வெங்காயம்
மழை உயர்த்திய விலை!

. கடந்த சில வாரங்களாக இந்தியா முழுக்க பெய்த கடும் மழையால் வெங்காய உற்பத்தி பெரிதும் பாதிப்படைந்துள்ளது. சாகுபடி செய்ய வேண்டிய பருவத்தில் எதிர்பாராதவிதமாக பெருமழை தமிழகம் உள்பட இந்தியாவின் பல பகுதிகளைத் தாக்க, பூமிக்குள் புதைந்து கிடக்கும் வெங்காயத்தை வெளியே எடுக்க முடியாத நிலை. மழையால் கடந்த சில நாட்களாக மார்க்கெட்டுக்கு வரும் வெங்காயத்தின் தரமும் மிகவும் மோசமாகவே இருக்கிறது. இதனால் மார்க்கெட்டுக்கு புதிதாக வந்த வெங்காயத்தின் விலை குறைவாகவும், பழைய வெங்காயத்தின் விலை அதிகமாகவும் இருக்கிறது..
திண்டுக்கல் மார்க்கெட் நிலவரப்படி, வட மாநிலங்களில் தயாரான பெல்லாரி வெங்காயம் ஒரு கிலோ

45. பெங்களூர் போன்ற தென்மாநிலங்களில் உற்பத்தியானதின் விலை

30.

சிறிய வெங்காயமான சாம்பார் வெங்காயத்தின் விலையும் கணிசமாக உயர்ந்திருக்கிறது. புதியது அதன் தரத்தைப் பொறுத்து

5 முதல்

30 விலை போகிறது. பழைய ஸ்டாக் கிலோ

50 வரை போகிறதாம்! மொத்த மார்க்கெட்டில் வெங்காயத்தின் விலை கிலோ ஒன்றுக்கு

30 என்கிற அளவில் விற்பனையாகிறது.

முட்டை
விலை உயருமா?

ஒவ்வொரு டிசம்பர் மாதத்திலும் முட்டை விலை கணிசமாகக் குறையும். காரணம், அந்த மாதத்தில் பலரும் ஐயப்பன் தரிசனத்துக்கான விரதம் இருப்பதால் முட்டையின் பயன்பாடு குறையும். ஆனால் இந்த டிசம்பரில் வட இந்தியாவில் இருந்து பெருமளவில் ஆர்டர் வந்திருப்பதால் விலை பெரிதாக இறங்க வாய்ப்பில்லை என்கிறார்கள் நாமக்கல் முட்டை வியாபாரிகள். விரைவில் கிறிஸ்துமஸ் வருவதையட்டி தமிழகத்திலிருந்து இருபது லட்சம் கிலோ கோழிக்கறியை இறக்குமதி ஆர்டர் கொடுத்திருக்கிறதாம் இலங்கை அரசாங்கம். எனவே, கோழிக்கறி விலையும் கொஞ்சம் உயரவே வாய்ப்புண்டு என்கிறார்கள்.

ஜீரகம்
ஏறுமா, இறங்குமா?

ஜீரகத்துக்கான தேவை கிடுகிடுவென உயர்ந்து வருவதால் அதன் விலையும் உயரும் என்கிற எதிர்பார்ப்பு மார்க்கெட் வட்டாரத்தில் பலமாக இருக்கிறது. இந்தியாவில் ஜீரகத்துக்கென இருக்கும் மிகப் பெரிய மார்க்கெட் என்றால் அது குஜராத்தில் இருக்கும் உஞ்ஜாதான். கடந்த வார நிலவரப்படி, உஞ்ஜா மார்க்கெட்டுக்கு ஒரு நாளைக்கு 2500 மூட்டைகள் ஜீரகம் மட்டுமே வந்தது. ஆனால் தேவையோ 5000 மூட்டைகளுக்கும் அதிகமாக இருந்தது. ஜீரகத்துக்கு உள்ளூரில் தேவை அதிகரித்திருப்பதோடு, பங்களாதேஷ், மொரீஷியஸ், சிங்கப்பூர், மலேசியா போன்ற நாடுகளில் இருந்தும் ஆர்டர் வந்ததால் அதன் விலை ஒரு கிலோவுக்கு ஒரு ரூபாய் என்கிற அளவில் அதிகரித்தது.

ஆனால் ஜீரகம் விலை உயரும் என சிலர் 'யூக வணிகம்’ நடத்திக் கொண்டிருக்கிறார்கள். இப்போது விற்பனையாகும் விலை தகுந்த சரியான விலை என்று சொல்ல முடியாது. எனவே அடுத்து வரும் நாட்களில் அதன் விலை குறையலாம் என்றும் வேறு சிலர் சொல்கிறார்கள். இந்த எச்சரிக்கையை ஊர்ஜிதப்படுத்துகிற மாதிரி கடந்த வெள்ளிக்கிழமை அன்று மட்டும் என்.சி.டி.எக்ஸ்-ஸில் டிசம்பர் மாதத்துக்கான ஜீரக கான்ட்ராக்ட்

340 குறைந்தது. ஜனவரி, பிப்ரவரிக்கான கான்ட்ராக்ட்டும்

380-க்கு மேல் குறைந்தது.