Published:Updated:

வேறு வேறு கருத்து ஒரே நோபல் பரிசு!

வேறு வேறு கருத்து ஒரே நோபல் பரிசு!

வேறு வேறு கருத்து ஒரே நோபல் பரிசு!

வேறு வேறு கருத்து ஒரே நோபல் பரிசு!

Published:Updated:
##~##

கடந்த ஆண்டுக்கான நோபல் பரிசு துறை வாரியாக அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில், பொருளாதாரத்துக்கான பரிசு பெறப்போவது யார் என்கிற எதிர்பார்ப்பு உலகம் முழுக்க பலமாக இருந்தது. யூஜின் ஃபாமா, லார்ஸ் பீட்டர் ஹான்சென், ராபர்ட் ஷில்லர் ஆகிய மூன்று அமெரிக்கப் பொருளாதார அறிஞர்களை கடந்த ஆண்டுக்கான நோபல் பரிசு பெற்றவர்களாக அறிவித்திருக்கிறார்கள்.

சொத்து விலை பற்றிய புள்ளிவிவரங்கள் குறித்து இந்த மூவரும் தனித்தனியே செய்த ஆராய்ச்சிக்காக இந்த நோபல் பரிசு தரப்பட்டி ருக்கிறது. ''சொத்துக்களில் விலைகள் சரியாக நிர்ணயம் செய்யாதபோது நிதிச் சிக்கல்கள் உருவாகின்றன. அண்மையில் ஏற்பட்ட உலகப் பொருளாதார மந்தநிலை இதனை உறுதி செய்கிறது'' என நோபல் கமிட்டி இந்த மூவருக்கும் பரிசு வழங்கியதற்கான காரணத்தை எடுத்துச் சொல்லி இருக்கிறது. இந்த மூன்று அறிஞர்களைப் பற்றி பார்ப்போமா?

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

யூஜின் ஃபாமா!

74 வயதான ஃபாமா, சிகாகோ பல்கலைக்கழகத்தில் பூத் (Booth) ஸ்கூல் ஆஃப் மேனேஜ்மென்டில் பேராசிரியராக இருக்கிறார். (இங்குதான் நம் ஆர்.பி.ஐ. கவர்னர் ரகுராம் ராஜனும் பேராசிரியராக இருந்தார்!) ஃபாமாவின் முக்கிய ஆராய்ச்சிகள் 1960-70-களில் செய்யப்பட்டவை.

வேறு வேறு கருத்து ஒரே நோபல் பரிசு!

ஃபாமாவின் முக்கிய ஆராய்ச்சி முடிவு இதுதான். ''சந்தையானது எப்போதும் எல்லாச் செய்திகளையும் உள்வாங்கிக்கொண்டுதான் விலை நிர்ணயம் செய்கிறது. உதாரணமாக, பங்குச் சந்தை எல்லாச் செய்திகளையும் உள்வாங்கிக்கொண்டுதான் பங்குகளின் விலையை நிர்ணயம் செய்கிறது. எனவே, சந்தையைவிட ஒரு பங்கின் விலையை எந்த ஒரு தனிநபரும் சரியாக நிர்ணயிக்க முடியாது.''  

ஃபாமாவின் ஆராய்ச்சியின் சிறப்பே, அவர் அரும்பாடுபட்டு சேகரித்த புள்ளிவிவரங்களும் அவற்றை ஆராய்ந்ததும்தான். பல ஆண்டுகள், பல லட்சம் கம்பெனிகளின் பங்கு விலை பற்றி கவனமான ஆராய்ந்தவர் ஃபாமா.

''அதிவேக வளர்ச்சியும், பெரிய முதலீடும் உள்ள நிறுவனங்களின் பங்குகளைவிட சிறிய நிறுவனங்களின் பங்குகள் அதிக லாபத்தைத் தரும்'' என்று ஃபாமா சொன்னது இன்றும் உண்மையே!  

லார்ஸ் பீட்டர் ஹான்சென்!

இவரும் ஃபாமாவும் சமகாலத்தவர்கள்; ஒரே பல்கலைக்கழகத்தில் வெவ்வேறு துறைகளில் பேராசிரியர்களாக உள்ளனர். ஹான்செனின் ஆராய்ச்சிகள் எல்லாம் எக்கனாமெட்ரிக்ஸ் எனும் பொருளாதார அளவியல் தொடர்பானவை. பொருளாதாரம், கணிதம், புள்ளியல் ஆகிய மூன்றும் சேர்ந்ததுதான் பொருளாதார அளவியல். இதில், நீண்ட காலம் தொடர்ந்து பல புள்ளிவிவரங்களை ஆராய்வதில் பொருளாதார அறிஞர்கள் அலாதி கவனம் செலுத்தினர். நிதிச் சந்தை பற்றிய புள்ளிவிவரங்கள் அனைத்தும் இந்த வகையைச் சேர்ந்தவைதான். இந்தப் புள்ளிவிவரங்களை ஆராய்வதில் பல புள்ளியியல் முறைகள் இருந்தாலும் ஹான்சென் உருவாக்கிய 'ஜெனரலைஸ்டு மெத்தடு ஆஃப் மொமன்ட்ஸ்’ (Generalized Method of Moments) என்பது இந்த ஆராய்ச்சிகளை புதிய எல்லைக்கு இட்டுச் சென்றது.  

ராபர்ட் ஷில்லர்!

ஃபாமாவின் 'சந்தைத் திறன்’ கோட்பாட்டுக்கு நேரெதிரான கருத்து சொன்னவர் இவர். 1980-களில் ஷில்லர் நடத்திய ஆராய்ச்சிகளில், குறுகிய காலத்தில் (5 ஆண்டுகள் வரை) ஒரு பங்கில் நடந்த விலை மாற்றங்கள், அந்தப் பங்கு தொடர்பான எல்லாச் செய்திகளையும் உள்வாங்கிக்கொண்டு உயர்ந்த மாதிரி இல்லை. முதலீட்டாளர்களின் ரிஸ்க் எடுக்கும் திறன், எதிர்காலம் பற்றிய மதிப்பீடு (சந்தை விலை உயரும் அல்லது விழும்) என்பவைதான் அந்தப் பங்கின் விலையை நிர்ணயம் செய்கின்றன என்று சொன்னார்.  

2001-ல் ஏற்பட்ட டாட் காம் குமிழையும் (bubble), 2006-07-ல் ஏற்பட்ட ரியல் எஸ்டேட் குமிழையும் முன்கூட்டியே கண்டுபிடித்துச் சொன்னவர். கார்ல் கேஸ் என்பவருடன் இணைந்து ஷில்லர் கேஸ்-ஷில்லர் ஹவுஸிங் இண்டெக்ஸ் என்ற அமெரிக்க நிலம் மற்றும் வீடுகளின் விலைகளின் குறியீட்டை உருவாக்கினார். நிதிச் சந்தையின் உளவியல் கூறுகளையும் ஷில்லர் தனது ஆராய்ச்சி மூலமாக உலகின் கவனத்துக்கு எடுத்துரைத்தார். இதனால் நடத்தை நிதியியல் (Behavioural finance) என்கிற புதிய ஆய்வுமுறை பிறந்தது.

இப்படி நிதிச் சந்தை பற்றி எதிர்மறையான கருத்துகள்கொண்ட இருவருக்கு ஒரே வருடத்தில் நோபல் பரிசு தரப்பட்டுள்ளது இது முதல்முறை அல்ல; நோபல் வரலாற்றில் இதற்கு முன்பும் இந்தமாதிரி நடக்கவே செய்திருக்கிறது!