Published:Updated:

கமாடிட்டியிலும் கலக்கலாம்!

கமாடிட்டியிலும் கலக்கலாம்!

கமாடிட்டியிலும் கலக்கலாம்!

கமாடிட்டியிலும் கலக்கலாம்!

Published:Updated:
கமாடிட்டியிலும் கலக்கலாம்!


'இந்தியாவில் முதன்முதலாகத் தொடங்கப்பட்ட தேசிய அளவிலான கமாடிட்டி சந்தை எது?’ என கடந்த இதழின் முடிவில் கேட்டிருந்தேன். அதற்கு 'நேஷனல் மல்ட்டி கமாடிட்டி எக்ஸ்சேஞ்ச் ஆஃப் இந்தியா லிமிடெட்’ (சுருக்கமாக என்.எம்.சி.இ.) என சரியான விடையைச் சொல்லி இருந்தனர் பல வாசகர்கள்.

கமாடிட்டியிலும் கலக்கலாம்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

24 கமாடிட்டிகளுடன் 2002-ம் ஆண்டு நவம்பர் மாதம் 26-ம் தேதி தனது ஃப்யூச்சர்ஸ் வர்த்தகத்தைத் தொடங்கியது என்.எம்.சி.இ. தங்கம், வெள்ளி, விவசாய விளைபொருட்கள் உள்ளிட்ட பலதரப்பட்ட கமாடிட்டிகளை கணினி மூலம் வர்த்தகம் செய்யத் தொடங்கிய முதல் ஃப்யூச்சர்ஸ் எக்ஸ்சேஞ்ச் இது. ஏறத்தாழ ஐம்பது ஆண்டு கால அனுபவமும், தேசம் முழுவதும் 475 வேர்ஹவுஸும் உள்ள பொதுத் துறை நிறுவனமான 'சென்ட்ரல் வேர்ஹவுசிங் கார்ப்பரேஷன்’ (CWC), 'நேஷனல் அக்ரிகல்ச்சுரல் கோ-ஆப்ரேட்டிவ் மார்க் கெட்டிங் ஃபெடரேஷன் ஆஃப் இந்தியா’ (NAFED), 'குஜராத் அக்ரோ இன்டஸ்ட்ரிஸ் கார்ப்பரேஷன் லிமிடெட்’ (GAICL), 'குஜராத் ஸ்டேட் அக்ரிகல்சுரல் மார்க்கெட்டிங் போர்ட்’ (GSAMB), 'நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் அக்ரி கல்ச்சுரல் மார்க்கெட்டிங்’ (NIAM), 'நெப்ட்யூன் ஓவர்சீஸ் லிமிடெட்’ (NOL) ஆகியவற்றின் ஆதரவுடன் தொடங்கிய இந்த நிறுவனத்தில் மற்றொரு பொதுத் துறை வங்கியான பஞ்சாப் நேஷனல் வங்கியும் பின்னர் சேர்ந்து கொண்டது.  

##~##
முதலில் தொடங்கியது என்கிற பெருமை மட்டும்தான் இதற்கு. வர்த்தகத்தின் அளவில், இன்று மூன்றாவது இடத்துக்கு தள்ளப் பட்டு விட்டது. இன்றைய தேதியில் முதலிடத்தில் இருக்கும் கமாடிட்டி எக்ஸ்சேஞ்ச் எம்.சி.எக்ஸ்.தான். மொத்த கமாடிட்டி சந்தையில் 85 சதவிகிதம் இதனிடம்தான் இருக்கிறது.

சரி, கமாடிட்டிக்கு வருவோம். 'டெரிவேட்டிவ்ஸ்’ என்பதற்கு 'தனக்கென ஒரு மதிப்பும் இல்லாமல், வேறொன்றின் விலையை அடிப்படையாகக் கொண்டு வர்த்தகமாகக் கூடியது’ என கடந்த இதழில் சொல்லி இருந்தேன். இந்த டெரிவேட் டிவ்-ஸில் இரண்டு வகை: ஃப்யூச்சர்ஸ் மற்றும் ஆப்ஷன்ஸ். எஃப் அண்ட் ஓ-வில் டிரேட் செய்கிறவர்கள் ஃப்யூச்சர்ஸ் மற்றும் ஆப்ஷன்ஸை அத்து படியாக வைத்திருப்பார்கள். இதுநாள்வரை எஃப் அண்ட் ஓ பக்கமே தலைவைத்துப் படுக்காத வர்கள் எளிதாகப் புரிந்து கொள்ள ஃப்யூச்சர்ஸ் மற்றும் ஆப்ஷன்ஸை எளிதாக விளக்கிச் சொல்கிறேன்.

குறிப்பிட்ட தரத்தில் இருக்கும் ஒரு குறிப்பிட்ட பொருளை, குறிப்பிட்ட விலைக்கு, முன்னரே ஒப்புக்கொண்ட குறிப்பிட்ட தேதியில்/நாளில் விற்பதாகவோ அல்லது வாங்குவதாகவோ இருவர் செய்துகொள்ளும் ஒப்பந் தம்தான் ஃப்யூச்சர்ஸ். என்ன இது 'விசு’த்தனமாக இருக்கிறதே என்கிறீர்களா? சிம்பிள். ஏறக்குறைய ஒரு பங்கை வாங்கி விற்கிற மாதிரிதான் அல்லது விற்று வாங்குகிற மாதிரிதான்.

முதல் தரமான ஏலக்காய் ஒரு கிலோ 1,050 ரூபாய் வீதம் மே மாதம் 30-ம் தேதி வாங்கிக் கொள்கிறேன் அல்லது விற்கிறேன் என இன்றைக்கு ஓர் ஒப்பந்தம் எழுதிக் கொள்வதுதான் ஃப்யூச்சர்.

கமாடிட்டியிலும் கலக்கலாம்!

இப்படி ஓர் ஒப்பந்தம் எழுதிக் கொண்டபிறகு என்ன நடக்கிறது? மே மாதம் 30-ம் தேதி வெளி மார்க்கெட்டில் முதல் தர ஏலக்காய் ஒரு கிலோ 1,100 ரூபாய்க்கு போனாலும் உங்களுக்கு கவலை இல்லை. காரணம், நீங்கள்தான் 1,050 ரூபாய்க்கு வாங்கிக் கொள்கிறேன் என்று ஏற்கெனவே ஒப்பந்தம் போட்டு விட்டீர்களே!

நாம் வாங்கிய பொருள் விலை ஏறினால் ஜாலிதான். ஒருவேளை குறைந்து விட்டால்..? அதாவது 1,000 ரூபாயாக குறைந்து விட்டால்..?

வேறு வழியில்லை, நீங்கள் 1,050 ரூபாய் கொடுத்து வாங்கித்தான் ஆகவேண்டும். காரணம், நீங்கள் 1,050 ரூபாய்க்கு வாங்கிக் கொள்கிறேன் என்று ஏற்கெனவே ஒப்பந்தம் போட்டிருக்கிறீர்கள்.

மேற்சொன்ன இந்த இரண்டு வாய்ப்புகளும் நீங்கள் ஏலக்காயை வாங்கிக் கொள்வதாக ஒப்புக் கொள்ளும்போது. அப்படி இல்லாமல் நீங்கள் ஏலக்காயை விற்பதாக ஒப்பந்தம் போடுகி றீர்கள் என்றால் என்ன நடக்கும்?

முதல் தரமான ஏலக்காயை கிலோ ஒன்றுக்கு 1,050 ரூபாய் வீதம் மே மாதம் 30-ம் தேதி விற்கிறேன் என்று ஒப்பந்தம் போடுகிறீர்கள். மே மாதம் 30-ம் தேதி வெளி மார்க்கெட்டில் ஏலக்காய் 1,100 ரூபாய்க்கு உயர்ந்து விட்டது என்றால் உங்களுக்கு 50 ரூபாய் நஷ்டம். காரணம், 1,050 ரூபாய்க்கு நீங்கள் ஏலக்காய் விற்கிறேன் என்று ஏற்கெனவே ஒப்பந்தம் போட்டிருக்கிறீர்கள். ஆனால், அதுவே 1,000 ரூபாயாக குறைந்து விட்டால் உங்களுக்கு 50 ரூபாய் லாபம். ஃப்யூச்சர் வர்த்தகம் என்பது புரிந்து கொள்வதற்கு எவ்வளவு எளிதாக இருக்கிறது பார்த்தீர்களா?

கமாடிட்டியிலும் கலக்கலாம்!

இந்த இடத்தில் ஒரு விஷயத்தை விளக்கிச் சொல்லியாக வேண்டும். ஒரு பொருளை நீங்கள் வாங்கிக் கொள்கிறீர்கள் என்று ஒப்பந்தம் போட்டதாலோ அல்லது விற்கிறேன் என்று சொன்ன தாலோ, அந்தப் பொருளை நீங்கள் கட்டாயம் கையில் வாங்கிக் கொண்டாக வேண்டும் என்ப தில்லை. உதாரணமாக, 10 கிலோ க்ரூட் பாமாயிலை நீங்கள் வாங்கிக் கொள்கிறேன் என்று ஒப்பந்தம் போடுகிறீர்கள் என்பதற்காக அதை கையில் வாங்க வேண்டும் என்பதில்லை. வேண்டுமென்றால் வாங்கிக் கொள்ளலாம். இல்லாவிட்டால் அந்த கான்ட் ராக்ட்டை லாபத்திலோ அல்லது நஷ்டத்திலோ வேறு ஒருவருக்கு விற்று   விடலாம்.  அல்லது பத்து கிலோ க்ரூட் பாமாயிலை விற் கிறேன் என்று சொல்லி இருந்தால், எக்ஸ்ஃபயரி தேதி அன்று பத்து கிலோ க்ரூட் பாமாயிலுக்கு நான் எங்கே போவேன் என்று தவிக்கத் தேவையில்லை. அன்றைக்கு பத்து கிலோ க்ரூட் பாமாயில் என்ன விலையோ அதைக் கொடுத்து கான்ட்ராக்ட்டை வாங்கி  நேர் செய்து விடலாம். இது தெரியாத நம்மவர்கள் சிலர், கமாடிட்டி சந்தை என்றாலே பொருளை வாங்கித்தான் அல்லது கொடுத்துதான் ஆகவேண்டும் என்று நினைத்துப் பயப்படுகிறார்கள்.

ஒரு குறிப்பிட்ட பொருளை, குறிப்பிட்ட விலையில், குறிப்பிட்ட தேதியில் வாங்கவோ அல்லது விற்கவோ ஒப்பந்தம் போடும் போது முழுப் பணத்தையும் நீங்கள் கொடுக்க வேண்டியதில்லை. இந்த உரிமையை வாங்குவதற்காக சிறிதளவு பணத்தை முன் பணமாக, அதாவது மார்ஜினாக மட்டும் கட்டினால் போதும். இந்த மார்ஜின் பணம் எவ்வளவு என்பது நீங்கள் எந்தப் பொருளை வாங்குகிறீர்கள் என்பதைப் பொறுத்து மாறும். கமாடிட்டி செய்யும் புரோக்கிங் அலுவலகத் தில் நுழைந்து தங்கம், வெள்ளி, காப்பர், கச்சா எண்ணெய் என ஒவ்வொரு பொருளை வாங்கவும், எவ்வளவு மார்ஜின் பணம் கட்ட வேண்டும் என்பதையும் கேட்டாலே விளக்கமாக எடுத்துச் சொல்வார்கள்.

இதுவரை இத்தனை விளக்கமாக நான் சொன்னது ஃப்யூச்சர்ஸ் பற்றி மட்டும்தான். ஃப்யூச்சர் போலவே இன்னொரு முக்கியமான விஷயம் ஆப்ஷன் என்பது. அதை அடுத்த இதழில் விரிவாக எடுத்துச் சொல்கிறேன்.

(தொடர்ந்து கலக்குவோம்)

கமாடிட்டியிலும் கலக்கலாம்!
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism