18 மணி நேரம் உழைக்கலாமே!  

##~##

சென்னையின் மத்தியில் அமைந்திருக்கிற புகழ்பெற்ற கல்லூரி அது. ஆல்கஹால் மற்றும் போதைப் பொருட்களுக்கான விழிப்பு உணர்வுக் கருத்தரங்கம்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

எனக்கு முன்பாக அக்கல்லூரியின் இரண்டு பேராசிரியர்கள் உரையாற்றினர். இருவருமே தவறாமல் குறிப்பிட்ட பெயர் அப்தர் அலி. அதே கல்லூரியில் பி.காம் மூன்றாம் ஆண்டு படிக்கிற மாணவன். அப்தரைப்போல வாழக் கற்றுக்கொள்ளுங்கள் என்று அறிவுரை வேறு கூறினார்கள் இருவரும்.

அன்றைய கருத்தரங்கம் இரண்டாம் ஆண்டு மாணவர்களுக்கு மட்டும் என்பதால் அவன் அங்கு இல்லை. பேராசிரியர்கள் சொல்லி அவனது பணியிடத்தில் அவனைச் சந்திக்கச் சென்றேன்.  

பிரபலமான நான்கு அல்லது ஐந்து மிகப் பெரிய 'மால்’களில் அதுவும் ஒன்று. அங்குள்ள ஒரு ரெஸ்டாரன்ட்-ல் வேலை செய்கிறான் அப்தர். கல்லூரியில் வகுப்புகள் இருக்கிற நேரம் போக மீதி நேரம் முழுவதும் அங்குதான் இருப்பான். இரவு 12 மணி தாண்டியும் ரெஸ்டாரன்ட் திறந்திருக்கும். அது மூடியபிறகு மறு நாளைக்குத் தயாராக இருக்கும்படி, நாற்காலி மேசை எல்லாம் சுத்தமாக இருப்பதை உறுதி செய்துகொண்ட பிறகே அதிகாலை இரண்டு மணிக்கே அவனால் தூங்கச் செல்ல முடியும்.  

காலையில் எட்டு மணிக்கே கல்லூரிக்கு கிளம்ப வேண்டும். ஆக, முழுசாக ஆறு மணி நேரம்கூடப் படுத்திருக்க முடியாது. ஆனாலும், எப்போதும் ப்ரிஸ்க்-ஆக இருப்பான்!

இத்தனைக்கும்  ரெஸ்டாரன்ட்டில் தரப்படும் வார விடுமுறையைக்கூட அவன் எடுத்துக்கொள்வதே இல்லை. கேட்டால், 'தேர்வு நேரத்தில் பயன்படும். அதுவும் இல்லாம, ஊருக்குப் போகவேண்டி வந்தா அப்பவும் வேணுமில்லையா..?’ என்றான்

எதிர்கொள்!

சரி, சனி, ஞாயிறு கல்லூரி விடுமுறை எடுக்கிறானா என்றால் இல்லை... அந்த நாட்களில் 'வேல்யூ ஆடட் கோர்சஸ்’ படிக்க சென்றுவிடுவான்.  

கோவை மாவட்டத்தில் ஒரு சிறிய கிராமத்தில் பிறந்து அங்குள்ள பள்ளியில் படித்தான். அம்மா, அப்பா இருவரும் விவசாயக் கூலிகள். இரு தங்கைகள் அவனுக்கு. அவர்கள் மீது கொள்ளை பாசம் வைத்திருக்கிறான்.

தான் வேலைக்குப் போவதால் மாதாமாதம் தன் தங்கைகளுக்குத் தலா ஆயிரம் ரூபாய் அனுப்பி வைக்க முடிகிறது என்பதில் அவனுக்கு அத்தனை மகிழ்ச்சி!

அப்தரை பற்றி நான் இதுவரை சொன்ன தகவல்கள் அனைத்துமே சாதாரணமானவைதான். ஆனால், நான் வியந்துபோன விஷயம், அப்தர் ஒரு 'ஸ்லோ லேர்னர்’. அதாவது, சாதாரணமாக எல்லாரையும்போல அவனால் எதையும் எளிதில் புரிந்துகொள்ள முடியாது. ஒவ்வொன்றையும் பலமுறை எழுதி, படித்துப் பார்த்தால்தான் நினைவில் வைத்துக்கொள்ள முடியும். அதாவது, பிறருக்கு ஒரு மணி நேரம் பிடித்தால் அப்தருக்கு நான்கு மணி நேரமாவது வேண்டும். அதுவும் சேர்ந்தாற் போல் எழுதப் படிக்க முடியாது. பத்து, பதினைஞ்சு நிமிஷம்தான்.. 'மைண்ட்’ ப்ளாக் ஆயிடும்.

அதுக்கு மேல என்ன படிச்சாலும், ஏறவே ஏறாது. இத்தனையும் மீறிப் படித்து பள்ளியில் முதல் இடத்தைப் பிடித்தான். இப்போது கல்லூரியிலும் அப்படித்தான்.

'பிரிட்டிஷ் எம்பஸி’யில் ஆங்கில வகுப்புக்குப் போகிறான்; தன் வகுப்பு நண்பன் மூலம் கிடார் கற்றுக்கொள்கிறான்; கார் டிரைவிங், கம்ப்யூட்டரில் ஜாவா, போதாக் குறைக்கு டூ வீலர் மெக்கானிஸம் வேறு... இத்தனையும் செய்கிறானே... ஏதாவது ஒன்றில் முழுக் கவனத்தையும் செலுத்தலாமே..?

எதிர்கொள்!

'நிறைய சாதிக்கறதைவிட...  நிறைய கத்துக்கணும். அதுலதான் சார் எனக்கு விருப்பம் அதிகம்...’ - இந்த வாக்கியம் என்னை அதிர வைத்தது.

வாழ்க்கையில் குறிக்கோள் எதுவும் இல்லாமல் சுற்றி வருகிறவர்கள் உண்டு; இதைத்தான் சாதிக்கவேண்டும் என்று உழைக்கிறவர்களும் உண்டு. ஆனால், புதிது புதிதாக எதையாவது கற்றுக்கொள்ள வேண்டும் என்பதையே தன் வாழ்க்கை லட்சியமாகக் கொண்டு ஓர் இளைஞன் இருப்பது அதிசயம் தானே..?

'தூங்கறதுக்குக்கூட நேரம் இல்லாம ஓடிக்கிட்டே இருக்கியே.. நேரம் போதலியேன்னு கவலைப் பட்டதுண்டா..?’ என்றேன்.

'சார்.. ஒரு நாளைக்கு இருபத்து நாலு மணி நேரம் இருக்கு... அதுல ஓர் அஞ்சு மணியோ அல்லது ஆறு மணியோகூட நாம சரியாப் பயன்படுத்திக்கிறதில்லை; என்னைக் கேட்டா, டெய்லி 18 மணி நேரம் வரைக்கும் தாராளமா உழைக்கலாம், சார். நாம அவ்வளவா உழைக்கறோம்..? நாம மட்டும் முழுசா உழைச்சோம்னு வச்சிக்குங்க சார்.., எவ்வளவு விஷயம் கத்துக்கலாம் தெரியுமா..?’

ஆமாம், இன்டலிஜென்ட் ஆவதற்கான அடுத்த ஃபார்முலா இதுதான் 'தொடர்ந்து கற்போம்.’

'இந்த விதி, வேறு யாரையும்விட 'புரொஃபஷனல்ஸ்’க்கு மிகவும் முக்கியம்’ என்கிறார் ஒரு டாக்டர். அவரது அனுபவம் மிகவும் சுவாரஸ்யமானது.

'டெல்லியில ஒரு கான்ஃபரன்ஸ்ல கலந்துக்கப் போய் இருந்தேன். என் வாழ்க்கையில மறக்க முடியாத ஒரு சம்பவம் அது...’

அப்படி என்னதான் நடந்தது அங்கே..?

(தெளிவோம்)

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism