Published:Updated:

நேற்று... இன்று... நாளை!

குடும்ப நிதி ஆலோசனை

நேற்று... இன்று... நாளை!

குடும்ப நிதி ஆலோசனை

Published:Updated:
நேற்று... இன்று... நாளை!


அப்பா சொத்து சேர்த்து வைப்பாரு, பையன் அனுபவிப்பான் அப்படீன்னு கேள்விப்பட்டிருப்போம். ''அப்பா, எனக்கு சொத்து சேர்த்து வைச்சிருக்காரு, நான் எனக்கப்புறம் வரப்போற பத்து தலைமுறைக்குச் சேர்த்து வைக்கணும்'' அப்படீன்னு ஒரு முடிவோடு இருக்காரு பெரம்பலூர் மாவட்டம் பூலம்பாடியைச் சேர்ந்த சபரிகிரிவாசன். அப்படி என்ன சொத்து சேர்த்து வைச்சிட்டாரு அப்பா அப்படீன்னு கேட்டா - நிலபுலன்கள் தவிர ஒரு பிஸினஸும் கொடுத்துருக்குறதா சொன்னாரு.

நேற்று... இன்று... நாளை!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

சாதாரணமா எல்லோரும் நினைக்கிற மாதிரி விவசாயமோ கடை கண்ணியோ இல்லங்க அது. - அவங்க தாத்தா, அப்பா, அப்பறம் இவரு என மூணு தலைமுறையா செய்திட்டு வர்ற எல்.ஐ.சி. ஏஜென்சிதான் அந்த பரம்பரை சொத்து, பிஸினஸ் எல்லாமே..

இவருக்கு 30 வயசு, மனைவி, ஒரு வயசுல குட்டிப் பொண்ணு. அப்பறம் இவரோட அப்பா என சின்ன குடும்பந்தான். சொந்த வீட்டுலதான் குடி இருக்காரு!

வருஷத்துக்கு குறைந்தது 6 லட்ச ரூபாய் வருமானம் வரும். வீட்டுச் செலவுகளுக்கு. 2,16,000 ரூபாய், எல்லா கடனுக்கான இ.எம்.ஐ. 1,31,000 ரூபாய், இன்ஷூரன்ஸ் பிரீமியம், முதலீடு கள் 2,72,000 ரூபாய் என்கிற மாதிரி வருமானத்துல செலவு காத்திருக்கு.

##~##
இப்போதைக்கு குழந்தை யின் படிப்பு, வருஷம் ஒரு முறைக்கான சுற்றுலா மற்றும் விடுமுறைச் செலவுகள் இல்லாத துனால வீட்டுச் செலவுகள் குறைவாதான் இருக்கு. இருந்தாலும், இன்னும் ரெண்டு மூணு வருஷத்தில செலவு கணிசமாக அதிகரிக்கும்னு எதிர்பார்க்கலாம். ஆனா அன்றைய நிலமையில கடன் குறைந்திருக்கும் என்பதால் சுலபமா சமாளித்து விடலாம்..

முதலீட்டைப் பொறுத்த வரை எல்லாத்தையும் ஒரே எடத்துல மொத்தமா போடாம ஆர்.டி., மியூச்சுவல் ஃபண்ட், சீட்டு அப்படீன்னு ரொம்பவே அழகாதான் பிரிச்சு செய்யிறாரு சபரி.

சொத்துன்னு பார்த்தா தங்கியிருக்கும் சொந்த வீடு, பெரம்பலூர்ல ஒரு வீட்டு மனை, ரெண்டும் சேர்த்து 20 லட்ச ரூபா இருக்கும். அது தவிர யூலிப் பாலிசி, எஸ்.பி.ஐ. மியூச்சுவல் ஃபண்ட், பி.பி.எஃப். எல்லாம் சேர்ந்து இன்றைய மதிப்பு  ஏழு லட்சம் ரூபாய்வரை இருக்கும்.

நேற்று... இன்று... நாளை!
நேற்று... இன்று... நாளை!

வீட்டுக்காக எல்.ஐ.சி. யில் குறைந்த வட்டிக்கு ஐந்து லட்சம் ரூபாய் கடன் வாங்கியிருக்காரு. 25 வருஷ கடனான இது இன்னும் பத்து வருஷத்தில முடியும். கல்யாணத்துக்கு வாங்குன ரெண்டு லட்ச ரூபாய் இன்னும் மூணு வருஷத்தில முடியும். நகைக் கடன் மட்டும் இன்னும் இருக்கு. அதுக்கு வட்டி மட்டும் கட்டிட்டு வராரு. சீட்டு முடியும்போது இதைக் கட்டி முடிச்சிடலாம்.

ஆக, சொத்து மதிப்பு  27 லட்சம். கடன் 9 லட்சம்.

இதுல சந்தோஷமான விஷயம் என்னன்னா - தேவையான அளவு மருத்துவ காப்பீடு வெச்சிருக்காரு, ஆயுள் காப்பீடும் 28 லட்ச ரூபாய்க்கு இருக்கு. ஆனா பத்து வருட வருமானம் அளவுக்கு ஆயுள் காப்பீடு எடுத்துகிடலாம்.  அப்படீன்னாகூட இன்னும் 25 லட்சத்துக்கு டேர்ம் பிளான் எடுக்கறது நல்லது. மொத்தத்துல சபரி சூப்பரா பிளான் பண்ணிருக்காரு, இப்படி பிளான் பண்றதாலதான் தொழில்ல கொடி கட்டி பறக்குறாரு.!

நேற்று... இன்று... நாளை!

சரி, ஆசைகள், கடமைகள் என்னென்ன? கேட்டோம்....

இன்னும் பத்து வருஷத்தில அந்த ஊர்லயே எல்லாரும் மூக்கில கைய வைக்கற மாதிரி ஒரு வீடு கட்டணும். இதுக்கு ஒரு கோடி ரூபா செலவாகும். 10 லட்சம் எல்.ஐ.சி லோன் கிடைக்கும்.

இப்போ பெண் குழந்தைக்கு ஒரு வயசு ஆகுது. இன்னொரு குழந்தை பிறப்பதா வைத்துக் கொள்வோம். ரெண்டு பேரையும் நல்லா (முடிஞ்சா டாக்டருக்கு) படிக்க வைக்கணும். 2028-ல பெரிய பெண் படிக்க 55 லட்சம், 2033-ல சின்ன குழந்தை படிக்க  81 லட்சம் தேவைப்படும்.

பிள்ளைகளுக்கு மருத்துவ மனை கட்டிக் குடுக்கணும். நிலம் அப்பா குடுத்திடுவாரு, கட்டடம், தேவையான சாமான்கள் எல்லாத்துக்கும் 2035-ல மூணு கோடி ரூபாய் வேணும்.

குழந்தைகளுக்கு நல்லபடியா கல்யாணம் பண்ணி வைக்கணும் . 24 வயசுல செய்யலாம். இன்னிய தேதிக்கு அவங்க தகுதிக்கு கல்யாணம் செய்து குடுக்கணும்னா 40 லட்ச ரூபாயாவது வேணும். 2034-ல செய்யணும்னா ரூ.2.5 கோடி, 2039-ல செய்யணும்னா ரூ.3.5 கோடியாவது தேவைப்படும்.

நேற்று... இன்று... நாளை!

இதுக்கு நடுவில குடும்பத்தோட வருஷா வருஷம் வெளிநாடு களுக்கு சுற்றுலா போகணும். குழந்தைங்க சின்னதா இருக்கும் போது போனாதான் உண்டு. 10-வது வகுப்பு வந்துட்டா அப்புறம் சிரமம்தான். அதனால 2015 முதல் 2025 வரை வருடம் ஒருமுறை சுற்றுலாவுக்கு

2 லட்சம் ரூபாய் செலவாகும். இந்த தொகை ஒவ்வொரு வருஷமும் 10% அதிகரிக்கும்.

சரி.., அவருக்கு எந்தெந்த வருஷம் எவ்வளவு பணம் தேவைப்படும்?

நேற்று... இன்று... நாளை!

அவரு இப்போ செய்திட்டு வர முதலீடுகளை மட்டுமே வெச்சு அவரோட ஆசைகள நிறைவேத்த முடியுமானு பார்ப்போம். எதிர்காலத்துல முடியப் போற ஒவ்வொரு முதலீட்டின் முதிர்வு தொகையையும் 8% ஈட்டும் (பேங்க் டெபாசிட் மாதிரி) முதலீடுகள்ல போட்டு வருவாருன்னு உத்தேசத்த வெச்சு கணக்கு போட்டு பார்த்தால்...

வருஷா வருஷம் சுற்றுலா போய்ட்டு வரலாம். அதுக்கு தேவையான பணத்தை முதலீடு களிலிருந்து எடுத்துக்கணும்.

வீடு கட்ட தேவை ஒரு கோடி. 2020வரை அவரோட முதலீடுகளில்  சுற்றுலா செல்ல எடுத்தது போக 25 லட்ச ரூபாய் இருக்கும். 10 லட்சம் கடன் எல்.ஐ.சி.யில வாங்கலாம். இப்போ இருக்கற வீட்டோட மதிப்பு அப்போ 30 லட்சம் ஆகலாம். அத வித்தா கூட பத்தாதே!

இந்த கனவு நினைவாகணும்னா மாதம் இன்னும் ஒரு 20,000 ரூபாய் 12% ஈட்ட கூடிய (மியூச்சுவல் ஃபண்டு போன்ற) முதலீடுகள்ல போட்டுட்டு வரணும். இல்லன்னா ஒரு கோடின்னு நினைச்சிட்டிருக்கறத 60 லட்ச ரூபாய் அப்படீன்னு குறைச்சிட்டா பிரச்சனை இல்லாம சமாளிக்கலாம்.

நிதர்சனமான உண்மை என்னன்னா புது வீடு கொஞ்ச நாள்தான் ஒரு மலர்ச்சியையும், குதூகலத்தையும் குடுக்கும். அதுக்கப்புறம் பெரிய வீடு எல்லாம் சுத்தமா வெச்சி பராமரிக் கணும்னா செலவும், சிரமமும் ரொம்ப அதிகமாயிடும்.

நேற்று... இன்று... நாளை!

ஆக இருக்கற முதலீடுகள் எல்லாத்தையும் எடுத்து வீடு கட்டியாச்சுன்னா அடுத்து ஜீரோவிலிருந்து ஆரம்பிக்க வேண்டியதுதான். அடுத்து வருகிற 4-5 வருஷத்துல ஃபாரின் டூர் எதும் போறதுக்காக முதலீடுகள் எதிலயும் கை வைக்காம இருக்கணும், செஞ்சிட்டு வர்ற முதலீடுகளையும் குறைக்காம இருக்கணும். அப்பதான் குழந்தைகள் மெடிக்கல் படிப்பில் சேர முடியும். அந்த வருஷத்துல அதிக வருமானம் இருந்தா ஃபாரின், இல்லாட்டி உள்நாட்டு டூர் போய்க்கணும்.

2028-ல முதலீடுகளோட மதிப்பு 33 லட்சமாதான் இருக்கும் ஆனா மூத்த பொண்ணோட டாக்டர் படிப்புக்கு 55 லட்சம் வேணும். இதை சமாளிக்க இப்போ செஞ்சிட்டு வர்ற முதலீடுகளோட சேர்த்து மாதம் இன்னும் 4,000 ரூபாய் மியூச்சுவல் ஃபண்டுல போட்டா போதும். இதை எக்காரணம் கொண்டும் வீடு கட்டும்போது எடுக்கக் கூடாது. இல்ல, நல்லா படிச்சு நல்ல மதிப்பெண் வாங்கினா ஸ்காலர்ஷிப், இல்லன்னா கல்விக் கடன் வாங்கிக்கலாம் என்றால் முதலீடுகளை அதிகரிக்காம இந்த செலவை மேனேஜ் பண்ணலாம்.

நேற்று... இன்று... நாளை!

சின்னக் குழந்தையின் படிப்புக்கு 80 லட்சம் தேவைப் படும். குழந்தை பிறந்ததிலேர்ந்து மாசம் 10,000 சேர்த்துகிட்டே வந்தா இதைச் சமாளிக்கலாம். கல்யாணச் செலவுகளுக்கு தனித்தனியே பெரிய குழந்தைக்கு மாதம் 20,000, சின்ன குழந்தைக்கு மாதம் 25,000 சேர்த்துகிட்டே வரணும்.

மருத்துவமனை கட்ட தாத்தா ஆசீர்வாதமா வர்ற பூர்வீக சொத்த உபயோகிச்சுக்கலாம். இவர பொறுத்தவரைக்கும் விரலுக்கேத்த மாதிரிதான் வீங்கணும்னு கிடையாது. ''இதெல்லாம் செய்யணும்னா நான் என்ன சம்பாதிக்கணும்னு சொல்லுங்க'' அப்படீன்னாரு. ''தைரியமா ஆசைப்படுங்க, நீங்க சம்பாதிக்கறதுக்கு வானம்தான் எல்லை சபரி.

படங்கள்: எம். இராமசாமி

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism