தொடர்கள்

கடனைச் சொல்லுங்கள் வழியைச் சொல்கிறோம்!

உன் குழந்தை
மழைநீரில் நனையாமல்
தடுத்துவிட்டாய்
உன் கண்ணீரில் நனைகிறதே...
எப்படித் தடுப்பாய்..?

- சரியான சாலையில் சவாரி செய்யாத எந்த வாகனமும் இலக்கை அடைவதேயில்லை. அதுபோலத்தான் வாழ்க்கையும்! திட்டமிடல் இல்லாததால் மூன்று லாரிகளுக்குச் சொந்தக்காரராக இருந்த பழநியைச் சேர்ந்த துரை, இன்று சுமைகளை ஏற்றிச்செல்லும் தனது லாரியைப்போலவே ஏகப்பட்ட கடன்களைச் சுமந்துகொண்டு, கடனுக்-கும், வட்டிக்கும் இடையேயுள்ள மோசமான சாலையில் தனது வாழ்க்கை வண்டியைச் செலுத்திக்-கொண்டிருக்கிறார்.

திண்டுக்கல்லில் நம்மைச் சந்தித்த துரை, “நாணயம் விகடனில் 'கடனைச் சொல்லுங்கள்... வழியைச் சொல்கிறோம்' பகுதியைத் தொடர்ந்து படிச்சுக்கிட்டு வர்றேன். என் அஜாக்கிரதையால இதுவரைக்கும் நான் சம்பாதிச்சது எல்லாத்தையும் தொலைச்சுட்டு, இப்ப கடனை மட்டும் சுமந்துக்கிட்டிருக்கேன். நான் தொலைத்த வாழ்க்கையைத் திரும்பப் பெற நாணயம் விகடன்தான் வழிகாட்ட வேண்டும்...'' - அவர் வாய்பேசியதை விட அவருடைய கன்ன மேட்டில் வழிந்த கண்ணீர்தான் அதிகம் பேசியது.

கண்ணீரைத் துடைத்துக்கொண்டே, காலம் தனது கையைப்பிடித்து கடனுக்குள் அழைத்துச் சென்ற கதையைச் சோகத்தோடு சொல்லத் தொடங்கினார்.

''என் சின்ன வயசுல எங்க குடும்பமே வறுமையை குடிசையா போட்டுத்தான் குடியிருந்துச்சு. அதனால பத்தாவது முடிச்ச கையோட லாரி கம்பெனியில கிளீனரா வேலைக்குச் சேர்ந்தேன். கொஞ்சங்கொஞ்சமா தொழிலைக் கத்துக்கிட்டு இருபது வயசுல ஸ்டியரிங் பிடிச்சிட்டேன்... டிரைவானதும் நாலு வருஷம் வண்டியை விட்டு இறங்காம லைனுக்குப் போயிட்டேயிருந்தேன்... கையில ஓரளவு காசு சேர்ந்துச்சு. இருபத்து நாலு வயசுல கல்யாணம் முடிச்சு, இப்ப ரெண்டு பசங்க இருக்காங்க. மூத்தவன் பையன் +2 படிக்கிறான். அடுத்தது பொண்ணு. பத்தாவது படிக்கிறா.

கல்யாணம் முடிச்சதும், சம்பளத்துக்கு ஓட்டுனது போதும்னு முடிவு பண்ணி கையில இருந்த கொஞ்ச பணத்தோட, ஆட்டோ ஃபைனான்ஸ் மூலமா செகண்ட் ஹேண்ட்ல ஒரு லாரியை வாங்கினேன். சம்பளத்துக்கு டிரைவரை போடாம நானே ஓட்டு-னேன். எல்லாச் செலவும் போக மாசத்துக்கு இருபதாயிரத்திலிருந்து, முப்பதாயிரம் வரைக்கும் வருமானம் கிடைக்கும். அதுல பத்தாயிரம் ரூபாயைத் தவணைக்குக் கட்டிடுவேன். அதுபோக மீதிப் பணத்தை சேர்த்து வச்சு அடுத்த ரெண்டு வருஷத்துல சொந்தமா ஏழு சென்ட் இடம் (3,052 ச.அடி.) வாங்கி அதுல 500 ச.அடியில வீட்டையும் கட்டினேன். அப்பறம் கொஞ்சநாள்ல பக்கத்துலயே இன்னொரு பிளாட்டையும் வாங்கினேன்.

