Published:Updated:

மாத வருமானம் தரும் மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்கள் என்னென்ன...?

கேள்வி - பதில்

மாத வருமானம் தரும் மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்கள் என்னென்ன...?

கேள்வி - பதில்

Published:Updated:
மாத வருமானம் தரும் மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்கள் என்னென்ன...?

நியூ பென்ஷன் ஸ்கீமில் சேர விரும்புகிறேன்... என்.ஆர்.ஐ. ஆகிய நான் எப்படி இந்த திட்டத்தில் சேருவது?

- அன்சாரி, கத்தார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

##~##
''தாராளமாக சேரலாம். வயது, முகவரிச் சான்று, புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை, அத்துடன் இரண்டு புகைப்படங்கள் போன்றவை இருந்தால் முதலீட்டை ஆரம்பித்து விடலாம். இதற்கான படிவங்கள் தபால் நிலையங்களிலும் வங்கிகளிலும் கிடைக்கும். விண்ணப்பத்தை வாங்கி மீண்டும் அங்கேயே சமர்ப்பிக்க வேண்டும் என்பதால் இந்தியாவிற்கு வரும் நேரத்தில் இந்த திட்டத்தில் நீங்கள் சேர முயற்சிப்பது நல்லது. என்.ஆர்.ஐ.கள் ஆன்லைன் மூலம் நியூ பென்ஷன் ஸ்கீமில் சேருவதாக இருந் தாலும் நேரில் வரும்போது மட்டுமே சேரமுடியும். நிறைய ஆவணங்கள் தேவைப்படுவதே இதற்கு காரணம்.''  

மாத வருமானம் தரக்கூடிய மியூச்சுவல் ஃபண்ட் ஏதும் இருக்கிறதா? இதில் குறைந்தபட்சம் எவ்வளவு முதலீடு செய்ய வேண்டும்?

- கே.மகாதேவன், கே.கே.நகர், திருச்சி.

ராமலிங்கம், இயக்குநர், ஹோலிஸ்டிக் இன்வெஸ்ட்மென்ட் பிளானர்.

''மியூச்சுவல் ஃபண்டில் மாத வருமானம் தரக்கூடிய திட்டம் எனில் மன்த்லி இன்கம் பிளான் திட்டத்தில் முதலீடு செய்யலாம். இதில் நீங்கள் முதலீடு செய்யும் தொகைக்கு மாத டிவிடெண்ட் கொடுப்பார்கள். இதில் திரட்டப்படும் நிதியை 80% கடன் சார்ந்த ஆவணங்களிலும், 20% பங்குகளிலும் முதலீடு செய்வார்கள். நீங்கள் ஒரு லட்சம் ரூபாய் முதலீடு செய்கிறீர்கள் எனில், 8% வருமானம் கொடுக்கும்பட்சத்தில் மாதம் 666 ரூபாய் கிடைக்க வாய்ப்பு இருக்கிறது.

 இந்த டிவிடெண்ட் மாதாமாதம் கிடைக்கும் என்பதற்கு எந்த உத்தர வாதமும் கிடையாது. சந்தை வெகுவாக இறங்கி இருக்கும் மாதங்களில் டிவிடெண்ட் கொடுக்காமல் போகவும் வாய்ப்பு உண்டு. 'ஹெச்.டி.எஃப்.சி. மன்த்லி இன்கம் லாங்க் டேர்ம் பிளான்’, 'ரிலையன்ஸ் மன்த்லி இன்கம் பிளான்’ போன்ற திட்டங்களில் குறைந்தபட்சம் 5000 ரூபாய் முதலீடு செய்யலாம்.'  

மாத வருமானம் தரும் மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்கள் என்னென்ன...?

கிராம நத்தம் மனை என்றால் என்ன? அதில் வீடு கட்ட முடியுமா?

- ஏ.எஸ். ராஜேஷ்குமார், தாம்பரம்.

பி.மணிசங்கர், தலைவர், ஃபெடரேஷன் ஆஃப் தமிழ்நாடு ஃபிளாட் அண்ட் ஹவுஸிங் புரமோட்டர்ஸ் அசோசியேஷன்.

''நத்தம் என்றால் மக்கள் வசிக்கக் கூடிய பகுதி என்று அர்த்தம். கிராம நத்தம் என்று சொல்லப்படுகிற மனைகளுக்கு பட்டா கிடையாது. ஆனால், அதற்கென சில சலுகைகள் உண்டு. இந்த மனைகள் 800-1,050 சதுரடிக்கு குறையாமல் இருக்க வேண்டும். பொதுவாக, வீடு கட்டும் போது வீட்டின் நான்கு பக்கங்களிலும்  இடம்விட்டு கட்ட வேண்டும். ஆனால், கிராம நத்தம் மனைகளில் மூன்று பக்கங்களில் இடம் விட்டுக் கட்டினால் போதும். பட்டா இல்லாத கிராம நத்தம் மனைகளுக்கு அரசு இன்னும் ஆறுமாத காலத்திற்குள் பட்டா வழங்குவதாக அறிவித்துள்ளது. மேலும் இந்த மனைகளை விற்பதிலும், வாங்குவதிலும் எந்தவித பிரச்னையும் வராது.''

மாத வருமானம் தரும் மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்கள் என்னென்ன...?

சொந்தமாக பிஸினஸ் செய்ய லாம் என நினைக்கிறேன். அதற்கு டின் நம்பர் வேண்டும் என்று கேட்கிறார்கள். டின் நம்பர் (Tin number) என்றால் என்ன? அதைப் பற்றிய முழு விவரம் கூறவும்...

- ராஜேந்திரன், நாமக்கல்.

கே.கோபால கிருஷ்ணன், பொது செயலாளர், டான்ஸ்டியா.

''டின் நம்பர் என்பது Tax Identification Number. ஆகும். தொழில் தொடங்கும் அனைவருமே டின் நம்பர் வாங்க வேண்டும் என்பது கிடையாது. தொழில் தொடங்கி அதன் விற்பனை ஒரு லட்சம் ரூபாய்க்குமேல் போகும்போது டின் நம்பர் வாங்க வேண்டும். தனிநபர்களுக்கு பான் கார்டு தேவைப்படுவதுபோல் இந்த டின் நம்பர் மூலம் உங்கள் தொழிலுக்கான வரியைக் கட்டி கொள்ளலாம். இதற்கு தொழில் நடக்கும் அலுவலக முகவரி, விற்பனைக்கான ரசீதுகள் போன்றவைகள் தேவைப்படும். இதற்கான படிவத்தை விற்பனை வரித்துறையிடம் பெற்று விண்ணப் பிக்கலாம்.''  

மாத வருமானம் தரும் மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்கள் என்னென்ன...?

என் வயது 45. இதுவரை எந்தவித ஆயுள் காப்பீடு பாலிசியும் எடுத்துக் கொள்ளவில்லை. என் ஆண்டு வருமானம் 1,80,000 ரூபாய். நான் எவ்வளவு தொகைக்கு பாலிசி எடுத்துக் கொள்ள வேண்டும். அதற்கு பிரீமியம் தொகை எவ்வளவு வரும்? அதன் பலன்கள் மற்றும் பாலிசி முடியும்போது எவ்வளவு தொகை கிடைக்கும் என்பதை விவரமாக கூறவும்?

- சாதிக், புதுச்சேரி.

ஹரிஹரன், நிதி ஆலோசகர்.

''சாதாரணமாக ஒருவர் தன் ஆண்டு வருமானத்தைப் போல பத்து முதல் பதினைந்து மடங்கு இன்ஷூரன்ஸ் எடுக்க வேண்டும். உங்கள் வயது மற்றும் வருமானத்தை கணக்கில் கொண்டு பார்க்கும்போது நீங்கள் 20 லட்ச ரூபாய் வரைக்கான பாலிசி தொகை கொண்ட டேர்ம் இன்ஷூரன்ஸ் எடுத்துக் கொள்வது நல்லது. இதற்கு பிரீமியமாக வருடத்திற்கு 12,000 ரூபாய் முதல் 15,000 ரூபாய் வரை வரும். நீங்கள் ஓய்வுபெறும் வயது வரை எடுத்துக் கொள்ளுங்கள். இந்த பாலிசியில் முதிர்வுத் தொகை வழங்கப்பட மாட்டாது. ஏதாவது ஒரு அசம்பாவிதம் நிகழ்ந்து அதனால் உங்கள் குடும்பத்திற்கு வருமானம் கிடைக்காமல் போனால் மட்டுமே இழப்பீடு கிடைக்கும்.' 

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism