Published:Updated:

நேற்று... இன்று... நாளை!

குடும்ப நிதி ஆலோசனை

நேற்று... இன்று... நாளை!

குடும்ப நிதி ஆலோசனை

Published:Updated:
நேற்று... இன்று... நாளை!
நேற்று... இன்று... நாளை!
நேற்று... இன்று... நாளை!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ண்ணுக்கெட்டின தூரம்வரை பச்சை பசேல்னு வயக்காடு, முற்றத்துல நாலு கறவை மாடு, சின்னதா ஒரு அழகான வீடு, திண்ணைல உட்கார்ந்துகிட்டு பெரிய பொண்ணு அபிரின்த்யா, சின்ன பொண்ணு அஸ்வின்தா, ரெண்டு பேரோட சுவாரஸ்யமா பேசிக்கிட்டு, மோகன் நமக்கு போன் போடுறார். அவரிடம் பேசிக் கொண்டிருக்கும்போது அப்படியே சிலுசிலுன்னு முகத்தில காத்து வீசுது, எங்க வீட்டு ஏ.சி.லேர்ந்து வீசுற காத்துதான் அது. இருந்தாலும் மாடர்ன் விவசாயி ஆத்தூர் மோகனோடு போனில் உரையாடியபோது அப்படி ஒரு சுகமான கிராமத்து ஃபீலிங் வரத்தான் செய்தது. 

39 வயதான மோகன் அவரோட அம்மா மற்றும் ரெண்டு குழந்தைகளோட சேலம் பக்கத்துல இருக்கிற ஆத்தூர்ல சொந்த வீட்ல குடியிருக்காரு. எட்டு ஏக்கர் நிலத்துல மஞ்சள், மர வள்ளிக் கிழங்கு, நெல், காய் கறிகள்னு விவசாயம் செய்றார். செலவுகள்போக வருஷத்துக்கு இரண்டரை லட்ச ரூபாய் வருமானம் வருது. வீட்டுல கறவை மாடுகளும் வளர்க்கிறதால அது மூலமும் வருமானம்தான். பால் நிறுவனத்துக்கு சப்ளை செய்றது மூலமா மாசம் ஐயாயிரம் நிற்குது. இன்ஷூரன்ஸ் நிறுவன ஏஜென்ட் கமிஷன்ல மாசம் ஐயாயிரம் வரை வரும். இதை எல்லாம் சேர்த்தால் மோகனோட வருஷ வருமானம் 3.7 லட்சம் ரூபாய்.

நேற்று... இன்று... நாளை!
நேற்று... இன்று... நாளை!

மோகன்கிட்ட இருக்கிற நல்ல விஷயம் என்னென்னா வருமானம் ரெண்டு மூணு இடங்கள்ல இருந்து வர்றதுதான். இது நல்ல பலன் தர்ற ஐடியா. ஒரு இடத்துல பிரச்னை வந்தா, மற்றது கைகொடுக்கும். வீட்டுச் செலவுகள் மாசம் 7,000 ரூபாய் ஆகுது. காய்கறி, அரிசி இதெல்லாம் வயல்ல இருந்து வந்துடும். பாலுக்கு தனிச் செலவு கிடையாது. அதனால, எல்லாச் செலவுகளும் இவரோட கட்டுக்குள்ளதான் இருக்குது. மொத்தத்துல மோகனோட வாழ்க்கை கொஞ்சம் பொறாமைப்பட வைக்கிற வாழ்க்கைதான்.

##~##
குழந்தைகள் சி.பி.எஸ்.இ. ஸ்கூல்ல படிக்கிறாங்க. பீஸ், யூனிஃபார்ம், பஸ் கட்டணம் எல்லாம் சேர்த்தா வருஷத்துக்கு 50,000 ரூபாய் வரை ஆகுது. பொங்கல், தீபாவளி, புது டிரஸ், ஊர் பயணங்கள் எல்லாவற்றுக்கும் சேர்த்து வருஷத்துக்கு பத்தாயிரம் ரூபாய் செலவாகுது. ஆக மொத்தம் வீட்டுச் செலவு மட்டும் வருஷத்துக்கு 1.44 லட்சம் ரூபாய். லைஃப் இன்ஷூரன்ஸ் பிரீமியம் வருஷத்துக்கு 58,000 ரூபாய். இப்படி எல்லாச் செலவுகளும்போக பார்த்தால் 1.68 லட்சம் ரூபாய் மிச்சம் இருக்கும். எதிர்பாராத இதரச் செலவுகளுக்கு என்று  எட்டாயிரம் ரூபாய் ஒதுக்கினாலும், எதிர்காலத் துக்காக சேமிக்கிற வகைக்கு குறைஞ்சது 1.6 லட்ச ரூபாய் கையில நிற்கும்.
நேற்று... இன்று... நாளை!
நேற்று... இன்று... நாளை!

சொத்துகள்னு பார்த்தா எட்டு ஏக்கர் விவசாய நிலம், ஐந்து லட்சம் மதிப்புள்ள ஒரு கிரவுண்டு வீட்டு மனை, நாற்பது சவரன் தங்க நகை, ஒரு லட்சம் மதிப்புள்ள நிறுவனப் பங்குகள் இருக்கு. இப்போ வச்சிருக்கிற நாலு ஆயுள் காப்பீடு  பாலிசிகளையும் கடைசி வரை கட்டிக்கிட்டு வரலாம். கடன் எதுவும் இல்லை.

சாதிக்கணும்னு சில லட்சி யங்களை மோகன் வச்சிருக்கார். முதலாவதா விவசாய நிலத்தில் ஒரு வீடு கட்டுறது. ரெண்டாவதா குழந்தைகள் ரெண்டு பேரையும் அம்மா இல்லாத குறை தெரியாம நல்லா வளர்த்து, படிக்க வச்சு, நல்ல இடத்துல கல்யாணம் பண்ணிக் கொடுப்பது. நல்ல குறிக்கோள்கள் தான் எல்லாமே. முதல்ல அவர் வீட்டைக் கட்டலாம். இதுக்கு பதினைந்து லட்ச ரூபாய் செலவாகும். அஞ்சு லட்ச ரூபாயை கையிலிருந்து போட்டுக்கிட்டு, மீதிக்கு வீட்டுக் கடன் வாங்கிக்கிடலாம்.

இந்தக் கணக்கின்படி நிலவரம் என்ன என்கிறது தெளிவாகிறது.  இருக்கிற  சொத்துக்களை எப்படி உபயோகிக்கலாம், செலவுகள் போக, மிச்சப்படும்  பணத்தை எப்படி முதலீடு செய்தால் குறிக்கோள்களை அடையலாம்னு பார்ப்போம்.

நேற்று... இன்று... நாளை!

வீட்டு மனையை மூணு வருஷம் கழிச்சு விற்பனை செய்யலாம்னு சொல்லியிருக்கேன். அதுக்கு காரணம் கடன் வாங்குவதை கொஞ்சம் குறைச்சுக்கிடலாம்னுதான்.

இன்ஷூரன்ஸ் பாலிசிகளோட முதிர்வின்போது எவ்வளவு வரும்? என்ன பண்ணலாம்?

செலவுகள் போக மிச்சம் இருக்கும் பணத்தை எப்படி, எந்த வகைகள்ல மோகன் முதலீடு செய்யலாம்னு பார்க்கிறதுக்கு முன்னாடி எப்போதும் முன்னுரிமை கொடுத்து சொல்ற விஷயம் - ஆயுள் காப்பீடு, மருத்துவக் காப்பீடு இந்த ரெண்டைப் பற்றிதான். இதோட முக்கியத்துவத்தைக் குறைவாக மதிப்பிட முடியாது.

நேற்று... இன்று... நாளை!
நேற்று... இன்று... நாளை!

ஏற்கெனவே ஏழு லட்சத்துக்கு ஆயுள் காப்பீடு இருக்கு. இன்னும் ஒரு இருபது லட்சம் ரூபாய்க்கு காப்பீடு எடுக்கிறது நல்லது.  இருபது லட்ச ரூபாய், இருபது வருட டேர்ம் பாலிசிக்கு ஐயாயிரம் ரூபாய்தான் பிரீமியம் வரும். குடும்பத்துக்கு ஃபேமிலி ஃபிளோட்டர் ஹெல்த் பாலிசி எடுக்கணும்.  

