நாணயம் விகடன் LKG இணைப்புகள்

மியூச்சுவல் ஃபண்ட்

காலத்தை கி.மு., கி.பி-னு பிரிக்கிற மாதிரி வாழ்க்கையையும் மி.மு., மி.பி-னு, இரண்டுவிதமாப் பிரிக்கலாம். அது என்ன... மி.மு., மி.பி.! ஒட்டுமொத்தமா அதைப்பற்றித்தான் பார்க்கப் போகிறோம்.

எப்படி எப்படியோ கஷ்டப்பட்டு முன்னேறி, வாழ்க்கையில் ஓரளவுக்கு செட்டில் ஆயாச்சு... இப்போ அடிப்படைத் தேவையை விட கொஞ்சம் அதிகமாகவே வருமானம் வருது. அந்தப் பணத்தை என்ன செய்யலாம்?

உங்க தாத்தா காலமா இருந்தா டிரங்குப் பெட்டியில பத்திரமா பூட்டி வெச்சிருப்பார்.

உங்க அப்பா காலமா இருந்தா 'போஸ்ட் ஆபீஸிலும், பேங்க்கிலும் பணத்தைப் போடுடா'னு மீசையை முறுக்கியிருப்பார். உங்க அம்மா தங்கத்தில் போடச்-சொல்லி ஒட்டியாணமும் கம்மலுமா சேர்த்திருக்கும்!

ஆனா, இது உங்க காலம்... வியர்வை சிந்தி நீங்க உழைச்ச பணம் ஒரு கட்டத்துக்குப் பிறகு உங்களுக்குச் சம்பாதித்துப் போடவேண்டாமா..?

இப்போதைக்கு ரியல் எஸ்டேட் நல்ல முதலீடுனு சொல்றாங்க. கரெக்ட்தான்... ஆனா, அதெல்லாம் லட்சக்கணக்கில் பணம் போடுற-வங்களுக்கு... நாம தேடுறது, மாதச் சம்பளத்தில் மிச்சமாகும் சில ஆயிரங்களை எதில் போடலாம்னு!

உங்க அப்பா சொன்ன மாதிரி பேங்க்கோ, போஸ்ட் ஆபீஸிலோ, உங்க அம்மா கேட்டது போல தங்கத்திலோ பணத்தைப் போட்டிருந்தா என்னாகியிருக்கும். சும்மா ஒரு கணக்குப் பாருங்க...

2003, மார்ச் 31-ம் தேதி 10 கிராம் (24 கேரட்) தங்கத்தோட விலை 5,310 ரூபாய். அப்போ ஒரு லட்சம் ரூபாயை தங்கத்துல முதலீடு செஞ்சிருந்தா அவருக்கு சுமார் 188 கிராம் சுத்தத் தங்கம் கிடைச்சிருக்கும். 2008, மார்ச் 10-ம் தேதி நிலவரப்படி அதோட மதிப்பு 2,35,781 ரூபாயா இருந்திருக்கும். அதே தொகையை பேங்க்கில் ஃபிக்ஸட் டெபாசிட்டில் போட்டிருந்தா இதைவிடக் குறைவாத்தான் கிடைச்சிருக்கும்.

இதெல்லாம் இல்லாம ஒரு சேமிப்பு வழி இருக்கு. அந்தக் கணக்கைப் பார்த்தா தெரியும், அது எத்தனை சூப்பர்னு!

அதே ஒரு லட்சத்தை ஆரம்பித்த நாளிலிருந்து சிறப்பாகச் செயல்பட்டுக்கொண்டிருக்கும் ரிலையன்ஸ் குரோத்ங்கிற மியூச்சுவல் ஃபண்ட் திட்டத்துல 2003, மார்ச் 31-ல் (என்.ஏ.வி. 28.28 ரூபாய்) போட்டிருந்தா, 2008 மார்ச் 10-ல் கிடைச்சிருக்கக்கூடிய தொகை எவ்வளவு தெரியுமா? சுமார் 11,89,065 ரூபாய்! பணமும், காலமும் அதே அளவு... லாபம் மட்டும் ரொம்ப ரொம்ப ஜாஸ்தி.

அதான் மியூச்சுவல் ஃபண்ட்! தமிழில் பரஸ்பர நிதி.

சிம்பிளாச் சொல்லணும்னா பலபேர்கிட்ட பணத்தை வசூலிச்சு, அதை எதில் முதலீடு செஞ்சா நிறைய லாபம் கிடைக்குமோ... அதுல செஞ்சு பணத்தைச் சம்பாதித்துக் கொடுப்பதுதான் மியூச்சுவல் ஃபண்ட்!

வங்கிகள், பெரிய பெரிய கார்ப்பரேட் நிறுவனங்கள், நிதி நிறுவனங்-கள்னு பலர் இந்த மியூச்சுவல் ஃபண்டுகளை நடத்துறாங்க.

