எஃப்.ஐ.ஐ-யைவிட ஸ்மார்ட்டாகிவிட்ட நம் முதலீட்டாளர்கள்!

கடந்த வாரம் வியாழன் மாலை... ''வெள்ளிக்கிழமை சந்தை விடுமுறை என்பதால் முக்கிய நண்பர் ஒருவருடன் சேர்ந்து பாண்டிக்கு செல்கிறேன். நாளை மதியம் உமக்கு போனிலேயே மேட்டரைச் சொல்லிவிடவா?'' திடீரென்று போன் செய்து கேட்டார் ஷேர்லக்.

ஓகே சொல்லிவிட்டு சிரித்தோம்.

''சிரிக்காதீர், எனக்குதான் பச்சைத் தண்ணீர் தவிர, வேறு எதுவும் ஆகாது என்பது உமக்குத் தெரியாதா?'' என்று போனை கட் செய்தார். மறுநாள் மதியம் இரண்டு மணிக்கு ஷேர்லக்கிடமிருந்து செல்போன் அழைப்பு வந்தது. அவர் சொன்னதன் சாராம்சம் இதோ...

சரிவைத் தடுத்த ரிசல்ட்டுகள்!

கடந்த வாரம் சந்தை பெரிய அளவில் உயரவில்லை என்றாலும், பெரும் சரிவு எதையும் காணவில்லை என்பதே முக்கியமான விஷயம். நான்கு டிரேடிங் தினங்களில் சென்செக்ஸ் வெறும் 213 புள்ளிகள் என்கிற அளவிலேயே முன்னேறியது. உலக அளவிலான சந்தைகளும் ஏறக்குறைய இதேபோலவே இருந்தன. இதற்கு முக்கிய காரணம், அமெரிக்க டாலரின் மதிப்பு தொடர்ந்து வீழ்ச்சி அடைந்து கொண்டிருப்பதே. டாலர் இண்டெக்ஸ் கிட்டத்தட்ட 74 புள்ளிகளுக்கு வந்துவிட்டது. இது மூன்று ஆண்டுகளுக்கு முன்பிருந்த நிலை.

இதே நிலையில் டாலர் போனால் தாங்காது என எஸ் அண்ட் பி நிறுவனம் சொன்னதைத் தொடர்ந்து கையில் இருக்கிற டாலரை கொடுத்து கமாடிட்டி சந்தையில் தங்கம், வெள்ளி என பலவற்றையும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் வாங்கித் தள்ள, அதன் விலை ஏகத்துக்கும் உயர்ந்து, பங்குச் சந்தை படுத்துவிட்டது. ஆனால், நம் சந்தையை சரிவிலிருந்து காப்பாற்றியது சில பெரும் நிறுவனங்களின் நான்காம் காலாண்டு ரிசல்ட்டுகள் தான். அடுத்த வாரத்திலும் நிறுவனங்களின் ரிசல்ட்கள் பாசிட்டிவ்-ஆக இருக்கும் பட்சத்தில் சந்தை மேல் நோக்கியே செல்லும்!''

உற்சாகம் தராத ரிலையன்ஸ்!

. ''இன்ஃபோசிஸ் போல ரிலையன்ஸின் ரிசல்ட்டும் மோசமாக இருந்துவிடுமோ என முதலீட்டாளர்கள் பயந்தது நிஜமே. ஆனால், ரிசல்ட் அவ்வளவு மோசமில்லை என்றாலும் பெரிய அளவில் உற்சாகம் கொடுக்கிற மாதிரி இல்லை. காரணம், கச்சா எண்ணெய் சுத்திகரிப்புக்கான லாபவரம்பு எதிர்பார்த்த அளவில் இல்லை. தவிர, டி6 பகுதி மூலம் இந்நிறுவனத்துக்கு கிடைத்த லாபம் அதிகரிக்கவில்லை. எல்லாவற்றுக்கும் மேலாக, ரிலையன்ஸிடம் அதிகரித்துவரும் பணக் கையிருப்பு பங்குகளுக்குக் கிடைக்கும் லாபத்தைக் குறைக்கிற மாதிரி இருக்கிறது. இப்படி பல மைனஸ்கள் இந்த ரிசல்ட்டில் இருந்தாலும் கடந்த டிசம்பரில் வெளியான ரிசல்ட்டைவிட இப்போது வந்திருக்கும் ரிசல்ட் பெட்டர்தான். ரிலையன்ஸ் பங்கு கடந்த சில ஆண்டுகளாக பெரிய அளவில் லாபம் கொடுத்துவிடவில்லை என்றாலும் ஓரளவுக்காவது அதை வாங்கி வைத்துக் கொள்வதன் மூலம் நமது போர்ட்ஃபோலியோவை டைவர்சிபைட்-ஆக வைத்துக் கொள்ள முடியும்!''.
பால் வார்த்த டி.சி.எஸ்.!

''இன்ஃபோசிஸ் ரிசல்ட்டுக்குப் பிறகு அதே துறையின் இன்னொரு ஜாம்பவானான டி.சி.எஸ்.ஸின் ரிசல்ட்டை முதலீட்டாளர்கள் ஆவலோடு எதிர்பார்த்தார்கள். நல்லவேளையாக முதலீட்டாளர் களின் வயிற்றில் பால் வார்த்தது அந்நிறுவனம். டி.சி.எஸ்.ஸின் வருமானம் மட்டுமே 31 சதவிகிதம் உயர்ந்திருக்கிறது. அதுவும் முதல் முறையாக பத்தாயிரம் கோடி ரூபாயைத் தாண்டி சென்றிருக்கிறது. இன்ஃபோசிஸ் நிர்வாக மாற்றங்கள் நல்லபடியாக அமையவில்லை எனில் அதன் இமேஜ் வேகமாக சரிந்து, அதற்கிருக்கும் மவுசும் குறைந்துவிடும். இது டி.சி.எஸ்.க்கு சாதகமானது என்கிறார்கள் விஷயம் தெரிந்தவர்கள்.''

திசை மாறிய எஃப்.ஐ.ஐ.கள்!

''அமெரிக்க டாலரின் மதிப்பு பெரிய அளவில் சரிந்த நிலையிலும் எஃப்.ஐ.ஐ.கள் நமது சந்தை நோக்கி வரவில்லை என்பதை முக்கியமாகக் கவனிக்க வேண்டும். எத்தனை கோடி பணத்தை முதலீடு செய்கிறார்களோ, அத்தனை கோடி அளவுக்கு விற்கவும் செய்கிறார்கள். இந்த மாதம் முழுக்க இதுவரை எஃப்.ஐ.ஐ.கள் போட்ட பணம் வெறும் 647 கோடி மட்டுமே. எஃப்.ஐ.ஐ.களின் பெருமளவிலான பணம் கமாடிட்டிக்கு போனதே முக்கிய காரணம். வரும் ஜூலை மாதம் தொடங்கி கமாடிட்டி சந்தை மீண்டும் சரிய ஆரம்பிக்கலாம். அப்போது அங்கிருந்து வெளியேறும் பணம் மீண்டும் நம் சந்தைக்கு வர வாய்ப்பிருக்கிறது.

ஐ.பி.ஓ. உஷார்!

''ஐ.பி.ஓ. அதிக எண்ணிக்கை யில் வந்தாலே சந்தை சரிவை சந்திக்குமோ என்று சிறு முதலீட்டாளர்கள் ஐயப்படுகிறார் கள். கடந்த மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் மட்டும் பத்து ஐ.பி.ஓ.கள் வெளிவந்திருக்கிறது. ஐ.பி.ஓ-வுக்கான விதிமுறைகளை செபி இன்னும் கடுமையாக்க வேண்டும். ஏன் ஐ.பி.ஓ. வருகிறார்கள், அவர்களின் பிஸினஸ் பிளான் என்ன, வருமான எதிர்பார்ப்பு என்ன என்கிற அடிப்படை கேள்விகளுக்கு எந்த பதிலும் இல்லாமலேதான் பங்குகள் ஐ.பி.ஓ-வுக்கு வருகின்றன. அதிக பிரீமியம் வைத்து விற்கும்போது அதற்கான காரணத்தைக் கண்டிப்பாக கொடுக்க வேண்டும். தவிர, பட்டியலிடப்படும்போது தரக்குறியீடு இல்லாமல் பட்டியலிடக்கூடாது என்பது போல பல விதிமுறைகளை உருவாக்க வேண்டும். அப்போது தான் சிறு முதலீட்டாளர்களின் நலன் பாதுகாக்கப்படும் என்கிறார்கள் சில நல்ல உள்ளம் கொண்ட புரோக்கர்கள்.

இதற்கிடையே ஐ.பி.ஓ. வர செபியிடம் விண்ணப்பித்து அனுமதி பெற்ற நிறுவனங்கள் ஒரு ஆண்டு கழித்தும் சந்தையில் பணம் திரட்டவில்லை என்றால் மறுபடியும் புதிய டாக்குமென்ட்டுகளை ஃபைல் செய்ய வேண்டும் என வற்புறுத்தத் தொடங்கி இருக்கிறதாம் செபி...!''

கொள்ளை லாபம் தரும் டி.எம்.பி. வங்கி!

''தூத்துக்குடியை சேர்ந்த தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியின் பங்குகள் என்.ஆர்.ஐ. பிஸினஸ்மேன் சிவசங்கரனிட மிருந்து மற்றவர்களுக்கு கை மாறியதில் ஆர்.பி.ஐ. அனுமதி பெறப்படவில்லை என ஒரு பக்கம் பிரச்னை கிளம்பி இருந்தாலும், அந்த வங்கி அதன்பாட்டுக்கு வளர்ந்து கொண்டேதான் இருக்கிறது. 2010 டிசம்பரில் முடிந்த ஒன்பது மாதக் காலத்தில் வங்கியின் நிகர லாபம் 50 சதவிகிதத்துக்குமேல் அதிகரித்திருக்கிறது. வங்கி வசம் 1,200 கோடி ரூபாய்க்கு மேல் கையிருப்பு பணம் இருக்கிறதாம். இந்நிறுவனப் பங்கின் பத்து ரூபாய் பங்கின் இன்றைய புத்தக மதிப்பு 46,000 ரூபாயாக இருக்கிறதாம்...! ஒரு பங்கின் விலை மட்டுமே 25,000 ரூபாய்க்கு மேல் சென்றுவிட்டதாம்.

இத்தனைக்கும் இந்த நிறுவனத்தின் பங்குகள் பட்டிய லிடப்படவில்லை. என்றாலும் கூடிய விரைவில் ஒரு பங்கு வைத்திருப்பவர்களுக்கு 30 போனஸ் பங்கு கொடுக்க பேச்சுவார்த்தை நடந்து வருவதாக தகவல். பங்குகளை டீமேட் வடிவத்துக்கும் மாற்றப் போவதாகவும் செய்தி. இந்த வங்கிப் பங்கை தெரிந்தோ, தெரியாமலோ வாங்கி வைத்திருப்பவர்கள் இப்போதைக்கு விற்காமல் இருப்பதே நல்லது.''

தொடர் சிக்கலில் சாய் மீரா!

''பிரமீட் சாய் மீரா நிறுவனத்தின் பங்குகள் இப்போது சந்தைகளில் டிரேட் ஆவதில்லை. பல நூறு ரூபாய்க்கு இந்த பங்குகளை வாங்கிய அப்பாவி முதலீட்டாளர்கள் இன்று வெறும் ஐந்து ரூபாய்க்குகூட விற்க முடியாமல் திணறிக் கொண்டிருக்கிறார்கள். இந்த நிலையில் இந்நிறுவனத்தின் இயக்குநர்களாக இருக்கும் நடராஜனையும் நாராயணனையும் இரண்டு முதல் மூன்று ஆண்டு காலத்துக்கு பங்குச் சந்தையில் ஈடுபட தடை விதித்திருக்கிறது செபி.''