Published:Updated:

கூடுதல் எக்ஸ்போஸர்: கவர்ச்சி வலையில் சிக்க வேண்டாமே!

கூடுதல் எக்ஸ்போஸர்: கவர்ச்சி வலையில் சிக்க வேண்டாமே!

கூடுதல் எக்ஸ்போஸர்: கவர்ச்சி வலையில் சிக்க வேண்டாமே!

கூடுதல் எக்ஸ்போஸர்: கவர்ச்சி வலையில் சிக்க வேண்டாமே!

Published:Updated:
##~##

நாமக்கல்லில் உள்ள ஒரு ஷேர் புரோக்கர் அலுவலகம். முதலீட்டாளர் ஒருவர் தின வர்த்தகம் செய்வதற்காக 5,000 ரூபாய் புரோக்கர் அலுவலகத்திடம் தந்திருந்தார். ஆனால், அந்த முதலீட்டாளருக்கு கூடுதல் எக்ஸ்போஸர் என்கிற பெயரில் 50,000 ரூபாய் மதிப்புள்ள பங்கினை வாங்க அனுமதி தந்தது அந்த புரோக்கர் அலுவலகம். அன்றைய தினம் சந்தை மிகுந்த ஏற்ற, இறக்கத்தோடு இருந்ததால், சில நிமிஷத்திலேயே அந்த முதலீட்டாளர் 5,000 ரூபாயையும் இழந்ததோடு, வாங்கியிருந்த பங்குகளை உடனே விற்க முடியாமல் போனதால், 10,000 ரூபாய் வரை நஷ்டம் அடைந்தார்!  

எக்ஸ்போஸர் என்றால் என்ன, ஒருவர் எந்த அளவுக்கு எக்ஸ்போஸர் எடுக்கலாம், கூடுதல் எக்ஸ்போஸர் தருகிறோம் என புரோக்கிங் நிறுவனங்கள் சொல்வதைக் கேட்டு, அதை ஏற்றுக்கொள்ளலாமா? என்கிற கேள்விகளை பங்குச் சந்தை நிபுணர் நாகப்பனிடம் கேட்டோம்.

கூடவே கூடாது!

''ஒரு முதலீட்டாளர் பங்கு வர்த்தகத்திலோ அல்லது கமாடிட்டி வர்த்தகத்திலோ வர்த்தகம் செய்யும்போது, தங்களது முதலீட்டுக்கு தகுந்தவாறு வர்த்தகம் செய்யவேண்டும். அவ்வாறு வர்த்தகம் செய்யும்போது முதலீட்டாளர்களுக்கு சுயகட்டுப்பாடு கட்டாயம் வேண்டும். புரோக்கிங் நிறுவனங்கள் தங்கள் வர்த்தகத்தை அதிகப்படுத்த இவ்வாறு அதிகப்படியான எக்ஸ்போஸர்களை வழங்குகின்றன.

கூடுதல் எக்ஸ்போஸர்:  கவர்ச்சி வலையில்  சிக்க வேண்டாமே!

உதாரணமாக, ஒரு முதலீட்டாளர் ஒரு கிலோ காப்பர் வாங்க வேண்டும் என்றால் அவரிடம் 4,53,150 ரூபாய் இருக்க வேண்டும். ஆனால், எக்ஸ்சேஞ்ச் இதில் 10 சதவிகிதம் செலுத்தினால் போதும் என்கிறது. அதாவது, சுமார் 45,315 ரூபாய் செலுத்தினால் போதும் என்கிறது. ஆனால், சில புரோக்கிங் நிறுவனங்கள் 10 ஆயிரம், இன்னும் சில புரோக்கிங் நிறுவனங்கள் வெறும் 4,000 ரூபாய் இருந்தால்கூட போதும் என்கின்றன. இதனால் பாதிக்கப்படப்போவது முதலீட்டாளர்கள் மட்டுமே. கூடுதல் எக்ஸ்போஸர் பெறுவதன் மூலம் அளவுக்கு அதிகமான ரிஸ்க்கை ஒரு முதலீட்டாளர் தனக்குத் தெரியாமலே எடுக்கிறார். தேவைக்கு மேல் எக்ஸ்போஸர் பெறும் ஒவ்வொரு முதலீட்டாளரும் இதைக் கட்டாயம் புரிந்துகொள்ள வேண்டும்!  

புரோக்கர்களுக்கு எச்சரிக்கை!

பங்குச் சந்தையோ அல்லது கமாடிட்டி சந்தையோ அளவுக்கதிமான எக்ஸ்போஸர் தந்து அதனால் ஒரு முதலீட்டாளர் நஷ்டமடைந்ததை நிரூபித்தால், அந்த புரோக்கருக்கு செபியானது ரூ.40,000 - 50,000 ரூபாய் வரை அபராதம் விதிக்கிறது. எனினும், புரோக்கர்கள் அதிகமான புரோக்கரேஜ் வருமானத்துக்கு ஆசைப்பட்டு, இதை ஒரு பெரிய விஷயமாக எடுத்துக் கொள்வதில்லை. இவ்வாறு அளவுக்கு அதிகமான எக்ஸ்போஸர் தரும் புரோக்கர்

கூடுதல் எக்ஸ்போஸர்:  கவர்ச்சி வலையில்  சிக்க வேண்டாமே!

நிறுவனங்களுக்கு, கிடைக்கும் புரோக்கரேஜ் தொகையைப்போல இரு மடங்கு அபராதம் விதிக்கவேண்டும். முதலீட்டாளரின் தகுதிக்கு ஏற்ப வர்த்தகம் செய்ய அனுமதிக்க வேண்டும். அதிக எக்ஸ்போஸர் தரவே கூடாது.

கவனிக்க வேண்டியவை!

முதலீட்டாளர்கள் புரோக்கரேஜ் எங்கு குறைவாக உள்ளது, யார் அதிக எக்ஸ்போஸர் தருகிறார்கள் என்று மட்டும்தான் பார்க்கிறார்கள். புரோக்கரேஜ் கட்டணத்தையும், எக்ஸ்போஸரையும் அடிப்படையாக கொண்டு வர்த்தகம் செய்ய தீர்மானிக்கக் கூடாது.

தவிர, சில முதலீட்டாளர்கள் பவர் ஆஃப் அட்டர்னியை புரோக்கர்களிடம் தந்து வைத்திருப்ப தோடு, செக்புக் மற்றும் டெலிவரி இன்ஸ்ட்ரக்ஷன் ஸ்லிப் (Delivery Instruction Slip (DIS) போன்றவற்றை புரோக்கர்களிடமே தந்துவிட்டுப் போய்விடுகிறார்கள். இதனால் புரோக்கர்கள் சில தவறுகளைச் செய்ய வழி அமைத்துத் தந்துவிடுகிறது. சிறு முதலீட்டாளர்கள் எஃப் அண்டு ஓ வர்த்தகத்தில் முதலீடு செய்வதைத் தவிர்த்து, கையிலிருக்கும் பணத்துக்கு கேஷ் மார்க்கெட்டில் வர்த்தகம் செய்வதே நல்லது'' என்றார்.

ஆக, கூடுதல் எக்ஸ்போஸர் என்கிற கண்ணி வலைக்குள் சிக்க வேண்டாமே!

- சே.புகழரசி.