எத்தனை அறிவு கொட்டிக் கிடக்குது..?

##~##

டாக்டர் கதிர்வேல். இலக்கிய வட்டாரத்தில் மிகப் பிரபலமான பெயர். சென்னையில் எந்த இலக்கிய நிகழ்ச்சி நடந்தாலும், கடைசி வரிசையில் நிச்சயம் அவரைப் பார்க்கலாம். நான் முன்வரிசைக்காரன் என்றாலும் அவரை மிஸ் பண்ண மாட்டேன்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

'இவ்வளவு பிஸி லைஃப்லயும், தவறாம எல்லா நிகழ்ச்சிகளிலும் கலந்துக்கறீங்களே... எப்படி டைம் ஒதுக்கிறீங்க..?’

'கொஞ்சம் கஷ்டம்தான். ஆனாலும் இலக்கியம், இசை, விளையாட்டு... இந்த மூணும் இல்லாம என்னால இருக்கவே முடியாது. டெய்லி காலையில ஒரு மணி நேரம் ஷட்டில்; கார்ல போகும்போது, லேஸா ஏதேனும் கர்நாடக சங்கீதம். அதுலயும் வாத்தியம்தான்  என்னோட சாய்ஸ். மூணாவதா இலக்கியம். அதைப் படிக்கிறதைவிட, யாராவது பேசும்போது கேட்கறதுதான் சுகம், சௌகா¢யம்’.

டாக்டர் கதிர்வேல், தன் வாழ்க்கையின் ஒவ்வொரு நொடியையும் ரசித்து வாழ்பவர். அதனால்தான் அவரால எப்போதும் சிரிச்சிக்கிட்டே இருக்க முடியுது. அவர் கிளினிக்ல அவரோட 'ட்ரிட்மென்ட்’டை விடவும், அவர்கூட கொஞ்சம் பேசிட்டுப் போறதுக்காக வர்றவங்கதான் அதிகம். 'பேசறதும் ஒரு வகையில ட்ரீட்மென்ட் மாதிரிதான். என்ன..., அதுக்கு ஃபீஸ் வாங்க முடியாது!’ என்பார் சிரித்தபடி.

இத்தனை பிஸியாக இருந்தாலும் மேலும் மேலும் படிப்பதையும் மருத்துவ இதழ்களில் தொடர்ந்து எழுதுகிறார்.  தனது துறை தொடர்பான எல்லாக் கருத்தரங்குகளிலும் கலந்துகொள்கிறார்.

எதிர்கொள் !

சென்ற மாதம் டெல்லியில் நடந்த ஒரு கருத்தரங்கில் கலந்துகொள்ளச் சென்றார். அங்குதான் முதன்முறையாக அவரைச் சந்தித்தார். அதன்பிறகும் கடந்த 30 நாட்களில் நாள்தோறும் அவருடன் பேசுகிறார். தன் கிளினிக்குக்கு வருகிற ஒவ்வொருவரிடமும் அவரைப் பற்றி ஓயாது பேசுகிறார். அவர்தான் டாக்டர் ஒஷிமா!

28 வயதே ஆன டாக்டர் ஒஷிமா, ஜப்பான் நாட்டைச் சேர்ந்த பயிற்சி டாக்டர். டெல்லி எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரியில் நடந்த மூன்று நாள் சர்வதேச மருத்துவக் கருத்தரங்கில் கலந்துகொள்ள வந்திருந்தார். அனைவரையும் அவர் முதல் நாளிலேயே கவர்ந்துவிட்டார். காரணம், அவர் பேசிய ஹிந்தி! தட்டுத்தடுமாறித்தான் பேசினார் என்றாலும் அவர் பயன்படுத்திய சொற்கள், பலரை புருவம் உயர்த்தச் செய்தது. ஏராளமான சம்ஸ்கிருத வார்த்தைகளை அள்ளி வீச, டாக்டர்கள்ளும் கைதட்டி ரசித்தனர்.  

'உங்களின் மஹாபாரதக் கதை எனக்கு மிகவும் பிடிக்கும். என் தாய், தந்தை இருவருமே பலமுறை இந்தியாவுக்கு வந்துள்ளனர். அவர்களும் டாக்டர்கள்தான். அவர்கள் எனக்கு சிறுவயதிலேயே பாரதம், ராமாயணக் கதைகளைச் சொல்லித் தந்தார்கள். அப்போதே, சமஸ்கிருதம் கற்றுக்கொள்ள வேண்டும் என்று தீர்மானித்தேன். இதற்காகவே, இரண்டுமுறை இந்தியாவில் சில வாரங்கள் தங்கி ஒரு பண்டிதரிடம் கற்றுக்கொண்டேன்.’

ஒரு புதிய மொழி மீது அவருக்கு இருந்த ஈடுபாடு, டாக்டர் கதிர்வேலுவுக்கு மிகவும் பிடித்திருந்தது. அதுகூடப் பரவாயில்லை. தொடர்ந்து அவர் சொன்னதுதான் அவரை வியப்பின் விளிம்புக்கே கொண்டு சென்றது.

'பரதநாட்டியம் கத்துக்கணும்னு ஆசைப்பட்டேன். அதைச் சொல்லித் தர்றவங்க ஜப்பான்ல யாரும் இருக்காங்களான்னு பார்த்தேன். இருந்தாங்க. ஆனால், ரொம்ப தூரம் போகவேண்டி இருந்தது. பரவாயில்லை, போய் வான்னு அப்பா சொல்லிட்டாரு. வீக் எண்ட்ல போயிட்டு வருவேன். எனக்கு டான்ஸ் சொல்லிக்கொடுத்த குரு, பாட்டும் சொல்லிக்கொடுத்ததால, ஒரே சமயத்துல ரெண்டுமே கத்துக்கிட்டேன். என்ன ஒண்ணு.., ரெண்டுமே சுமாராத்தான் தெரியும்’ என்று சொல்லி சிரித்தாள்.

ஒஷிமா ஒரு பயிற்சி டாக்டர். அதனால் அவருக்கு அனுபவம் மிக்க ஒருவரின் வழிகாட்டுதல் தேவை என்பதால், வயதிலும் அனுபவத்திலும் மூத்தவர் என்பதால், அமைப்பாளர்கள் அவரைக் கதிர்வேலுவிடம் விட்டார்கள்.

கருத்தரங்கு நடந்த மூன்று நாட்களும் ஒஷிமாவின் கேள்விகளில் திக்குமுக்காடிப் போனார் கதிர்வேல். மருத்துவம் மட்டுமல்லாது, ஒவ்வொன்றைப் பற்றியும் தெரிந்து கொள்வதில் அவருக்கு இருந்த ஆர்வம் ஆச்சர்யமானதாக இருந்தது.

'ஆமா சார். நிறைய கேள்வி கேட்கறேன், எனக்கே தெரியுது. என்ன செய்ய..? அப்பதானே நிறைய கத்துக்க முடியும்..? உங்களை மாதிரி நானும் ஒரு ஜீனியஸ் ஆக முடியும்..?’

'நான் ஜீனியஸ்னு உனக்கு யார் சொன்னா..?’

'யாரும் சொல்லவேண்டாம். நான் கேட்கறதுக்கு எல்லாம் இவ்வளவு தெளிவாக வும், பொறுமையாகவும் உடனடியா பதில் சொல்றீங்களே... இட் இஸ் சம்திங் கிரேட்..’

எதிர்கொள் !

'உங்க நாட்டைப் பத்தி நினைக்கும்போது எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்குது... யாரைப் பார்த்தாலும் ஒண்ணு பாடறாங்க, இல்லை, டான்ஸ் ஆடறாங்க. டிராயிங் பண்றாங்க... ஏதோ ஒரு ஆர்ட் ஒவ்வொருத் தருக்குமே தெரிஞ்சிருக்கே... அது எப்படி?’

அவள் சொன்ன பிறகுதான் டாக்டருக்கே அந்த உண்மை உரைத்தது. அட, ஆமாம்ல! கலைகள்ல மட்டும் இல்லை; நம்ம நாட்டுல மோட்டார் மெக்கானிக், டிவி மெக்கானிக், எலெக்ட்ரிஷியன், பிளம்பர்னு எத்தனை பேரு 'சுயமா’ கத்துக்கிட்டு வர்றாங்க. இவங்கள்ல பெரும்பாலானவங்க, எந்த இன்ஸ்டிடியூட்லயும் போய்க் கத்துக்கிட்டதில்லை. தானா முயற்சி செஞ்சு, யார் கிட்டயாவது வேலைக்குப் போயி, அந்த வேலையைக் கத்துக்கிட்டவங்கதான்.

இந்த 'அனுபவ அறிவு’தான் நம் நாட்டின் வலிமை. பல்கலைக்கழகங்கள் தரும் பட்டங்களை மட்டுமே வைத்து நாம் பட்டதாரிகளின் எண்ணிக்கையைத்தான் அதிகரித்து வருகிறோம். ஆனால், ஒவ்வொரு பட்டிதொட்டியிலும் பரவியிருக்கிற 'தொழில் அறிவு’ நமக்குத் தெரிவதில்லை. இவர்களுடைய திறமையை நாம முறையா அங்கீகரிக்கவில்லை. இவர்களுக்கான வேலை வாய்ப்புகளை நாம அதிகப்படுத்தவில்லை. இவங்க எல்லாம் சொந்தமாகத் தொழில் தொடங்க நாம சரியான ஊக்கம் கொடுக்கலை.

'இந்தச் சிந்தனை எல்லாம் டெல்லி கருத்தரங்குல டாக்டர் ஒஷிமாவைச் சந்திச்சதுக்கு அப்புறம்தான் எனக்குமேகூடத் தோணிச்சு. புதுசா எதையாவது கத்துக்கணும்னு ஓர் ஆர்வம் பொதுவா எல்லார்கிட்டேயும் இருக்கு. ஆனா, அதுக்கான சந்தர்ப்பங்களையும் வழிமுறைகளையும் ஏற்படுத்தி தர்றதுல நாம முனைப்பு காட்டலை. நம்ம நாட்டுல இருக்கிற ஒட்டுமொத்த 'தொழில் அறிவை’யும் ஒழுங்குபடுத்துகிற, ஒருமுகப்படுத்துகிற பணியை நாம் உடனே செய்தாக வேண்டும்.’

'டாக்டரின் யோசனை நன்றாக இருக்கிறதே... இதற்கு என்ன செய்யலாம்?’ என்று யோசித்தபோதுதான் முன்னே வந்து நின்றான் சங்கர்!

(தெளிவோம்)

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism