Published:Updated:

கமாடிட்டியிலும் கலக்கலாம்!

கமாடிட்டியிலும் கலக்கலாம்!

கமாடிட்டியிலும் கலக்கலாம்!

கமாடிட்டியிலும் கலக்கலாம்!

Published:Updated:
கமாடிட்டியிலும் கலக்கலாம்!


ஃபியூச்சர்ஸ் வர்த்தகம் கணினி மூலமாக நடப்பதில் ஒரு சௌகரியம்; ஆங்காங்கே சிறுசிறு சந்தைகளாகச் சிதறிக் கிடக்காமல், நாடு முழுவதும், அனைவருக்கும் பொதுவான ஒரே சந்தையாக பரிணமிக்க வழி ஏற்படுத்திக் கொடுக்கிறது. இதைத்தான் 'சென்ட்ரலைஸ்டு ஆர்டர் புக்’ என்பார்கள். எல்லோரும் ஒரே இடத்தில் வர்த்தகம் செய்யும்போது, அதிக எண்ணிக்கையில் வாங்குவோரும் விற்போரும் கூடுமிடமாகிறது அச்சந்தை.

கமாடிட்டியிலும் கலக்கலாம்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

திக டிமாண்டும் அதிக சப்ளையும் இருக்குமிடத்தில்தான் ஓரளவுக்கு நியாயமான விலையில் வர்த்தகம் நடக்கும். உதாரணமாக 24 காரட் தங்கத்தின் விலையையே எடுத்துக் கொள்ளுங்கள்; மும்பையில் ஒரு விலை, சென்னையில் ஒரு விலை. அவ்வளவு ஏன், தமிழ்நாட்டுக்குள் ளேயே மதுரையில் ஒரு விலை, திருச்சியில் ஒரு விலை என ஊருக்கு ஊர், கடைக்குக் கடை ஒரு விலை என மாறுபடுகிறது. ஆனால், கணினி மூலம் வர்த்தகம் நடக்கும் இச்சந்தைகளிலோ, நாடெங்கிலும் ஒரே விலைதான். டெல்லியில் இருப்பவருக்கு என்ன விலையோ அதேதான் கன்னியாகுமரியில் இருப்பவருக்கும்.  

தவிர, வாங்கும் விலைக்கும் விற்கும் விலைக்கும் இடையேயான வித்தியாசமும் குறைவு. உள்ளூரில் தங்கம் வாங்கி விற்றவர்களுக்கு  இந்த விஷயம் சட்டென புரியும். கடையில் நீங்கள் வாங்கும் தங்கம் ஒரு கிராம் 2,100 ரூபாய். வாங்கிய தங்கத்தை நீங்கள் விற்க வேண்டுமென்றால் ஒரு கிராம் தங்கம் 2,000 ரூபாய். இப்படி இருந்தால் நம்மால் எப்படி லாபம் பார்க்க முடியும்?    

ஆக பல வகையிலும் நமக்கு நன்மை செய்யக்கூடிய கமாடிட்டி மார்க்கெட்டில் இறங்கி கலக்க என்ன செய்ய வேண்டும் என்றுதானே கேட்கிறீர்கள்? அதுபற்றிதான் சொல்லப் போகிறேன், கேள்வி-பதில் பாணியில். இனி உங்கள் மனதில் உள்ள கேள்விகளுக்கு என் பதில்!

கமாடிட்டி டிரேடிங் எங்கு நடக்கிறது?

எம்.சி.எக்ஸ்., என்.சி.டி.இ.எக்ஸ்., என்.எம்.சி.இ., ஐ.சி.இ.எக்ஸ்., ஏ.சி.இ. உள்ளிட்ட பல சந்தைகளில் கமாடிட்டி டிரேடிங் செய்யலாம்.

கமாடிட்டி மார்க்கெட்டில் என்னென்ன பொருட்களை வாங்கி, விற்க முடியும்?

சாமானிய மக்கள்கூட வாங்கக்கூடிய விவசாய விளைபொருட்களில் தொடங்கி பருப்பு, தானிய வகைகள், ரப்பர், மிளகு, சர்க்கரை, உலோகங்கள், எண்ணெய் வகைகள், பருத்தி..... தவிர, இன்று உச்சாணிக் கொம்பில் இருக்கும் தங்கம், வெள்ளி, காப்பர், கச்சா எண்ணெய் வரை, ஐம்பதுக்கும் மேற்பட்ட பொருட்களை கமாடிட்டி மார்க்கெட்டில் வாங்கி, விற்க முடியும்.

கமாடிட்டி டிரேடிங் செய்ய என்ன தேவை?

கொஞ்சம் பணம், அதோடு ஒரு டிரேடிங் அக்கவுன்ட்...

கமாடிட்டியிலும் கலக்கலாம்!

யாரிடம் இந்த டிரேடிங் அக்கவுன்ட் தொடங்கலாம்?

பார்வர்டு மார்க்கெட்டிங் கமிஷனிடம் பதிவு பெற்ற, தேசிய அளவிலான சந்தைகளில் உறுப்பினராக உள்ள கமாடிட்டி நிறுவனங்களின் தரகர்களிடம் இந்த டிரேடிங் கணக்கைத் தொடங்கலாம்.  

டிரேடிங் கணக்கு தொடங்க என்ன தேவை?

ஒரு புகைப்படம், பான் அட்டை, முகவரிக்கான சான்று, வங்கிக் கணக்கு என சில எளிய   விஷயங்கள் போதும்.  

இதற்கு என்ன செலவாகும்?

புரோக்கிங் நிறுவனங்கள் இந்தக் கணக்கை இலவசமாகவே தொடங்கித் தருகின்றன.

##~##
டீமேட் கணக்கு தேவையா?

கமாடிட்டி மார்க்கெட்டில் நீங்கள் வாங்கும் பொருளை டெலிவரி எடுப்பதாக இருந்தால் மட்டுமே டீமேட் தேவை. மற்றபடி, பொருட்களை வாங்கி விற்று அல்லது விற்று வாங்க நினைப்பவர்களுக்கு டீமேட் கணக்கு தேவையில்லை. இந்த டீமேட் கணக்கைத் தொடங்க கட்டணம் உண்டு.

டிரேடிங் செய்யும்போது சேவைக் கட்டணம் உண்டா?

நிச்சயமாக உண்டு. பங்குச் சந்தையைப் போலவே இங்கும் தரகர் கமிஷன் கொடுக்க வேண்டும். இந்த கமிஷன் தரகருக்குத் தரகர் மாறும்; நாம் வர்த்தகம் செய்யும் பொருளைப் பொறுத்தும் மாறும். சிலர் லாட் ஒன்றுக்கு இவ்வளவு கமிஷன் என வசூலிக்கிறார்கள். புரோக்கிங் நிறுவனத்தில் நீங்கள் கணக்கு தொடங்கும் முன் கமிஷன் எவ்வளவு என்பதைக் கேட்டு தெரிந்து கொள்வது அவசியம். குறைவான கமிஷன் இருக்கும் புரோக்கிங் நிறுவனத்தில்  (சேவையும் நன்றாக இருக்கிறதா என்று பார்ப்பதும் அவசியம்!) கமாடிட்டி கணக்கைத் தொடங்கலாம்.

முன்பணம் எவ்வளவு கொடுக்க வேண்டும் ?

சுமார் 5 சதவிகிதத்திலிருந்து 10 சதவிகிதம் வரை. இது நீங்கள் வாங்கும் பொருளுக்கேற்ப மாறும்.

குறைந்தபட்சம் எவ்வளவு பணம் தேவை?

அதிகமில்லை ஜென்டில்மேன் (மகளிர்கள் மன்னிக்க!), முன்பணமாக கட்ட 10,000 ரூபாய் இருந்தாலே போதும், டிரேடிங் செய்யத் தொடங்கி விடலாம். ஆனால், விலை மாற்றத்திற்கு ஏற்ப, பின்னர் மார்ஜின் கட்ட வேண்டி வரலாம். அது என்ன மார்ஜின் என்று கேட்கிறீர்களா? ஒரு கிலோ வெள்ளியை 75 ஆயிரம் ரூபாய்க்கு நீங்கள் வாங்குகிறீர்கள். இதில் 20 சதவிகிதத்தை முன்பணமாக, அதாவது, 15,000 ரூபாயை கொடுக்கிறீர்கள். நீங்கள் வெள்ளி வாங்கிய பிறகு கிலோ ஒன்றுக்கு 5,000 ரூபாய் குறைகிறது. (பதறாதீங்க! ஒரு பேச்சுக்குத்தானே!) ஏற்கெனவே நீங்கள் கொடுத்த பணம் 15 ஆயிரம் ரூபாய் தவிர இன்னொரு 5,000 ரூபாயை நீங்கள் கொடுக்க வேண்டியிருக்கும். இதுதான் மார்ஜின்.

சர்க்யூட் பிரேக்கர் உண்டா?

பங்குச் சந்தையைப் போலவே, இங்கும் பொருட்களின் விலை சிலசமயங்களில் கட்டுக்கடங்காமல் விலை ஏறும்போதும், இறங்கும் போதும் அதனைக் கட்டுப்படுத்த சர்க்யூட் பிரேக்கர் உண்டு. பொருட்களுக்குத் தக்க இதன் அளவு மாறுபடலாம்.

விற்பனை வரி உண்டா?  

வாங்கி விற்றோ அல்லது விற்று வாங்கியோ 'ஸ்கொயர் ஆஃப்’ செய்பவர்களுக்கு விற்பனை வரி கிடையாது. டெலிவரி எடுப்பவர்களுக்கு உண்டு.

புரோக்கிங் நிறுவனத்தோடு தகராறு வந்தால் யாரிடம் முறையிடுவது?

டிரேடிங் செய்வதிலோ அல்லது டெலிவரி எடுப்பதிலோ புரோக்கிங் நிறுவனத்துடன் தகராறு வந்தால், எக்ஸ்சேஞ்சிடம் முறையிடலாம். புரோக்கிங் நிறுவனம் தப்பு செய்திருந்தால் அபராதம் விதித்து தண்டனை கொடுக்கும். இல்லை, வேறு மாதிரியான தாவா என்றால் அதனைத் தீர்க்க ஆர்ப்பிட்ரேஷன் மற்றும் செட்டில்மென்ட் கியாரண்டி ஃபண்ட் இருக்கிறது. இதெல்லாம் கமாடிட்டி மார்க்கெட் முதலீட்டாளர்களின் பாதுகாப்புக்கான ஆயுதங்கள், கவசங்கள்.

கமாடிட்டியிலும் கலக்கலாம்!

கமாடிட்டி டிரேடிங்கில் கிளியரிங், செட்டில்மென்ட் என்றெல்லாம் சொல்கிறார்களே, இதற்கு என்ன அர்த்தம்?

பொருட்களை விற்றவர் அதை சந்தையில் டெலிவரி கொடுக்கும் உத்தேசத்தில் இருந்தால், அதை முன்கூட்டியே தன் தரகர் மூலம் எக்ஸ்சேஞ்சுக்குத் தெரிவிக்க வேண்டும். தன் கைவசம் அப்பொருள் இருக்கிறது என்பதற்கான அத்தாட்சியாக, இதற்கென அனுமதிக்கப்பட்ட வேர்ஹவுஸிலோ பாதுகாப்புப் பெட்டகத்திலோ வைத்திருப் பதற்கான ரசீதை (வேர்ஹவுஸ் ரெசிப்ட்) காட்ட வேண்டும். பொருளை வாங்கியவர் டெலிவரி எடுக்க நினைத்தாலும், தரகரிடம் முன்கூட்டியே தெரிவிக்க வேண்டும். அப்போதுதான் தரகரும் எக்ஸ்சேஞ்சிடம் முன்னரே தெரிவிக்க வசதியாக இருக்கும். இந்த வேலையை நாமே செய்யலாம்; வேறொருவரை நம் சார்பாக நியமனமும் செய்யலாம்.

வேர்ஹவுஸ்கள் என்றால் என்ன? இவை எங்கிருக்கின்றன?

கமாடிட்டி மார்க்கெட்டில் நாம் வாங்க நினைக்கும் பொருள் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருக்கும் கிடங்குதான் வேர்ஹவுஸ். டெலிவரி எடுக்க நினைப்பவர்கள் முக்கியமாகக் கவனிக்க வேண்டியது, டெலிவரி எடுக்க நினைக்கும் பொருளுக்கான வேர்ஹவுஸ் எங்கிருக்கிறது என்பதைத்தான். ஒவ்வொரு  எக்ஸ்சேஞ்சும் ஒவ்வொரு இடத்தில் வேர்ஹவுஸை வைத்திருக்கும்.  உதாரணமாக, எம்.சி.எக்ஸ். எக்ஸ்சேஞ்ச் ஏலக்காய் கிடங்கை தமிழகத்தில் தேனிக்குப் பக்கத்தில் உள்ள போடிநாயக்கனூரிலும், தங்கத்திற்கு சென்னை உள்ளிட்ட சில நகரங்களிலும், வெள்ளிக்கு குஜராத் தலைநகர் அகமதாபாத்திலும் வேர்ஹவுஸ் வைத்திருக்கிறது.

எனவே, பொருட்களை டெலிவரி எடுக்கும் முன்பு, அதற்கான கிடங்கு எங்கே இருக்கிறது. அங்கிருந்து நீங்கள் இருக்கும் இடத்துக்கு பொருளை கொண்டுவர எவ்வளவு செலவாகும், மாநிலம் விட்டு மாநிலம் வரும்போது என்னென்ன வரி கட்ட வேண்டும் என்பதை எல்லாம் பார்த்துவிட்டுத்தான் முடிவு செய்ய வேண்டும்.

சரி, சந்தேகம் தீர்ந்தது. இனி கமாடிட்டி மார்க்கெட்டில் இறங்கி கலக்கலாமா?

(தொடர்ந்து கலக்குவோம்)

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism