''தற்போது கமாடிட்டி மார்க்கெட்டில் 25 கிலோ ஏலக்காய் வாங்கி வைக்கலாம் என நினைக்கிறேன். இது லாபமாக இருக்குமா..?''

-சுந்தர், தென்காசி.

செந்தில்வேலன், உதவி துணைத் தலைவர், எம்.சி.எக்ஸ்.

முதலில், ஏலக்காய் வர்த்தகத்தில் கவனிக்க வேண்டிய சில பொதுவான சூட்சுமங்களைப் புரிந்து கொள்வது முக்கியம். இந்தியாவில் ஏலக்காய் கேரளாவில்தான் அதிகம் விளைகிறது. அடுத்து கர்நாடகாவில் சிறிது விளைகிறது. இப்பகுதிகளில் விளைச்சல் குறைந்தால் விலை அதிகரிக்கும். விளைச்சல் உயர்ந்தால் விலை குறையும்.

இரண்டாவதாக கவனிக்க வேண்டியது ஏற்றுமதி. இந்தியாவின் மொத்த ஏலக்காய் உற்பத்தியில் சவூதி அரேபியாவுக்கு மட்டுமே 62% ஏற்றுமதியாகிறது. அடுத்து ஜப்பான், குவைத், மலேசியா போன்ற நாடுகளுக்கும் பெருமளவில் அனுப்பப்படுகிறது. இந்த நாடுகளில் தேவை அதிகரிக்கும் போது விலை அதிகரிக்கும். தேவை குறையும்போது விலை வீழ்ச்சி அடையும்.

மூன்றாவதாக, அமெரிக்காவின் ஏலக்காய் உற்பத்தியைக் கவனிக்க வேண்டும். அமெரிக்காவில் கவுதிமாலா என்ற பகுதியில் விளைச்சல் எப்படி இருக்கிறது என்பதைப் பொறுத்து ஏலக்காய் விலை இருக்கும்.

ஆகஸ்ட் முதல் டிசம்பர் வரை ஏலக்காய் அறுவடை மாதங்கள். நான்கு கட்டங்களாக இம்மாதங்களில் ஏலக்காய் அறுவடை நடக்கும். பொதுவாக, இந்தக் காலத்தில் விலை குறைவாக இருக்கும். ஆனால் இந்த ஆண்டு குறையவில்லை. காரணம் விளைச்சல் குறைவுதான். இதுபோன்ற பல விஷயங்களைக் கவனித்து வர்த்தகம் செய்தால் நிச்சயம் லாபம் பார்க்கலாம்.''

''என் தாத்தா ஃபிக்ஸட் டெபாசிட்டில்

30,000 போட்டிருந்தார். நாமினியாக என் அப்பா பெயரைக் குறிப்பிட்டிருந்தார். இரண்டு வருடத்துக்கு முன்பு என் அப்பா இறந்துவிட்டார். அப்போது என் தாத்தா நாமினியை மாற்றாமல் விட்டுவிட்டார். சமீபத்தில் என் தாத்தாவும் இறந்துவிட்டார். இப்போது அந்தப் பணத்தை எப்படி எடுப்பது?

-குணசேகர், பாண்டிச்சேரி.

சத்திய நாராயணன், ஆடிட்டர்.

''டெபாசிட் செய்தவர் இறந்து விட்டால் முழுத்தொகையும் அவர் நாமினியாகக் குறிப்பிட்டிருக்கும் நபருக்கே போய்ச் சேரும். உங்கள் தாத்தா நாமினியாகக் குறிப்பிட்டிருக்கும் உங்களின் தந்தையார் இரண்டு வருடங்களுக்கு முன் இறந்த போதே நாமினியை மாற்றியிருக்க வேண்டும். தற்போது அந்தத் தொகை நாமினியின் வாரிசுதாரர்களுக்கு கிடைக்கும். அதற்கு டெபாசிட்தாரர் மற்றும் நாமினி இருவரின் இறப்புச் சான்றுகள் மற்றும் நாமினியின் வாரிசுதாரர்களின் வாரிசுச் சான்றுகளைச் சமர்பிக்க வேண்டும். வாரிசுதாரர்கள் அனைவரும் கையெழுத்துப் போட்டுக் கொடுத்தால் பணத்தைத் தந்துவிடுவார்கள்.''

''வீட்டு மனை விற்பதன் மூலம் எனக்கு விரைவில்

4 கோடி கிடைக்க உள்ளது. இத்தொகைக்கு எனக்கு வரிவிலக்கு உண்டா? அத்தொகையை வங்கி ஃபிக்ஸட் டெபாசிட்டில் போட்டுவிட்டு மாதந்தோறும் வட்டி வாங்கிக் கொள்ளலாம் எனத் திட்டமிட்டுள்ளேன். என் பெயரில் மட்டும் முதலீடு செய்யலாமா? என் மனைவி, குழந்தைகள் பெயரில் பிரித்து முதலீடு செய்யலாமா..?''

-ரா.ராஜ்குமார், திருவையாறு.

புவனா, ஃபைனான்ஸியல் பிளானர்.

''வீட்டு மனையை விற்பதன் மூலக்மாக கிடைக்கும் தொகைக்கு நீங்கள் மூலதன ஆதாய வரி கட்ட வேண்டியிருக்கும். எனவே உங்களுக்கு கிடைக்கும் லாபத்தைப் பொறுத்து வரி கட்ட வேண்டியிருக்கும். இந்தத் தொகையைக் கொண்டு இரண்டு வருடத்துக்குள் புதிதாக வீட்டு மனை வாங்கினாலோ, புதிய வீடு கட்டினாலோ மூலதன ஆதாய வரி கட்டத் தேவை இல்லை. அல்லது கேப்பிட்டல் கெய்ன்ஸ் ரீலிஃப் 54 இ.சி. பாண்ட்-ல் முதலீடு செய்தாலும் மூலதன ஆதாய வரி கட்டுவதிலிருந்து விலக்குப் பெறலாம். ஆனால் இதில் 6.5 சதவிகிதம்தான் வட்டி கிடைக்கும். மற்ற படி மூலதன ஆதாய வரி கட்டத் தயாராக இருந்தால், உரிய வரியைக் கட்டிவிட்டு மீதித் தொகைக்கு உங்களது வயது, குடும்ப நிலைக்கு ஏற்ப வெவ்வேறு முதலீட்டு வகைகளை தேர்ந்தெடுக்கலாம். நீங்கள் கேட்டிருப்பது போல வங்கி ஃபிக்ஸட் டெபாசிட்டிலும் முதலீடு செய்யலாம். உங்கள் பெயரிலும், உங்கள் மனைவியின் பெயரிலும் பிரித்து முதலீடு செய்யலாம். உங்கள் குழந்தைகள் மேஜராக இருக்கும்பட்சத்தில் அவர்களின் பெயரிலும் முதலீடு செய்யலாம்.''

''நான் 1985-ம் ஆண்டில் பத்துக்கு மேற்பட்ட கம்பெனி களின் பங்குகளை வாங்கினேன். அவை பத்திர வடிவில் உள்ளது. அதற்கு பின் அந்த பங்கு நிலவரங் களை கவனிக்காமல் விட்டு விட்டேன். தற்போது அந்த கம்பெனிகள் இயங்கி வருகின்றன. அந்த பங்குகளை விற்க என்ன செய்ய வேண்டும்?''

-ராம நாராயணன், திண்டுக்கல்.

ஏ.ஆர்.வாசுதேவன், மேலாளர், சி.டி.எஸ்.எல்.

'பங்குச் சந்தை மூலமாக நேரடியாக வாங்கியிருந்தால் பத்திரங்கள் உங்கள் பெயரில்தான் இருக்கும். மற்றொரு நபரிட மிருந்து இரண்டாவது நபராக நீங்கள் வாங்கியிருந்தால் உங்கள் பத்திரங்களை உங்கள் பெயருக்கு மாற்றிக்கொள்ள வேண்டும். அதன் பிறகு பங்கு வர்த்தக தரகு நிறுவனங்கள் மூலமாக டீமேட் கணக்கினை ஆரம்பிக்க வேண்டும். அடுத்து பங்குகளை எலெக்ட்ரானிக் முறைக்கு மாற்ற வேண்டும். இதனை நீங்கள் டீமேட் கணக்கு தொடங்கிய நிறுவனமே மாற்றிக் கொடுத்துவிடும். அதன் பிறகே நீங்கள் பங்குகளை விற்று பணமாக்க முடியும்.''