நாணயம் விகடன் பத்திரிகையைக்கூட ஆன்லைன்ல தான் படிக்கறேன்னு மோகன் சொல்கிறார். ஆன்லைன்ல உங்களுக்கு நல்ல பரிச்சயம் இருந்தா போதும், ஆன்லைன் பேங்கிங் மூலமாவே பிரீமியம் கட்டி, பாலிசி எடுத்துக்கிடலாம். அதனால உடனே இருபது லட்சத்துக்கு டேர்ம் பாலிசி, மூணு லட்சத்துக்கு ஹெல்த் இன்ஷூரன்ஸ் பாலிசி ரெண்டையும் எடுக்கணும். இது ரொம்ப முக்கியம் . இந்த வகைக்கு  வருஷத்துக்கு பத்தாயிரம் ரூபாய் செலவாகும்.

மீதம் இருக்கிற ஒன்றரை லட்சத்தை எப்படி முதலீடு பண்ணலாம்?:

மோகனுக்கு மாதா மாதம் சம்பளம்போல வருமானம் இருக்காது. அதனாலதான் வருஷத்துக்கு எவ்வளவு சேமிக்கலாம்னு சொல்லிருக்கோம். அவரோட வசதிப்படி வருஷத்துக்கு ஒரு முறையோ, மாதா மாதமோ முதலீடு செய்து வரலாம்.

இவற்றையெல்லாம் வைத்து மோகனின் எதிர்காலத் தேவைகளை எப்படி நிறைவேற்ற முடியும்னு பார்க்கலாமா?

நேற்று... இன்று... நாளை!

மோகன் அவரோட எதிர்காலத்தைப் பற்றியோ, ஓய்வு காலத்தை பற்றியோ ஒன்றும் யோசிக்கவில்லை. விவசாயத்தில் ஓய்வுங்கிறது கிடையாது. நிலத்தை என்றைக்கு வேண்டுமானாலும் குத்தகைக்கு விட்டுட்டு அதிலேருந்து வர்றதை வச்சும் சமாளிக்கலாம். இருந்தாலும் அவருக்கென்று கைவசம் கொஞ்சம் பணத்தை வச்சுக்கிடறது நல்லது. இப்போ இருக்கும் வரவுகளை வச்சு மேல சொன்ன மாதிரி முதலீடுகள் பண்ணினால் அவரோட கனவுகள் நினைவாகும். என்றாலும் அரிசி, காய்கறி விலைகள் நாளுக்கு நாள் ஏறிவருவதால் வரும் காலங்களில் மோகனின் வருமானமும் நன்றாக இருக்கும் என எதிர்பார்க்கலாம். அப்படி வருமானம் அதிகரிக்கும்போது பப்ளிக் பிராவிடெண்ட் ஃபண்ட், நியூ பென்சன் ஸ்கீம்களில் முதலீடு செய்தால் அவருடைய  எதிர்காலத்துக்கும் ஒரு பாதுகாப்பு வந்துவிடும்.

மூணு வருஷம் கழிச்சு வங்கி ஆர்.டி-.ஐ நிறுத்திட்டு, வீடு கட்ட வாங்கிய கடனை செலுத்த வேண்டியிருக்கும். கடன் தொகை ஆறு லட்சம் 11% வட்டி, 15 வருடங்கள் என்றால் மாதத் தவணை 7,000 ரூபாய் வரும். இதற்கும் மேல் கடன் வாங்கணும் என்றால் அப்போதைய வரவுகள் ஒத்துழைத்தால்  ஏற்பாடு செய்து கொள்ளலாம்.

தன்னோட வாழ்க்கையை திட்டமிட்டு ரொம்ப கவனமா நடத்திக்கிட்டு வர்றார் மோகன். இப்போது நாம் கொடுத்திருக்கற ஆலோசனைகளை ஃபாலோ பண்ணினாலே இன்னும் மிகச் சரியா இருக்கும். வாழ்க்கையில் எந்த குறையும் இல்லாமல், குழந்தைகளோடு சந்தோஷமாக வாழ மோகனை வாழ்த்தி மகிழ்வோம்.

படங்கள்: க. தனசேகரன்

நேற்று... இன்று... நாளை!
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism