Published:Updated:

லாபம் தருமா தீபாவளி முகூர்த் டிரேடிங் ?

லாபம் தருமா தீபாவளி முகூர்த் டிரேடிங் ?

##~##

முகூர்த் டிரேங்க் என்பது தீபாவளியன்று கொண்டாடப்படும் ஒரு சிறப்பு முதலீடு மற்றும் வர்த்தக நாள். முகூர்த் டிரேடிங் அன்று வர்த்தகம் நன்றாக இருந்தால் வருடம் முழுக்க வர்த்தகம் நன்றாக இருக்கும் என்பது நம்பிக்கை. இந்த முகூர்த் டிரேடிங் எப்படி கொண்டாடப்படுகிறது என்பது பற்றி சொல்கிறார் இந்தியா நிவேஷ் செக்யூரிட்டீஸ் நிறுவனத்தின் உதவி துணைத் தலைவர் எஸ்.விக்னேஷ்.

 முகூர்த் டிரேடிங்!

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

இந்திய பங்குச் சந்தைகளில் ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி அன்று 'முகூர்த் டிரேடிங்’ (Muhurat trading) என்ற பெயரில் சிறப்பு வர்த்தகம் நடைபெறுகிறது. இது வடமாநிலங்களில் லட்சுமி பூஜை என்ற பெயரில் கொண்டாடப்படுகிறது. மும்பை பங்குச் சந்தை, தேசிய பங்குச் சந்தை, எம்.சி.எக்ஸ்., என்.சி.டி.இ.எக்ஸ்., என்.எம்.சி.இ. மற்றும் ஐ.சி.இ.எக்ஸ். என இதர சந்தைகளிலும் இந்த முகூர்த் வர்த்தகம் விரிந்திருக்கிறது.  

சிறப்பு வர்த்தகம்!

சனி, ஞாயிறு போன்ற விடுமுறை நாட்களில் தீபாவளி வந்தாலும், இந்த முகூர்த் டிரேங்க் 2 மணி நேரம் நடைபெறுகிறது. (பார்க்க அட்டவணை)

லாபம் தருமா தீபாவளி முகூர்த் டிரேடிங் ?

பெரும் விழா!

சில எக்ஸ்சேஞ்சுகள் மற்றும் பங்கு வர்த்தக புரோக்கர் அலுவலகங்களில் இது பெரும் விழாவாகவே கொண்டாடப்படுகிறது. தீபாவளியைப் போலவே பட்டாசு வெடித்து, இனிப்பு வழங்கி கொண்டாடப்படுகிறது. மேலும், குஜராத் மாநிலத்தில் அன்றுதான் வருடப் பிறப்பானதால், அன்றுதான் அவர்கள் வருடத்தின் புதுக் கணக்குகளை தொடங்குவார்கள். முகூர்த் டிரேடிங் அன்று அதிக எண்ணிக்கையில் பங்குகள் வர்த்தகமாவதில்லை என்றாலும், சாஸ்திரத்துக்கு வாங்க வேண்டும் என்பது நம்பிக்கை. இதுவரை கொண்டாடப்பட்ட முகூர்த் டிரேடிங்கில், கடந்த 10 வருடத்தில் இரண்டுமுறை மட்டுமே வர்த்தகம் மைனஸில் முடிந்திருக்கிறது. மேலும், கமாடிட்டி வர்த்தகத்தில் தங்கத்தின் விலையும் லாபத்தில் தான் இருந்தது.

எதிர்பார்ப்பு!

இந்திய பங்குச் சந்தைகள் மற்றும் கமாடிட்டி வர்த்தகத்தில், உலக நாடுகளின் பொருளாதாரத்தின் ஆதிக்கம் இருந்தாலும், குறிப்பாக பங்கு வர்த்தகத்தில் அந்நிய முதலீடுகள் அதிகரித்துகொண்டுதான் இருக்கின்றன. இந்திய பங்குச் சந்தைகளின் ஏற்றத்துக்கு இதுவும்கூட காரணமாக இருக்கிறது.

லாபம் தருமா தீபாவளி முகூர்த் டிரேடிங் ?

இந்த ஆண்டு முகூர்த் டிரேடிங்கின்போது பங்குச் சந்தை ஏற்றம் காணவே அதிக வாய்ப்பு உள்ளது. மேலும், கோல் இந்தியா, ஜே.பி. கெமிக்கல்ஸ், பஜாஜ் ஃபைனான்ஸ், மாஸ்டெக் லிமிடெட் மற்றும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் போன்ற நிறுவன பங்குகளில் நீண்ட கால நோக்கில் முதலீடு செய்யலாம்'' என்கிறார்.

முகூர்த் டிரேடிங் என்பது நல்ல நாளில் நடக்கும் ஒரு நிகழ்வு. அதை  பாசிட்டிவ்-ஆன மனநிலையோடு

அளவோடு செய்தால், தீபாவளியை மறக்க முடியாத, மகிழ்ச்சிகரமான நாளாக நாம் அமைத்துக்கொள்ளலாம்!

- சே.புகழரசி.