Published:Updated:

கார்ப்பரேட் கவர்னன்ஸ்: சிக்கல் நிறுவனங்கள்!

எச்சரிக்கை

பிரீமியம் ஸ்டோரி
கார்ப்பரேட் கவர்னன்ஸ்: சிக்கல் நிறுவனங்கள்!


மூன்று ஆண்டுகளுக்கு முன்பு, சத்யம் நிறுவனத்தில் நடந்த முறைகேடுகள் பற்றி யாரும் மறந்திருக்க மாட்டார்கள். அதேபோன்ற கார்ப்பரேட் கவர்னன்ஸ் தொடர்பான பிரச்னைகளில் இன்றைக்கு சிக்கி தவித்துக் கொண்டிருக்கின்றன பல நிறுவனங்கள். இதனால் அந்நிறுவனங்களில் முதலீடு செய்வதே பெரும் ரிஸ்க்-ஆக மாறியிருப்பதாக எச்சரிக்கிறது சமீபத்தில் வெளியான ஒரு சர்வே.

##~##
போ
ர்ச்சுகல் நாட்டைச் சேர்ந்த 'எஸ்பிரிட் டோ சான்டோ செக்யூரிட்டீஸ்’ நிறுவனம் வெளியிட்டிருக்கும் இந்த சர்வே-யில் எடில்வைஸ் கேப்பிட்டல், மணப்புரம் ஜெனரல் ஃபைனான்ஸ் அண்ட் லீஸிங், லுபின், டாக்டர் ரெட்டீஸ் லேபாரட்டரிஸ், ஜி.எம்.ஆர்., ஜி.வி.கே., சாம்பல் பெர்ட்டிலைஸர்ஸ், முந்த்ரா போர்ட் என பல நிறுவனங்களைப் பற்றி எச்சரித்திருக்கிறது.

மணப்புரம் நிறுவனத்தைப் பொறுத்தவரை, 'இந்நிறுவனம் தன்னுடைய எதிர்கால வருமானத்தைப் பற்றிய கணிப்பு களை சரியாக தெரிவிக்கவில்லை’ என்று எச்சரித்திருக்கிறது. இதனால் இந்நிறுவனத்துக்கு கொடுத்த இடத்தை கொஞ்சம் குறைக்கவும் செய்திருக்கிறது.

எடில்வைஸ் நிறுவனம் கடந்த ஆண்டின் கடைசி காலாண்டில் பேலன்ஸ் ஷீட் பற்றிய தகவல்களை முழுமையாகத் தராததாலும் வெளிப்படையான தன்மையோடு நடந்து கொள்ளாததாலும், அந்நிறுவனத்திற்கு கொடுத்த மதிப்பீட்டை  கொஞ்சம் குறைத்திருக்கிறது.

3ஐ இன்ஃபோடெக் நிறுவனத் துக்கு 'சிவப்பு’ ரேட்டிங் கொடுத்து அபாயம் என எச்சரித்திருக்கிறது. இந்நிறுவனம் சிறுபான்மை முதலீட்டாளர்களின் நலனைக் கருத்தில் கொள்ளாமல், இருந்ததே சிவப்பு ரேட்டிங் கொடுத்ததற்கு காரணம் என்று தெரிவித்திருக்கிறது.

''நிர்வாகத்தை சரியாக நடத்தாமலும், பல நிறுவனங்களில்  ஊழல் அதிகமாவதும் தெரிந்து தான் வெளிநாட்டைச் சேர்ந்த பல முதலீட்டாளர்கள் இந்திய சந்தையைவிட்டு விலக ஆரம்பித்து விட்டார்கள். இந்திய முதலீட்டா ளர்கள்கூட இந்த விஷயத்தை கண்டு முகம் சுளிக்கத் தொடங்கி விட்டார்கள்.

இதேநிலை தொடர்ந்து நீடிக்கும் பட்சத்தில் இந்திய பங்குச் சந்தையில் ஏற்றயிறக்கம் இன்னும் அதிகமாகும்; நிதிச் செலவு உயரும்; இதனால் வருமானம் கணிசமாக குறையும்; ஆக மொத்தத்தில் இதில் முதலீடு செய்வதன் மூலம் அதிக ரிஸ்க் எடுக்க வேண்டியிருக்கும் என்று எச்சரித்திருக்கிறது 'எஸ்பிரிட்டோ சான்டோ’ நிறுவனம்.

இந்த சர்வேயில் சொல்லப் பட்ட விஷயத்தை அப்படியே எடுத்துக் கொள்ளா விட்டாலும், குறைந்தபட்சம் ஓர் எச்சரிக்கை யாகவாவது எடுத்துக் கொள்ளலாமே!

- செ.கார்த்திகேயன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு