Published:Updated:

நேற்று... இன்று... நாளை!

குடும்ப நிதி ஆலோசனை

பிரீமியம் ஸ்டோரி
நேற்று... இன்று... நாளை!


மகாகவி பாரதி பிறந்த தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரத்திலிருந்து தன்னம்பிக்கையோடு பேசினார் சரவணன். உணர்ச்சிபூர்வமான அனுபவம் அது! 29 வயதாகிற சரவணன் ஒரு மாற்றுத் திறனாளி. தமிழ்நாடு மின்சார வாரியத்தில் உதவியாளரா வேலை பாக்குறாரு. எதிர்காலத்த பத்தி ஒரு தெளிவான நோக்கு, குடும்பத்த பத்தி அவருக்கு இருக்கற அபிமானம், அவரோட பாசிட்டிவ் அப்ரோச் எல்லாத்தையும் பார்த்து நான் பிரமிச்சிட்டேன். அவரோட தம்பி முத்துராஜ், படிச்சிட்டு திருச்சியில தனியார் கம்பெனியில என்ஜினீயரா வேலை பாக்குறாரு. அப்பா, அம்மாவுடன் சரவணன் எட்டயபுரத்தில் வசிக்கிறார்.

நேற்று... இன்று... நாளை!

குடும்ப வருமானம் - சரவணன் சம்பளம் - ரூ.10,500. தம்பி சம்பளத்திலிருந்து அவரோட செலவுகள்போக வீட்டுக்கு அனுப்பும் தொகை ரூ.7,000. ஆக மொத்தம் ரூ.17,500.

வீட்டுச் செலவுகள் மாதம் ரூ.5,000. கடன் எதுவும் இல்லை. எந்தச் சொத்தும் கிடையாது. மாதம் ரூ.12,000 முதலீடு செய்யலாம். அட, அருமையா இருக்கேங்கிற குஷியோடு ஆலோசனை சொல்ல ஆரம்பிச்சேன்.  

சரவணன், இதுவரை இன்ஷூரன்ஸ் எதுவும் எடுக்கல, மொதல்ல அதுக்கு ரெடி பண்ணனும். இது மாத செலவு கணக்குல சேர்ந்துடும். வீட்டு மனை வாங்க பணம் சேர்த்து வெச்சிருக்காரு. இன்னும் ஓரிரு மாதங்கள்ல வாங்கத் திட்டம் போட்டிருக்காரு. ரெண்டு மூணு வருடத்திலாவது சொந்த வீடு கட்டணும். தம்பிக்கும் ஒரு பங்கு வெச்சுதான் கட்டணும். இன்றைய தேதியில் அதுக்கு 10 லட்சம் ரூபாய் வரை செலவாகலாம், மூணு வருஷம் கழிச்சு 12.5 லட்ச ரூபா ஆகலாம். 10 லட்ச ரூபா வீட்டுக் கடன் வாங்கிடலாம். அண்ணன், தம்பி ரெண்டு பேரும் சேர்ந்து கடன் கட்டலாம். 2.5 லட்ச ரூபா மட்டும் ஏற்பாடு செய்தா போதும்.

நேற்று... இன்று... நாளை!
##~##
சரவணன் கல்யாணத்தை அடுத்த வருஷம் எதிர்பார்க்கலாம் அதுக்கு ஒரு லட்ச ரூபா செலவாகும். அஞ்சு வருஷம் கழிச்சு தம்பிக்கு கல்யாணம் செய்யணும். அதுக்கு 1.25 லட்சமாவது செலவாகும். சரவணன் பார்ப்பது அரசு வேலைதான் என்றாலும், பென்ஷன் கிடைக்காது. அதனால ஓய்வு காலத்துக்குச் சேர்க்கணும்.

கைவசம் சேமிப்புக்கு பணம் இருக்கிறது என்றாலும் கனவை நனவாக்க அது மட்டும் போதுமா? மாதம் ரூ.20,000-க்கும் மேல சேர்த் தாதான் முடியும். இது நடக்கற காரியமா? மலைச்சுப்போய் நிக்காம, நிதானமா வரிசையா பிளான் பண்ணுவோம்.  

நேற்று... இன்று... நாளை!
நேற்று... இன்று... நாளை!
நேற்று... இன்று... நாளை!

மொதல்ல இன்ஷூரன்ஸ் என்னென்ன தேவை?

சீக்கிரமே சரவணனோட அப்பாவும், அம்மாவும் மூத்த குடிமக்களாக போகிறார்கள் என்பதால் அவர்கள் பெயரில் தனி பாலிசி எடுக்க பரிந்துரை செஞ்சிருக்கேன். ஏற்கெனவே பெற்றோர் பெயரில் தனி பாலிசி இருக்கிறதால அவர்களுக்கு சீனியர் சிட்டிசன் பாலிசி எடுக்கிறதுல பின்னால சிக்கல் எதுவும் இருக்கக்கூடாது என்பதற்கான முன்ஏற்பாடுதான் இது. இன்ஷூரன்ஸ் குறைந்தபட்ச தேவையான அளவு எடுத்தாக்கூட போதும். வருடத்துக்கு பிரீமியம் ரூ.12,000 வரை ஆகும். இதனால மாதச் செலவு ரூ.1,000 அதிகரிக்கும். இதை செய்யணுமான்னு யோசிக்கக்கூடாது, கண்டிப்பா செய்யணும். அது போக ரூ.11,000 வரை முதலீடு செய்யலாம்.

ஒவ்வொரு வருடமும் முதலீடு திட்டங்களைத் தேவைக்கு ஏத்த மாதிரி மாற்ற வேண்டும்.

நேற்று... இன்று... நாளை!

ஏன் சிட் ஃபண்டுல முதலீடு செய்ய சொல்றேன்? சில சீட்டு கம்பெனிகள் மோசடி செய்தாங்ககறதுனால அது ஒரு மோசமான முதலீடுன்னு சொல்ல முடியாது. சிட் ஃபண்டை முதலீடாகவும், தேவைப்படும்போது கடனாகவும் உபயோகிச்சிக்கலாம். அவசரத் தேவைகளுக்கு எத்தனையோ குடும்பங்கள் சீட்ட நம்பி இருக்காங்க. இப்பவும், நம்பகமான சீட்டு கம்பெனிகள் நல்ல முதலீடுகளா இருக்கு, முதலீட்டாளர்களுக்கு உபயோகமாகவும் செயல் படறாங்க. தீர விசாரிச்சு, தெரிஞ்சவங்க மூலமா, பல காலமாக இயங்கி வர சீட்டு கம்பெனிகள்ல, முதலீடு செய்யலாம். அவசரப்படாம அதிக தொகைக்கு வரும்போது சீட்ட எடுத்தா, வெளியில கடன் வாங்கறதவிட வட்டி கம்மியா இருக்கும்.

2012-ல் சரவணன் கல்யாணம் முடிஞ்சா, அப்ப தேவைக்குச் சீட்டு எடுத்துட்டு, 2013 வரை கட்டி வர வேண்டியிருக்கும். அதுக்கு அப்பறம் தம்பி கல்யாணத்துக்குச் சேர்த்து வைப்போம்.

தம்பி கல்யாணத்துக்கு 2-3 வருடம் இருக்கறதால, வங்கி ஆர்.டி. போட்டு வெச்சுக்கலாம். 2014-ல் வீடு கட்டணும். இப்பவே மாதம் ரூ. 6,000 வீதம் மூணு வருஷத்துக்கு ஆர்.டி. போட்டு வந்தா 2014-ல் (9% வட்டி) முதிர்வு தொகை ரூ.2.5 லட்சம் கிடைக்கும்.

நேற்று... இன்று... நாளை!
நேற்று... இன்று... நாளை!

அப்போ இந்த தொகைய நம்ம பங்கா வெச்சு வங்கியில ரூ.10 லட்சம் வீட்டுக் கடன் வாங்கலாம். அண்ணன், தம்பி ரெண்டு பேர் பெயரில் சொத்தை பதிவு செய்தா, கடன் தேவையான அளவு கிடைக்கும். கடன் திருப்பிக் கட்டும் தொகையை வும் பகிர்ந்துக்கலாம். 20 வருட கடனாக இருந்தால் மாதத் தவணை ரூ.10,000 வரும்.

அண்ணன், தம்பி ரெண்டு பேருக்கும் இன்னும் 4-5 வருடத்தில சம்பளமெல்லாம் உயர்ந்திரும்னு எதிர்பார்த்து மாதம் முதலீடுகள் ரூ.13,000 செய்யலாம்னு கணக்குப் போட்டிருக்கேன் .

தம்பி கல்யாணம் 2016-ல வரும், ஏற்கெனவே செய்துவந்த ரூ.4,000 ஆர்.டி. ஒரு வருடத்துல முடிஞ்ச பிறகு அந்த தொகைய அப்படியே வங்கி ஃபிக்ஸட் டெபாசிட்டா மாத்திடணும். 2016-ல முதிர்வுத் தொகையா ரூ.50,000 கிடைக்கும். 2.000 ரூபாய் (25 மாதம்) சீட்டு சேர்ந்தா தம்பி கல்யாண நேரத்தில இன்னொரு ரூ.50,000 புரட்டிக்கலாம். கொஞ்சம் பத்தாம போனா அப்ப கைமாத்தா ஏதாவது வாங்கிக் கல்யாணத்த முடிச்சிடலாம்.

நேற்று... இன்று... நாளை!

2017-லிருந்து வீட்டுக் கடனும், ஓய்வு காலத்திற்கான முதலீடுகளும் மட்டும்தான் செய்ய வேண்டியிருக்கும். ஆனா, அப்ப குடும்பம் பெரிதாகி குழந்தைகள் எல்லாம் பிறந்திருந்தா, அவர்களோட எதிர்காலத்துக்கும் சேர்த்து வைக்கணும். அந்த நேரத்தில, தம்பி எங்க செட்டில் ஆக போறாரு, வரு மானம் எப்படி இருக்கும், செலவுகள் எப்படி இருக்கும்னு எல்லாம் பார்த்து செய்துக்கலாம்.  

செலவுகள் செய்யற துக்கு முன்னாடி, சம்பளம் வந்த உடனே சேர்த்து வைக்கற பழக்கம் வந்திருச்சுன்னா, பிளான் செய்து அதுக்குத் தகுந்த மாதிரி செலவும் செய்திட்டு வந்தா, எதிர்காலத்தப் பத்திய கவலையே இருக்காது. அவங்களோட கனவையும் நனவாக்கி கொள்ளலாம். வாழ்த்துக்கள் சரவணன்!

படங்கள் : சிதம்பரம்

நேற்று... இன்று... நாளை!
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு