ஞாயிற்றுக்கிழமை காலை மணி 10.30. சாமியிடமிருந்து போன். அவர் குறிப்பிட்ட மூன்று நட்சத்திர ஓட்டலுக்கு நானும் செல்லும் அடுத்த அரைமணி நேரத்தில் ஆஜர். நீச்சல் குளத்தின் அழகை ரசித்தபடி, பேங்க் ஸ்டேட்மென்ட் ஒன்றை வைத்துக் கொண்டு 'கணக்கு உதைக்குதே’ என்றபடி பல்லைக் கடித்துக் கொண்டிருந்தார் சாமி...

''என்ன சாமி, குளிக்கிற இடத்தில குழப்பமா இருக்கிற மாதிரி தெரியுதே!'' என்று ஆரம்பித்தான் செல்.

''பேங்க்ல லோன் வாங்கியிருந்தேன். வட்டி கொஞ்சம் ஓவரா போட்ட மாதிரி தெரியுது. அதான் நுணுக்கமா பாத்துக்கிட்டு இருக்கேன்'' என்று ஸ்டேட்மென்டை மடித்து வைத்தார்.

. ''உங்களுக்கு எதுக்கு சாமி லோன்?'' என்று இழுத்தான்..
''தேவை இருக்கே. நீ கடன் வாங்கினா, ஏசி, ப்ரிட்ஜுன்னு வாங்கி, பேங்குக்கு வட்டி சம்பாதிச்சு குடுப்பே. நான் அப்படியில்ல. இன்ஃப்ளேஷன் எகிறுமுன்னு தெரிஞ்சிகிட்டு, குறைஞ்ச வட்டியில கடனை வாங்கி, அதை முறையா முதலீடு செஞ்சுடுவேன். அப்பத்தான் நம்ம நெட்வொர்த் சூப்பரா வளரும்'' என்றார்.

''சாமி, எனக்கு ஒரு டவுட்டு. பேங்கில எப்ப போயி கேட்டாலும் லோன் குடுக்குறாங்களே! அவங்ககிட்ட மட்டும் ஏது அவ்வளவு பணம்?'' என்று கேட்டான் செல்.

''சொல்றேன். முதல்ல பணம் எப்படி பேங்கிங் சிஸ்டத்துல பெருகுதுன்னு புரிஞ்சுக் கணும். முதன்முதலா நாணயம் பேங்கில நான் 100 ரூபாயை டெப்பாசிட் பண்றேன். பேங்க் சட்டப்படி வர்ற டெப்பாசிட் தொகையில பத்து சதவிகிதத் தொகையை (சும்மா ஒரு உதாரணத்துக்கு) ரிசர்வ் பேங்கில கொடுத்து வைக்கணுமுன்னு வச்சுக்குவோம். நாணயம் பேங்க் 10 ரூபாயை ரிசர்வ் பேங்கில கட்டிட்டு 90 ரூபாயை உனக்கு லோனா தருது. அந்த 90 ரூபாயை நீ, உன் வேலையாளுக்கு கூலியா கொடுக்கிற. அவன் அந்த 90 ரூபாயைக் கொண்டு போய் ஜூனியர் பேங்குல போடுறான். ஜூனியர் பேங்க் அந்த 90 ரூபாயில 10% ஆகிய 9 ரூபாயை ரிசர்வ் வங்கியில கட்டிட்டு மீதி 81 ரூபாயை இன்னொருத்தருக்கு கடனா கொடுக்குது. அவர் அந்த 81 ரூபாயை வச்சு கடையில ஏதோ சாமான் வாங்குறார். அந்த கடைக்காரர் 81 ரூபாயை பசுமை பேங்கில போடறார். பசுமை பேங்க் அதில 10% ரிசர்வா வச்சுகிட்டு மிச்சம் 73 ருபாயை லோனா யாருக்கோ கொடுக்குது. அது அப்படியே டெப்பாசிட்டகுது. நான் போட்ட 100 ரூபாய் டெப்பாசிட் இப்போ எவ்வளவா மாறியிருக்கும்?'' -திடீரென்று குறுக்குக் கேள்வியைக் கேட்டார்.

சாமி, இப்படி இடக்கு மடக்காக ஏதாவது கேட்பார் என்று தெரிந்த நான், ஒரு சின்ன பேப்பரில் அவர் சொன்ன நம்பர்களை குறித்து வைத்திருந்தேன். ''100+90+81+73ன்னு 344 ரூபாய் ஆயிடுச்சே சாமி!'' என்றேன்.

''யப்பா! வாழ்க்கையில மொதல் முறையா சரியா கூட்டி சொல்லி இருக்கே! இது மாதிரி ஒரு டெப்பாசிட் பல டெப்பாசிட்டாகி லோனாகுற துக்கு கிரெடிட் கிரியேஷன்னு பேரு'' என்றார்.

''அய்யோ! வெறும் 100 ரூபாய் மூணு ரொட்டேஷன்ல 344 ஆயிருச்சே சாமி. ஒரு வாதத்துக்காக வேற டெப்பாசிட் எதுவுமே இந்த பேங்கில இல்லைன்னு வச்சுக்குவோம். இப்போ நீங்க போய் நாணயம் பேங்குல ஐயா என் டெப்பாசிட்டைத் திருப்பி குடுங்கன்னு கேட்டீங்கன்னா எப்படிக் குடுப்பாங்க? அவங்க அந்த பணத்தை வேற ஒருத்தருக்கு கடனா கொடுத்திட்டாங்களே!'' என்று ஒரு கிடுக்கிப்பிடி போட்டான் செல்.

''சிம்பிள். அந்த பேங்க் யார்கிட்ட கடனா கொடுத்திருக்கோ, அவர் கிட்ட பணத்தை திரும்ப கொடுக்கச் சொல்லும் அவ்வளவேதான்!'' என்று அசால்ட்டாக பதில் சொன்னார் சாமி.

''அதெப்படி முடியும்? கடன் வாங்கினவர்தான் ரெண்டு வருஷத் துலதான் திருப்பிக் கட்டுறதா சொல்லி இருக்கார். இப்ப திடுதிப்னு கேட்டா, அவரால எப்படிக் குடுக்க முடியும்?'' - அகில உலக கடன்தாரர்கள் நலச் சங்கத்தின் அகில இந்திய செயலாளர் போல பேசினான் செல்!

''உணர்ச்சி வசப்படாதே தம்பி! திருப்பித் தரச் சொல்லணும்னுதான் சொன்னேனே ஒழிய, கொடுத்தே ஆகணும்னு நான் சொல்லலையே! தவிர, வேற யாரும் பேங்க்ல பணத்தை டெபாசிட் பண்ணலைங்கிற ஒரு கற்பனையான சூழ்நிலையை வச்சு, இதைப் பேசுறோம். ஆனா நிஜத்துல இப்படியா இருக்கு? தினமும் பல ஆயிரம் பேர் பேங்குல டெப்பாசிட் போட்டுகிட்டே இருக்காங்க. நான் கேட்கிற அன்னைக்கு வேற யாரோ பணத்தை டெப்பாசிட் செஞ்சிருக்கலாம். அந்த பணத்தை திருப்பிக் கேட்கிறவருக்கு குடுத்தா, ப்ராபளம் ஓவர்'' என்று நீண்ட விளக்கம் அளித்தார்.

''சரி, ஒருவேளை பேங்க் கையில பணம் இல்லேன்னு வச்சுக்குங்க. ரிசர்வ் பேங்க்கிட்ட கடன் வாங்குமா?'' என்றேன் நான்.

''அட, சட்டுன்னு புரிஞ்சுக் கிட்டியே! இதுல இன்னொரு இன்ட்ரஸ்ட்டிங்-ஆன சமாசாரம் இருக்கு. வங்கிகள் வாங்குற டெப்பாசிட் தொகையில ஒரு குறிப்பிட்ட தொகையை ரிசர்வ் பேங்க்ல ரிசர்வா வைக்கணுமின்னு சொன்னோமில்லேயா, அந்த அளவை பத்துலேயிருந்து இருப துன்னு மாத்தினா என்னவாகும்?'' என்று கேட்டார் சாமி. நாங்கள் முழித்த முழியிலேயே அவர் கேட்ட கேள்வி எங்களுக்கு விளங்கவில்லை என்பதைத் தெரிந்து கொண்டார்.

''தெளிவாச் சொல்றேன் கேளுங்க. நீங்க நாணயம் பேங்கில 100 ரூபாய் டெப்பாசிட் போட்டா அதால 90 ரூபாயை லோனா குடுக்க முடியாது. அதுக்குப் பதிலா, 80 ரூபாயைத்தான் குடுக்க முடியும் இல்லையா? 80 ரூபாயை லோனா வாங்குறவன் வேற பேங்குல அந்த தொகையை போடுறப்ப, அந்த பேங்க் எவ்வளவு அதிலேயிருந்து லோனா கொடுக்க முடியும்?'' என்று அடுத்த கேள்வியைப் கேட்டார் சாமி.

''80 - (80வூ20%) = 64 ரூபாய். அதிலிருந்து 20% போக = 51 ரூபாய். இப்படி மூணு ரொட்டெஷன்ல 100+80+64+51 = 299'' என்றேன் நான். ''முன்னாடி சொன்ன 10 பர்சன்ட் ரிசர்வுல 344 என்றிருந்த டெப்பாசிட் இப்போ 20 பர்சென்ட்டுல 299-ஆக ஆயிடுச்சுல்ல? இதுல இருந்து என்ன தெரியுது? என்றார் சாமி.

''ரிசர்வை அதிகப்படுத்துனா டெப்பாசிட் ஆகிற தொகை குறையுது'' என்றான் செல்.

''கொஞ்சம் மாத்தி யோசி. ரிசர்வ் சதவிகிதத்தை அதிகப்படுத்தினா வங்கிகளுடைய லோன் கொடுக்கும் திறன் குறையுமுல்ல'' என்றார்.

''அட ஆமால்ல'' என்றோம் நாங்கள் இருவரும்.

''ஆமாவா! இல்லையா!'' என்று விஜய் ஸ்டைலில் எங்களை கலாய்த்த சாமி, சட்டென்று, இப்போ இவ்வளவு போதும், மற்றதை பிறகு பார்க்கலாம் என்று எழுந்துகொள்ள நாங்களும் புறப்பட்டோம்.

-பெருகும்