ஒரு காலத்தில் ராஜாபுரம் (கிங் டவுன்) என்று அழைக்கப்பட்ட நகரம்... சென்னையைவிட அதிகமாக வீட்டு வாடகை வசூலிக்கப்படும் நகரம்.... இப்படி சிலபல பெருமைகளோடு, 'ஜேஜே’ என்று இருக்கும் ராசிபுரத்தைதான் இந்த வாரத்துக்கான தொழில்வலத்துக்கு தேர்ந்தெடுத்தோம்...

கமகம நெய்!

. ராசிபுரம் கொங்கு மண்டலத்தின் ஒரு பகுதி என்பதால் விவசாயிகள் அதிகம். ஒவ்வொரு விவசாயியின் வீட்டிலும் குறைந்தது இரண்டு, மூன்று மாடுகள் கட்டாயம் இருக்கும். எல்லார் வீட்டிலும் தண்ணீர் இருக்கிறதோ இல்லையோ, கட்டாயம் மோர் இருக்கும். வீடு தேடி வரும் உற்றார் உறவினர்களுக்கு காப்பி, டீ கொடுக்காமல் மோர் கொடுப்பது இந்த ஊர் விவசாயப் பெருமக்களின் நல்ல பழக்கம். அப்படிக் கொடுப்பதை குடும்ப கௌரவமாகவும் நினைக் கிறார்கள் இவர்கள். போதாக்குறைக்கு கிடைக்கும் பாலைக் கடைந்து வெண்ணெய் எடுப்பதையும் ஒரு தொழிலாகவே செய்து வருகிறார்கள்..
சேமித்து வைக்கும் வெண்ணெய்யை நெய்யாக ஆக்கி, ராசிபுரத்தில் உள்ள கம்பெனிக்காரர்களிடம் விற்கிறார்கள். நெய் உற்பத்தி செய்யும் சில நிறுவன ஊழியர்கள் ராசிபுரத்தைச் சுற்றியுள்ள கிராமங்களுக்குச் சென்று நேரடியாகவும் வாங்கிக்கொள்கிறார்கள். இந்த நெய் உற்பத்தித் தொழில் பற்றி 'ராசி கோல்டு’ நெய் நிறுவனத்தின் உரிமையாளர் நந்தகுமாரிடம் பேசியபோது,

''இந்த ஊரின் பாரம்பரியத் தொழில் இது. இந்தத் தொழிலால் ராசிபுரத்தின் இருபத்தைந்து சதவிகித மக்கள் நேரடியாகவும் மறைமுகமாகவும் பயனடைந்து வருகிறார்கள். ராசிபுரம் நெய் உலக அளவில் சிறப்பு பெற்றது. காரணம் இவ்வூர் பாலில் கொழுப்புச் சத்து அதிகமாக இருப்பதுதான். இங்கு உற்பத்தியாகும் நெய் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, பூனா, நாக்பூர், மும்பை போன்ற இடங்களுக்கு போவதோடு மட்டுமின்றி, சிங்கப்பூர், மலேசியா, ஜெர்மன் போன்ற நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. தமிழ்நாட்டில் உள்ள பெரும்பாலான பிரபல ஸ்வீட் ஸ்டால்களுக்கும், ஹோட்டல்களுக்கும் இங்கிருந்துதான் நெய் சப்ளை ஆகிறது'' என்றார் பெருமை பொங்க.

கலக்கும் கைத்தறி!

ராசிபுரம் ஜவுளித் தொழிலுக்கும் பெயர் பெற்றது. பருத்தி சாகுபடி, நூல் மில்கள், சாயப்பட்டறை, பாவுப் பட்டறை, கைத்தறி நெசவுகள், பவர்லூம் நெசவுகள் என சகலமும் இருக்கிறது இந்த ஊரில். பஞ்சை பட்டுத்துணி போல சூப்பராக ஆக்கி வெளி மாவட்டங்களுக்கும், வெளிமாநிலங்களுக்கும் அனுப்புகிறார்கள். இங்கு தயாராகும் சேலைகளில் வேலைப்பாடு அதிகம். அதிலும் இங்கு தயாராகும் கோர்வை பட்டுப் புடவை இந்தியா முழுக்க பிரபலம். இது பற்றி ராசி ஹேண்ட்லூம் டெக்ஸ்டைல்ஸ் உரிமையாளர் வனிதா சாமிநாதனிடம் பேசினோம்.

''ராசிபுரம் டவுன், புதுப்பாளையம், கல்லாங்குளம், பட்டணம், கட்நாச்சம் பட்டி போன்ற பகுதிகளில் கைத்தறி நெசவு நடக்கிறது. ஒரு புடவை நெய்ய குறைந்தது இரண்டு மூன்று நாட்கள் ஆகும். தமிழகம் முழுவதும் உள்ள பெரிய ஜவுளிக்கடைகளுக்கு இங்கிருந்துதான் கோர்வைப் பட்டுப்புடவை போகிறது. வெளிமாநிலங்களுக்கும் செல்கிறது. சென்னையில் உள்ள வி.ஐ.பி-கள் பலர் இங்கு வந்து நேரடியாகவே புடவைகளை வாங்கிச் செல்கிறார்கள். இதனால் புடவை உற்பத்தியாளர்களுக்கும், விற்பனையாளர்களுக்கும் நல்ல வருமானம் கிடைக்கிறது'' என்றார் மகிழ்ச்சி பொங்க.

கொழிக்கும் கோழிப்பண்ணை

முட்டை மாவட்டமான நாமக்கல்லுக்குப் பக்கத்தில் ராசிபுரம் இருப்பதால் இங்கும் கணிசமான மக்கள் கோழி வளர்ப்பில் ஈடுபடுகிறார்கள். இதனால் வருமானம் பெருகுவதோடு, அதைச் சார்ந்த தீவனத் தயாரிப்பு, கோழிப்பண்ணைக்கான கட்டுமானப் பொருட்கள் தயாரிப்பு, என மறைமுகமாகவும் நேரடியாகவும் நிறைய பேருக்கு வேலைவாய்ப்பும் கிடைக்கிறது. இங்கு உற்பத்தி செய்யப்படும் முட்டை இந்தியாவின் பிற மாநிலங்களுக்கும் செல்கிறது.

காசு கொட்டும் கல்வித்துறை

கடந்த சில ஆண்டுகளாக கல்வித் துறையில் யாருமே நினைத்திராத அளவுக்கு அபார வளர்ச்சி அடைந்திருக்கிறது ராசிபுரம். ''ஹாஸ்டலில் படித்தாலும் பரவாயில்லை, என் குழந்தை நன்றாகப் படிக்க வேண்டும்’ என்று நினைக்கிற பலர் ராசிபுரம் பகுதியில் உள்ள பள்ளிகளைத்தான் தேடி ஓடிவருகிறார்கள். அந்த வகையில் உயர்நிலைப்பள்ளிகள் மட்டும் இருபத்தைந்துக்கும் மேல் இருக்கின்றன. கல்லூரிகளுக்கும் பஞ்சமில்லை. பத்துக்கும் மேற்பட்ட கல்லூரிகள் இருக்கின்றன. இதனால் மாணவர்கள் தங்கிப் படிப்பதற்கு அதிகமான வீடுகளும், ரூம்களும் தேவைப்படுவதால், வீட்டு வாடகை சென்னையையும் தாண்டுகிறது. ஒரு சின்ன ரூம் 5,000, 7000 என போகிறது. இதனால் ரியல் எஸ்டேட் பிஸினஸும் ஜரூர்தான்.

மிட்டாயிலும் வருமானம்!

இந்த தொழில்களைத் தவிர ராசிபுரம் டவுன் பகுதியில் மிட்டாய் தயாரிக்கும் நிறுவனங்கள் சிலவும் இருக்கின்றன. இதனால் டவுன் பகுதியில் நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்த குழந்தைகள் பள்ளிக்கூடங்களுக்குச் சென்று வந்தபிறகு மிட்டாய் சுருட்டி வாரத்துக்கு 300, 400 எனச் சம்பாதிக்கிறார்கள். ஜவ்வரிசி உற்பத்தி செய்யும் மில்களும் அதிக அளவில் உள்ளது. இத்தனை தொழில் வளர்ச்சி இருந்தும், இந்தியா முழுவதிலிருந்தும் மாணவர்கள் வந்து தங்கிப் படித்தும் பெரிய ஹோட்டல் எதுவும் இல்லை. பொழுதுபோக்கு நிகழ்ச்சி நடத்தத் தேவையான இடங்களோ, பெரிய தியேட்டர்களோ இல்லை. காரணம் இருக்கிற எல்லா இடத்திலும் அப்பார்ட்மென்ட்டைக் கட்டிவிட்டு காசு பார்த்துவிடுகிறாங்க ராசிபுரத்து விவரமான ஆளுங்க!

-வீ.கே.ரமேஷ்
படங்கள்: க.தனசேகரன்