தொடர்கள்

கடனைச் சொல்லுங்கள் வழியைச் சொல்கிறோம்!

தப்புக்கணக்கு போட்டு தவிச்சுக்கிட்டு இருக்கேன்!

''தென்மாவட்டங்களில் 'வீட்டுக்குள்ளே பட்டினி கிடந்தாலும் வெளியிலே தூக்கிப் போடும் இலையில் நெய்யைத் தடவிப் போட்டாளாம்...' என்று ஒரு வழக்குச் சொல் உண்டு. ஒருகாலம் வரையில் ஏகபோகமாக வாழ்ந்துட்டு பிறகு நொடிச்சுப் போகும்போது, பழைய வாழ்க்கையை மெயின்டெய்ன் பண்றதுக்காக பொய்யாக நடிப்பதைத்தான் அப்படிச் சொல்வாங்க... நான் இலையில் தடவிப் போடும் நெய்க்காக கடன் வாங்கினேன் பாருங்க... அங்கேதான் ஆரம்பிச்சது சிக்கல்...'' என்ற முன்னுரையோடு தன் கடன் வாழ்க்கையைச் சொல்ல ஆரம்பித்தார் நம் முன்னே உட்கார்ந்திருந்த வித்யாசேகர்.

''சம்பாதிக்கும்போது சேமிக்காமல் அது அப்படியே நீடிக்கும்னு தப்பா கணக்குப் போட்டதால, இப்ப கடன்ல சிக்கி தத்தளிச்சுக்கிட்டு இருக்கேன். டிப்ளமோ படிச்சுட்டு வேலை தேடி அலைஞ்சப்ப கோயம்புத்தூர்ல வேலை கிடைச்சது. நல்லா வேலை பார்த்தேன். நல்லபடியா சம்பளமும் கிடைச்சது. அந்தக் காலம் என் வாழ்க்கையின் மறக்கமுடியாத நாட்கள். 'இப்படியே இரவு, பகல் பாக்காம வேற யாருக்கோ உழைச்சுக்கிட்டே இருந்தா... வாழ்க்கையில நீ எப்பத்தான் முன்னேறுவே'னு மனசு கேட்டுக்கிட்டே இருந்துச்சு. இதே உழைப்பை நமக்காக செஞ்சா... அதோட முழுப்பலனும் நமக்குத்தானே கிடைக்கும்னு முடிவெடுத்தேன்!

நாமக்கல்லுக்கு வந்து கம்ப்யூட்டர் யூ.பி.எஸ்., பேட்டரி, இன்வெர்ட்டர்னு நானே தயாரிச்சு விற்கத் தொடங்கினேன். கடையில வேலை பார்த்த எட்டு பேருக்கும் நல்ல சம்பளம் கொடுத்து, கடையை டெவலப் பண்ணினேன். இந்தச் சமயத்துலதான் எனக்குக் கல்யாணம் நடந்தது. மனைவியும் டிப்ளமோதான். அதனால அவங்களை மேல படிக்கவைக்க ஆசைப்பட்டு பி.டெக். சேர்த்துவிட்டேன். நல்லா படிச்சாங்க. அதுல பாஸானதும் அண்ணா பல்கலைக்கழகத்துல எம்.டெக் படிக்க வெச்சேன். அதையும் முடிச்சு இப்ப இன்ஜினீயரிங் காலேஜ்ல லெக்சரரா வொர்க் பண்றாங்க. மாசம் பத்தாயிரம் ரூபாய் சம்பாதிக்கிறாங்க. என் கம்பெனியும் நல்லா டெவலப் ஆச்சு.

பைக் வாங்கற அளவுக்கு வசதி வந்தாதான் சைக்கிளை வாங்கணும். கார் வாங்கற அளவு வசதி வந்தாதான் பைக் வாங்கணும். நான் எடுத்த எடுப்புலயே பழைய அம்பாசிடர் கார் ஒண்ணை ரெண்டரை லட்சத்துக்கு வாங்குனேன். அதுக்கு ஆர்.சி. புக், இன்ஷூரன்ஸ்னு கொஞ்சம் பிரச்னை வந்துச்சு. உடனே அந்த காரை வித்தேன். அதுல மட்டும் நஷ்டம் 80,000 ரூபாய். என் மனைவி, 'நாம இருக்கறதோ வாடகை வீடு. இதுல எதுக்கு கார்?'னு சொன்னதை அலட்சியப்படுத்தினேன். 'அக்கம்பக்கம் இருக்கறவங்க நம்மைப் பத்தி என்ன நினைப்பாங்க. பிஸினஸூக்கு இதெல்லாம் அவசியம். உனக்கு ஒண்ணும் தெரியாது'னு அடக்கிட்டேன். அப்ப என் மனைவி ஒரு லட்ச ரூபாய் ஏலச்சீட்டு போட்டுக்கிட்டு இருந்தா, அதைத் தள்ளி எடுத்து அம்பாசிடர் கார் வித்த பணத்தைச் சேர்த்து கார் லோன் போட்டு வேற கார் வாங்குனேன். அப்ப என் பிஸினஸ்ல நல்ல லாபம் வர ஆரம்பிச்சுது. மாசம் எல்லாச் செலவும் போக 50,000 ரூபாய்க்கு மேல வந்தது. எல்லாத்தையும் ஆடம்பரமா செலவழிச்சேன்.

இன்னொருபக்கம் என் தகுதியையும் வளர்த்துக்க முடிவு பண்ணி தபால் மூலமா பி.காம்., பாஸ் பண்ணினேன். அப்புறம் அதைத் தொடர்ந்து எம்.காம்-ல, சேர்ந்து படிக்க ஆரம்பிச்சேன். தமிழ்நாட்டுல பவர் கட் வந்ததுல என் வாழ்க்கையில நல்ல வெளிச்சம்! ஏன்னா எங்க ஏரியாவில் என்னோட கடையில மட்டும்தான் இன்வெர்ட்டர் இருந்துச்சு. வேற போட்டியாளர்களும் கிடையாது. எனக்கு நல்லா வியாபாரம் ஆச்சு. கையில நல்லா காசு இருக்கறப்பவே எந்தவிதமான சேமிப்பும்

இல்லாம இருக்கறதை நினைச்சு என் மனைவி வீடு வாங்க வற்புறுத்தினாள். எனக்கும் அது நல்ல யோசனையா படவே கட்டுன வீடுகளா பார்த்தோம். அப்படி ஒரு வீடு குறைஞ்ச விலைக்குக் கிடைச்சது. வீட்டு ஓனருக்கும் பணத்தேவை! நாங்க கேட்ட தொகைக்கு ஒப்புக்கிட்டார். ரேட் எல்லாம் பேசி முடிச்சு, ஒரு லட்ச ரூபாய் அட்வான்ஸ் கொடுத்தோம். புரோக்கருக்கும் கமிஷன் கொடுத்துட்டு வீட்டை ரிஜிஸ்டர் பண்ணும்போது, பெரிய அளவுல மழைவந்து... நாங்க பாத்த வீடு வெள்ளத்துல முழுகி இருந்துச்சு. அதைப் பார்த்த உடனே என் மனைவி ஒரே அடியா, 'இந்த வீடு வேண்டாம்'னு பிடிவாதமா சொல்லிட்டா. வீட்டு ஓனர் நாங்க கொடுத்த அட்வான்ஸை வச்சு மகள் கல்யாணத்தை முடிச்சுட்டார். அவர்கிட்ட இருந்து 50,000 ரூபாய் வாங்கறதுக்குள்ள ரெண்டு வருஷம் ஆயிடுச்சு. மீதிப் பணத்தை இன்னும் அவர் தரலை.

அப்புறம் கையிலிருந்த பணத்தை வெச்சு இப்ப இருக்கற வீட்டை பன்னிரண்டு லட்சத்துக்கு வாங்குனோம். இந்தச் சமயத்துல என் மச்சினனுக்குக் கல்யாணம் நடந்தது. பர்சனல் லோனைப் போட்டு கல்யாணச் செலவுக்குக் கொடுத்தேன். கொஞ்சம் நகையும் வாங்கினேன். வீடு வாங்குன கொஞ்ச நாட்களுக்குள் பிஸினஸ் படு டல் ஆயிடுச்சு. எங்களுக்குப் போட்டியா பஜார்ல நிறைய கடைங்க ஆரம்பிச்சுட்டாங்க. ஒருகட்டத்துல வியாபாரம் நடக்காம போயிட, ஆட்களை எல்லாம் வீட்டுக்கு அனுப்பிச்சுட்டேன்.

எந்தவித இன்ஷூரன்ஸ் பாலிசியோ, குழந்தைகளுக்கான சேமிப்புத் திட்டமோ எதுவுமே எடுக்கல. குழந்தையோட படிப்பு, அதோட கல்யாணம் இதைப் பத்தியெல்லாம் நினைச்சாலே பயமா இருக்கு. கையில முப்பது பவுன் நகை இருக்கு. கண்கெட்டபிறகு சூரிய நமஸ்காரம் பண்ண வந்திருக்கேன். என் கடன் பிரச்னைகளில் இருந்து வெளியே வர்றதுக்கு நீங்க ஒரு வழி சொல்லுங்க!'' என முடித்தார்.

வித்யா சேகரின் குடும்பம் கடனில் இருந்து வெளியே வர அவருக்கு வழிகாட்டுகிறது நாணயம் விகடன் நிதி ஆலோசனைக் குழு!

''வாழ்க்கையில் ஒருகட்டத்தில் செல்வச் செழிப்புடன் இருக்கிறோம். அடுத்தகட்டத்தில் அன்றாடச் செலவுகளுக்கே கஷ்டப்படுகிறோம். எல்லாமே நடந்துமுடிந்துவிட்டது. இனி நடப்பவை நல்லதாக இருக்கவேண்டும். பரவாயில்லை, மனைவியை எம்.டெக். வரை படிக்க வைத்திருக்கிறீர்கள். நீங்களும் எம்.காம். படித்திருக்கிறீர்கள். மனைவிக்குக் கூடுதல் சம்பளம் கிடைக்கும் வகையில் வேறுவேலைக்குச் சேர முயற்சி செய்யவேண்டும். கிடைக்கக்கூடிய வருமானத்தை முறையாகச் சேமித்தாலே எதிர்காலத்தைப் பற்றிய பயம் இருக்காது. இதுவரை நடந்த சோதனைகளில் நீங்கள் மீண்டு வந்ததற்கே உங்களைப் பாராட்டவேண்டும்.

முதலில் செய்யவேண்டியது...

வீட்டுக்காரரிடம் கொடுத்த அட்வான்ஸ் தொகையில் பாக்கியிருக்கும் ஐம்பதாயிரத்தைப் பெற முயற்சி செய்யவேண்டும். முதலில் குடும்பத்துக்கான மெடிக்ளைம் இன்ஷூரன்ஸ் அவசியம். ஒரு லட்சத்துக்கு ஃப்ளோட்டர் பாலிசி எடுத்துக்கொள்ள வேண்டும். 40 வயதைத் தாண்டும்போது இதை அதிகரித்துக்கொள்ள வேண்டும். உங்களுக்கு டேர்ம் இன்ஷூரன்ஸ் பதினைந்து லட்ச ரூபாய்க்கும் மனைவிக்கு இரண்டு லட்ச ரூபாய்க்கும் எடுக்கவேண்டும். பர்சனல் லோனுக்கான வட்டி அதிகமாக இருப்பதால், முப்பது பவுன் நகையை வங்கியில் அடகு வைத்து அதில் கிடைக்கும் தொகையைக்கொண்டு பர்சனல் லோன் இரண்டு லட்சத்தை அடைத்துவிடவேண்டும்.

முதல் படி...

வீட்டுக் கடனை தனியார் வங்கியில் இருந்து தேசிய வங்கிக்கோ அல்லது எல்.ஐ.சி-க்கோ மாற்றிவிடலாம். அவ்வாறு 8.75% வட்டி விகிதத்துக்கு மாற்றினால் இ.எம்.ஐ. மாதம் 7,612 ரூபாய்தான் வரும். இதன்மூலம் மீதமாகும் தொகை மட்டும் 1,400 ரூபாய். அதாவது வருடத்துக்கு 16,800 ரூபாய். இதனைக்கொண்டு உங்கள் குடும்பத்துக்கான மெடிக்ளைம், டேர்ம் இன்ஷூரன்ஸ் கட்டணங்களைச் செலுத்திவிடலாம்.

இரண்டாவது படி...

பர்சனல் லோனை அடைப்பதால் உங்களுக்குக் கிடைக்கும் சேமிப்பு 6,500 ரூபாய். அதைக்கொண்டு நகைக் கடனுக்கு வட்டி 1,800 ரூபாய் கொடுக்கவேண்டும். அதுபோக கையில் இருப்பது 4,700 ரூபாய். இந்தத் தொகையை ஈக்விட்டி டைவர்சிஃபைட் மியூச்சுவல் ஃபண்டில் எஸ்.ஐ.பி. மூலம் மாதாமாதம் சேமிக்கவேண்டும்.

மூன்று வருடத்தில் நல்ல தொகை சேர்ந்த உடன் அதைக்கொண்டு நகையை மீட்டுவிடலாம். மேலும் நகைக்கடன் வட்டி மீதம் 1,800 ரூபாயையும் சேர்த்து எஸ்.ஐ.பி-யை மூன்று வருடம் தொடர்ந்து முதலீடு செய்து வரவேண்டும். முடிவில் இந்தத் தொகையைக் கவனமாகக் கவனித்து பிறகு கடன் சார்ந்த ஃபண்டுகளிலோ அல்லது வங்கியில் ஃபிக்ஸட் டெபாசிட்டுக்கோ மாற்றிவிடவும். இந்தத் தொகையைக் குழந்தையின் படிப்புக்கு வைத்துக்கொள்ளலாம்.

மூன்றாவது படி...

இரண்டு வருடங்களுக்குப் பிறகு சிட்ஃபண்ட் கடனும், கார் லோனும் முடிந்திருக்கும். இதில் மீதமாகும் தொகை 11,500 ரூபாய். இதையும் விடாமல் சேமித்து வந்தால் உங்களுடைய குழந்தையின் மேற்படிப்புக்கும், திருமணம் போன்றவற்றுக்கும் இத்தொகை பயன்படும். ஓய்வுக்காலத்துக்கும் திட்டமிட முடியும். உங்களுக்கு அமைதியான சந்தோஷமான வாழ்க்கை அமைய நல்வாழ்த்துக்கள்!''

- பி.தனராஜ்