால், இப்போது திடீரென சில வங்கிகள் எஃப்.டி.க்கான வட்டியைக் குறைக்க ஆரம்பித்திருக்கின்றன. உதாரணத்துக்கு, யூகோ வங்கி ஓராண்டுக்கு உட்பட்ட குறுகிய கால டெபாசிட்டுக்கான வட்டியை 0.5-1% ஆக குறைத்திருக்கிறது.

எதிர்பார்த்த அளவுக்கு பணவீக்க விகிதம் குறையாததால், வரும் மே 3-ம் தேதி முக்கிய வட்டி விகிதங்களை உயர்த்தும் அறிவிப்பை ஆர்.பி.ஐ. வெளியிடலாம் என பரவலாக பேச்சு எழுந்துள்ளது. அப்போது பல வங்கிகள், ஃபிக்ஸட் டெபாசிட்டுக்கான வட்டியை இன்னும் அதிகரிக்கக்கூடும். இந்நிலையில், ஃபிக்ஸட் டெபாசிட்டில் இப்போது முதலீடு செய்யலாமா? அல்லது காத்திருக்கலாமா? என முதலீட்டாளர்கள் குழம்பிப்போய் இருக்கிறார்கள்.

இதுகுறித்து சிட்டி யூனியன் வங்கியின் செயல் தலைவர் காமகோடியிடம் பேசினோம். முதலீட்டாளர்களின் சந்தேகத்தைத் தீர்க்கிற மாதிரி தெளிவான பதிலை சொன்னார் அவர்.

. ''தற்போது நாட்டின் பணவீக்க விகிதம் 8.5%-9.5% வரை உள்ளது. இது சென்ற ஆண்டில் இதே காலத்தில் 10%-க்கு மேல் இருந்தது. எஃப்.டி. வட்டி விகிதம் எப்போதும் பணவீக்கத்தைவிட சுமார் 2% அதிகமாக நிர்ணயிக்கப்படும். அதிக பணவீக்கம் பொருளாதார வளர்ச்சியை சீர்குலைக்கும். எனவே, பணவீக்கத்தை கட்டுப் படுத்த ஆர்.பி.ஐ. முக்கிய வட்டி விகிதங்களை அதிகரிக்கும். கடந்த ஓராண்டுக்குள் மட்டுமே முக்கிய வட்டி விகிதங்களை ஐந்து முறைக்கு மேலாக உயர்த்தியுள்ளது. கடந்த 15 ஆண்டுகளுக்கு முன் எஃப்.டி. வட்டி 16%-க்குமேல் இருந்தது. முக்கிய காரணம், அன்றைய சூழலில் அதிகமாக இருந்த பணவீக்கமே. பணவீக்கத்தை கட்டுக்குள் கொண்டுவர முக்கிய வட்டி விகிதங்கள் குறைக்கப்பட்டதால் எஃப்.டி. வட்டி 2005-ம் ஆண்டு வாக்கில் 6%-ஆக குறைந்தது'' என்றவர் தற்போதைய நிலையில் முதலீட்டாளர்கள் என்ன செய்ய வேண்டும் என்பதைச் சொன்னார்..
''சில வங்கிகள் அவை நிர்ணயித்திருந்த அளவுக்கு ஃபிக்ஸட் டெபாசிட்டைத் திரட்டிருப்பதால் வட்டி விகிதத்தைக் குறைத்திருக் கின்றன. அதேநேரத்தில் இதர வங்கி களுக்கு பணத்தேவை இருப்பதால் எஃப்.டி. வட்டி விகிதம் தற்போதைய நிலையிலே நீடிப்பதற்குதான் அதிக வாய்ப்புகள் இருக்கின்றன. எனவே, தற்போதைய வட்டியிலே முதலீடு செய்வது லாபகரமாகவே இருக்கும்.'' என்றார் அவர்.

-பானுமதி அருணாசலம்.