. த.மிழர்களுடைய அடையாளமாக ஐந்து விஷயங்களை வரிசைப்படுத்தினால் இட்லி- சட்னி- சாம்பாருக்கு அடுத்தபடியாக சீட்டு போடுவதுதான் இருக்கும்! அந்த அளவுக்கு சீட்டு என்பது தமிழர்களின் சேமிப்புக் குணங்களில் ரத்தத்தோடு ரத்தமாகக் கலந்துவிட்டது... நகைச் சீட்டு, தீபாவளிச் சீட்டு, ஏலச் சீட்டு என ஏதாவது ஒருவகையில் சீட்டு சேரும் பழக்கம் ஒவ்வொரு குடும்பத்துக்குள்ளும் புகுந்திருக்கிறது..
''பிஸினஸில் எதிர்பாராத ஒரு நெருக்கடியில் சிக்கிக்கொண்டேன்... நல்லவேளையாக சீட்டு போட்டிருந்ததால் தப்பித்தேன்...''

''ஸ்கூல் அட்மிஷன் பீஸுக்கு என்ன பண்றதுனு தவிச்சிட்டேன். கடைசியில சீட்டு பணம்தான் கைகொடுத்துச்சு...''

- இப்படி ஒவ்வொருவரும் ஏதாவது ஒருவகையில் சீட்டை வைத்துதான் தங்களது பண நெருக்கடிகளைச் சமாளித்து வருகிறார்கள். இருந்தாலும், அது இரண்டுபக்கமும் கூர்மையான வாளைப் போன்ற ஒன்றுதான். சரியாகப் பயன்படுத்தாவிட்டால் பதம் பார்த்துவிடும். சீட்டில் சேர்பவர்களை மட்டுமல்ல; சீட்டு நடத்துபவர்களையேகூட சில சமயங்களில் சரித்துவிடும்!

சீட்டுகளில் பலவகை இருந்தாலும் அதிக ரிஸ்க் இல்லாத சீட்டு என்றால் அது நகை சீட்டுதான். இந்த சீட்டு நகைக் கடைகளில் மட்டுமே போடப்படுவதால் பெரும்பாலும் எந்தவித மோசடியிலும் சிக்காமல் நகையாகக் கிடைத்துவிடும். ஒன்றிரண்டு இடங்களில் கடை திவால் ஆகி, நமது பணமும் பறிபோன சம்பவங்களும் நடந்திருக்கிறது என்றாலும், நகைக் கடைகளின் பாரம்பரியத்தைப் பொறுத்து ஓரளவு பாதுகாப்பானதாகவே இந்த சீட்டு இருக்கிறது.

ஆனால் மற்றவகை சீட்டு களை நம்மால் அப்படிச் சொல்ல முடிவதில்லை. ஆசையாக சீட்டு போட்ட இடத்தில் வேட்டு வைத்த சம்பவங்கள் தொடர்ந்து நடந்துகொண்டுதான் இருக்கிறது. காலை பேப்பரைத் திறந்தால், 'சீட்டு நடத்தியவர்கள் பல லட்சம் ரூபாயுடன் ஓட்டம், சீட்டு நடத்திய பெண் தலைமறைவு’ என பலவிதமான மோசடிச் செய்திகள் வந்த வண்ணம் இருக்கிறது.

சீட்டை விட்டால் வேறுவழி இல்லை, அதேசமயம் அது வேட்டு வைப்பதாகவும் இருந்துவிடக்கூடாது என்று நினைப்பவர்கள் இனி கவனமாகப் படியுங்கள்...

முதலில் கண்டிப்பாகத் தெரிந்துகொள்ள வேண்டிய விஷயம் கம்பெனி சட்டத்தின்படி பதிவு செய்யப்பட்ட நிறுவனங்கள் மட்டுமே சீட்டு நடத்தமுடியும். இதற்கான வழிமுறைகள், டெபாஸிட் தொகை எவ்வளவு என்பன போன்ற அனைத்து விஷயங்களையும் 1982 சீட்டு நிதிச் சட்டத்தின்படி தான் செய்யவேண்டும். ஆனால் பெரும்பாலான மக்கள் இத்தகைய பதிவு செய்யப்பட்ட சீட்டு நிறுவனங்களில் சேருவது கிடையாது.

தனிநபர் சீட்டை தேடியோடும் மக்கள்!

அங்கீகரிக்கப்பட்டு, சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு நடத்தப்படும் நிறுவனங்களை விட தனிநபர்கள் நடத்தும் சீட்டுகள் தான் பெரும்பாலும் மக்களை ஈர்க்கிறது. தாங்கள் குடியிருக்கும் பகுதி, வேலை பார்க்கும் இடம் ஆகியவற்றில் தினம் தினம் பார்த்துப் பழக்கப்பட்ட நபர்களிடமே சீட்டு போட முன்னுரிமை கொடுக்கிறார்கள். சீட்டைப் பொறுத்தவரை பரஸ்பர நம்பிக்கைதான் அதன் மூலதனம். சீட்டு போடுபவர், நடத்துபவர் என்று இரு தரப்பும் நம்பிக்கையின் அடிப்படையில் மட்டுமே பணத்தைப் பரிமாறி கொள்கின்றனர்.

அலையவிடும் கடன் கொடுக்கும் நிறுவனங்கள்

சீட்டு நிறுவனங்களை விட தனிநபர்களை மக்கள் நாடுவதற்கு இன்னொரு முக்கியமான காரணம் சீட்டு சேர்வதற்கும், பணத்தை வாங்குவதற்கும் எந்தவிதமான ஆவணங் களையும் கேட்கமாட்டார்கள் என்பதுதான்!

''கேட்கும் எல்லா ஆவணங்களையும் கொடுத்தாலும் கைக்கு பணம் வருவதற்குள் போதும்போதும் என்றாகி விடுகிறது... அவசரத் தேவைக்குதானே சீட்டில் சேருகிறோம். அந்த நோக்கம் நிறைவேறவில்லை என்றால் பிறகு எதற்கு அது'' என்பதுதான் பலரின் கருத்து. இதனாலேயே அங்கீகரிக்கப்படாத சீட்டுகளில் சேர்ந்துவிடுகிறார்கள். ஆனால் எல்லாம் சரியாக நடக்கும் பட்சத்தில் பரவாயில்லை. தவறான ஆட்களிடம் சேர்ந்துவிட்டால் முதலுக்கே மோசம் என்பதை ஏனோ அலட்சியப்படுத்திவிடுகிறார்கள்!

சீட்டை சிக்கலில்லாமல் நடத்த...

சீட்டு பிடிக்கும் தொழிலை 15 ஆண்டுகளாகச் செய்துவரும் திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த நந்தீஸ்வரன் என்பவர், இத் தொழிலைப் பற்றி நம்மிடம் கூறுகையில், ''சீட்டு நடத்தும் தொழிலைச் செய்ய வேண்டும் என்றால் நம்பிக்கையும், நாணயமும் வாக்கு தவறாமையும் தேவை. அதுபோன்ற குணங்கள் உள்ளவர்களால் மட்டுமே இந்த தொழிலை தொடர்ந்து நடத்த முடியும். ஒரு சீட்டு நடத்த வேண்டுமானால் குறைந்தது பதினைந்தில் இருந்து இருபது பேர் வரை இதில் சேரவேண்டும். சேர்பவர்கள் ஆணா, பெண்ணா; திருமணம் ஆனவரா, ஆகாதவரா என்றெல்லாம் பார்ப்பதை விட மாதாமாதம் சரியாக பணத்தைக் கட்டக்கூடியவரா என்பதைத்தான் முதலில் பார்க்கவேண்டும். பணத்தை சரியாகக் கட்டாதவரைச் சேர்த்துவிட்டால் நமக்குதான் சிக்கலாக மாறிவிடும்.

உதாரணத்துக்கு ஒரு சம்பவம்... என்னிடம் ஏலம் எடுத்த ஒருத்தர் எதிர்பாராதவிதமாக இறந்து விட்டார். இன்னொருத்தர் மாதா மாதம் பணத்தை சரியாகக் கட்டாமல் விட்டுவிட்டார். கடைசியில் நான்தான் என் கைக்காசைப் போட்டு கட்டிச் சமாளித்தேன். இதில் எனக்கு பெரிய நஷ்டம் ஏற்பட்டுவிட்டது. லாபம் இருக்கிற அதே அளவுக்கு ரிஸ்க்கும் இருக்கிறது. அதனால் சீட்டு நடத்துகிறவர்களிடம் எப்போதும் கையில் பணம் புழக்கத்தில் இருக்க வேண்டும்.

சிக்கல் வந்தால் நிறுத்திவிடுவது நல்லது!

பன்னிரண்டு ஆண்டுகளாக தீபாவளி சீட்டு நடத்தும் சந்துரு கூறுகையில், ''வருடந்தோரும் தீபாவளி முடிந்ததும் 20 நாட்களில் சீட்டு பிடிக்க ஆரம்பித்து விடுவேன். மாதத் தவணையாக 400 ரூ வாங்குவேன். தீபாவளிக்கு பத்து நாட்களுக்கு முன்பாகவே ஒரு பாக்ஸ் பட்டாசு, ஒரு கிலோ இனிப்பு, ஒரு கிராம் தங்க நாணயம், 2 கிலோ சமையல் எண்ணெய், டிபன் கேரியர், ஒரு கிலோ கோழிக்கறி, 2 கிலோ பிரியாணி அரிசி போன்றவற்றை சீட்டு போடுபவர்களுக்கு தவறாமல் வழங்கிடுவோம். சரியாக பணத்தை கட்டாதவர்களை விலக்கி அதுவரை கட்டிய பணத்தையும் திருப்பிக்கொடுத்து விடுவோம். சீட்டு பணத்தை பேங்கில் போடுவோம் இல்லையெனில் வட்டிக்கு விடுவோம். தீபாவளி நேரத்தில் பணத்தை எடுத்து அனைவருக்கும் கொடுக்கவேண்டியதை கொடுத்துவிடுவோம். கடந்த வருடம் முதல் தங்கத்தின் விலை அதிகளவில் ஏறியதால் வாங்கிய பணத்தில் தங்கம் கொடுக்கமுடியவில்லை. அதனை ஈடுகட்ட கூடுதல் பணம் கேட்டபோது என்னிடம் சீட்டு போட்டவர்கள் பணம் தர மறுத்துவிட்டனர். பிறகு எனது சொந்தப் பணத்தை போட்டு சொல்லியபடி அனைத்தையும் கொடுத்துவிட்டு அத்துடன் சீட்டு நடத்துவதையே நிறுத்திவிட்டேன்!'' என்று நொந்துபோய்ச் சொன்னார்.

சீட்டு நடத்துபவர்களின் பிரச்னைகள் ஒருவிதம் என்றால், தவறான சீட்டில் சேர்ந்து படாதபாடுபட்டவர்கள் பிரச்னைகள் வேறுவிதம்! கீரனூரைச் சேர்ந்த செல்லப்பா என்பவர், ''ரெண்டு வருஷத்துக்கு முன்னாடி பிரபலமான ஒரு சீட்டு நிறுவனத்துல சேர்ந்தேன். ரெண்டு லட்ச ரூபா சீட்டு. அதுல சேர்ந்துட்டு பணத்தை வாங்குறதுக்குள்ள நொந்தேபோயிட்டேன்... கிட்டத்தட்ட அஞ்சு மாசமா அந்த ஆவணத்தைக் கொண்டுவா, இந்த ஆவணத்தைக் கொண்டுவானு அலைக்கழிச்சு அதுக்கு பிறகுதான் கொடுத்தாங்க. கட்டுற பணம் மோசம் போயிடாதுனு அங்க சேர்ந்து கடைசியில என்ன லாபம்? நம்ம பணத்துக்கு நாயா அலைய வேண்டியதாயிடுச்சு. இதுல வெறுத்துப் போய் தெரிஞ்ச ஒருத்தர்கிட்ட சீட்டு சேர்ந்தேன்... நாம ரெண்டடி நடந்தா நம்ம அதிர்ஷ்டம் நமக்கு நாலடி முன்னால நடக்குது. அந்த ஆளு பாதியிலேயே ஓடிப்போயிட்டான். இப்போ என்ன செய்றதுனு தெரியலை. ஆனா எனக்கு இந்த லோக்கல் சீட்ட விட்டா வேற கதியும் இல்லை'' என்றார் அழமாட்டாத குறையாக! நாம் சந்தித்தவர்களில் பல பேர்களிடம் இப்படிப்பட்ட கண்ணீர்கதைகள் கொட்டிக்கிடக்கின்றன. ஆனால் பண விவகாரத்தில் ஏமாற்றப்பட்டு விட்டதை வெளிப்படையாகச் சொல்லத் தயங்குகிறார்கள்.

-பானுமதி அருணாசலம்,, என். தினேஷ்