Published:Updated:

கமாடிட்டி - மெட்டல் - ஆயில்

கமாடிட்டி - மெட்டல் - ஆயில்

கமாடிட்டி - மெட்டல் - ஆயில்

கமாடிட்டி - மெட்டல் - ஆயில்

Published:Updated:
##~##

இந்த வாரம் தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம் பற்றி சொல்கிறார் மும்பை காம்டிரென்ட்ஸ் ரிஸ்க் மேனேஜ்மென்ட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் ஞானசேகர் தியாகராஜன்.

 தங்கம்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

அமெரிக்காவில் நிலவிவந்த அரசியல் பொருளாதாரப் பிரச்னையால், அதன் பட்ஜெட் மசோதா தற்போது தற்காலிகமாக நிறைவேறியுள்ளது. இது வரும் பிப்ரவரி மாதம் வரைதான் ஒரு தீர்வாக இருக்கும்  என்பதாலும், அமெரிக்க டாலரின் மதிப்பு குறைந்துள்ளதை அடுத்து, சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை அதிகரித்து காணப்படுகிறது.

மேலும், இந்தியாவில் வரும் தீபாவளி பண்டிகை தினத்தை ஒட்டி தங்கத்துக்கான தேவை அதிகரித் துள்ளது. இந்த ஆண்டில் நடப்புக் கணக்கு பற்றாக்குறை காரணமாக, டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு சுமார் 68 வரை சரிந்திருந்தது. அதைத் தடுக்க மத்திய அரசு தங்க இறக்குமதிக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்திருந்தது. குறிப்பாக, இறக்குமதி வரியை மட்டும் மூன்று முறை உயர்த்தி 15 சதவிகிதமாக அதிகரித்தது. மேலும், தங்க காயின்கள் விற்பனைக்கு தடை விதித்திருந்தது. தற்போது வரை அந்த காயின்களுக்கான தடை அகற்றப்படவில்லை. இதனால் தங்கத்தின் இருப்பு இந்தியாவில் குறைந்துள்ளது. இதையடுத்து வரும் வாரங்களில் தேவை அதிகம் இருப்பதால் தங்கத்தின் விலை அதிகரிக்க வாய்ப்புள்ளது.

கமாடிட்டி - மெட்டல் - ஆயில்

சர்வதேச அளவில் தங்கத்தின் விலை 1,310 டாலரிலிருந்து அதிகபட்சமாக சுமார் 1,351 வரை வர்த்தகமாகியுள்ளது. உலக தங்க கவுன்சிலின் 2013, ஜனவரி நிலவரப்படி இந்தியாவில் தங்கத்தின் இருப்பு 557.7 டன்னாகும். இது மொத்த அயல்நாட்டு ரிசர்வில் 10.3 சதவிகிதமாகும். சர்வதேச அளவில் தங்கத்துக்கான தேவை இரண்டாவது காலாண்டில் மட்டும் 856.3 டன்னாகும். இதன் மதிப்பு 39 பில்லியன் டாலராகும். மேலும், தங்க பார்கள் மற்றும் காயின்களுக்கான தேவை 500 டன்னாக அதிகரித்துள்ளது.  

வெள்ளி!

கமாடிட்டி - மெட்டல் - ஆயில்

அமெரிக்கப் பொருளாதார மாற்றத்துக்கான பாதிப்பு வெள்ளியிலும் இருப்பதால், வரும் வாரத்தில் வெள்ளியின் விலை அதிகரிக்க வாய்ப்புள்ளது. சர்வதேச அளவில் டாலரின் மதிப்பு தற்காலிகமாக குறைந்து வருவதால், வெள்ளியின் விலையும் அதிகரிக்கலாம். வரும் வாரத்தில் தீபாவளி பண்டிகை தினத்தை ஓட்டி வெள்ளியின் தேவை அதிகரிக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

அடிப்படை உலோகங்கள்!

அடிப்படை உலோகங்களை அதிகளவில் பயன்படுத்தும் சீனாவில், அதிக சப்ளை மற்றும் கடன் குறைப்பு போன்ற காரணங்களால் கடந்த இரண்டு வாரங்களாக காப்பரின் விலை தொடர்ந்து குறைந்து வருகிறது.

காப்பரின் தேவை இந்த வருடத்தில் 8%  குறைவாக இருக்கலாம் என்றும், மேலும், 2014-ம் வருடத்தில் புதிய மற்றும் ஏற்கெனவே உள்ள சுரங்கங்களில் இருந்து வெட்டி எடுக்கப்படும் காப்பரின் அளவு அதிகமாக இருக்கும் எனவும் ராய்ட்டர்ஸ் கணித்து கூறியுள்ளது. மேலும், 2013-ல் 1,82,000 டன்னும் 2014-ல் 3,28,000 டன்னும் அதிக கையிருப்பாக இருக்கும் என்றும் கூறியுள்ளது.

உற்பத்தித் துறைகளில் உபயோகப்படும் அடிப்படை உலோகங்களின் விலை, சர்வதேச வர்த்தகத்தில் விலை ஏற்ற இறக்கங்களோடு வர்த்தகமாகி வருகிறது.

கமாடிட்டி - மெட்டல் - ஆயில்

இந்தோனேஷியாவில் நிக்கல் ஏற்றுமதி தடை செய்யப்பட்டால் விலையேற்றம் இருக்கலாம். மேலும், சீனாவில் உள்நாட்டு சந்தைகளில் அடிப்படை உலோகங்களின் வரத்து அதிகரித்துள்ளது. குறிப்பாக, காப்பரின் வரத்து அதிகமாக உள்ளதால் வரும் வாரங்களில் காப்பரின் விலை குறையலாம்!

கச்சா எண்ணெய்!

கடந்த வியாழக்கிழமையன்று வெளியான அமெரிக்காவின் உற்பத்திக் குறியீடுக்கான டேட்டா, கடந்த 12 மாதங்களில் இல்லாத அளவு 51.1-ஆக குறைந்து வெளியானது. இதுவே, கடந்த செப்டம்பர் மாதத்தில் 52.8-ஆக இருந்தது. இதனால் கச்சா எண்ணெய் விலை மேலும் குறைந்தே வர்த்தகமாக வழி வகுத்தது.

கமாடிட்டி - மெட்டல் - ஆயில்

இதற்கிடையில், அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையேயான அணுசக்தி பிரச்னைக்கு தீர்வு ஏற்படலாம் என்ற கருத்து நிலவுவதும் கச்சா எண்ணெய்யின் விலையில் பிரதிபலிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்திய ரூபாயின் மதிப்பு அதிகரித்து வருவதால் கச்சா எண்ணெய் விலை குறையவே வாய்ப்புகள் அதிகம்.

இயற்கை எரிவாயு!

கடந்த வியாழனன்று வெளியான அமெரிக்காவின் இயற்கை எரிவாயு இன்வென்டரி எதிர்பார்த்ததைவிட அதிகமாக இருந்ததால், விலை மேலும் குறைந்தது.  அக்டோபர் 18-வுடன் முடிவடைந்த வாரத்தில் இன்வென்டரி 87 பில்லியன் கியூபிக் ஃபீட்டாக அதிகரித்தது.  எனினும், வர்த்தகர்கள் இயற்கை எரிவாயுவின் தேவையைத் தெரிந்துகொள்ள வானிலையில் கவனம் செலுத்தவேண்டும். அமெரிக்க கிழக்கு பகுதியில் நவம்பர் மாதம் முதல் குளிர்  குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆக இயற்கை எரிவாயு தேவை குறைய வாய்ப்புள்ளது. இதனால் இயற்கை எரிவாயு விலை வரும் வாரத்தில் குறையலாம்.  

 - சே. புகழரசி.

கமாடிட்டி - மெட்டல் - ஆயில்