ஷேர் மார்க்கெட் சிங்கம்! - 11
ஜார்ஜ் சோரஸ்

சென்ற இதழில் குறிப்பிட்டது போல ஐரோப்பிய யூனி-யன் நாடுகள் தத்தமது நாணயங்-களுக்கு இடையே நிலையான எக்ஸ்சேஞ்ச் ரேட் பேணும் இ.ஆர்.எம். (ERM&Exchange Rate Mechanism) உடன்படிக்கையை உருவாக்கியிருந்தன. ஜெர்மன் கரன்ஸியான மார்க்குக்கு நிகராக பிரிட்டிஷ் பவுண்டின் மதிப்பு இந்த எல்லைக்குள் இருக்கலாம் என்பது ஒப்பந்தம். அதற்கு வெளியே போனால் இங்கிலாந்து அரசு தலையிட்டு நடவடிக்கை எடுக்கவேண்டும்.

1990-களின் தொடக்கத்தில் இங்கிலாந்து பொருளாதாரம் தேக்கநிலையை அடைந்திருந்தது. பொருளாதாரம் வலுவிழந்ததனால் பவுண்டின் உண்மையான மதிப்பு குறைந்தது. அதாவது பவுண்ட் கரன்சியாக தமது சேமிப்பை வைத்திருந்-தவர்கள் எல்லாம் அவற்றை ஜெர்மன் மார்க் அல்-லது அமெரிக்க டாலராக மாற்றி வைக்க முற்-பட்டனர். ஆனால், பவுண்டின் தேவையை வேறு ஏதாவது வகையில் தூக்கிப்பிடித்து இ.ஆர்.எம். ஒப்பந்தத்தின் எல்லைக்குள் பராமரிக்க வேண்டியிருந்தது.

அதற்கான இரண்டு வழிகளில் ஒன்று பவுண்ட் கரன்சியை மற்றவர்கள் விற்க விற்க... பேங்க் ஆஃப் இங்கிலாந்து அதை டாலர் கொடுத்து வாங்கி, டிமாண்ட்- சப்ளை கை மீறாமல் பார்த்துக்கொள்வது. இரண்டாவது, வட்டி விகிதத்தை உயர்வாகப் பேணி, வைப்பீடுகளை ஈர்த்து, பவுண்டின் மதிப்பைத் தூக்கிப் பிடிப்பது.

நாணயத்தின் மதிப்பை (எக்ஸ்சேஞ்ச் ரேட்) குறைப்பதும், வட்டி விகிதத்தைத் தணிப்பதும் மட்டுமே நலிந்திருக்கும் பொருளாதாரம் மேம்பட்டு நீடித்து நிலைக்க மேற்கொள்ளவேண்டிய அவசியமான நடவடிக்கைகள். ஆனால், நாணயத்தின் மதிப்பு விஷயத்தில் கை கட்டப்பட்டவுடன் ஜான் மேஜரின் அரசு அதற்கு நேரெதிர் நடவடிக்கையில் ஈடுபட்டது. 'எக்காரணத்தைக் கொண்டும் உடன்-படிக்கையை விட்டு வெளியேறும் பேச்சுக்கே இடமில்லை' என அரசு அறிவித்து வறட்டுப் பிடிவாதத்தில் இறங்கியது.

அதன் விளைவாக ஏற்றுமதி பாதித்தது. இறக்குமதியைச் சமா-ளிக்க முடியவில்லை. அதனால், கரன்சி மேலும் வலுவிழக்க... அது ஏற்றுமதி--இறக்குமதி சமன்-பாட்டைச் சீர்குலைக்க... அது மறுபடியும் கரன்சியின் தலையில் வந்து விடிய... ஒரு தப்பமுடியாத விபரீத சுழற்சியில் சிக்கித் தவித்தது இங்கிலாந்து.

வறட்டுக் கௌரவத்தை விட்டு-விட்டு, மற்ற ஐரோப்பிய நாடுகளைப் போல நாணயத்தின் மதிப்பைக் குறைத்து (Devaluate), வட்டி விகிதத்தையும் குறைத்து மறுபடியும் தொழில்களைக் காப்பாற்றுமாறு பொருளா-தார நிபுணர்கள் அரசை நோக்கிப் புலம்பினர்.

உடன்படிக்கை உடையப் போவது சோரஸ் கண்ணுக்குத் தெளிவாகப் புலனானது. தற்சமயம் பிரிட்டிஷ் அரசு தனது நாணயத்-தின் மதிப்பை பெருமைக்காகத் தூக்கிப் பிடித்துள்ளது. அதாவது பவுண்டின் ரேட் (விலை) அதன் மதிப்பைக் காட்டிலும் மிக உயர்வாக இருக்கிறது. உயர் விலையில் பவுண்டை விற்றுவிட்டு, பிற்பாடு ஒப்பந்தம் உடையும் சமயத்தில் அதன் ரேட் குறையும். அப்போது திரும்ப வாங்கிக்-கொள்ளலாம் என்று எளிமையாக ஒரு கணக்குப் போட்டார்.

செட்பம்பர் 15, செவ்வாய். இ.ஆர்.எம். சிக்கலைத் தீர்ப்பதற்காக தனது ஸ்பெயின் பயணத்தை ஜான் மேஜர் கேன்சல் செய்தார். அன்றைய தினம் ஒரு மார்க் = 2.778 பவுண்ட் என்ற எல்லையைக் கடந்து 2.8 பவுண்ட் என்று எக்ஸ்சேஞ்ச் ரேட் ஆனது. ஆனாலும் பேங்க் ஆஃப் இங்கிலாந்து சலிக்காமல் வாங்கியது.

பவுண்டை ஷார்ட் செல் (Short sell) செய்தார். ஜெர்மன் மார்க்கை வாங்கினார். அதுபோக ஏராளமான இங்கிலாந்து நிறுவனங்களின் பங்குகளை வாங்கிக் குவித்தார். அதாவது நாணயத்தின் மதிப்புக் குறைவுக்குப் பிறகு பவுண்ட் குறைந்து, மார்க் உயரும். அப்போது விற்றதையும் வாங்கியும், வாங்கியதை விற்றும் கணக்கைச் சரி செய்துகொள்ளலாம். மேலும் நாணயத்தின் மதிப்புக் குறைப்பு என்பது எப்போதுமே பங்குச் சந்தைக்கு டானிக் தரும் செய்தி! ஒட்டுமொத்தமாக 10 பில்லியன் டாலர் பந்தயம் கட்டினார். வெவ்வேறு வடிவங்களில் அவை நிகழ்ந்தாலும் அவற்றின் ஒட்டுமொத்தப் பொருள், 'இங்கிலாந்தை அடித்து நொறுக்கு' என்பதே.

செவ்வாய் இரவு இங்கிலாந்துக்காக அமெரிக்காவின் மத்திய வங்கியும், ஜப்பானின் மத்திய வங்கியான பேங்க் ஆஃப் ஜப்பானும் உதவிக்கு வந்து பவுண்டை வாங்கி ஓரளவு நிலைமையைச் சமாளித்தன. அதை விழித்திருந்து பார்த்துவிட்டு சோரஸ் நியூயார்க்கில் தூங்கப் போனார். புதன்கிழமை அமெரிக்காவுக்கு முன்பாக இங்கிலாந்தில் விடிந்தது.

பவுண்ட் சரிந்துகொண்டே போனது. தடு-மாறிய பேங்க் ஆஃப் இங்கிலாந்து ஜான் மேஜ-ரின் ஒப்புதலை வேண்டியது. வேறுவழியே இல்லாமல் 'யெஸ்' என்று அவர் சொன்னதுதான் தாமதம், வட்டி விகிதம் பத்திலிருந்து 12% ஆக உயர்த்தப்பட்டது. அப்போது லண்டனில் காலை 10.30 மணி. அந்த அறிவிப்பை ஃபைனான்ஸ் சமுதாயம் புறக்கணித்தது. எந்தவொரு சாதகமான பாதிப்பையும் காணோம்.

பொருளாதாரச் சவாலைப் பற்றி விவாதிக்க நாடாளுமன்றத்தின் 10 நிமிட அவசரக் கூட்டத்தை ஜான் மேஜர் அழைத்தார். இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு முதன்முதலாக அப்படியரு கூட்டம் நடந்தது.

காலை ஏழு மணிக்கு நியூயார்க்கில் சோரஸ் கண்விழித்து காபி கேட்டபோது, அவர் அந்த ஒரு ராத்திரியில் 958 மில்லியன் டாலர் ஈட்டினார் என்ற செய்தி கிடைத்தது. இன்னும் மிச்சமிருக்கிறது என அவர் நினைத்திருந்தார்.

லண்டனில் பிற்பகல் 2.15-க்கு மீண்டுமொரு முறை வட்டி விகிதம் ஏறியது, இந்த முறை 15 சதவிகிதமாக. வரலாற்றில் முதன்முறையாக ஒரே நாளில் இரண்டு தடவை (அதுவும் 50 சதவிகித நிகர ஏற்றம்) வட்டியை உயர்த்தும் மோசமான நிலைக்கு பிரிட்டிஷ் சாம்ராஜ்ஜியம் தள்ளப்பட்டது. அதுவும் பலனளிக்கவில்லை. பவுண்ட் சரிந்துகொண்டேபோனது. வேறு மார்க்-கமே இல்லை.

ஜான் மேஜர் ஜெர்மன் சான்ஸ்லர் ஹல்மெட் கோலுக்கு போன் போட்டார். “எங்களை மன்னியுங்கள். நாங்கள் இ.ஆர்.எம்-ஐ விட்டு வெளியேறுகிறோம்'' என்று முடிவை அறிவித்தார்.

வெறும் பவுண்ட் சரிந்ததில் மட்டும் ஜார்ஜ் சோரசுக்கு ஒரு பில்லியன் டாலர் (நாலாயிரம் கோடி ரூபாய்). அதே சமயத்தில் அவர் கட்டிய மற்ற பந்தயங்களையும் சேர்த்தால் இரண்டு பில்லியன் டாலர்கள். அன்று முதல்தான், அவருக்கு 'பேங்க் ஆஃப் இங்கிலாந்தைத் தகர்த்தவர்' என்ற பட்டப்பெயர் ஒட்டிக்கொண்டது.

கிடைக்கும் வாய்ப்புகளை நழுவ விடக்கூடாது என்பதுதான் ஜார்ஜ் சோரஸ் நமக்கு உணர்த்தும் அதிமுக்கியமான பாடம்... அதற்கு இந்த இங்கிலாந்து உதாரணம் ரொம்பவே பொருத்தம். மொத்தத்தில் சோரஸின் தத்துவம் இதுதான்-

'நீங்கள் சரியாக இருக்கிறீர்களா... தவறான திசையில் செல்கிறீர்களா என்பதல்ல முக்கியம்... சரியாக இருக்கும்போது அதிகமாகச் சம்பாதிக்கவும் தவறான பாதையில் செல்லும்போது குறைவாக இழக்கவும் தெரிந்தவராக இருக்கவேண்டும். அதுதான் முக்கியம்!'

- நிறைவடைகிறது.