இருதரப்புக்கும் லாபம்ங்கிற அர்த்தத்தில்-தான் 'மியூச்சுவல் ஃபண்ட்'னு பெயரே வந்திருக்கு. அதனால நிச்சயம் கட்டணம் உண்டு. ஆனா, அது பயமுறுத்தும் அளவுக்கு இருக்காது. சில திட்டங்கள்ல நுழைவுக் கட்டணம் (Entry Load), 1-3% அளவுக்கு இருக்கும். சில திட்டங்கள்ல நுழைவுக் கட்டணமே கிடையாது. இடைத்தரகர்கள் யாரும் இல்லாம நேரடியா மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள், அதோட கிளை அலுவலகங்கள்ல முதலீடு செஞ்சாலும் நுழைவுக் கட்டணம் கிடையாது. சில திட்டங்கள்ல முதிர்வுக் காலத்துக்கு முன்னாடியே பணத்தை எடுத்தா, 0.5-3% அளவுக்கு வெளியேறும் கட்டணம் (Exit Load) செலுத்தணும்.

நிறைய லாபம் கிடைக்கிற இடத்தில் அவங்க முதலீடு செஞ்சு லாபத்தைக் கொடுப்பாங்கன்னா, நாமே, ஏன் நேரடியா செஞ்சுக்கக் கூடாது... இவங்களுக்கு எதுக்கு நாம காசு கொடுக்கணும்?

நியாயமான கேள்வி...

ஆனா, அதிக லாபம் கிடைக்கணும்கிறதுக்ககாக மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள் பங்குச் சந்தையில கொண்டுபோய் பணத்தைப் போடுவாங்க.. உங்களால் அது-முடியுமா..? கண்-கொத்தியாக கவனிக்கலைனா, கஷ்டமாயிடும்னு பெரியவங்க சொல்லியிருக்காங்க. நாம வேலை பார்க்கிறதா... இல்லை, முதலீடு என்ன ஆச்சோனு அது பின்னால ஓடிக்கிட்டிருக்கறதா..?

அதுக்குப் பதிலா பேசாம மியூச்சுவல் ஃபண்ட் கம்பெனிகள்ட்ட பணத்தைக் கொடுத்துட்டு, அவங்க தர்ற டிவிடெண்டை வாங்கிட்டுப் போயிட்டே இருக்கலாம்.

இதுல இன்னொரு ரிஸ்க்கும் கம்மி... நாம கொடுக்கிற பணத்தை பல திட்டங்கள்ல பிரிச்சு அவங்க முதலீடு செய்றாங்க. ஒண்ணுல லாபம் குறைஞ்சாலும் இன்னொண்ணு லிஃப்ட் பண்ணி விட்டுரும். அதனால, முதலுக்கே மோசமாயிடுமோங்கிற கவலையும் நமக்கு இருக்காது.

சும்மா, காலையில பத்து நிமிஷம், அப்படி இப்படி கம்ப்யூட்டரைத் தட்டி, போட்ட பணம், என்.ஏ.வி. இதெல்லாம் எப்படிப் பெருகியிருக்குதுனு பார்த்துட்டு, அடுத்த வேலையைப் பார்க்கப் போயிடலாம்.

ஷேர் மார்க்கெட்டுல நேரடியாக நுழைஞ்சு நம்மோட திறமையின்மையால கையைச் சுட்டுக்கிடற நிலைமை எல்லாம் இதுல கிடையாது. ஆரம்பத்துல நமக்குப் பிடிச்ச திட்டத்தை செலக்ட் பண்றப்போ மட்டும் கொஞ்சம் அலர்ட்டா இருந்துட்டா, மார்க்கெட்டுக்கு சமமா லாபம் பார்க்கலாம்.

நம்ம ரேஞ்ச் என்ன... எதுவரைக்கும் ரிஸ்க் எடுக்கலாம்ங்கிறதையும் முன்கூட்டியே தீர்மானிச்சுக்கலாம். ஒருவேளை நம்ம முதலீடு சரியான டைரக்ஷன்ல போகலையோன்னு சந்தேகம் வந்தா ஈஸியா எஸ்கேப் ஆகி வெளிய வந்துடலாம்.

ரியல் எஸ்டேட் மாதிரி மொத்தமா முதலீடு செய்யணும்ங்கிற அவசியம் இல்லை. மாசா மாசம் ஒரு தொகையை முதலீடு செய்ய-லாம். சில திட்டங்கள்ல (இ.எல்.எஸ்.எஸ்.) நாம பண்ற முதலீட்டுக்கு வருமான வரி பிரிவு 80-சியின் கீழ் விலக்கும் கிடைக்கும்.

மாசா மாசம் ஆயிரம் ரூபாயை மியூச்சுவல் ஃபண்ட் திட்டத்துல போடலாமானு நீங்க யோசிச்சாலே போதும், 'சார்... ஏதோ முதலீடு பத்தி யோசிச்சீங்க போலிருக்கு'னு எதிரே ஒரு ஆள் வந்து நின்னுடுவார். அந்த அளவுக்கு துடிப்பா இருக்கிறாங்க மியூச்சுவல் ஃபண்ட் ஆளுங்க. ஒரு வார்த்தை சொன்னால் நம் வீட்டுக்கே ஓடிவரத் தயாராக இருக்கிறார்கள் ஏஜென்டுகள்.

தமிழ்நாட்டுல இருக்கிற பெரும்பாலான சிட்டிகள்ல இவங்களோட சர்வீஸ் இருக்குது. ஷேர் புரோக்கிங் ஆபீஸ்கள்லயும் மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டைச் செய்யமுடியும். யூ.டி.ஐ. மாதிரியான அரசு நிறுவனங்களோட மியூச்சுவல் ஃபண்டுகளை போஸ்ட் ஆபீஸ்களிலேயே வாங்க-லாம். வங்கிகள் நடத்தும் மியூச்சுவல் ஃபண்டுகளை, அந்தந்த வங்கி-யிலேயே வாங்கலாம். மியூச்சுவல் ஃபண்ட் கம்பெனிக்கே நேரடியாப் போயும் முதலீடு செய்யலாம். அல்லது அவங்களோட வெப்சைட்டுக்குப் போயும் முதலீடு செய்யலாம்.

'யாரைப் பார்க்கணும்னு சொல்லிட்டீங்க... எங்க பார்க்கணும்னும் சொல்லிட்டீங்க... அடுத்து எப்படிப் பணம் போடுறதுனும் சொல்லிடுங்க!'னு கேக்கிறீங்களா?

இப்போ எதுல முதலீடு பண்றதா இருந்தாலும் பான் கார்டு கண்டிப்பா வேணும்னு நம்ம நிதியமைச்சர் சொல்லிட்டாரு. அதனால, முதல்ல பான் கார்டு வாங்கிக்கிடணும். ஓகே... அடுத்தகட்டமா ஃபண்ட்டை செலக்ட் பண்ணணும். ஆனா அது அவ்வளவு லேசுப்பட்ட காரியமில்ல... முப்பது நாற்பது ஃபண்ட் கம்பெனிகள் நடத்திக்கிட்டிருக்கும் 700-க்கும் மேற்பட்ட ஸ்கீம்கள்ல இருந்து நமக்கு ஏத்தது எதுனு கண்டுபிடிக்கணும்.

அடிப்படையில இரண்டு விதமா ஃபண்ட் கிடைக்கும். இப்போதுதான் சந்தையில் அறிமுகமாகும் திட்டம். அதுக்கு என்.எஃப்.ஓ. (New Fund Offer) னு

பெயர். இன்ணொண்ணு ஏற்கெனவே நடப்புல இருக்கிற திட்டம். இந்தவகைத் திட்டத்துல முதலீடு செய்ய-ணும்னா, மார்க்கெட்டுல அதோட யூனிட்டுக்கு என்ன மதிப்போ... முப்பது ரூபாயோ, நாற்பது ரூபாயோ, நூறு ரூபாயோ எதுவோ அதைக் கொடுத்து யூனிட்டுகளை வாங்கணும். புது ஃபண்டுன்னா அந்த யூனிட் மதிப்பு 10 ரூபாயா இருக்கும்.

என்.ஏ.வி. (Net Asset Value)... ஃபண்ட் உலகத்துல இதை உச்சரிக்காத உதடுகளே இருக்காது. 'நிகர சொத்து மதிப்பு'னு தமிழ்ல சொல்லலாம். ஒரு மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்தோட அன்றைய தினத்தின் மொத்த சொத்து மதிப்பை,

அதனுடைய மொத்த யூனிட்டுகளால் வகுத்தால் கிடைக்கிறதுதான் என்.ஏ.வி. இந்தத் தொகையின் அடிப்படையிலதான் யூனிட்டுகளை விற்பாங்க. வாங்குறதுக்கும், விற்கிறதுக்கும் இடையே என்.ஏ.வி-யில் எவ்வளவு மாற்றம் ஏற்பட்டிருக்குனு பார்ப்பாங்க. அதுதான் லாப நஷ்டத்தைக் கணக்கிட உதவுற கருவி. ஒரு ஃபண்ட்டோட என்.ஏ.வி. 25 ரூபாயா இருந்த சமயத்துல அதுல 10,000 ரூபாய்க்கு முதலீடு செய்றீங்கனு வச்சுக்கிடுவோம்... அந்தத் திட்டம் ஒரு ஓப்பன் எண்டட் திட்டம்னும் (பயப்படாதீங்க. இதைப்பத்தி பின்னாடி கத்துக்கிடுவீங்க) அதுக்கு 2.5% நுழைவுக் கட்டணம்னும் வச்சுக்கிடுவோம்... அப்படின்னா நாம கொடுத்த 10,000-க்கு 390 யூனிட்டுகள் கிடைக்கும். ஒரு வருஷம் கழிச்சுப் பார்க்கிறீங்க... அந்த ஃபண்ட்டோட என்.ஏ.வி. 44.50 ரூபாய்க்கு எகிறிடுச்சு. இப்போ உங்க கணக்குல 17,355 ரூபாய் இருக்கும். அப்படின்னா லாபம், 7,355 ரூபாய். இதைவிட அதிகமாவோ, குறைவாவோ கிடைக்கவும் வாய்ப்பு இருக்கு. அது அப்பப்போ இருக்கிற நிலைமையைப் பொறுத்தது. அதுவே நாம சேர்ந்தது புதுத் திட்டத்துல என்றால் ஆரம்ப என்.ஏ.வி. 10 ரூபாயா இருக்கும்.

இப்போ உங்க மூளைக்குள்ள பளிச்னு ஒரு மின்னல் வெட்டியிருக்குமே! நூறு ரூபா கொடுத்து பழைய திட்டத்தோட ஒரு யூனிட்டை வாங்கறதை விட, பத்து ரூபாய் கொடுத்து புது ஃபண்டை வாங்கறதுதானே புத்திசாலித்தனம்னு ஒரு யோசனை வந்திருக்குமே!

