Published:Updated:

மியூச்சுவல் ஃபண்டை கிராமங்களுக்கு எடுத்துச் செல்கிறோம்!''

மியூச்சுவல் ஃபண்டை கிராமங்களுக்கு எடுத்துச் செல்கிறோம்!''

மியூச்சுவல் ஃபண்டை கிராமங்களுக்கு எடுத்துச் செல்கிறோம்!''

மியூச்சுவல் ஃபண்டை கிராமங்களுக்கு எடுத்துச் செல்கிறோம்!''

Published:Updated:

 சிறப்பு பேட்டி!

##~##

''பெரும்பாலான மியூச்சுவல் ஃபண்டு நிறுவனங்கள் பெரிய நகரங்களிலேயே கவனம் செலுத்தும் போது, நாங்கள்  கிராமப் பகுதிகளிலும் மியூச்சுவல் ஃபண்டை கொண்டு செல்ல நடவடிக்கை எடுத்து வருகிறோம். கிராமப்பகுதி முதலீட்டாளர்களிடம் விழிப்பு உணர்வு ஏற்படுத்தும் வகையில் பயிற்சி வகுப்புகளை நடத்துகிறோம்'' என்கிறார் ஐ.சி.ஐ.சி.ஐ. புரூடென்ஷியல் அசெட் மேனேஜ்மென்ட் நிறுவனத்தின் செயல் துணைத் தலைவர் ராகவ் ஐயங்கார். சமீபத்தில் சென்னை வந்திருந்த அவர் நமக்களித்த பேட்டி இதோ:  

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

? கடந்த ஒரு வருடமாக பங்குச் சந்தை ஏற்ற, இறக்கத்திலேயே இருக்கிறது. இச்சூழலில் மியூச்சுவல் ஃபண்டு துறை எப்படி உள்ளது?

''மியூச்சுவல் ஃபண்டு துறையில் பங்கு சார்ந்த முதலீடு வெகுவாகக் குறைந்துவிட்டது. அதற்கு மாறாக, வங்கி ஃபிக்ஸட் டெபாசிட்கள் கடந்த ஐந்து வருடத்தில் மூன்று மடங்கு அதிகரித்துள்ளன. இந்த ஐந்து வருடத்தில் மட்டும் பங்குச் சந்தை சார்ந்த மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு 20% குறைந்துவிட்டது. அதேசமயத்தில் கடன் சார்ந்த மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு அதிகரித்து உள்ளது.''

?பங்குச் சந்தை ஏற்ற இறக்கத்தோடு இருக்கும் இச்சூழலில் முதலீட்டாளர்களின் நலனைக் காப்பது எப்படி?

''இதுபோன்ற சூழ்நிலைகளில் சந்தையின் ஏற்ற இறக்கத்தைத் தாக்குபிடிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டிருக்கும் ஃபண்டுகளை நாடலாம். உதாரணமாக, ஐ.சி.ஐ.சி.ஐ. புரூடென்ஷியலில் வாலட்டைலிட்டி அட்வான்டேஜ் ஃபண்டு கடந்த 5 மற்றும் 3 வருடங்களில் சந்தையைவிட அதிக அளவு வருமானம் தந்திருக்கிறது. ஃபண்டுகளை விநியோகம் செய்யும்போது அதிலுள்ள ரிஸ்கை முதலீட்டாளர்களிடம் சொல்ல வேண்டும்.''

மியூச்சுவல் ஃபண்டை கிராமங்களுக்கு எடுத்துச் செல்கிறோம்!''

?செபியின் கட்டுப்பாடுகள் மியூச்சுவல் ஃபண்டு நிறுவனங்களுக்கு அதிகமாக நெருக்கடி ஏற்படுத்துவதாக உள்ளதா?

''செபியின் கட்டுப்பாடுகள் அனைத்தும் முதலீட்டாளர்களுக்கு பாதுகாப்பு அளிப்பதாகத் தான் இருக்கிறது. அதாவது, கலர் கோடு கொண்டுவந்தது முதலீட்டாளர்களுக்கு மிகவும் பயனுள்ளதாகவே இருக்கிறது. அதோடு, இப்போது செபி மேலும் சில கட்டுப்பாடுகளைக் கொண்டுவரவும் நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. அதாவது, மியூச்சுவல் ஃபண்டுகளின் சொத்து மதிப்பை உயர்த்துவதற்கான ஆலோசனைகளை நடத்தி வருகின்றது. மியூச்சுவல் ஃபண்டை மட்டும் நோக்கமாகக் கொண்டவர்கள் மட்டும் இத்துறையில் இருக்க வேண்டும் என்பதற்காக மட்டுமே இதுபோல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.''  

?பங்குச் சந்தை சார்ந்த மியூச்சுவல் ஃபண்டு முதலீடு எப்போது எழுச்சி பெறும்?

''இன்னும் இரண்டு, மூன்று வருடங்களில் இது நடக்கும் என்று எதிர்பார்க்கிறோம். இப்போது இந்தியாவின் ஜி.டி.பி. 4.5 சதவிகித மாக இருக்கிறது. இது 12 ஆண்டுகளுக்கு முன்பு இருந்திருக்கவேண்டிய வளர்ச்சி. இனி பொருளாதாரம் வளர்ச்சி அடையும்போது பங்குச் சந்தை சார்ந்த மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு நல்ல முன்னேற்றம் காணும்.''

?முதலீட்டாளர்கள் செய்யும் தவறுகள் என்ன?

''பெரும்பாலான முதலீட்டாளர்கள் நாமினி பெயரை பூர்த்தி செய்வதே இல்லை. விண்ணப்பங்களை சரியாகப் பூர்த்தி செய்வதே கிடையாது. இந்த விண்ணப்பத்தில் மெயில் முகவரி, தொலைபேசி எண்களை கட்டாயம் எழுத வேண்டும். இப்படி செய்யும்போது போலி பரிவர்த்தனைகள் நடக்காமல் தடுக்கப்படும். மேலும், நீங்கள் தேர்ந்தெடுக்கும் ஃபண்டுகள் உங்களுடைய நோக்கத்தை நிறைவேற்றுமா என்பதைக் கவனித்து முதலீடு செய்வது நல்லது.''

?புதிய ஃபண்டுகளில் முதலீடு செய்யும்போது என்னென்ன விஷயங்களைக் கவனிக்க வேண்டும்?

''ஃபண்டுகளைத் தொடங்கும் நிறுவனங்களை மட்டுமே பார்க்கக் கூடாது. அந்த ஃபண்டின் முதலீட்டுத் திட்டத்தையும் கவனிக்கவேண்டும். அப்போதுதான் முதலீட்டாளர்களின் தொகை எங்கு முதலீடு செய்யப்படுகிறது, அந்தத் துறை இனிவரும் காலங்களில் எப்படி இருக்கும் என்பதைத் தெரிந்துகொள்ள முடியும்!''

- இரா.ரூபாவதி, படம்: பா.கார்த்திக்.