என் பணம்... பணம்!

''வால்ட் டிஸ்னி நிறுவனத்தில் இசையமைக்கும் ஒப்பந்தம்... ஒரு குண்டூசி முனையளவு இடம் மில்லியன் டாலர் அளவுக்கு விலை போகும் அமெரிக்காவின் மன்ஹாட்டன் பகுதியில் நான்கு பெட்ரூம் அபார்ட்மென்ட்... பென்ஸ், பி.எம்.டபிள்யூ என்று வேளைக்கு ஒரு கார்' - இது என் அமெரிக்க வாழ்க்கை!

உல்லாசத்தின் உச்சத்தில் இருந்தேன். பணம் என்னிடம் நிரம்பி வழிந்தது. நினைத்தால் எதையும் வாங்கலாம் என்ற நிலையில் இருந்தேன், அப்போது பணத்தை நான் ஒரு பொருட்டாக நினைக்கவே இல்லை.

அதே அமெரிக்காவில் அரை டாலர்கூட இல்லாமல் வீட்டை இழந்து, காரை இழந்து தெருவில் நிற்கும் நிலையும் வந்தது. வால்ட் டிஸ்னியில் இசை ஒப்பந்தம் முடிந்திருந்த நேரம்... அதீத நம்பிக்கையோடு நான் செய்த முதலீடு மொத்தமாக வாரிக்கொண்டு போக, மீண்டும் வாழ்க்கையை முதலில் இருந்து ஆரம்பிக்கும் நிலைக்கு வந்தேன். இப்போது பணம் என்னை ஒரு பொருட்டாக நினைக்கவில்லை.

அமெரிக்காவிலேயே இரண்டு விளிம்புகளையும் பார்த்துவிட்டதால், இந்தியாவுக்குத் திரும்பும்போது

வெறும் இசையை மட்டும் எடுத்துக்கொண்டு வந்தேன். கடவுளின் ஆசியாலும், ஹாரீஸ் ஜெயராஜ் சார் அன்பாலும் தமிழ் சினிமா என்னை பின்னணிப் பாடகனாக அடையாளம் கண்டுகொண்டிருக்கிறது.

என் தந்தை ஒரு பேங்க்கர்... அவர் அடிக்கடி சொல்வார். 'பணம் ஒரு மகாலட்சுமி... நாம் மரியாதை கொடுத்தால் அது நம்முடனேயே தங்கும் என்று!' இப்போது மகா-லட்சுமி என்னை நோக்கித் திரும்பியிருக்கிறாள், நானும் மரியாதையோடு வரவேற்கக் காத்திருக்கிறேன். இந்தமுறை தெளிவாக முதலீடு செய்யவேண்டும் என்ற திட்டத்தோடு!''

- எம்.எஸ்.தீபதர்ஷினி