பழைய திட்டம் எப்படிச் செயல்படும், எப்படி லாபம் சம்பாதிக்கும்னு நமக்கு நல்லாத் தெரியும். ஏன்னா, பழைய சரித்திரம்னு ஒண்ணு இருக்கு அதுக்கு! ஆனா, புதுசா சந்தைக்கு வர்ற திட்டம் எப்படிச் செயல்படும்னு யாருக்கும் தெரியாது. அதனால, பத்து ரூபாய்க்கு கிடைக்குதுங்கிறதுக்காக அது லாபமும் இல்லை, நூறு ரூபாய்க்குக் கிடைக்குதுங்கிறதால அது நஷ்டமும் இல்லை.

சிலசமயம், புது ஃபண்ட் நல்லவிதமாகப் போகலாம், அதைத் தெரிஞ்சுக்கிட்டு முதலீடு செய்யணும். அதுதான் முக்கியம்! ஆனால், நல்லதோ, கெட்டதோ சில திட்டங்கள்ல புதுசா வரும்-போது மட்டும்தான் முதலீடு செய்யமுடியும்.

ஃபண்டுகளில் இரண்டுவிதம் இருக்கு. ஒண்ணு, ஓப்பன் எண்டட். இதுல எப்போ வேணும்னாலும் பணத்தைப் போடலாம், எடுக்கலாம். இன்ணொண்ணு குளோஸ்ட் எண்டட். இதுல பணத்தைப் போட்டா அதனோட முதிர்வின்போதுதான் எடுக்கமுடியும். (குறிப்பிட்ட கால இடைவெளியில் பணத்தை எடுக்க நிறுவனங்களே வாய்ப்புக் கொடுக்கும் திட்டங்-களும் உண்டு) அதேபோல திட்டம் ஆரம்பிக்கப்படும்போதுதான் முதலீடு செய்யமுடியும். பொதுவாக குளோஸ்ட் எண்டட் திட்டத்துல மூணு வருஷத்துக்கு போட்டதை எடுக்கமுடியாது.

சரி, ஏதோ ஒண்ணுல நாம முதலீடு செஞ்சாச்சு. நாம முதலீடு செஞ்ச தொகை வளரும்போது, லாபத்தை நமக்கு பிரிச்சுக் கொடுப்பாங்க. அப்படி கொடுக்கிறதுல டிவிடெண்ட், குரோத் அப்படினு இரண்டு முறைகள் இருக்கு. இடையில பணம் தேவைன்னு நினைக்கிறவங்க டிவிடெண்ட் ஆப்ஷனை செலக்ட் செஞ்சுக்கிடணும். கடைசியில மொத்தமாக் கிடைச்சா போதும்னு நினைச்சா குரோத் ஆப்ஷனை எடுத்துக்கிடலாம்.

எல்லாத்துக்குமே 'முடிவு'னு ஒண்ணு வேணுமில்லையா..? மியூச்சுவல் ஃபண்ட்டைப் பொறுத்தவரைக்கும் பணத்தை எவ்வளவு காலத்துக்கு விட்டுவைக்கலாம் அப்படிங்கிற முடிவும், 'எனக்கு இவ்வளவு லாபம் கிடைச்சா போதும்'ங்கிற இலக்கும் ரொம்ப முக்கியமானது. பஸ்ல போறோம்... அதுபாட்டுக்கு போய்க்கிட்டுத்தான் இருக்கும். நாம, நம்மோட ஸ்டாப் வந்ததும் இறங்கிடுறோம் இல்லையா..? அதேதான். நாம போட்ட பணம், நாம நினைச்ச அளவுக்குப் பெருகிடுச்சுனா 'டாடா பை... பை...' சொல்லிட்டு வெளியேறிட வேண்டியதுதான். அதே மாதிரி இன்னொரு விஷயமும் ரொம்ப முக்கியம். ' நம்மால் எந்த அளவுக்கு ரிஸ்க் எடுக்க முடியும்?' அப்படிங்கிறதையும் தெளிவா தீர்மானிச்சுக்கிடணும்.

'வரலாறு மிக முக்கியம் அமைச்சரே...' 23-ம் புலி-கேசி படத்துல வடிவேலு சொல்வாரே... அதேதான்! அவர் காமெடிக்குச் சொல்வார். ஆனா இங்க நிஜ-மாகவே வரலாறு முக்கியம். அதாவது ஒரு ஃபண்ட், கடந்த காலங்கள்ல நல்ல லாபம் தந்திருக்கானு பார்க்கணும். அதேமாதிரி அந்தக் குறிப்பிட்ட ஃபண்டை வழிநடத்திக்கிட்டு போற தளபதியான ஃபண்ட் மேனேஜர், அதுக்கு முன்னாடி நிர்வகிச்ச திட்டங்கள் நல்ல லாபம் கொடுத்திருக்கானும் பார்க்கணும். அந்த ஃபண்டுகள் லாபம் தந்திருந்தா, இப்போ நிர்வகிக்கிறதும் லாபம் கொடுக்கும்னு நம்ப-லாம். இதைத் தவிர, நம்மகிட்ட

வசூலிக்கிற பணத்தை மியூச்சுவல் ஃபண்ட் கம்பெனிகள் எந்தத் துறைப் பங்குகள்ல முதலீடு செய்யப்போறதாச் சொல்றாங்களோ, அந்தத் துறைக்கு எதிர்கால வளர்ச்சி இருக்குதானு பார்க்கிறதும் முக்கியம். நல்ல ஃபண்ட்டைப் பற்றின விஷயங்கள் பத்திரிகை, டி.வி. இன்டர்நெட் எல்லாத்துலயும் ஏராளமா கிடைக்கும். அதையும் படிச்சு தெரிஞ்சுக்கிடலாம். கடைசியில நம்ம தேவைக்கு எது பொருந்துதோ அதை செலக்ட் செய்யறதுதான் புத்திசாலித்தனம். இதுபோக வழங்குப் பத்திரத்திலும் நிறைய தகவல்கள் இருக்கும். ஃபண்டில் முதலீடு செய்யும்போது இந்த வழங்குப்- பத்திரம் (Offer Document) கொடுப்பாங்க. அதையும் கவனமாப் படிச்சிடணும்.

இருக்கே. அதுக்குப் பேர் எஸ்.ஐ.பி. அதாவது சிஸ்டமேட்டிக் இன்வெஸ்ட்மென்ட் பிளான் (Systamatic Investment Plan). இது மூலமா மாசம் நூறு ரூபாய் கூட முதலீடு செய்யலாம். அதுக்காக ஒவ்வொரு மாசமும் நூறு ரூபாய் மட்டும்தான் கட்ட முடியும்னு நினைக்க வேண்டாம். கூடுதலாவும் கட்டலாம். குறையவும் கட்டலாம். (நிறுவனங்கள் தரும் வாய்ப்பைப் பொறுத்தது) அப்பப்போ கொஞ்சம், கொஞ்சமா முதலீடு செய்றதால மார்க்கெட்டோட ஏற்ற, இறக்கத்தை சமன் செஞ்சு, சீரான வருமானத்தைப் பெறலாம். இதுதான் எஸ்.ஐ.பி-யோட ஸ்பெஷல்! மாதச் சம்பளக்காரங்களுக்கு ரொம்ப ஏற்ற முறை!

அதெல்லாம் இல்லாமலா! வரிச்சலுகைக்காகவே உள்ள இ.எல்.எஸ்.எஸ். திட்டத்துல முதலீடு செஞ்சா, அதுக்கு வருமான வரி பிரிவு 80-சி கீழ் ஒரு லட்ச ரூபாய் வரை வரிச் சலுகை உண்டு.ஃபண்ட்டோட லாபத்தை டிவிடெண்டா பிரிச்சுக் கொடுப்பாங்க. இதுக்கும் வரி கிடையாது. முதலீட்டை ஒரு வருஷம் கழிச்சு எடுத்தால், அதுக்கும் வரி கிடையாது. ஆனா அதுக்கு முன்னாடி எடுத்தால் 15 சதவிகிதம் (01-04-2008-லிருந்து) வரி உண்டு.

'அது சரி! அதுக்காக ஒரேயடியா அப்படி இருந்துடலாமா? நம்மளோட பணமில்லையா... அக்கறை எடுத்துக்கிட்டால் நல்லதுதானே.. இரண்டு மாசத்துக்கு ஒரு முறையாவது போட்ட பணம் என்னாச்சுனு எட்டிப் பார்த்துடறது உத்தமம். பங்கு சார்ந்த மியூச்சுவல் ஃபண்டில் போட்டிருந்தால், மார்க்கெட் ஏறும்போதும் இறங்கும்போதும் ஃபண்ட் மேல ஒரு கண் வச்சிருக்கணும். பணத்தைப் போட்டுட்டு ஒரு சில மாசத்துலயே திரும்ப எடுத்தா, நுழைவுக் கட்டணம், வெளியேறும் கட்டணம், வரி அது, இதுனு போட்டுத் தாளிச்சிடுவாங்க. அதனால ஒரு ஸ்கீம்ல இருந்து வெளியேறுகிறோம்னா அதுக்கு முன்னாடி இந்தக் கட்டணங்கள் எல்லாம் போக, லாபம் மிஞ்சுதானு பார்த்துட்டுதான் வெளியேறணும்.

அப்புறம் ஏதோ இன்ஜினீயரோட நோட்டுப் புத்தகத்துல இருக்கிற மாதிரி அப்பப்போ ஏதா-வது கிராஃப் எல்லாம் போட்டுக்காட்டி பயமுறுத்துவாங்க. அதைப்பத்தியெல்லாம் ரொம்ப கவலைப்படாதீங்க! கொஞ்ச நாளானா எல்லாம் தானே புரிய ஆரம்பிச்சிடும். அடுத்ததா மார்க்கெட்டுக்கு ஜலதோஷம் பிடிச்சா மியூச்சுவல் ஃபண்ட் தும்மல் போடும். அதுக்காக கை கால் எல்லாம் தந்தி அடிக்கவேண்டாம். இந்த மாதிரியான சமயத்துல ஃபண்ட் மேனேஜர் பார்த்துக்கிடுவார்.

அப்புறம், 'இவ்வளவு பெரிய கம்பெனிங்குறீங்க.. எங்க ஊர்ல ஒரு ஆபீஸ்கூட இல்லையே..?' ங்கிற மாதிரியான சந்தேகம் வரலாம். மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள், வங்கிகளைப் போல ஊருக்கு ஊர் கிளைகள் வச்சுக்கிடறதில்லை. அப்படியெல்லாம் வச்சா, நாம் போடுற பணத்துக்கு அதிக லாபம் தர முடியாது. அதனால ஆபீஸ் எதுவும் இல்லையேனு கவலை வேண்டாம். பதிலுக்கு அதுக்கான ஏஜென்டுகள் எல்லா முக்கிய ஊர்களிலும் இருப்பார்கள்.

ஒரு செடி வாங்க நாம கொஞ்சம் பணம் கொடுத்திருக்கிறோம். அதுக்கு செடி வாங்கி, ஃபண்ட் மேனேஜர் தண்ணீர் ஊற்றி வளர்க்கிறார் என்றாலும், அது வளர்கிறதா, காய்க்க ஆரம்பித்துவிட்டதாங்கிறதை நாமும் கவனிக்கணும் இல்லையா? தி எக்கனாமிக்ஸ் டைம்ஸ், பிஸினஸ் ஸ்டாண்டர்டு, பிஸினஸ் லைன் போன்ற வணிக ஆங்கில தினசரிப் பத்திரிகைகள், மியூச்சுவல் ஃபண்ட் என்.ஏ.வி. பற்றிய செய்திகளைத் தினந்தோறும் அப்டேட் செய்கின்றன.

new.valueresearchonline.com, new.crisil.com, new.icraratings.com போன்ற இணையதளங்களில் ஒவ்வொரு மியூச்சுவல் ஃபண்டின் கடந்தகால, எதிர்காலச் செயல்பாடுகளை அலசி ஆராய்ந்து, மற்ற ஃபண்டுகளுடன் ஒப்பிட்டு, அந்த ஃபண்டின் ஜாதகத்தையே பிரித்து மேய்கிறார்கள். நாம் வாங்கிய ஃபண்டின் விவரங்களை அப்டேட் செய்துவைத்தால், அதன் ஏற்ற, இறக்கங்களை நமக்கு இலவசமாக மெயில் செய்கிறார்கள். இதையெல்லாம் அவ்வப்போது கவனித்துக்கொண்டே வரவேண்டும். (எல்லாத்துக்கும் மேல தமிழ்ல இருக்கவே இருக்குது நம்ம நாணயம் விகடன்!)

குளோஸ்ட் எண்டட் திட்டங்-களை செலக்ட் செய்யும்போது, 'இத்தனை வருஷத்துக்குப் பிறகுதான் பணத்தை எடுக்கமுடியும்'னு முன்கூட்டியே தெரிவதால், அதில் குழப்பம் எதுவும் பெருசா இருக்காது. ஆனா ஓப்பன் எண்டட் திட்டங்கள்ல நாம நிர்ணயிச்சுக்கிட்ட லாபத்தை அடைஞ்சாச்சுன்னா விற்றுவிட வேண்-டியது-தான்.

பெரும்பான்மை பணத்தை பங்குச் சந்தையில் முதலீடு செய்கிற ஈக்விட்டி, ஈக்விட்டி டைவர்சிஃபைட் மாதிரியான திட்டங்கள்ல பணத்தைப் போட்டிருந்தீங்கன்னா மார்க்கெட் விழும்போது யூனிட்டுகளை விற்க வேண்டாம். கொஞ்சம் காத்திருக்கலாம், தப்பில்லை. அதுமட்டுமில்லை, ஒரு வருஷத்துக்குள் விற்றால் லாபத்துக்கு 15% (01-04-2008-லிருந்து) வரி கட்டணும். அதையும் கொஞ்சம் ஞாபகத்துல வச்சுக்கிடுங்க.

மியூச்சுவல் ஃபண்டில் பணம் போட்டபிறகு நமக்கு அனுப்பப்படும் அக்கவுன்ட் ஸ்டேட்மென்டில், 'ரிடம்ப்ஷன் ரிக்வெஸ்ட்' (Redemption Request) என்ற பகுதி இருக்கும். அதைப் பூர்த்தி செய்து மியூச்சுவல் ஃபண்ட் கம்பெனிக்கு அனுப்பினால், பணம் நம் வங்கிக்கணக்கில் வந்து விழுந்துவிடும் அல்லது காசோலையாக வந்துசேரும். வாங்கிய மியூச்சுவல் ஃபண்ட் யூனிட்டுகளை, முழுவதுமாகத்தான் விற்கணும்ங்கிற கட்டாயமில்லை. அதன் யூனிட்டுகளைக் கொஞ்சம் கொஞ்சமாகத் தவணை-முறையில் கூட விற்கலாம்.

டோனி வந்தாலும், காம்பீர் வந்தாலும் சச்சின்தான் இந்திய கிரிக்கெட்டில் எப்பவும் கிங். எல்லோரும் ஒப்புக்கொள்கிறோம். ஆனா, அடுத்த மேட்ச்சில் சச்சின் சதம் அடிப்பார்னு உத்தரவாதம் தரமுடியுமா..? முடியாது. அதேசமயம் அவர் திறமையாளர் என்பதிலும் சந்தேகமே இல்லை. இதேதான் மியூச்சுவல் ஃபண்டுக்கும். இங்கு வருமானத்துக்கு உத்தரவாதம் எதுவும் இல்லை.

சந்தையின் ஏற்ற-இறக்கங்கள், மியூச்சுவல் ஃபண்டையும் பாதிக்கத்தான் செய்யும். ஆனால், பெரும்பாலான ஃபண்டுகள், நீண்டகால அடிப்படையில் இதுவரைக்கும் நல்ல லாபத்தையே கொடுத்திருக்கின்றன. நஷ்டம்ங்கிறது பெரும்பாலும் வர்றதில்லை. நல்ல லாபம் தரக்கூடிய ஃபண்டுகளை கண்டுபிடிக்கிறதும், சரியில்லாததை ஒதுக்குவதும் வெளிப்படையானது. கண்ணுக்கு முன்னாடி குவிஞ்சிருக்-கும் வாய்ப்புகள்ல சிறந்ததை செலக்ட் பண்ற'தில்' நம்மைப் பொறுத்ததுதான்!

மார்க்கெட் சரிஞ்சிருக்கும்போது நல்ல ஃபண்டுகளின் என்.ஏ.வி. குறைவாக இருந்தால் வாங்கலாம். அதுமூலமா கூடுதல் யூனிட்டுகள் கிடைக்க வாய்ப்பிருக்கு.

பணத்தை ஒரே ஃபண்டில் போட்டுக் குவிக்காமல் பலவிதமான ஃபண்டுகள்ல பிரிச்சு முதலீடு செய்யறதுதான் புத்திசாலித்தனம். காரணம் ரிஸ்க் குறையும்ங்கிறதுதான்.

'ரெண்டு மாசத்துல மகளுக்குக் கல்யாணம், அதுவரைக்கும் இந்தப் பணத்தை...' என்பது மாதிரியான யோசனையோடு மியூச்சுவல் ஃபண்ட் பக்கம் தலைகாட்டிடாதீங்க. அத்தியாவசியத் தேவைகளுக்காக வச்சிருக்கிற பணத்தை இதில் எக்காரணம் கொண்டும் போடாமலிருப்பது நல்லது.

எத்தனை பேரிடம் வேண்டுமானாலும் ஆலோ-சனைக் கேட்கலாம், தப்பில்லை. முடிவெடுப்பது நாமாக இருக்கவேண்டும்.

பெரும்பாலும் எவ்விதப் பிரச்னையும் வருவதில்லை. அப்படியே வந்தால், முதலில் சம்பந்தப்பட்ட மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்திடம் எழுத்து மூலம் முறையிடலாம். அதிலும் தீர்வு கிடைக்கலை என்றால், இந்திய மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களை நெறிப்படுத்திக் கட்டுப்படுத்தும் அமைப்பான 'செபி'யிடம் முறையிடலாம். அதன் சென்னை மண்டல அலுவலக முகவரி,

ஃபண்ட் மேனேஜர்

இவர்தான் படைத்தளபதி. ஃபண்டின் லகான் இவர் வசம்தான் இருக்கும். முதலீட்டாளர்களிடம் இருந்து மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனம் திரட்டும் கோடிக்கணக்கான ரூபாயை எந்த நிறுவனப் பங்குகளில் போடுவது என்பதை முடிவு செய்வது, ஃபண்டை முறையாக நிர்வகித்து லாபப் பாதைக்கு அழைத்துச் செல்வது அனைத்தும் இவர் வசம்தான் இருக்கும். எனவே முதலீட்டுக்கு முன்னர், அதன் மேனேஜர் யார், அவர் நிர்வகித்து வரும் இதர திட்டங்களின் செயல்பாடு எப்படி என எல்லாவற்றையும் கவனிக்க வேண்டும். இந்த விவரங்களைத் தேடி அலைய வேண்டியதில்லை. பல்வேறு இணைய தளங்களிலும், ஃபண்ட் வெளியீட்டின்போது தரப்படும் வழங்கு பத்திரத்திலுமே இருக்கும்.

ஏஜெண்ட் ஆக...

இந்தியாவில் அதிவேகமாக வளர்ந்து வரும் மியூச்சுவல் ஃபண்ட் துறையில் எக்கச்சக்கமான வேலைவாய்ப்புகள் குவிந்துகிடக்கின்றன. அதில் முக்கியமானது மியூச்சுவல் ஃபண்ட் ஏஜென்ட் ஆவது. இன்ஷூரன்ஸ் ஏஜென்ட் போல இதுவும் சுலபமானதுதான். இந்தியாவிலுள்ள மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள் இணைந்து 'ஆம்ஃபி' என்ற அமைப்பை உருவாக்கி உள்ளன. இந்த அமைப்பு நடத்தும் தேர்வில் வெற்றிபெற்றால் மியூச்சுவல் ஃபண்ட் ஏஜென்ட் ஆகிவிடலாம். நிறுவனங்களுக்கு இடையே ஏற்படும் பிரச்னைகளுக்கு தீர்வு காணும் வேலையைச் செய்வதும் இந்த 'ஆம்ஃபி' அமைப்புதான்.

முகவரி
Association of Mutual Funds in India,
709, Raheja Centre, Free Press Journal Marg,
Nariman Point, Mumbai - 400 021.
022 - 66101886/7, new.amfiindia.com

கொசுறுகள்

உலகின் முதல் மியூச்சுவல் ஃபண்ட், 1924-ல் மாஸாசூசெட்ஸ் இன்வெஸ்ட்டார்ஸ் டிரஸ்ட் (Massachusetts Investors Trust) நிறுவனத்தால் அமெரிக்காவில் அறிமுகப்படுத்தப்பட்டது. ஆரம்பத்தில் அவ்வளவாக வரவேற்பு இல்லை என்றாலும், அந்த ஆண்-டின் முடிவில் மொத்தம் 200 பேர், 63 ஆயிரம் டாலர் முதலீடு செய்திருந்தார்கள். அந்தக் காலத்தில் இது மிகப்பெரிய தொகை.

கடந்த ஐந்து ஆண்டுகளில் இந்திய மியூச்சுவல் ஃபண்ட் துறை 368% அளவுக்கு அசுரத்தனமாக வளர்ந்திருக்கிறது. சராசரியாக ஆண்டுக்கு 73% வளர்ச்சி.

பிப்ரவரியுடன் முடிந்த கடந்த ஒரு வருடத்தில் சென்செக்ஸ் பங்குகள் தந்திருக்கும் வருமானம் 22%. இதே காலகட்டத்தில் ஈக்விட்டி டைவர்சிஃபைட் ஃபண்டுகள் 50-60% வருமானத்தைத் தந்திருக்கின்றன.

அமெரிக்க மக்கள் தொகையில் 50% பேர் மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்துள்ளனர். இந்தியாவில் இது வெறும் 5 சதவிகிதமாக இருக்கிறது.

ஹைலைட்ஸ்

1963 நாடாளுமன்ற சட்டப்படி, இந்தியாவின் முதல் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனம் யூ.டி.ஐ. உருவானது.

1964 யூ.டி.ஐ. நிறுவனம், யூ.எஸ்.64 என்ற முதல் திட்டத்தை அறிவித்தது.

1987 பொதுத்துறை வங்கிகள் மியூச்சுவல் ஃபண்டில் நுழைய அனுமதிக்கப்பட்டது. இது இந்தத் துறையின் பிரமாண்ட வளர்ச்சிக்கு அடித்தளமானது.

1993 தனியார் மற்றும், வெளிநாட்டு நிறுவனங்களும் இந்திய மியூச்சுவல் ஃபண்ட் துறைக்குள் நுழைந்தன. இது இத்துறையின் வளர்ச்சியை இன்னும் வேகப்படுத்தியது. நாட்டின் முதல் தனியார் துறை மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனமான 'கோத்தாரி பயனீர்ஸ்' உருவானது. மியூச்சுவல் ஃபண்ட் துறையை நெறிப்படுத்தும் 'செபி' அமைப்பு உருவானதும் இவ்வாண்டில்தான்.

1994 வெளிநாட்டு நிறுவனமான மார்கன் ஸ்டேன்லி முதன் முதலாக இந்தியாவில் தனது ஃபண்டை வெளியிட்டது.

1996 செபியின் விதிமுறைகள் அமலுக்கு வந்தன. இது முதலீட்டாளர்களுக்கு பாதுகாப்பை வழங்கியது. சிறு முதலீட்டாளர்களின் எண்ணிக்கை அதிகரித்தது.

2000 இந்திய மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள் நிர்வகித்த தொகை 1 லட்சம் கோடி ரூபாயைத் தாண்டியது.

2003 மியூச்சுவல் ஃபண்ட் ஏஜென்டுகளுக்கு 'ஆம்ஃபி'யின் சான்றிதழ் கட்டாயமாக்கப்பட்டது. இது துறை மீதான நம்பிக்கையைக் கூட்டியது.

2007 மிகக்குறைந்த தொகையாக, வெறும் 50-100 ரூபாய் இருந்தாலே மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்யலாம் என்ற நிலையை ஐ.சி.ஐ.சி.ஐ. புரூடென்ஷியல் மற்றும் ரிலையன்ஸ் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள் ஏற்படுத்தின.

2008 மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களில் நேரடியாகச் செய்யப்படும் (ஏஜென்ட் மூலம் அல்லாமல்) முதலீடுகளுக்கு நுழைவுக் கட்டணத்தை செபி, ரத்து செய்தது.

இதில் கவனமாக இருங்கள்

எக்காரணம் கொண்டும் கடன் வாங்கி முதலீடு செய்ய வேண்டாம்.

முதலீட்டை மொத்தமாக மேற்கொள்ளாதீர்கள். குறிப்பிட்ட இடைவெளியில் பல்வேறு திட்டங்களில் பணத்தைப் போடுங்கள்.

ஒரு ஃபண்டில் முதலீடு செய்கிறோம். தொடர்ந்து ஆறு மாதங்கள் வரை அதில் எவ்வித முன்னேற்றமும் இல்லை. இந்நிலையில் வேறு நல்ல ஃபண்டுக்கு மாறுவதுதான் புத்திசாலித்தனம். காத்திருப்பதற்கும் ஒரு எல்லை உண்டுதானே.!

ஒரு துறை சார்ந்த செக்டோரல் ஃபண்டுகளில் மட்டுமே முதலீடு செய்வதைத் தவிர்க்கலாம்.

சந்தையின் சூட்சுமங்கள் புரியும்வரை புதியவர்கள் என்.எஃப்.ஓ-வில் முதலீடு செய்வதைத் தவிர்க்கலாம். ஏற்கெனவே மார்க்கெட்டில் வெற்றிகரமாக வருமானம் தந்துகொண்டிருக்கும் ஃபண்டுகளே புதியவர்களுக்கான சிறந்த ஆப்ஷன்.

- தொகுப்பு சி.சரவணன்