Published:Updated:

கமாடிட்டி

கமாடிட்டி

கமாடிட்டி

கமாடிட்டி

Published:Updated:

தரை தொடாத தங்கம்!

கமாடிட்டி


தங்கம் விலை கடந்த வாரத்திலும் மேல் நோக்கியே இருந்தது. கடந்த வெள்ளிக்கிழமை இரவு ஒரு அவுன்ஸ் தங்கம் 1,544 டாலரைத் தொட்டது. இந்த விலையேற்றத்துக்கு ஒரே காரணம், அமெரிக்க டாலரின் மதிப்பு குறைந்ததே.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

##~##
கடந்த மூன்று ஆண்டுகளில் டாலருக்கு இப்போதிருக்கும் மதிப்புதான் மிகவும் குறைவு. கடந்த வெள்ளிக்கிழமை மாலை அமெரிக்க டாலர் 73.01-ஆகக் குறைந்தது. கடந்த 23-ம் தேதி அன்றுகூட 74.06-ஆக இருந்த அமெரிக்க டாலர், கடந்த 14 வாரங்களில் இல்லாத அளவுக்கு பெரிய இறக்கம் கண்டது. இதன் காரணமாக தங்கம் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்தது.

எம்.சி.எக்ஸ். கமாடிட்டி எக்ஸ்சேஞ்சில் 10 கிராம் தங்கம் கடந்த வெள்ளிக்கிழமை இரவு 22,369 ரூபாய்க்கு விற்பனையானது.

இப்போதுள்ள நிலையில் டாலர் இன்டெக்ஸ் தொடர்ந்து குறையும்பட்சத்தில் தங்கத்தின் விலை ஏறவே செய்யும். ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 1,550 டாலரைத் தாண்டிச் செல்லவும் வாய்ப்பிருக்கிறது. ஒருவேளை குறையும்பட்சத்தில் 1,530 டாலருக்கு வரவும் வாய்ப்பிருக்கிறது. புதிதாக பொசிஷன் எடுக்கிறவர்கள் ஸ்டாப்லாஸை கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும்.

உச்சத்தை தொட்ட வெள்ளி!

கடந்த 31 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு உச்சபட்ச விலையை வெள்ளி தற்போது தொட்டிருக்கிறது. சென்ற வாரத்தில் ஒரு அவுன்ஸுக்கு 49.08 டாலர் வரை சென்றது. அடுத்த வாரத்தில் 50 டாலரைத் தொடும் என எல்லோரும் எதிர்பார்க்கின்றனர். இந்திய சந்தையில் ஒரு கிலோ வெள்ளி விலை கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 3,500 ரூபாய்க்கு மேல் உயர்ந்தது.

எம்.சி.எக்ஸ். சந்தையில் கடந்த 16 மாதங்களில் வர்த்தகமாகும் வெள்ளி கான்ட்ராக்ட் கிட்டத்தட்ட மூன்று மடங்கு உயர்ந்திருக்கிறது. 2010 ஜனவரியில் வர்த்தகமான வெள்ளி கான்ட்ராக்ட்களின் எண்ணிக்கை 24.26 லட்சம். 2010 டிசம்பர் முடிவில் வர்த்தகமான கான்ட்ராக்ட்களின் எண்ணிக்கை 39.54 லட்சம். 2011 ஏப்ரலில் வர்த்தகமான வெள்ளி கான்ட்ராக்ட்களின் எண்ணிக்கை 82.64 லட்சம்.

வெள்ளி கான்ட்ராக்ட்களின் எண்ணிக்கை உயர்ந்துவரும் அதே நேரத்தில் தங்க கான்ட்ராக்ட்களின் எண்ணிக்கை கணிசமாக குறைந்திருக்கிறது. 2010 ஜனவரியில் வர்த்தகமான தங்க கான்ட்ராக்ட்களின் எண்ணிக்கை 23.96 லட்சம். 2010 டிசம்பரில் 20.68 லட்சம் கான்ட்ராக்ட்களும், 2011 ஏப்ரலில் 17.12 லட்சம் கான்ட்ராக்ட்களும் வர்த்தகமாகி இருக்கின்றன.

இந்த புள்ளிவிபரத்தை வைத்துப் பார்க்கும்போது வெள்ளி விலை 50 டாலருக்கு மேலே செல்ல நிறைய வாய்ப்பிருப்பதாகச் சொல்கிறார்கள் நிபுணர்கள். ஒருவேளை குறையும் பட்சத்தில் 45 டாலருக்கு வரவும் வாய்ப்புண்டு.

கரைந்த காப்பர்!

சர்வதேச அளவில் காப்பருக்கான தேவை தொடர்ந்து குறைந்து வருவதால் அதன் விலையும் தொடர்ந்து குறைந்து வருகிறது. தவிர, சீனாவில் பணவீக்கத்தைக் குறைக்க அந்நாட்டு அரசு பல்வேறு நடவடிக்கை எடுத்து வருவதாலும் விலை குறைந்திருக்கிறது. கடந்த 7-ம் தேதி அன்று லண்டன் மெட்டல் எக்ஸ்சேஞ்சில் ஒரு டன் காப்பர் 9,250 டாலருக்கு விலை போனது. ஆனால், தற்போது 500 டாலர் குறைந்து 9,350 என்கிற அளவிலேயே விற்பனையாகிறது.

எம்.சி.எக்ஸ். சந்தையிலும் கடந்த இரு மாதங்களாக காப்பர் விலை குறைந்து கொண்டே வருகிறது. ஜூன் 30-ம் தேதி முடிவடையும் காப்பர் கான்ட்ராக்ட் கடந்த மார்ச் மாதம் ஒன்றாம் தேதி அன்று 452 ரூபாயாக இருந்தது. ஆனால், அதே கான்ட்ராக்ட் ஏப்ரல் 29-ம் தேதி அன்று 413 ரூபாயாக குறைந்தது. அடுத்து வரும் நாட்களில் காப்பர் விலை இன்னும் குறைய வாய்ப்பிருப்பதாக சொல்கிறார்கள் நிபுணர்கள்.

கமாடிட்டி


சர்க்கரை விலை உயர்கிறது!

சர்க்கரை விலையை ஓரளவுக்கு மேல் குறைக்க ஆலைகள் மறுத்து வருவதால் அதன் விலை அடுத்துவரும் மாதங்களில் உயர வாய்ப்பிருப்பதாக கமாடிட்டி நிபுணர்கள் கருதுகிறார்கள். கடந்த வாரக் கடைசியில் மும்பை ஸ்பாட் மார்க்கெட்டில் 100 கிலோ 'எஸ் கிரேட்’ சர்க்கரை 2,741-2,771 ரூபாய் வரை விலை போனது. எக்காரணத்தைக் கொண்டும் சர்க்கரை விலையை 2,600 ரூபாய்க்கு கீழே குறைய மில்கள் அனுமதி அளிக்க மறுத்து வருகிறது. இதனைத் தொடர்ந்து மே 20-ம் தேதி முடிவடையும் 100 கிலோ சர்க்கரை கான்ட்ராக்ட் ஒரு சதவிகிதம் உயர்ந்து 2,750 ரூபாயாக விலை போனது. ஜூன் 20-ல் முடியும் கான்ட்ராக்ட் 2,791 ரூபாயாகவும், ஜூலை 20-ல் முடியும் கான்ட்ராக்ட் 2,867 ரூபாயாகவும் இருக்கிறது. அடுத்தடுத்து வரும் மாதங்களுக்கான  சர்க்கரை கான்ட்ராக்ட்,  அதிக  விலையில் இருப்பதால் சர்க்கரை விலை உயரலாம் என்கிற பேச்சு எழுந்துள்ளது.  

மிளகு விலையும் உயரும்!

இந்தியாவில் மிளகு உற்பத்தி குறையும் என செய்தி வெளி யானதைத் தொடர்ந்து அதன் விலை ஏகத்துக்கு உயர ஆரம்பித் திருக்கிறது. 2009-10-ல் மட்டும் நம்

நாட்டில் 18,425 டன் மிளகு உற்பத்தியானது. ஆனால், 2010-2011-ல் 16,600 டன் மட்டுமே உற்பத்தி ஆகியிருக் கிறது. தவிர, வியட்நாமிலும் மிளகு உற்பத்தி குறைந்திருக்கிறது. இதனைத் தொடர்ந்து என்.சி.டி.இ.எக்ஸ். சந்தையில் மே 20-ம் தேதி முடிவடையும் கான்ட்ராக்ட் 288 ரூபாய் உயர்ந்து 28,577 ரூபாயாக விலை போனது. ஜூன் கான்ட்ராக்ட் 29,140, ஜூலை கான்ட்ராக்ட் 29,600, ஆகஸ்ட் கான்ட்ராக்ட் 30,070, செப்டம்பர் கான்ட்ராக்ட் 30,539, அக்டோபர் கான்ட்ராக்ட் 30,801 ரூபாய் என விலை போனது.

- ஏ.ஆர்.குமார்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism