
கடந்த மூன்று ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கமாடிட்டி சந்தை கடந்த இரண்டு வாரத்தில் மட்டும் இறங்கியது. தங்கம், வெள்ளி தவிர, காப்பர், கச்சா எண்ணெய் என அனைத்து வகையான பொருட்களின் மதிப்பும் ஃபியூச்சர் எக்ஸ்சேஞ்சுகளில் கடுமையாக இறங்கி இருக்கிறது. இந்த இறக்கம் அடுத்துவரும் மாதங்களில் இன்னும் அதிகரிக்கும் என்பதே கமாடிட்டி நிபுணர்கள் இப்போதைக்கு விடுக்கும் எச்சரிக்கை!
தளர்ந்த தங்கம்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
##~## |
சீனாவில் தொடர்ந்து உயர்ந்துவரும் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த அந்நாடு வட்டி விகிதத்தை மாற்றி அமைத்ததும் தங்கம் விலை ஏறியிறங்க இன்னொரு காரணம்.
எஸ்.பி.டி.ஆர். கோல்டு இ.டிஎஃப். நிறுவனம் கடந்த ஒருவாரத்தில் மட்டும் 12 டன் அளவுக்கு தங்கத்தை விற்று இப்போது 1193 டன் தங்கத்தை மட்டுமே தனது கையிருப்பில் வைத்திருக்கிறது. கடந்த நான்கு மாதங்களில் இதுவே மிகக் குறைந்த அளவு.
கடந்த வெள்ளிக்கிழமை மதியம் எம்.சி.எக்ஸ். மார்க்கெட்டில் தங்கம் விலை நிலவரம் வருமாறு: ஜூன் 4-ம் தேதி முடியும் ஒரு கிலோ தங்க கான்ட்ராக்ட் - 22,129, ஆகஸ்ட் கான்ட்ராக்ட் - 22,403, அக்டோபர் கான்ட்ராக்ட் - 22,742, டிசம்பர் கான்ட்ராக்ட் - 23,115 ரூபாய்.
அடுத்த வாரம், அமெரிக்க டாலர் இன்டெக்ஸ் 76 புள்ளிகளுக்குமேல் செல்லும் பட்சத்தில் தங்கம் விலை இன்னும் குறையவே வாய்ப்பிருக்கிறது.
வீழ்ந்தது வெள்ளி!
கடந்த வாரத்திலும் வெள்ளி விலை கடுமையாக ஏறியிறங்கியது. கடந்த வாரத்தின் ஆரம்பத்தில் 52,376 ரூபாயாக இருந்த ஒரு கிலோ வெள்ளி, பிற்பாடு மீண்டும் உயர்ந்து 59,790 ரூபாய் வரை சென்றது. இந்த விலையேற்றத்தைக் கண்ட முதலீட்டாளர்கள், வெள்ளி விலை குறைவது நின்றுவிட்டது, இனி மீண்டும் 75 ஆயிரம் ரூபாய் வரை செல்லும் என்று நினைத்து புதிதாக வாங்கினார்கள். ஆனால், வெள்ளி விலையோ மீண்டும் 50,250 ரூபாய் வரை குறைந்து முதலீட்டாளர்களுக்கு பெரும் நஷ்டத்தை ஏற்படுத்தியது. பிற்பாடு மீண்டும் விலை ஏறி வெள்ளிக்கிழமை மாலை 55,020 ரூபாய்க்கு விலைபோனது.
உலக அளவில் மிகப் பெரிய வெள்ளி இ.டி.எஃப்.-ஆன ஐஷேர் நிறுவனம் கடந்த வாரத்தின் கடைசியில் 45 டன்னுக்கு அதிகமான வெள்ளியை விற்றது.
கடந்த வாரம் வெள்ளிக்கிழமை மாலை எம்.சி.எக்ஸ் எக்ஸ்சேஞ்சில் 1 கிலோ வெள்ளி கான்ட்ராக்ட் விலை நிலவரம்: ஜூலை 5-ம் தேதி அன்று முடியும் கான்ட்ராக்ட் - 54,620, செப்டம்பர் கான்ட்ராக்ட் - 55,325, டிசம்பர் கான்ட்ராக்ட் - 56,424 ரூபாய்.
அடுத்த வாரத்தில் டாலரின் மதிப்பு தொடர்ந்து அதிகரித்து, தங்கம் விலை இறங்கும்பட்சத்தில், வெள்ளி விலையும் இறங்கவே வாய்ப்புண்டு என்கிறார்கள்.
ஊஞ்சலாடிய காப்பர்!
வட்டி விகிதத்தை மாற்றி அமைக்க சீனா முடிவு செய்ததைத் தொடர்ந்து கடந்த வாரம் காப்பர் விலை கணிசமாக குறைந்தது. லண்டன் மெட்டல் எக்ஸ்சேஞ்சில் ஒரு டன் காப்பர் 8700 டாலராக இருந்தது. கடந்த ஐந்து மாதங்களில் இது குறைந்த விலை என்பது முக்கியமான விஷயம்.
ஆனால், வெள்ளிக்கிழமை அன்று சீனாவில் மீண்டும் காப்பருக்கான தேவை உருவானதால் அதன் விலை ஒரு டன்னுக்கு 30 டாலர் உயர்ந்து 8730 டாலருக்கு விலை போனது.
எம்.சி.எக்ஸ். எக்ஸ்சேஞ்சில் ஒரு கிலோ காப்பருக்கான விலை நிலவரம் வருமாறு: 30, ஜூனில் முடியும் கான்ட்ராக்ட் - 402.85, ஆகஸ்ட் கான்ட்ராக்ட் - 407.95, செப்டம்பர் கான்ட்ராக்ட் - 414 ரூபாய்.
அடுத்துவரும் நாட்களிலும் காப்பர் விலை இன்னும் குறையும் என்கின்றனர் கமாடிட்டி நிபுணர்கள்.

கரைந்த கச்சா எண்ணெய்!
டாலர் மதிப்பு கடுமையாக ஏறியிறங்கியது, சீனா வட்டி விகிதத்தை மாற்றி அமைத்தது போன்ற காரணங்களால் கச்சா எண்ணெய் விலை ஏறியிறங்கியது. கடந்த வாரத்தில் 98 டாலர் வரை இறங்கிய கச்சா எண்ணெய் பிற்பாடு மீண்டும் உயர்ந்து வெள்ளிக்கிழமை மாலை 100 டாலருக்கு மேல் சென்றது.
எம்.சி.எக்ஸ் சந்தையில் கடந்த வெள்ளிக்கிழமை மாலை நிலவரப்படி, 20, ஜூன் மாதம் முடியும் கான்ட்ராக்ட் 4,533, ஜூலை 4,591, ஆகஸ்ட் 4,644 ரூபாய்க்கும் விலைபோனது.
வாசம் குறைந்த ஏலக்காய்!
ஏலக்காய் விலையும் கடந்த சில நாட்களாக கடுமையாகக் குறைந்தது. கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு ஏலக்காய் உற்பத்தி 5 சதவிகிதம் அதிகரித்ததைத் தொடர்ந்து விலை குறைவதாகச் சொல்லப்படுகிறது. கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் 1,500 ரூபாய்க்கு போன ஒரு கிலோ ஏலக்காய், இப்போது 1000 ரூபாய்க்கும் குறைவாக வந்து விட்டது. 15, ஜூன் மாத கான்ட்ராக்ட் 936, 15,ஜூலை கான்ட்ராக்ட் 957, 13ஆகஸ்ட் கான்ட்ராக்ட் 960 ரூபாய்க்கும் விலை போனது. ஏலக்காய் விலை இன்னும் குறையும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.
- ஏ.ஆர்.குமார்