Published:Updated:

பிளாட்டின நகைகள்: மறுவிற்பனை மதிப்பு உண்டா?

பிளாட்டின நகைகள்: மறுவிற்பனை மதிப்பு உண்டா?

##~##

?தங்க நகைகள்போல் பிளாட்டின நகைகளுக்கு மதிப்பு உள்ளதா? பிளாட்டின நகைகளுக்கு மறுவிற்பனை மதிப்பு உண்டா?

 எஸ்.ராமதாஸ், சேலம்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

சுவாமிநாதன், இயக்குநர், ஜெம் அண்டு ஜுவல்லரி டெக்னாலஜி டிரேடிங் சென்டர்.

'பிளாட்டின நகைகளுக்கு மறுமதிப்பு உண்டு. ஏனெனில், தங்க நகைகள்போல பல தரங்களில் இது கிடைப்பதில்லை. எங்கு வாங்கினாலும் 95 பியூரிட்டி தரம்தான். பிளாட்டின நகைகள் பெரும்பாலும் மெஷினால்தான் செய்யப்படுகின்றன. அதுவும் மும்பையில்தான் அதிகமான நகை செய்யப்படும். ஆனால், இந்த நகைகளை மறுவிற்பனை செய்வதில் சில சிக்கல்கள் உள்ளன. அதாவது, இந்த நகையை எளிதில் உருக்க முடியாது. அதனால்தான் இந்த நகைகளை கடைகள் வாங்கத் தயங்குகின்றன. வாங்கிய கடையில் மட்டும்தான் விற்பனை செய்ய முடியும். தங்கத்தைப்போல, விற்பனை செய்யும்போது இதன் தரம் குறைவாக உள்ளது என்று காரணம் சொல்லி விலையைக் குறைக்க முடியும்.''

?பெரும்பாலான ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் 400 மற்றும் 600 சதுர அடியில் வீட்டு மனைகள் போடுகின்றன. இந்த அளவுள்ள மனைகளில் வீடு கட்ட வங்கிக் கடன் கிடைக்குமா?

@- ஜே.ராஜகோபாலன், நெய்வேலி.

பார்த்தசாரதி, சொத்து ஆலோசகர்.

பிளாட்டின நகைகள்:  மறுவிற்பனை மதிப்பு உண்டா?

''பஞ்சாயத்து அப்ரூவல் என்று சொல்லி 400, 600 அடிகளில் போடப்படும் வீட்டு மனைகளில் வீடு கட்ட வங்கிக் கடன் கிடைப்பது கடினம். இந்த அளவுள்ள வீட்டு மனைகளை வாங்கவும் வங்கிக் கடன் கிடைக்காது.''

?என் குடும்ப உறுப்பினர்களுக்கு கடந்த 2007-ம் ஆண்டு முதல் காசோலை மூலமாக பணஉதவி செய்து வந்தேன். அத்துடன் குடும்பக் கடன் முழுவதும் நான்தான் அடைத்தேன். இந்தப் பணத்தைத் திரும்பக் கேட்டால் தர முடியாது என்கிறார்கள். அத்துடன் நீதான் மூத்த மகன். இது உன் கடமை எனச் சொல்கிறார்கள். குடும்பச் சொத்தைப் பிரிக்கும்போது, நான் தந்தத் தொகைக்கு ஈடான சொத்துக் கேட்டாலும் தர மறுக்கிறார்கள். என் உடன்பிறந்தவர்கள் கடனில் பங்கு எடுத்துக்கொள்ளாமல், சொத்தில் மட்டும் சமபங்கு கேட்கிறார்கள். இதற்கு சட்டப்படி தீர்வு என்ன?

@- சந்திரா,

அழகுராமன், வழக்கறிஞர்.

பிளாட்டின நகைகள்:  மறுவிற்பனை மதிப்பு உண்டா?

''நீங்கள் பணஉதவி செய்துள்ளேன் என்றுதான் குறிப்பிட்டுள்ளீர்கள். யாருக்கும் பணத்தைக் கடனாகத் தரவில்லை. ஆனால், குடும்பத்தில் மூத்த மகன்தான் கடனை அடைக்க வேண்டும் என்று எந்த கட்டாயமும் கிடையாது. அதேபோல, நீங்கள் தந்த பணத்துக்காக பாகப்பிரிவினையின்போது அதிக சொத்துக் கேட்கவும் உங்களுக்கு உரிமை இல்லை. எனவே, பாகப்பிரிவினை செய்யும்போது நீங்கள் தந்தப் பணத்தையும், கடனையும் அனைவரும் பகிர்ந்துகொள்ளும்படி கேட்கலாம். அவர்கள் அதற்கு ஒப்புக்கொண்டால் அந்தத் தொகை உங்களுக்குத் திரும்பக் கிடைக்கும்.''

?நான் ஒரு லட்சம் ரூபாயை பங்குச் சந்தையில் முதலீடு செய்யலாம் என நினைத்து, ஒரு புரோக்கர் அலுவலகத்துக்குச் சென்றேன். அந்த புரோக்கர், டீமேட் கணக்கு தொடங்க அவர் கம்பெனியின் பெயரில் அந்தப் பணத்தை முதலீடு செய்ய சொல்கிறார். அவர் கேட்கிற மாதிரி

பிளாட்டின நகைகள்:  மறுவிற்பனை மதிப்பு உண்டா?

தரலாமா?

ஆதிமூலம், சென்னை.

வெங்கடேஸ்வரன், இயக்குநர், மெக்கனோசி அண்டு கோ.

''பங்குச் சந்தையில் எடுத்தவுடனே ஒரு லட்சம் ரூபாய் முதலீடு செய்யவேண்டிய அவசியமில்லை. பங்குகளை வாங்கியபிறகு பணம் தரலாம். ஒருவேளை நீங்கள் எஃப் அண்டு ஓ-வில் டிரேட் செய்ய விரும்பினால், மார்ஜின் தொகையை மட்டும் செலுத்தி டிரேட் செய்யலாம். அந்தச் சமயத்தில் உங்களுக்கு நஷ்டம் ஏற்பட்டால், நீங்கள் பணம் செலுத்தாமல் போவதற்கான வாய்ப்பு உள்ளது. இந்தப் பிரச்னைகளில் இருந்து விடுபடவே பல புரோக்கர் நிறுவனங்களும் முதலீட்டாளர் களிடமிருந்து கணிசமான பணத்தை டெபாசிட்-ஆக வாங்குகின்றன. உங்களிடம் பணம் கேட்கும் புரோக்கர் நிறுவனம் செபியால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனம் என்றால், நீங்கள் முதலீடு செய்ய விரும்பும் பங்குகளுக்கு ஏற்றாற்போல் காசோலையை அந்த நிறுவனத்தின் பெயரில் தரலாம்.''

?தனியார் இன்ஷூரன்ஸ் நிறுவனத்தில் 2008-ல் ஒரு பாலிசி எடுத்தேன். இதில் முதல் தவணை பிரீமியமாக 50 ஆயிரம் ரூபாய் செலுத்தினேன். தவிர்க்க முடியாத காரணத்தினால் தொடர்ந்து பிரீமியம் செலுத்த முடியவில்லை. இந்தத் தொகையைத் திரும்பப் பெற முடியுமா?

-எஸ்.ஜி.ராமானுஜம், விழுப்புரம்.

ஆர்.ரவி, பஜாஜ் கேப்பிட்டல் இன்ஷூரன்ஸ் புரோக்கிங்.

''நீங்கள் எடுத்திருக்கும் பாலிசி யூலிப்பாக இருந்தால், மூன்று  வருடம் பணம் செலுத்தி இருந்தால் மட்டும் குறைந்தபட்ச சரண்டர் தொகை கிடைக்க வாய்ப்புகள் உள்ளன. அதுவே எண்டோவ்மென்ட் பாலிசியாக இருந்தால் எந்த விதமான தொகையும் திரும்பக் கிடைக்காது.''

பிளாட்டின நகைகள்:  மறுவிற்பனை மதிப்பு உண்டா?

?நான் ஒரு புரோக்கிங் கம்பெனியில் சில பங்குகளைக் கடந்த வருடம் வாங்கினேன். இப்போது அந்த நிறுவனம் என் பெயரில் அந்தப் பங்குகள் இல்லை என்கிறது. நான் என்ன செய்வது?

-  கே.மாரியப்பன், புதுக்கோட்டை.

உங்களிடம் புரோக்கர் மூலமாக பங்கு வாங்கியதுக்கான ஆதாரம் இருக்க வேண்டும். அதாவது, கான்ட்ராக்ட் நோட் உங்களிடம் இருக்க வேண்டும். இது மெயில் மூலமாக உங்களுக்கு அனுப்பப்பட்டிருக்கலாம். எலெக்ட்ரானிக் வடிவத்தில் (டீமேட்) இருக்கலாம். இவற்றை பார்த்து உறுதி செய்துகொள்ளுங்கள். பங்குகள் உங்களின் டீமேட் கணக்கில் வரவு வைக்கப்பட்டதா அல்லது அந்த புரோக்கிங் நிறுவனத்தின் பெயரில் வாங்கி வைக்கப்பட்டுள்ளதா என்பதைப் பார்க்க வேண்டும். பங்குகள் வாங்குவதுக்கான பணத்தை எப்படித் தந்தீர்கள் என்பதற்கான ஆதாரமும் இருக்க வேண்டும். இதெல்லாம் இருந்தால் நீங்கள் வாங்கிய பங்குகள் எந்த எக்ஸ்சேஞ்சில் டிரேட் செய்யப்பட்டதோ அந்த எக்ஸ்சேஞ்சில் புகார் தரலாம். நீங்கள் பங்குகள் வாங்கி ஒரு வருட காலம் ஆகியிருந்தால், தீர்ப்பாயத்திடம் (ஆர்பிட்ரேஷன்) வழக்குத் தொடுக்க முடியாது. இதுகுறித்து செபியிடம் புகார் அளிக்கலாம். அவர்கள் தகுந்த நடவடிக்கை எடுக்க வாய்ப்பு உள்ளது.