நாணயத்தின் கடைசி பார வேலைகள் ஜரூராக நடந்து கொண்டிருக்க, ஷேர்லக்கின் பூட்ஸ் காலடிச் சத்தம் கேட்டு அலர்ட்டாகி, அட்டேன்ஷனில் நின்று அவரை வரவேற்றோம். ''கடந்த இதழில் 'திங்களைப் பாருங்கள்’ என்று நீங்கள் எச்சரித்தது நூறுசதவிகிதம் சரி! கடந்த வாரம் முழுக்க சந்தை ரணகளமாகத்தானே இருந்தது!'' என்றோம். நம் பாராட்டில் போதை கொள்ளாமல், நேராக விஷயத்துக்குத் தாவினார். முந்திரி பக்கோடா தட்டை அவர் முன்பு வைத்துவிட்டு, நாமும் நோட்ஸ் எடுக்க ஆரம்பித்தோம்.

பச்சையில் தொடங்குமா?

சந்தை சரிந்தது ஏன்?

. ''சீன அரசாங்கம் அந்த நாட்டில் பணப்புழக்கத்தைக் கட்டுப்படுத்த எடுத்த நடவடிக்கைகளால் நம் சந்தை முதலில் சரிந்தது. புதன், வியாழக்கிழமைகளில் இந்திய பங்குச் சந்தையில் சர்வதேசத் தீவிரவாதிகள் பெருமள வில் பணத்தைப் போட்டிருக்கலாம் என்கிற தகவல் பரவ, சந்தை சராமாரியாக விழுந்தது. இதனிடையே சில பங்குகளை 'இன்சைடர் டிரேடிங்’ முறையில் திட்டுமிட்டு விலை உயர்த்தி இருக்கிறார்கள் என்று வேறோரு தகவலும் பரவ, சந்தை ரத்தச் சிவப்பாய் மாறிவிட்டது. இதெல்லாம் போதாது என்று 2-ஜி பிரச்னையால் நாடாளுமன்றம் அமளிதுமளிப்பட்டு அரசாங்கம் கவிழ்ந்துவிடுமோ, அதாகிவிடுமோ, இதாகிவிடுமோ என அதிகப்படியாக யோசித்ததன் விளைவே இந்த ஓவர் ரியாக்ஷன். இவ்வளவு பெரிய பீதி தேவை இல்லை என்பது என் அபிப்ராயம். ஆனாலும் சந்தை சரிந்தது ஒரு 'பாசிட்டிவ்’-ஆன விஷயம்தான். ஏற்கெனவே தவறவிட்ட விலையில் பல பங்குகள் மீண்டும் கிடைக்கிறது. உதாரணமாக, எஸ்.பி.ஐ. .2736-லும், எல்.ஐ.சி. ஹவுசிங் ஃபைனான்ஸ் .925-லும் கிடைக்கிறது.''.
''அய்யோ! வங்கிப் பங்கையா வாங்கச் சொல்றீங்க! அதுதான் மானாவாரியாக விலை மலிந்து கிடக்கிறதே!'' என்று நம் ஆச்சரியத்தை வெளிப்படுத்தினோம்.

காலை வாரிய வங்கிப் பங்கு!

''உண்மைதான். கடந்த ஒரு வாரத்தில் மட்டும் பேங்க்எக்ஸ் 1089 புள்ளிகள் விழுந்தன. வங்கிகள் வட்டி விகிதத்தை சீர்படுத்தி வருவது இதற்கு முக்கிய காரணம். தவிர, சிலபல நிறுவனங்களுக்கு வங்கிகள் அளித்த கடன் திரும்ப வராது என்று கிளம்பிய வதந்தி இன்னொரு காரணம். ஆனால் வங்கித் துறையின் அடிப்படையை ஆட்டுகிற மாதிரி எதுவும் நடந்துவிடவில்லை. அப்படி ஏதாவது பயங்கரமான பிரச்னை இருக்குமெனில், கடந்த வெள்ளிக்கிழமை பேங்க்எக்ஸ் ஒரே நாளில் 400 புள்ளிகள் உயர்ந்திருக்காதே! ஆக, நல்ல வங்கிப் பங்குகளை விலை குறையக் குறைய வாங்கினால் தப்பில்லை.''

''இந்த சறுக்கலில் ஸ்மால் கேப் பங்குகளும் கடும் சரிவைச் சந்திருக்கிறதே!'' என்றோம்.

வேகமாக இறங்கிய ஸ்மால் கேப்!

''ஆம்! கடந்த ஒரு மாதத்தில் ஸ்மால் கேப் இண்டெக்ஸ் 16% விழுந்திருக்கிறது. தவிர, சில ஸ்மால் கேப் பங்குகளின் விலை 60 சதவிகிதம் குறைந்திருக்கிறது. உதாரணமாக, பீமா சிமென்ட்ஸ் நிறுவனம் 61%, பரேக் அலுமினிக்ஸ் 53% கவ்ட்டன் ரீடெய்ல் 51%, சுஜானா மெட்டல் 50%, கம்ஃபர்ட் இன்டெக் 47% என குறைந்திருக்கிறது. இந்தப் பங்குகளை வைத்திருந்தால் தலைசுற்றி தூர எறிந்துவிடுவது நல்லது'' என்றவர் இளஞ்சூட்டில் இருந்த தண்ணீரைக் குடித்தார்.

''எஃப்.ஐ.ஐ.கள் என்ன நினைக்கிறார்கள்? அவர்கள் தொடர்ந்து நம் சந்தையில் இருப்பார்களா? இல்லை, கிடைத்த லாபம் போதும் என்று ஓடிவிடுவார்களா?'' என்று கேட்டோம்.

''கடந்த வாரத்தில் எஃப்.ஐ.ஐ.களின் முதலீடு வந்ததைவிட போனது அதிகம். இந்த மாதத்தின் முதல் பத்து நாட்களில் அவர்கள் வாங்கியது

26,113 கோடி. ஆனால், விற்றது

29,376 கோடி. ஆக,

3,263 கோடி அளவுக்கு எஃப்.ஐ.ஐ.களின் பணம் வெளியே போயிருக்கிறது. நம் பங்குச் சந்தை இன்னும்கூட நல்ல லாபம் தரும் என்றுதான் அவர்கள் நம்புகிறார்கள். ஆனாலும் 2ஜி விஷயத்தில் அரசாங்கத்தின் நடவடிக்கை அவர்களிடம் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த விஷயத்தில் அரசாங்கம் தலையிட்டால் மட்டுமே அவர்களின் மனம் குளிர வைக்க முடியும்!'' என்றார்.

''அது சரி, இன்சைடர் டிரேடிங் என்று பேச்சு அடிபட்டதே!'' - சுடச்சுட டீயைக் கொடுத்தபடி கேட்டோம்.

''ஆமாம், நம்மூர்க்காரரான சிவசங்கரனின் பெயர்தான் இதில் பலமாக அடிபடுகிறது. பங்குச் சந்தை புரோக்கரான விமல் ரத்தோடின் துணையுடன் ருச்சி சோயா, கே.எஸ். ஆயில், கருத்தூரி குளோபல் போன்ற நிறுவனங்களின் பங்குகளின் விலையைக் குறைத்து பின்னர் அவற்றை வாங்கி, அதிக விலைக்கு விற்றதாக உளவுத் துறை கண்டறிந்துள்ளதாக செய்திகள் வருகின்றன. இதனால் இந்தப் பங்குகளின் விலை மளமளவென குறைந்திருக்கிறது. கே.எஸ்.ஆயில் நிறுவனத்தின் பங்கு கடந்த ஐந்து நாட்களில்

11 க்கு மேல் குறைந்திருக்கிறது. ருச்சி சோயா

126-லிருந்து

91-க்கு குறைந்திருக்கிறது. கருத்தூரி

28-லிருந்து 16.15 குறைந்துவிட்டது. சில பங்குகள் வெடிகுண்டு மாதிரி இருக்கின்றன. உஷாராகத்தான் கையில் வைத்திருக்க வேண்டியிருக்கிறது.''

''சரி, அடுத்த வாரம் சந்தை எப்படி இருக்கும்?'' ஷேர்லக் கிளம்பித் தயாராவதற்கான சில சிக்னல்கள் நமக்குத் தெரியவே, முக்கியமான இந்த கேள்வியைக் கேட்டோம்.

''இது பற்றி மார்க்கெட் வட்டாரத்தில் ஒரு தெளிவான கருத்து இல்லை. கடந்த வெள்ளி பச்சையில் முடிந்ததால், அடுத்த திங்கள் அதே பச்சையில் தொடங்க வாய்ப்புண்டு. நீண்ட கால முதலீட்டாளர்கள் இப்போதுள்ள விலையில் சில நல்ல பங்குகளை தாராளமாக வாங்கலாம். ஆனால்

குறுகிய கால முதலீட்டாளர்கள் இன்னும் இரு நாட்களுக்கு சந்தை பச்சை நிறம் கொண்டால் ஒழிய பங்கு வாங்கி கையை சுட்டுக் கொள்ள வேண்டாம்'' என்றவர், வழக்கம் போல ஒரு துண்டுச் சீட்டைக் கொடுத்துவிட்டு பறந்தார்.