அமைதியா போயிக்கிட்டிருந்துச்சு வாழ்க்கை. திரும்பவும் ஃபைனான்ஸ் உதவியோட ரெண்டாவதா ஒரு லாரி வாங்குனேன். அதுவும் ஓரளவுக்கு நல்ல வருமானம் கொடுத்துக்கிட்டிருந்துச்சு. சம்பளத்துக்கு ஒரு டிரைவரை வச்சு அந்த வண்டியை ஓட்டிக்கிட்டிருந்தேன். ரெண்டாவது வண்டி எடுத்த ஆறாவது மாசத்திலேயே மூணாவதா ஒரு வண்டி எடுத்தேன். அங்கதான் ஆரம்பிச்சது ஏழரை. என் கட்டுப்பாட்டை இழந்து தொழில், கடன் பள்ளத்துக்குள்ள விழுந்திடுச்சு.

ஒரு வண்டியை வச்சு நானே ஓட்டிக்கிட்டிருந்தப்ப வரவு, செலவு கணக்கு கரெக்டா இருந்துச்சு. புதுசா ரெண்டு பேரைப் போட்ட பின்னாடி கணக்குல பிரச்னை. டீசல் செலவுல கூடுதலா கணக்குச் சொன்னாங்க. வண்டிக்கு அது ரிப்பேர், இது ரிப்பேருனு வருமானத்துல முக்கால்-வாசி செலவு கணக்காவே இருந்துச்சு. மூணு வண்டியும் ஃபைனான்ஸ்ல இருந்ததால மாசம் ஒவ்-வொரு வண்டிக்கும் பத்தாயிரம் வீதம் மொத்தம் முப்பதாயிரம் கட்டவேண்டியிருந்துச்சு. அது-வரைக்கும் ஒழுங்கா தவணை கட்டிட்டு வந்தேன். அதுக்குப் பின்னாடி தவணை தவறிப்போச்சு. சரி, இந்த டிரைவர்கள்தான் சரியில்லைனு புதுசா வேற டிரைவர்களை வேலைக்குச் சேர்த்தேன். அதோட இன்னொரு தப்பையும் செஞ்சிட்டேன். அதுவரைக்கும் நான் ஓட்டிக்கிட்டிருந்த லாரிக்கும் ஒரு டிரைவரைப் போட்டுட்டு நிர்வாகத்தை மட்டும் பாத்துக்கிட்டேன். திரும்பவும் காளான் மேல இடி விழுந்த மாதிரி மூணு வண்டியும் நஷ்டக் கணக்கு காட்ட ஆரம்பிச்சிருச்சு. இதுக்கு இடையில வருஷத்துக்கொரு தரம் ஒவ்வொரு வண்டிக்கும் வரி, இன்ஷூரன்ஸ், கட்டவேண்டிய தவணைனு கடன் ஏறிக்கிட்டே இருந்துச்சு. நான் சுதாரிக்கிறதுக்குள்ள கிட்டத்தட்ட ஏழரை லட்ச ரூபா கடனாயிருச்சு. என்ன பண்றதுன்னே தெரியலை.

நான் முதன்முதல்ல வாங்கின வண்டிய மட்டும் வச்சுக்கிட்டு மத்த ரெண்டு வண்டியையும் வித்துட்டேன். ரெண்டு வண்டி வித்த காசு, ஃபைனான்ஸ்ல கட்டவேண்டிய தவணை, அதுக்கான வட்டிக்கே பத்தலை. இடையில அப்பாவுக்கு ஆஸ்பத்திரிச் செலவு, பிள்ளைகளோட படிப்பு, குடும்பச் செலவுனு கூடிப்போனதால வீட்டுப் பத்திரத்தை அடமானமா வச்சு ரெண்டு லட்சம் ரூபாயை, மூன்று ரூபாய் வட்டிக்கு வாங்கினேன், அது இல்லாம வொர்க்ஷாப் கடன், டயர் கடை கடன் என வெளிக்கடன் மூணு லட்ச ரூபாய் வரைக்கும் இருக்கு. வண்டி வித்துட்டதால கடன் கொடுத்தவங்க பணம் கேட்க ஆரம்பிச்சுட்டாங்க. வேற வழியில்லாம தெரிஞ்சவங்ககிட்ட ரெண்டு வட்டிக்கு வாங்கி மூணு லட்ச ரூபாய் கடனை அடைச்சேன்.

நான் இப்ப வச்சிருக்கிற லாரி மேல ரெண்டரை லட்சத்துக்கு ஃபைனான்ஸ் இருக்கு. இதுக்காக மாசத்தவணை பத்தாயிரம் கட்டிக்கிட்டிருக்கேன். இப்ப திரும்பவும் நானே லாரியை ஓட்டுறதால மாசத்துக்கு இருபதிலிருந்து இருபத்தஞ்சாயிரம் வரைக்கும் வருமானம் கிடைக்குது. இதுல வண்டி தவணை பத்தாயிரம், வீட்டு அடமான கடனுக்கான வட்டி ஆறாயிரம், தெரிஞ்சவங்ககிட்ட வாங்குன கடனுக்கான வட்டி ஆறாயிரம்னு மொத்தம் மாசத்துக்கு இருபத்திரெண்டாயிரத்தை கடனுக்காகக் கட்டிக்கிட்டிருக்கேன். என் மனைவி குடும்பச் செலவுகளைக் குறைத்து சிக்கனமாக செலவு செய்யறதோட, வீட்டுச் செலவுக்கு என்கிட்ட பணம் கேட்பதில்லை. வீட்ல ரெண்டு பசுமாடு இருக்கு. பசுமாட்டு பால் மூலமா கிடைக்கிற பணத்தை வச்சு குடும்பத்தை ஓட்டிக்கிட்டிருக்காங்க.

இப்ப என்கிட்ட வீடு கட்டுனது போக மிச்சமிருக்கற இடத்தோட மதிப்பு ஒன்றரை லட்ச ரூபாய். அதோட வேற இடத்துல ஒன்றரை லட்சத்துக்கு இன்னொரு பிளாட் இடம் இருக்கு. வீட்டோட மதிப்பு மூணு லட்சம். லாரியோட மதிப்பு மூன்றரை லட்சம்... இவ்வளவுதான் என்கிட்ட இருக்கிற சொத்து. என் பேருலயோ, குடும்பத்து உறுப்-பினர்கள் பேருலயோ எந்த பாலிசியும் இல்லை. பிள்ளைகளை மேற்கொண்டு படிக்க வைக்க என்ன செய்யறதுன்னே தெரியலை. இவ்வளவு-தான் எங்கதை. நாணயம் விகடன் காட்டுற வழி என் பிரச்னைக்கு நிச்சயமா தீர்வாக இருக்கும்னு நம்புறேன்” என்றார் துரை.

துரை குடும்பத்துக்கு நிதி ஆலோசனை சொல்கிறார் ஆக்சஸ் வங்கியின் நிதி ஆலோசனைப் பிரிவின் தென்மண்டல துணைத் தலைவரும், நிதி ஆலோசகருமான பத்ரிநாதன்.

இன்ஷூரன்ஸ் அவசியம் துரை எவ்வளவு கடனில் இருந்தாலும் முதலில் அவர் இன்ஷூரன்ஸ் எடுக்கவேண்டும். அவர் லாரி ஓட்டும் தொழிலில் இருப்பதால் அவருடைய குடும்பப் பாதுகாப்புக்கு இது உதவும். ஏற்கெனவே தன் அப்பாவுக்கு மருத்துவச் செலவு செய்திருக்கிறார். இனி வரும் காலங்களில் இது போன்ற செலவுகளைச் சமாளிக்க மெடிக்ளைம் எடுப்பது அவசியம். பதினைந்து வருடத்துக்கான பதினைந்து லட்ச ரூபாய்க்கான டேர்ம் பாலிசி எடுக்-கலாம். இதற்கு ஓராண்டு பிரீமியமாக தோராயமாக ஒன்பதாயிரம் ரூபாய் கட்டவேண்டியது இருக்கும்.

லாரிக்கான கடன் தற்போது உள்ள லாரிக்-கான கடன் இன்னும் ஒன்றரை வருடத்தில் முடி--வடைந்துவிடும் என்பதால் இந்தக் கடனை அடைக்க வெளியில் வேறு எந்தக் கடனும் வாங்கத் தேவை-யில்லை.

வீட்டு அடமானக் கடன் வெளி ஆட்களிடம் 36% வட்டிக்கு வீட்டு அடமானக் கடன் வாங்கி இருக்கிறார். இந்தக் கடனை திருப்பிச் செலுத்த எளிமை-யான வழி, வங்கிகளை அணுகி வீடு அடமானக் கடன் வாங்குவதுதான். வங்கியில் வீடு அடமானக் கடன் 12-13 சதவிகிதத்தில் கிடைக்கிறது. இப்போது துரை வீட்டின் மதிப்பு 3 லட்சம் என்பதால் 80% அளவாக 2.4 லட்சம் வீட்டுக் கடன் கிடைக்கும். அதனைக்கொண்டு வீடு அடமானக் கடனை திருப்பிச் செலுத்திவிடலாம். வங்கியில் வாங்கும் கடனுக்கு மாதத் தவணையாக சுமார் 2,500 ரூபாய் வரும். இதன் மூலம் 3,500 ரூபாய் மிச்சமாகும்.

இதர கடன்களை திருப்பிச் செலுத்துதல் 24% வட்டிக்கு மூன்று லட்ச ரூபாயை பலரிடமும் வாங்கி இருப்பதாகச் சொல்லி இருக்கிறார் துரை. தற்போது வீடு கட்டியது போக மீதமுள்ள வீட்டுமனை மற்றும் மற்றொரு வீட்டுமனையும் இருக்கிறது. இதன் மதிப்பு மூன்று லட்சம் என்று சொல்லி இருக்கிறார். இதனை விற்றால் கிடைக்கும் தொகையைக் கொண்டு மூன்று லட்ச ரூபாய் கடனையும் திருப்பிச் செலுத்திவிட வேண்டும். இவ்வாறு திருப்பிச் செலுத்தினால் இவர் செலுத்திவரும் வட்டி ஆறாயிரம் மிச்சமாகும்.

இரண்டு கடன்களையும் திருப்பிச் செலுத்துவதோடு, கொஞ்சம் முயற்சித்தால் ஒவ்வொரு மாதமும் சுமார் பத்தாயிரம் ரூபாய் வரையில் சேமிக்க முடியும். இந்த சேமிப்பை எஸ்.ஐ.பி. முறையில் ரிஸ்க் குறைந்த பங்கு சார்ந்த திட்டங்களில் (டி.எஸ்.பி. மெரில் லிஞ்ச் டைகர் ரெகுலர், ரிலையன்ஸ் குரோத் ஃபண்ட், சுந்தரம் செலக்ட் மிட்கேப், ஹெச்.டி.எஃப்.சி. ஈக்விட்டி ஃபண்ட், டாடா இன்ஃப்ராஸ்ட்ரக்ச்சர் ஃபண்ட்) முதலீடு செய்து வரலாம்.

மகன் மற்றும் மகளின் படிப்பு துரையின் மகன் இப்போது பிளஸ் டூ படிக்கிறார். அடுத்த ஆண்டே அவர் கல்லூரியில் சேரவேண்டும் என்பதால் கல்விக் கடனைப் பயன்படுத்திக் கொள்வதுதான் சரியாக இருக்கும். மேலும் மகளின் உயர்படிப்புக்கு இன்னும் சில ஆண்டுகள் இருப்பதால் அப்போது மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்துவருவதின் ஒரு பகுதியைப் பயன்படுத்திக்கொள்ளலாம். மேலும் பிள்ளைகளின் திருமணத்துக்கும், துரையின் ஓய்வுக்-காலத்துக்கும் மியூச்சுவல் ஃபண்டின் முதலீடு பயன்படும் வகையில் பார்த்துக்கொள்ள வேண்டும்.

ரிஸ்க் வேண்டாம் இனி வரும் காலங்களில் துரை தொழிலை மேம்படுத்துவதற்காக வெளிஇடங்களில் கடன் வாங்குவதைத் தவிர்த்து பொதுத்துறை வங்கிகளை அணுகி கடன் பெறலாம். இதன் மூலம் வட்டி-யும் குறையும், தேவையில்லாமல் ரிஸ்க்கும் எடுக்க வேண்டியதில்லை.

- சக்திவேல் முருகன்
படம் ம.அமுதன்

- ஆர்.குமரேசன்