##~## |
கடந்த வாரம் பி.எஃப். கணக்கு வைத்திருந்த இரண்டு நபர்களின் கணக்கில் இருந்து மோசடியாக பணத்தை எடுத்திருப்பதாகத் தகவல் வெளியானது. இதற்காக பி.எஃப். அதிகாரியின் பாஸ்வேர்டு முறைகேடாக பயன்படுத்தப்பட்டு ஆன்லைன் மூலம் பணம் மாற்றப்பட்டிருக்கிறது. இதையடுத்து உஷாரான பி.எஃப். நிர்வாகம் அனைத்து பி.எஃப். கிளைகளுக்கும் ஒரு சுற்றறிக்கையை அனுப்பியது. அதாவது, பி.எஃப். அதிகாரிகள் அனைவரும் அடிக்கடி தங்கள் கம்ப்யூட்டரின் பாஸ்வேர்டை மாற்றிக்கொள்ளுமாறும், அந்த பாஸ்வேர்டை யாரிடமும் பகிர்ந்துகொள்ள வேண்டாம் எனவும் அந்த அறிக்கையில் சொல்லி இருக்கிறது. மேலும், 2.5 கோடி பேர் பி.எஃப். கணக்கில் நெகட்டிவ் பேலன்ஸ் இருப்பதாகவும் தகவல் வெளியானது. இதுகுறித்து சென்னை மண்டல பி.எஃப். கமிஷனர் எஸ்.டி.பிரசாத்திடம் கேட்டோம்.


ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
''பி.எஃப். கணக்கிலிருந்து பணம் எடுப்பது சுலபமான காரியமில்லை. ஒரு பி.எஃப். கணக்கிலிருந்து பணம் எடுக்க 42 இடங்களில் அதிகாரிகள் கையெழுத்திட வேண்டும். ஒரு கணக்கில் இருக்கும் பணத்தை உறுப்பினர் தவிர வேறு யாரும் எடுக்க முடியாது. ஒரு உறுப்பினர் பி.எஃப். தொகையைக் கேட்டு விண்ணப்பித்தால், அவர் வேலை பார்த்த நிறுவனத்தில் விசாரித்து, அவர் வேலை பார்த்தது உண்மையா, இப்போது என்ன செய்கிறார் என்பதை உறுதி செய்துகொண்ட பின்னரே பணம் தருவோம். அதையும் அவர் வங்கிக் கணக்கில்தான் வரவு வைப்போம். எனவே,

ஏதோ ஓர் இடத்தில் நடந்ததை வைத்து எல்லோரும் பயப்படத் தேவையில்லை.
2.5 லட்சம் பி.எஃப். கணக்கில் நெகட்டிவ் பேலன்ஸ் இருப்பது உண்மைதான். ஒரு பி.எஃப். உறுப்பினர் ஜூன் மாதத்தில் தன் பி.எஃப். கணக்கிலிருந்து பணம் எடுத்தால், அவர் கணக்கில் நெகட்டிவ் பேலன்ஸ் காட்டும். பழைய முறையை அடிப்படையாக வைத்து செய்யும்போது இப்படித்தான் காட்டும். ஆனால், இப்போது புதிய முறையைக் கொண்டு வந்துவிட்டோம். இதன்படி, நிறுவனங்களே தங்கள் ஊழியரின் பெயரில் நேரடியாக பி.எஃப். பணத்தைக் கணக்கு வைக்கும் வகையில் வசதிகள் கொண்டு வரப்பட்டுள்ளன. எனவே, இனி நெகட்டிவ் பேலன்ஸ் பிரச்னை யும் வராது'' என்றார்.
வங்கிக் கணக்கை நாம் அடிக்கடி சோதித்துப் பார்க்கிற மாதிரி, பி.எஃப். கணக்கையும் ஆன்லைன் மூலம் அடிக்கடி சோதித்துப் பார்ப்பது நல்லது!
- இரா.ரூபாவதி.