Published:Updated:

''டியர் மிஸ்டர் பிஸினஸ்மேன்...''

கடை டூ கார்ப்பரேட் வியூகங்கள்!

''டியர் மிஸ்டர் பிஸினஸ்மேன்...''

கடை டூ கார்ப்பரேட் வியூகங்கள்!

Published:Updated:
''டியர் மிஸ்டர் பிஸினஸ்மேன்...''


சென்னை எழும்பூர் ரயில் நிலையம், மதுரை மீனாட்சி அம்மன் கோவில், திருச்சி மலைக்கோட்டை, தஞ்சாவூர் பெரிய கோயில் போல நாகர்கோவில் டவுனுக்கு அடையாளம் மணிமேடை ஜங்ஷன். பெயருக்குக் காரணமான க்ளாக் டவர், அதன் முன்னால் மண்ணின் மைந்தரான கலைவாணரின் சிலை, ஆகியவை இருக்கும்  நான்கு ரோடுகளின் சந்திப்பு... 

''டியர் மிஸ்டர் பிஸினஸ்மேன்...''

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ங்கே 'நாகராஜா மெடிக்கல்ஸ்’  நாற்பது ஆண்டுகளாக மக்களின் நம்பிக்கை பெற்ற கடை. இக்கடையை சுப்ரமணி 1971-ல் தொடங்கினார். அவரது மறைவுக்குப் பின் அவருடைய மகன் சிவதாணு நடத்தி வருகிறார். தெருவுக்குத் தெரு பார்மஸி கடைகள் வந்துவிட்ட போதிலும், 'நாகராஜா மெடிக்கல்ஸ்’ வெற்றிகரமாக நடக்கக் காரணம், சுப்ரமணியின் கடை ராசியானது என்னும் நம்பிக்கை. அதன் பலனாக அவருடைய கஸ்டமர்களின் வாரிசுகளும் சிவதாணுவிடமே தொடர்ந்து மருந்துகள் வாங்கி வருகிறார்கள்.

காலத்துக்கு ஏற்றபடி சிவதாணுவும் வாடிக்கையாளர் சேவையில் முன்னேற்றங்கள் செய்து அவர்களைத் தக்க வைத்துக் கொண்டு வருகிறார். பல குடும்பங்களில் கணவன், மனைவி என இருவரும் வேலை பார்ப் பதால் நேரடியாகக் கடைக்கு வந்து மருந்துகள் வாங்க முடியாத நிலை.

##~##
ஆபீஸ் போகும்போது ப்ரிஸ்க்ரிப்ஷனைக் கொடுத்து விட்டுப் போவார்கள், அல்லது போனில் மருந்து லிஸ்ட்டை சொல்லி விடுவார்கள். சில வயதானவர்களும் அப்படித்தான்.  அவர்களுக்கெல்லாம் சிவதாணு  மருந்துகளை வீட்டில் டெலிவரி செய்வார். ஒரே ஒரு கண்டிஷன், குறைந்தபட்சம் 250 ரூபாய்க்கு மருந்துகள் வாங்கினால்தான் வீட்டில் டெலிவரி.

'நாகராஜா மெடிக்கல்ஸ்’ வேலை நேரம் காலை ஒன்பது மணி முதல் இரவு ஒன்பது வரை.  மதியம் இரண்டு மணிக்கும், இரவு பத்து மணிக்கும் கடையில் கூட்டம் குறைவாகும்போதுதான் வீட்டுக்கு மருந்து  டெலிவரி விஷயத்தை கையில் எடுப்பார். அப்போதுதான் கடைப் பையன்களை இதற்கு அனுப்ப முடியும்.

சிவதாணுவுக்கு கடந்த ஆறு மாதங்களாக ஒரு பிரச்னை. வடிவீச் வரம் கிராமத்தில் வசிக்கிறார் பார்வதி பாட்டி. மாதம் 2,000 ரூபாய்க்கு குறையாமல் மருந்து வாங்குகிறார். ஆனால், இரண்டு நாட்களுக்கு ஒருமுறை, 'நாலு அனாஸின்’, 'ரெண்டு ஜெலூசில்’, 'ஒரு இருமல் டானிக்’ என்று கொசுறு ஆர்டர்கள் தருகிறார்.

'வீட்டு டெலிவரி கொடு. மதியமும் இரவு ஒன்பது மணிக்கு மேலும் நான் தூங்கி விடுவேன். அதனால் மாலை ஐந்திலிருந்து ஏழு மணிக்குள் மருந்துகளை அனுப்பிவிடு’ என்று தொந்தரவு பண்ணுகிறார். வடிவீச்வரம் கிராமத்துக்கு சைக்கிளில் போய்வர கடைப் பையன்களுக்கு அரை மணி நேரமாகும்.

இந்த அரை மணி நேரம் மட்டுமல்ல, இன்னொரு பிரச்னையும் உண்டு. அது என்னவென்று டெலிவரி கொடுக்கப் போகும் பாலுவே சொல்லுவான்...

'அந்தப் பாட்டியம்மா பேசிக் கிட்டே இருக்கும். காப்பி குடிக்கிறியா, மோர் குடிக்கிறியா என்று உபசாரம் வேறு. அரை மணி நேரம் பேச்சிலேயே வேஸ்ட் பண்ணிடும்.''

பத்து ரூபாய், இருபது ரூபாய் மருந்துக்காக இரண்டு நாட்களுக்கு ஒருமுறை கடைப் பையன் ஒரு மணி நேரம் செலவிடுவது சுத்த வேஸ்ட். '250 ரூபாய்க்கு மேல் வாங்கினால்தான் வீட்டு டெலிவரி, அல்லது கடைக்கு வந்து வாங்கிக் கொள்ளுங்கள் என்று கண்டிப்பாகச் சொல்லிவிடலாமா?’- சிவதாணு  ஆலோசித்தார்.

பாலுவிடம் சொன்னார்,  'அடுத்த முறை பார்வதி பாட்டி போன் செய்தால் லைனை என்கிட்டே கொடு...''

'சரி சார், 'இனி இந்த மாதிரி சின்னச் சின்ன ஆர்டருக்கெல்லாம் வீட்டு டெலிவரி கிடையாது’னு கண்டிப்பாச் சொல்லிடுங்க.''

அன்று, பார்வதி பாட்டியின் போன். சிவதாணுவே போனை எடுத்தார்.

'தம்பி, நான் வடிவீச்வரம் பார்வதி பேசுறேன். ஒரே தலைவலி. நாலு அனாஸின் அனுப்பறீங்களா?''

'அம்மா, மதியம் ஒரு மணிக்கு அனுப்புறேன்.''

'என்ன தம்பி, எனக்குத் தலைவலி மண்டையைப் பிளக்குது. மூணு மணி நேரம் கழிச்சு மாத்திரை அனுப்பறேன்னு சொல்றே?''

'அதுவரைக்கும் கடையிலே கூட்டம்  அதிகமா இருக்கும் அம்மா.''

'என்னப்பா, வயசானவங்க கஷ்டம் புரியாமப் பேசறே?''

'அப்பா சுப்ரமணி ஒருவேளை அவரே நேரடியாக டெலிவரி கொடுக்கப் போயிருப்பாரோ?  சிவதாணு மனத்தில் ஒரு எண்ணம். இந்தப் பாட்டியை  தானே சந்தித்தாலென்ன?’

ஹீரோ ஹோண்டாவை உதைத்தார். பத்தே நிமிடங்களில் பார்வதி பாட்டி வீட்டு வாசலில் நின்றார். வாசல் கதவு திறந்தே இருந்தது.

'அம்மா... அம்மா...''

'யாருப்பா?''

'நாகராஜா மெடிக்கல்ஸிலிருந்து வர்றேங்க.''

'பாலுத் தம்பியா? உள்ளே வாடா!''

'நான் பாலு இல்லீங்க. சிவதாணு.''

'தம்பி, வெள்ளையும் சொள்ளையுமா டிரெஸ் போட்டிருக்கே? உன்னைப் பார்த்தா

கடையில வேலை பார்க்கிற பையன் மாதிரி இல்லையே?''

பாட்டிக்கு எண்பது வயதிருக்கும். இந்த வயதிலும் எப்படி  சரியாக ஆளைக் கணிக்கிறார்?

'நான் கடை முதலாளிங் கம்மா.''

'யாரு, சுப்ரமணி பையனா? எங்க வீட்டுக்காரர் காலத்திலிருந்தே உங்க அப்பாவைத் தெரியும். நாணயமான, தங்கமான மனுஷன்.

நீயும் அவரைப் போல அடக்கமா இருக்கே. உன் பேரு என்னப்பா?''

'சிவதாணுங்க.''

தலைவலி மாத்திரையையும், பில்லையும் பாட்டியிடம் கொடுத்தார்.

'ஒரு நிமிஷம் இருப்பா. இந்தச் சேரில் உட்காரு. பணம் எடுத்திட்டு வர்றேன்.''

வந்தார், கையில் பணமும் ஒரு தம்பளருமாக.

'பணம் வாங்கிக்க. வெயில் அதிகமாக இருக்கு. இந்தா மோர் குடி.''

''டியர் மிஸ்டர் பிஸினஸ்மேன்...''

'சிவதாணு, முப்பது வருஷமா உங்க கடையிலேதான் நாங்க மருந்து வாங்கறது. நீயே பாரேன், இந்தத் தெரு முனையிலேயே ரெண்டு மருந்துக் கடை இருக்குது. ஆனா, எனக்கு எப்பவும் சுப்ரமணி கடைதான்.''

'ரொம்ப நன்றிம்மா!''

'நானில்லே நன்றி சொல்லணும்! ஊரெல்லாம் போலி மருந்து நடமாடுறதாச் சேதி வருது. அதனாலே கண்ட கண்ட கடைகள்லே எப்படி வாங்குறது? உங்க கடையில வாங்கினாதான் நம்பிக்கையா இருக்கு...''

'எல்லாம் அப்பா தொடங்கி வெச்சதும்மா.''

'ஆறு மாசமா எனக்கு ஒரு பிரச்னைப்பா. வீட்டிலே லட்சுமி வேலை பாக்குது. அதுதான் உங்க கடைக்கு வந்து மருந்து வாங்கிக் கொடுக்கும். இப்போ பிரசவம் ஆகி கைக் குழந்தை. அதனாலே பாலுவை வரச் சொல்ல வேண்டிய கட்டாயம்.''

பாட்டியுடன் ஒரு மணி நேரம் பேசிக் கொண்டிருந்தார் சிவதாணு. பாட்டி மாதம் இரண்டு பாட்டில் ஹார்லிக்ஸும், இரண்டு டின் ஓட்ஸும் வாங்குகிறார். இப்போது வாங்குவது மளிகைக் கடையில். இனிமேல் சிவதாணுவிடம் வாங்க ஒப்புக்கொண்டார். அவரிடம் விடைபெற்று சிவதாணு புறப்பட்டார்.

கடைக்கு வந்தவுடன் பாலு கேட்டான்:  

'என்ன சார், பாட்டியம்மா கிட்டே முடிவாச் சொல்லிட்டீங்களா?''

'பாலு, பாட்டி எப்போ ஆர்டர் கொடுத்தாலும், அவங்க சொல்ற நேரத்தில் வீட்டு டெலிவரி பண்ணிடு.''

பாலு விழித்தான். பார்வதி பாட்டியின் வயதைப் பார்த்து முதலாளி மனம் இறங்கி விட்டார் என்று நினைத்தான். ஆனால், தன் முடிவுக்கு என்ன காரணம் என்பது சிவதாணுவுக்குத்தான் தெரியும்.  

இந்த பிரச்னை தற்காலிகமானது. சில மாதங்களில் வேலைக்காரி லட்சுமி,  பாட்டி வீட்டில் முழுநேர வேலைக்கு வருவார், மருந்து  வாங்க அவரே வருவார். அப்போது வீட்டு டெலிவரி தேவைப்படாது.

பாட்டி இப்போது கொடுக்கும் மாத பிஸினஸ் 2,000 ரூபாய். அதில் வரும் லாபம் சுமார் 400 ரூபாய். ஹார்லிக்ஸ், ஓட்ஸ் கொடுப்பதால் அவருடைய மாத ஆர்டர் 2,500 ரூபாயாகும். இதில் மாத லாபம் சுமார் 550 ரூபாய் கிடைக்கும். கடைப் பையன் பாலு ஒவ்வொரு மாதமும் செலவிடும் எட்டு மணி நேரங்களுக்காக இந்த லாபத்தை இழக்கக்கூடாது.

சிவதாணுவின் முடிவுக்கு அடிப்படை, அவர் அப்பா சுப்ரமணி சொல்லிக் கொடுத்த சில மந்திரங்கள். அவை:

1. எந்தப் பிரச்னைக்கும் மெலெழுந்தவாரியாக முடிவெடுக்கக் கூடாது.

2.சந்தர்ப்பம் கிடைக்கும்

போதெல்லாம் வாடிக்கையாளர் களைச் சந்திக்க வேண்டும்.

3. லாபம் தரும் பிஸினஸ் கொடுக்கும் கஸ்டமர்களை ஒருபோதும் இழக்கக் கூடாது.

4. போட்டிகள் நிறைந்த வியாபார உலகத்தில் புதிய கஸ்டமர்களைத் தேடுவதைவிட தற்போதைய கஸ்டமர்களிடம் அதிக பிஸினஸ் கிடைக்குமா என்று பார்ப்பதே புத்திசாலித்தனம்.

(மீண்டும் சந்திப்போம்)  
படம்: என்.விவேக்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism