Published:Updated:

''டியர் மிஸ்டர் பிஸினஸ்மேன்...''

''டியர் மிஸ்டர் பிஸினஸ்மேன்...''

பிரீமியம் ஸ்டோரி
''டியர் மிஸ்டர் பிஸினஸ்மேன்...''
''டியர் மிஸ்டர் பிஸினஸ்மேன்...''

சிவராமன் புதுச்சேரியில் கடை வைத்திருக்கிறார். ஆயில், கிரீஸ், இயந்திரங்கள் துடைக்கும் துணி, பஞ்சு, சோப்பு போன்ற தொழிற் சாலைகளுக்குத் தேவையான பொருட்களை சப்ளை செய்யும் கடை.

சாதாரணமாக கம்பெனி களிலிருந்து நேரடி யாக வந்து வாங்கிக் கொண்டு போவார்கள். அல்லது போனில் ஆர்டர் கொடுப்பார்கள். கடையில் இரண்டு பேர் வேலை பார்த்தார்கள். போன் ஆர்டர் களுக்கு டெலிவரி கொடுத்துவிட்டு வருவதும் இவர்கள் வேலை.

##~##
சென்ற வாரம் சிவராமன் ஒரு உறவினர் வீட்டுக் கல்யாணத்துக் காக சென்னைக்குப் போயிருந் தார். அங்கே அவருடைய  கல்லூரி நண்பன் சம்பத்தை சந்தித்தார். சம்பத் இப்போது அமெரிக்க கெமிக்கல் கம்பெனி ஒன்றின் தமிழ்நாடு, புதுச்சேரி சேல்ஸ் மேனேஜர்.

'சிவராமன், எங்க கம்பெனிக்கு புதுச்சேரியில ஒரு ஏஜென்ட் தேவை. உனக்கு அதில் விருப்பம் இருக்கிறதா?''

சிவராமன் விவரங்கள் கேட்டார். சம்பத் சொன்னார்: ''புதுச்சேரியில் சுமார் 75 லட்ச ரூபாய்க்கு பிஸினஸ் வரும். கம்பெனிகளுக்குப் போய் ஆர்டர் வாங்க வேண்டும். ஸ்டாக் வைக்க வேண்டாம். கம்பெனி தன் குடோவுனிலிருந்து சப்ளை செய்து விடும்.''

'சம்பத், எவ்வளவு லாபம் எதிர்பார்க்கலாம்?''

''டியர் மிஸ்டர் பிஸினஸ்மேன்...''

'எல்லாச் செலவுகளும்போக பதினைந்து சதவிகிதம் தேறும். அதாவது, உன் வருட வியாபாரமான 75 லட்சத்தில் 10.75 லட்சம் லாபமாக கிடைக்கும்.''

'என்ன செலவுகள் செய்ய வேண்டி யிருக்கும்?''

'நீ இப்போது செய்வதுபோல் கடையில் உட்கார்ந்தபடியே ஆர்டர் வாங்க முடியாது. சேல்ஸ் பிரதிநிதிகளை நியமிக்க வேண்டும். அவர்கள் தொடர்ந்து கஸ்டமர்களைச் சந்திக்க வேண்டும், ஆர்டர்கள் வாங்க வேண்டும்.''

'எத்தனை விற்பனைப் பிரதிநிதி கள் தேவை? அவர்களுக்கு என்ன செலவாகும்?''

'சிவராமன், அந்த கணக்கு எல்லாம் நீதான் போட வேண்டும். ஒரு வாரத்தில் எனக்குப் பதில் சொல்.''

சிவராமன் கடைக்கு வந்தார். எத்தனை விற்பனைப் பிரதிநிதிகள் வேண்டும்? அவர்களுக்கு என்ன சம்பளம் கொடுக்க வேண்டும்? வேறு என்னென்ன செலவுகள் ஆகும்? இந்த கேள்விகளுக்கு எங்கே விடை கிடைக்கும்?

சிவராமன் நினைவுக்கு வந்தவர் கண்ணப்பன். டி.வி.எஸ். கம்பெனியில் மனிதவளத்துறை அதிகாரியாகப் பணியாற்றியவர், இந்த கண்ணப்பன். சிவராமனின் தேவைகளைப் புரிந்து கொண்டவர், இரண்டே நாட்களில் பக்கா கணக்குகளோடு வந்தார்.

கம்பெனியின் கெமிக்கல்களை விற்பனை செய்ய பி.எஸ்சி., வேதியியல் படித்த பட்டதாரிகள் இருந்தால் நல்லது. முன்அனுபவம் தேவையில்லை. சரளமாக ஆங்கிலம் பேசத் தெரிந்திருக்க வேண்டும். இத்தகைய தகுதி கொண்டவர்களுக்கு மாதம் 10,000 ரூபாய் சம்பளம் கொடுக்க வேண்டும்.   

''டியர் மிஸ்டர் பிஸினஸ்மேன்...''

தகுதிகள் சரி, எத்தனைப் பிரதிநிதிகள் தேவை? கண்ணப்பன் கணக்கு விவரமாக இருந்தது.  

நம் கெமிக்கல்களை வாங்கும் தொழிற்சாலைகள் புதுச்சேரியில் எத்தனை இருக்கின்றன? ஒவ்வொரு கம்பெனியும் வருடத்துக்கு எவ்வளவு வாங்குவார்கள்?

இவர்களை ஏ, பி, சி என்ற மூன்று பிரிவுகளாக அழைக்கலாம்.

ஆர்டர்கள் வாங்க மாதம் எத்தனை முறை இவர்களைச் சந்திக்க வேண்டும்?

ஏ - மாதம் 4 முறை

பி - மாதம் 2 முறை

சி - மாதம் ஒரு முறை

''டியர் மிஸ்டர் பிஸினஸ்மேன்...''

ஒரு கஸ்டமரைச் சந்திக்க ஆகும் நேரமும் பயண நேரமும் சேர்த்து 2 மணி.

10 ஏ பிரிவு கஸ்டமர்களை மாதம் 4 முறை சந்திக்க ஆகும் நேரம் - 10 X 4 X 2 = 80 மணி நேரம்.

10 பி பிரிவு கஸ்டமர்களை மாதம் 2 முறை சந்திக்க ஆகும் நேரம் - 10 X 2 X 2 = 40 மணி நேரம்.

60 சி பிரிவு கஸ்டமர்களை மாதம் 1 முறை சந்திக்க ஆகும் நேரம்  - 60 X 1 X 2 = 120 மணி நேரம்.

எல்லா 80 கஸ்டமர்களையும் சந்திக்க மாதம் ஆகும் மொத்த நேரம் - 80 + 40 + 120 = 240 மணி நேரம்.

விற்பனை பிரதிநிதிகளுக்கு வாடிக்கையாளர்களைச் சந்திப்பதோடு பிற கடமைகளும் உண்டு. அவை;

• வாடிக்கையாளர்களோடு போனில் பேசுதல்.

• சிவராமனோடு கலந்து ஆலோசித்தல் கூட்டங்கள்.

• கடிதங்கள் / இ-மெயில்கள் அனுப்புதல்.

• இவற்றுக்கு மாதம் தேவைப்படும் நேரம் 40 மணி.

தினசரி வேலை நேரம் 8 மணி. சாப்பாடு, சகஊழியர்களோடு பேச்சு இவற்றுக்கு அவர் தினமும் ஒரு மணி நேரம் செலவிடுவார். தினமும் அவர் உழைக்கும் நேரம் 7 மணி. மாத வேலை நாட்கள் 25 என்று எடுத்துக் கொண்டால், ஒரு பிரதிநிதி ஒவ்வொரு மாதமும் 175 மணி நேரம் உழைக்கிறார்.

போன் பேச்சுக்கள், சிவராம னோடு ஆலோசித்தல், கடிதங்கள்/இ-மெயில்கள் அனுப்புதல் ஆகியவற்றுக்கான 43 மணி நேரம்போக, வாடிக்கையாளரைச் சந்திக்க ஒவ்வொரு விற்பனை பிரதிநிதிக்கும் கிடைக்கும் நேரம்  175 - 40 = 135 மணி.

எல்லா 80 கஸ்டமர்களையும் சந்திக்க மாதம் ஆகும் மொத்த நேரம்  240 மணி.  

வாடிக்கையாளரைச் சந்திக்க ஒவ்வொரு விற்பனை பிரதிநிதிக்கும்

கிடைக்கும் நேரம் = 175 - 40 = 135 மணி.

தேவையான விற்பனை பிரதிநிதிகளின் எண்ணிக்கை = 240 / 135 = 1.8

அதாவது, சிவராமன் இரண்டு விற்பனை பிரதிநிதிகளை வேலைக்கு அமர்த்த வேண்டும்.

இரண்டு பேரை வேலைக்கு அமர்த்தினால், சிவராமனுக்குக் கட்டுப்படியாகுமா?

2  பேரின் மாதச் சம்பளம் = 20,000 ரூபாய்.

இருவருக்கும்  பயணம்  போன்ற பிற செலவுகள் = 10,000 ரூபாய்.

மொத்த மாதச் செலவு = 30,000 ரூபாய்.

மொத்த வருடச் செலவு = 3,60,000 ரூபாய்.

சம்பத் சொன்னபடி வருட வருமானம் = 10.75 லட்ச ரூபாய்.

கண்ணப்பன் சொன்னார், ''சிவராமன், நீங்கள் தைரியமாக இந்த ஏஜென்ஸி பிஸினஸைத் தொடங்கலாம்.''

சிவராமன் இன்னும் கொஞ்ச நாட்களுக்கு ரொம்ப பிஸியாக இருப்பார். ஏஜென்ஸி தொடங்க சம்மதம் என்று சம்பத்திடம் சொல்ல வேண்டும்; விற்பனைப் பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுக்க வேண்டும்; அவர்களுக்குப் பயிற்சி கொடுக்க வேண்டும்; அவர்களின் வேலையை மேற்பார்வை செய்ய வேண்டும். எதிர்பார்க்கும் லாபம் வருகிறதா என்று கணக்குப் பார்க்க வேண்டும்.

நீங்கள் கடை வைத்திருக் கிறீர்களா, சிறுதொழில் நடத்து கிறீர்களா? தேவைக்குக் குறைவான ஊழியர்கள் இருந்தால், லாபம் வரும் வாய்ப்புகளை நீங்கள் இழந்து கொண்டிருக்கிறீர்கள். தேவைக்கு அதிகமான ஊழியர்கள் இருந்தால், உங்கள் பணம் அவர்களுக்குக் கொடுக்கும் சம்பளத்தில் வீணாகிக் கொண்டிருக்கிறது.

கண்ணப்பன் போட்ட கணக்கை உங்கள் பிஸினஸுக்கும் போட்டுப் பாருங்கள். உங்கள் லாபம் அதிகரிக்காவிட்டால், என்னைக் கேளுங்கள்.

(மீண்டும் சந்திப்போம்.)
படம்: என். விவேக்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு