Published:Updated:

ஃப்ளாட் விளம்பரங்களில் 2.5 BHK என்றால் என்ன?

ஃப்ளாட் விளம்பரங்களில் 2.5 BHK என்றால் என்ன?

ஃப்ளாட் விளம்பரங்களில் 2.5 BHK என்றால் என்ன?

ஃப்ளாட் விளம்பரங்களில் 2.5 BHK என்றால் என்ன?

Published:Updated:
##~##

?அடுக்குமாடிக் குடியிருப்பு விளம்பரங்களில் 2.5 BHK என்று விளம்பரம் செய்கிறார்கள். இதன் அர்த்தம் என்ன?

- முருகன், சென்னை.

மணிசங்கர், மாநிலத் தலைவர், தமிழ்நாடு வீடு மற்றும் அடுக்குமாடிக் குடியிருப்பு கட்டுவோர் சங்கங்களின் கூட்டமைப்பு.

''2.5 ஙிபிரி என்பது இரண்டு படுக்கை அறை, ஒரு சமையல் அறை, ஒரு ஹாலுடன் கூடுதலாக ஒரு சிறிய அறை தனியாக இருக்கும். அதாவது, ஒரு படுக்கை அறைக்கு குறைந்தபட்சம் 130 சதுர அடியிலிருந்து 150 சதுர அடி இடமாவது இருக்கவேண்டும். இந்த சிறிய அறை 10ஙீ6 என்ற அளவில்தான் இருக்கும். இதைப் படிக்கும் அறையாக வைத்துக்கொள்ளலாம். இதைத்தான் 2.5 ஙிபிரி என்று விளம்பரம் செய்கிறார்கள்.''

?நான் எல்.ஐ.சி.யில் 15 ஆண்டு கால ஆயுள் காப்பீட்டுத் திட்டத்தைத் தேர்ந்தெடுத்துள்ளேன். இதை 10 ஆண்டுகளாக குறைக்க முடியுமா?

- செல்வம், திருச்சி.

ஃப்ளாட் விளம்பரங்களில் 2.5 BHK என்றால் என்ன?

வி.விஜயராகவன், பிராந்திய மேலாளர், வாடிக்கையாளர் சேவை பிரிவு, எல்.ஐ.சி.

''பொதுவாக, எண்டோவ்மென்ட், மணிபேக், யூலிப் பாலிசிகளில் மட்டும்தான் பாலிசியின் கால அளவைக் குறைக்க முடியும். இப்படி குறைப்பதற்கு கட்டணம் உண்டு. இதற்கு சில நிபந்தனைகள் உள்ளன. அதாவது, பாலிசி எடுத்து ஒரு வருடம் முடிவடைந்திருக்க வேண்டும். அதேநேரத்தில், பாலிசி பிரீமியம் செலுத்தாமல் காலாவதியாகி இருக்கக் கூடாது. இதில் பாலிசியில் குறைக்கும் காலத்துக்கு ஏற்ப பிரீமியம் அதிகரிக்கும். நீங்கள் விரும்பினால் பாலிசி கவரேஜ் தொகையை வேண்டுமானாலும் குறைத்துக்கொள்ளலாம். பாலிசி பத்திரத்தை மாற்ற மற்றும் பாலிசியின் கால அளவைக் குறைக்க தனித் தனியாக கட்டணம் உண்டு.''

?ஓப்பன் மார்க்கெட் ஆக்ஷன் என்றால் என்ன? இதை எப்போது செய்வார்கள்? இது நடைபெறும் சமயத்தில் ஏதாவது குறிப்பிட்ட செக்டார் பங்கின் விலை ஏறுமா அல்லது இறங்குமா?

 - கே.குமரேசன், தண்டையார்பேட்டை, சென்னை.

ரெஜி தாமஸ், பங்குச் சந்தை நிபுணர்.

''ஓப்பன் மார்க்கெட் ஆக்ஷன் என்பது நிறுவனங்கள் தங்களின் பங்கை முதலீட்டாளர்களிடம் இருந்து திரும்ப வாங்குவதுதான். இதைச் செய்வதற்கு குறிப்பிட்ட நேரம் என்று எதுவும் கிடையாது. வர்த்தகம் நடைபெறும் நாளில் எப்போது வேண்டு மானாலும் நிறுவனங்கள் முதலீட்டாளர்களிடம் பங்குகளை வாங்கும். இதனால் பங்குச் சந்தையில் எந்தவிதமான மாற்றமும் நடைபெறாது. எந்த செக்டார் பங்கின் விலையும் உயரவோ அல்லது குறையவோ செய்யாது.''

ஃப்ளாட் விளம்பரங்களில் 2.5 BHK என்றால் என்ன?

?நான் டீமேட் கணக்கு வைத்திருந்த கிளை அலுவலகத்தை மூடிவிட்டார்கள். என் கணக்கில் வைத்திருந்த பங்குகளை விற்க என்ன செய்ய வேண்டும்?

- யுவனேஸ்வரன், மதுரை.

லட்சுமணராமன், பங்குச் சந்தை நிபுணர்.

''டீமேட் கணக்கு வைத்திருந்த கிளை அலுவலகத்தை மூடிவிட்டால், நீங்கள் வைத்தி ருக்கும் பங்குகளை விற்பதில் எந்தவிதமான சிக்கலும் வராது. பங்குகளை புரோக்கர் மூலமாக விற்பனை செய்த பிறகு, டெலிவரி ரசீதை நீங்கள் டீமேட் கணக்கு வைத்திருக்கும் தலைமை அலுவலகத்தில் தந்து உங்கள் கணக்கில் வரவு வைக்கலாம். தலைமை அலுவலகத்துக்கு செல்வதில் ஏதாவது சிக்கல் இருந்தால் அந்த நிறுவனத்தின் வேறு கிளை அலுவலகத்திலும் ரசீதை ஒப்படைக்கலாம். ஏனெனில், உங்களுடைய கணக்கு எண் என்பது எப்போதும் மாறாது. எனவே, நீங்கள் வாங்கிய பங்குகளை எந்த கிளை அலுவலகத்தில் வேண்டுமானாலும் ஒப்படைத்து விற்கலாம்.''

ஃப்ளாட் விளம்பரங்களில் 2.5 BHK என்றால் என்ன?

?வேலை காரணமாக வேறு ஊருக்குச் சென்றுவிட்டேன். மெடிக்ளைம் பாலிசியில் இன்னும் முகவரி மாற்றவில்லை. இந்தச் சமயத்தில் ஏற்படும் மருத்துவச் செலவுகளை க்ளைம் செய்ய முடியுமா? குறிப்பிட்ட முகவரியில் இல்லை என்று இன்ஷூரன்ஸ் நிறுவனம் க்ளைம் தர மறுக்குமா?

 - மணி, ஈரோடு.

டி.நாகலட்சுமி, முதன்மை மேலாளர், யுனைடெட் இந்தியா இன்ஷூரன்ஸ் கம்பெனி, சென்னை.

''முகவரி மாற்றம் செய்யவில்லை என்ற காரணத்தினால் மட்டும் உங்களின் க்ளைமை நிராகரிக்க முடியாது. எந்த ஊரில் நீங்கள் சிகிச்சை எடுத்துக்கொண்டாலும் க்ளைம் கிடைக்கும். ஆனால், ஊர் மாறும்போது இன்ஷூரன்ஸ் பாலிசியில் முகவரியை மாற்றிக்கொள்வது மூலம் தகவல் தொடர்பை சரியாக மேற்கொள்ள முடியும்.''

ஃப்ளாட் விளம்பரங்களில் 2.5 BHK என்றால் என்ன?

?நான் ஒரே சமயத்தில் வீட்டுக் கடன் மூலமாக இரண்டு வீடுகள் வாங்கியுள்ளேன். இப்போது வீட்டுக் கடன் வட்டித் தொகையில் நான் எப்படி வரி விலக்கு பெற முடியும்?

- சக்திவேல், விழுப்புரம்.

ஸ்ரீகாந்த், ஆடிட்டர்.

''உங்கள் இரண்டு வீடுகளில் ஒரு வீட்டை நீங்கள் குடியிருக்கும் வீடாக காண்பித்து அதற்கு அதிகபட்சம் 1.5 லட்சம் ரூபாய் வரை வட்டித் தொகையில் வரி விலக்கு பெறலாம். மற்றொரு வீட்டை நீங்கள் வாடகைக்கு விடாமல் வைத்திருந் தாலும், அந்த வீட்டுக்கு அந்தப் பகுதியில் எவ்வளவு தொகை வாடகை வருமானம் வருமோ, அதை வருமானமாக கட்டாயம் காண்பிக்க வேண்டும். அந்த வீட்டுக்குச் செலுத்தும் வட்டித் தொகை முழுவதுக்கும் வரி விலக்கு பெறலாம். ஆனால், வாடகையை வருமானமாக காட்டுவது அவசியம்.''

ஃப்ளாட் விளம்பரங்களில் 2.5 BHK என்றால் என்ன?

?என் பி.எஃப். கணக்கில் கூடுதலாக வருடத்துக்கு 25 ஆயிரம் ரூபாய் முதலீடு செய்து வருகிறேன். இந்தத் தொகைக்கு வரி விலக்கு பெற முடியுமா?

- மனோகரன், சென்னை.

இளங்குமரன், ஆடிட்டர்.

''பி.எஃப். கணக்கில் கூடுதலாகச் செலுத்தும் தொகைக்கும் வரி விலக்கு உண்டு. விருப்ப பி.எஃப். மற்றும் அதனுடன் தொழிலாளரிடம் பிடிக்கப்படும் பி.எஃப். தொகையைச் சேர்த்து வருடத்துக்கு ஒரு லட்சம் ரூபாய்க்குதான் வரி விலக்கு பெற முடியும்.  அதாவது, வருமான வரி பிரிவு 80சி-யின் கீழ் அதிகபட்சம் ஒரு லட்சம் வரை மட்டுமே வரி விலக்கு பெற முடியும்''.