முனைப்புதான் முதல்!

##~##

வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்கிற எண்ணம் யாருக்குத்தான் இருக்காது..? அதற்கான வழியும் வாய்ப்புகளும் கிடைத்தால் 'மாட்டேன் போ...’ என்றா சொல்லப்போகிறார்கள்..? 'உழைப்பே உயர்வுக்கு வழி’ போன்ற பொத்தாம் பொதுவான வாசகங்கள் யாரையும் கவர்வதில்லை. மாறாக, அவர்கள் எதிர்பார்ப்பதெல்லாம் தீர்மானமான 'ரோடு மேப்’.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

அனைவருக்கும் பொதுவான ஒரு 'ரோடு மேப்’ என்று இருக்க சாத்தியமே இல்லை. ஒவ்வொருவரின் திறமைகள் மட்டுமல்ல; ஆர்வங்களும், விருப்பங்களும், முன்னுரிமைகளும் தனித்தனியானவை; முற்றிலும் மாறுபட்டவை. அதற்கு ஏற்றாற்போல் தனித்தன்மையுடன், அதாவது 'தன் தன்மையுடன்’ இணைந்துபோகிற 'ரோடு மேப்’ மட்டும் கிடைத்துவிட்டால் போதும். கண்ணை மூடிக்கொண்டு அதில் பயணித்து 'ஊர் போய்’ச் சேரலாம்.

சங்கரும் நிஷாவும், தங்களது முயற்சி, அவரவர்க்கான சரியான பாதையைத் தேர்ந்தெடுத்துக்கொள்கிற நல்வாய்ப்பை உருவாக்கித் தருமென்று நம்பினார்கள். ஆகவே, தொழில் அறிவு மற்றும் 'இமேஜினேட்டிவ் திங்கிங்’ நிரம்ப உள்ள, ஆனால் அதிகம் அறியப்படாத இளம் திறமையாளர்களை ஒன்றிணைக்க வேண்டும் என்பதில் மிகுந்த முனைப்புடன் இருந்தனர். இந்தப் புதிய முயற்சியில் அவர்களுக்கு யாரால் உதவ முடியும் என்று யோசித்ததில், நினைவுக்கு வந்தவர்தான்... ராமகிருஷ்ணன்!

எதிர்கொள் !

மத்திய அரசுப் பணியில் உயரிய பொறுப்பில் இருக்கும் பழுத்த அனுபவஸ்தர்; எளிமைக்கும் நேர்மைக்கும் பெயர் பெற்றவர். அதிலும் இளைஞர் மேம்பாட்டில் அதிக ஆர்வம் காட்டுபவர். தொலைபேசியில் தொடர்பு கொண்டோம்.

'நல்லது. ரொம்பப் பயன் உள்ளதா இருக்கும்னு தோணுது. உங்களுக்கு என்னால என்ன ஹெல்ப் பண்ண முடியுமோ கட்டாயம் பண்றேன்...’

'உங்களோட 'கைடன்ஸ்’தான் சார் வேணும். ஃபர்தரா இதை எப்படி கொண்டு போகலாம்னு உங்க அட்வைஸ் கிடைச்சா நல்லா இருக்கும்...’

'வொய் நாட்..? எனக்குத் தோணறதைச் சொல்றேன்... உங்களோட 'ஐடியாஸ்’ஐயும் சொல்லுங்க. வி கேன் வொர்க் அவுட் ய ஸ்ட்ராடஜி’.

இதுதான் டிஃபிக்கல் ராமகிருஷ்ணன் சார்!

'ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு ஐடியா, ப்ளான், திங்கிங் இருக்கும். இதுல, பெரியவங்க, சின்னவங்கன்னு வித்தியாசம் எல்லாம் இல்லை.

எதிர்கொள் !

இன்ஃபேக்ட், பெரியவங்க நிறைய பேரு வெறுமனே 'ஐடியலிஸ்ட்ஸ்’ஆகதான் இருக்காங்க. அதுவே, இளைஞர்களைப் பார்த்தீங்கன்னா, க்ளியர் கட் ப்ளான்ஸோட வர்றாங்க; ப்ராக்டிகலா ஒரு விஷயம் சரி வராதுன்னு தோணிச்சுன்னா, அப்பவே ப்ளானை மாத்திக்கறாங்க.  ஃபால்ஸ் ப்ரெஸ்டீஜ் எல்லாம் வச்சிக்கிடறதே இல்லை. தே ஆர் வெரி ப்ராக்மேடிக் இன் தெயர் அப்ரோச்...’

இன்றைய இளைஞர்களைப் பற்றி எதிர்மறையான கருத்துகளும் செய்திகளும் அதிகம் வெளிவந்துகொண்டிருக்கும் வேளை யில், அவர்கள் மீது மிகுந்த நம்பிக்கை வைத்து வழிகாட்டிக்கொண்டிருக்கும் ஒருவர் கிடைத்ததில் எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சி. 'வேணும்னா நந்தனத்துல என்னோட ஆபீஸுக்கே வந்துடுங்க. லன்ச் இன்டர்வெல் மத்தியானம் ஒண்ணுல இருந்து ரெண்டு வரைக்கும். அப்பவே பார்த்துடலாம். இல்லைன்னா, நுங்கம்பாக்கத்துலதான் வீடு. காலையில பிஃபோர் நைன் ஆர் ஈவினிங் ஆஃப்டர் சிக்ஸ் அங்கேயும் வரலாம்...’

உடனே கிளம்பி, அவருடைய ஆபீஸுக்கே சென்று விட்டோம். சரியாக ஒரு மணிக்கு நாங்கள் இருந்த 'வெயிட்டர்ஸ்’ அறைக்கே வந்து விட்டார்.

அவரைத் தொடர்ந்து பழங்களும் மோரும் வந்து சேர்ந்தன. 'எடுத்துக்குங்க... சாப்பிட்டுக்கிட்டே பேசலாம்...’

'உங்க ஐடியா ரொம்ப நல்லாதான் இருக்கு. எடுத்தவுடனே ரொம்பப் பெருசா பண்ணாம, ஏதாவது ஒரு சின்ன ஊருல ஒரு ஸ்கூல்ல வச்சிக்கலாம். ஒரே ஒரு கிளாஸ் ரூம் கேட்டு வாங்கிக்கலாம். இனிஷியலா, 50 பேர் இருந்தா போதும். லெட் தெம் நாட் பி ஃப்ரம் தி சேம் ட்ரேட் ஆர் டிசிப்ளின். அதாவது, மெக்கானிக்ஸ் மட்டும்னு இல்லாம, ஹேண்டிக்ராஃப்ட், ஆர்டிஸ்ட்ஸ்... இப்படி வெரைட்டியா இருந்தா நல்லா இருக்கும்னு தோணுது...’

ஓர் இளைஞியின் மனதில் உதித்த ஓர் எண்ணம் எப்படி செயல் வடிவம் பெறுகிறது என்பதை ஆச்சா¢யத்துடன் கவனித்துக்கொண்டிருந்தேன்.

'ஆரம்பத்துல நமக்கு மிகுந்த ஆர்வம் இருக்கும். ரொம்ப பிரமாண்டமாக செய்யணும்னு உந்துதல் இருக்கும். இயல்புதான். நாமதான் அதைக் கொஞ்சம் கட்டுப்படுத்திக்கணும். எடுத்த எடுப்புல பெருசா இறங்கிட்டு, எதிர்பார்த்த ரிசல்ட் வரலைன்னா, கவலைப்படறதோ, ஒதுங்கிடறதோ வேணாம். ஒவ்வொரு அடியையும் நிதானமா எடுத்து வைக்கணும். ஆரம்ப கட்டத்துல வர்ற பிரச்னைகளைக் கண்டு அசந்துபோயிடக்கூடாது. தேவை இல்லாத கவர்ச்சிகளில் நாம சிக்கிடக் கூடாதுங்கிறதுல கவனமா இருக்கணும்!''

'ஆமாம் சார். எங்களுக்குப் புரிகிறது. நாங்கள் கவனமாக இருப்போம்.’ என்றாள் நிஷா.

'என் ஃப்ரண்ட் ஒருத்தர் திருச்சிக்குப் பக்கத்துல ஒரு பேங்க்ல கிளை மேலாளரா இருக்கார். அவர் கிட்டப் பேசறேன். ஒருவேளை அவங்களே ஸ்பான்சர் பண்ண முடியுமான்னும் கேட்டுப் பார்க்கிறேன். நீங்க என்ன பண்ணனும்னு நினைக்கறீங்களோ, அதையெல்லாம் விளக்கமா எழுதி எனக்கு மெயில் அனுப்புங்க. எல்லாருக்கும் உகந்த ஒரு தேதியில மீட்டிங் வச்சுக்குவோம். அது எவ்வாறு நடந்து முடிகிறது என்று பார்த்துவிட்டு அடுத்தக்கட்ட செயலைப்பற்றி யோசிப்போம்.’

எதிர்கொள் !

சாவி குடுத்த பொம்மை மாதிரி இன்றைய இளைஞர்கள். அய்யய்யோ... நல்ல அர்த்தத்துல சொல்றேன். இதை இதை இப்படி இப்படி செய்யணும்னு, ஏத்துக்கற விதத்துல எடுத்துச் சொல்றவங்க இருந்தா போதும். அப்புறம், புயல் மாதிரி அவங்க செயல்படறதைப் பார்க்கணுமே..! அதைப் பக்கத்துல இருந்து பார்க்கறவங்கதான் நம்பவே முடியும்.

என்ன இருந்தாலும், வேகம் இளைஞர்களுக்கு இயல்பாகவே வருவதுதானே..? ராமகிருஷ்ணன் சார் சொன்ன அன்றைய தினத்திலே இருந்து சரியா 30ஆவது நாள்.

'கைத்தொழில் மற்றும் கலைத்திறன் கொண்ட இளைஞர்களின் சந்திப்பு’ நடந்தது. மண் பொம்மை, மணல் சிற்பம், மெழுகுச் சிலை செய்வோர் முதல் மோட்டார் மெக்கானிக்குகள் வரை மொத்தம் 55 பேர் கலந்து கொண்டனர்.

காலையில் கூட்டம், தொடர்ந்து பிற்பகலில் சிறிய அளவிலான கண்காட்சி என்று இரண்டாகப் பிரிக்கப்பட்டு நடந்த அந்த நிகழ்ச்சி, பல இளைஞர்களுடைய வாழ்க்கையில் ஒளி ஏற்றி வைத்தது. 'டு ஸ்டார்ட் வித்’, 25,000 ரூபாய் கடன் தர, வங்கி மேலாளர் அங்கேயே ஒப்புதல் அளித்தார். மேலும் தனிப்பட்ட முறையில், தனது நண்பர்கள் மற்றும் உறவினர் மூலம் ஆதரவு நல்குவதாகவும் தெரிவித்தார். அன்று விதைக்கப்பட்ட தொழில் ஆர்வம், பலரை முழு நேரத் தொழில் அதிபராக மாற்றியது. 'கலை நுட்பம்' வாய்ந்த அரிய கைவினைப் பொருட்களை உற்பத்தி செய்து ஏற்றுமதியும் செய்யும் நிலைக்கு உயர்ந்தார் அகிலா!

(தெளிவோம்)

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism