Published:Updated:

அக்ரி கமாடிட்டி

அக்ரி கமாடிட்டி

அக்ரி கமாடிட்டி

அக்ரி கமாடிட்டி

Published:Updated:
அக்ரி கமாடிட்டி
##~##

இந்த வாரம் மக்காச்சோளம் விலைப்போக்கு குறித்து ஜே.ஆர்.ஜி. நிறுவனத்தின் தென் மண்டல மேலாளர் முருகேஷ்குமார் சொல்கிறார்.

மக்காச்சோளம்! (maize)

மக்காச்சோளம் உலக அளவில் அதிகம் வர்த்தகமாகக்கூடிய பொருட்களில் ஒன்றாக உள்ளது. நடப்பு காரீஃப் பருவத்தில் மக்காச்சோளம் பயிரிடப்படும் ஹெக்டேரின் பரப்பளவு 11% அதிகரித்து, 82.24 லட்சம் ஹெக்டேர் பரப்பளவாக உள்ளது. மேலும், காரீஃப் பருவத்தில் உற்பத்தி 10.85% அதிகரித்து 17.78 மில்லியன் டன்னாக அதிகரிக்கலாம் என்றும், வரும் 2013- 2014 வருடத்தில் காரீஃப் (அக்டோபர்- நவம்பர்) மற்றும் ராபி (ஏப்ரல் - மே) பருவத்தில் உற்பத்தி 25 மில்லியன் டன்னாக அதிகரிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

ஆந்திரா உள்பட தென்மாநிலங்களில் அறுவடை காலம் தொடங்கியுள்ளது. மேலும், தொடர்மழையால் உச்சகட்ட அறுவடை காலம் சில வாரங்கள் தாமதமாகலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. நடப்பு நிதி ஆண்டில் உலக அளவில் மக்காச்சோளம் உற்பத்தி 957 மில்லியன் டன்னாக மதிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், கடந்த ஆறு வருடங்களில் சராசரியாக வருடத்துக்கு 800 டன் உற்பத்தி செய்யப்பட்டது.

அமெரிக்கா, அர்ஜென்டினா, பிரேசில் ஆகியவை அதிக அளவில் ஏற்றுமதி செய்யும் நாடுகளாகும். மேலும், சீனா மிக அதிக அளவில் இறக்குமதி செய்யும் நாடாக இருக்கிறது. இந்திய ஏற்றுமதி ஆண்டுக்கு 3 முதல் 3.2 மில்லியன் டன்னாக உள்ளது.    

அக்ரி கமாடிட்டி

மக்காச்சோளம் ஆகஸ்ட் - செப்டம்பரில் அதிக தேவை மற்றும் குறைந்த வரத்து காரணமாக

அக்ரி கமாடிட்டி

விலை அதிகரித்து காணப்படும். அதிகபட்ச விலையாக கடந்த ஆகஸ்ட் - செப்டம்பர் 2012-ல் குவிண்டால் ரூ.1,650 - 1,700 வரை வர்த்தகமானது. ஆனால், இந்த விலை அதிக காலம் நிலைக்கவில்லை. மேலும், ஜூலை - ஆகஸ்ட் 2013 வருடத்தில் குவிண்டாலுக்கு ரூ.1,400 - 1,500 வரை வர்த்தகமானது. தென் மாநிலங்களில் அறுவடை காலம் தற்போது தொடங்கியுள்ளதால் விலை குவிண்டாலுக்கு ரூ.1,300- 1,380 வரை வர்த்தகமானது.  

தற்போது பெய்யும் தொடர்மழையால் அதிக ஈரப்பதம் உருவாகி, உற்பத்தி பாதிக்கப்படலாம்.  வரும் ராபி பருவம் (ஏப்ரல் - மே 2014) வரை மக்காச்சோளத்தின் விலை குவிண்டாலுக்கு ரூ.1,200-1,400  வரை வர்த்தகமாகலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

ஜீரகம்! (Jeera)

ஜீரகத்தின் விலை எதிர்பார்த்ததைவிட கடந்த வாரம் குறைந்து வர்த்தகமானது. அதிக உற்பத்தி மற்றும் அதிக வரத்தும் விலை குறைவுக்கு முக்கிய காரணமாக இருந்தது. மேலும், இந்த வருடத்தில் ஜீரகம் உற்பத்தி செய்யப்படும் ஏக்கரின் பரப்பளவும் 10-12% அதிகரித்துள்ளது. குஜராத்தில் மழையின் காரணமாக பயிரிடப்படுவது தள்ளிப்போவதால் விலையிறக்கம் சற்று தடுக்கப்பட்டுள்ளது. மேலும், உள்நாட்டு தேவையும், வெளிநாட்டு ஏற்றுமதி தேவையும் குறைந்துள்ளதும், அதே சமயம் அதிக அளவிலான கேரி ஃபார்வேர்டு இருப்பு உள்ளதும், விலை மேலும் குறைவுக்கு காரணமாக இருக்கலாம். இது பண்டிகைக் கால தேவை மற்றும் ஏற்றுமதி தேவை அதிகரிப்பு இருப்பின் விலையில் மாற்றம் இருக்கலாம்.

சர்க்கரை! (Sugar)

அதிக அளவு வரத்தும், குறைந்த தேவையும் இருந்ததால், விலை குறைந்த நிலையிலேயே இருந்தது. சர்க்கரை உற்பத்தியாளர்கள் உற்பத்தி செலவுடன் ஒப்பிட்டு அதற்கேற்ப விலை கூறும் நிலையில், ஸ்டாக்கிஸ்ட்கள் அந்த விலைக்கு வாங்கத் தயாராக இல்லை என்று தெரிகிறது. எனினும், வரும் வாரங்களில் தீபாவளி பண்டிகை மற்றும் வரும் பண்டிகை தினங்களை அடுத்து சர்க்கரை விலை அதிகரிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

அக்ரி கமாடிட்டி

மேலும், இந்திய சர்க்கரை ஆலைகள் சங்கம் 2012-13 வருடத்தில் சர்க்கரை உற்பத்தி 4.5% குறைந்து, 25.14 மெட்ரிக் டன்னாக இருந்தது எனவும், இதுவே கடந்த 2011-12 வருடத்தில் 26.4 மெட்ரிக் டன்னாக இருந்தது என்றும் அறிவித்துள்ளது. மேலும், இந்திய சர்க்கரை ஆலைகள் சங்கம் ஏற்றுமதியை அதிகரிக்க அரசாங்கத்திடம் பல சலுகைகளை கேட்டுள்ளது. இதையடுத்து உணவு  அமைச்சகமும் ஏற்றுமதியை அதிகரிக்க விதிமுறைகளைத் தளர்த்த கோரியுள்ளது.

விவசாயத் துறை அமைச்சகம் 2013 - 14 ம் வருடத்தில் கரும்பு உற்பத்தி 341.77 மெட்ரிக் டன்னாக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இதுவே, கடந்த வருடத்தில் 338.96 மெட்ரிக் டன்னாக இருந்தது என்று கூறியுள்ளது. மேலும், கரும்பு உற்பத்தி செய்யப்படும் பரப்பளவு அக்டோபர்-18-ன்படி 48.74 லட்சம் ஹெக்டேர் பரப்பளவில் பயிரிடப்பட்டுள்ளதாகவும், இது கடந்த ஆண்டைவிட 2.64% குறைவு என்றும் கூறியுள்ளது. வரும் வாரங்களில் சர்க்கரை ஏற்றுமதி இருப்பின் விலை அதிகரிக்கும். இல்லையெனில், விலை சரிவுடனே காணப்படும்.

பருத்தி! (kapas)

என்.சி.டி.இ.எக்ஸ். மற்றும் எம்.சி.எக்ஸ். எக்ஸ்சேஞ்சுகளில் பருத்தி விலை குறைந்தே வர்த்தகமானது. மேலும், குஜராத்திலிருந்து வரத்து அதிகரித்ததும் விலையிறக்கத்துக்கு காரணம். மேலும், இந்திய பருத்திக் கழகம் உற்பத்தி அதிகமாக இருக்கும் என எதிர்பார்ப்பதால் பருத்தி விலை குறையலாம்.

அக்ரி கமாடிட்டி

மேலும், விவசாயத் துறை அமைச்சர் சரத் பவார் பருத்தி ஏற்றுமதிக்கு அரசு எந்தவிதமான தடைகளையும் விதிக்காது என கூறியுள்ளார். அவ்வாறு விதித்தால் அது விவசாயிகளைப் பாதிக்க வாய்ப்புள்ளது. மேலும், இந்திய பருத்திக் கழகம் 2013 -14 வருடத்தில் பருத்தி உற்பத்தி 38.1 மில்லியன் பேல்களாக

(1 பேல் - 170 கிலோ) இருக்கும் எனவும், இதுவே கடந்த வருடம் 35.675 மில்லியன் பேல்களாக இருந்தது என்றும் கூறியுள்ளது. ஏற்றுமதிக்கு வரி விதிக்காவிட்டால் விலையில் ஏற்றம் இருக்கும். அதேசமயம், அதிக உற்பத்தி மற்றும் சாதகமில்லாத சர்வதேச சந்தை காரணமாக விலையேற்றம் சிறிது தடுக்கப்படலாம்.

- சே.புகழரசி.

அக்ரி கமாடிட்டி